சிம்புதேவன், விஜய் நடிக்கும் படத்தை இயக்கப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது.
துப்பாக்கி வெற்றிக் கூட்டணியான விஜய்-முருகதாஸ் மீண்டும் ஒரு புதிய படத்தில் இணையப் போகிறார்கள் என்பது நாடறிந்த விஷம். இந்தப் படத்தின் படப்பிடிப்பு வருகிற பிப்ரவரி 3ல் தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுமார் 5 மாதங்கள் படப்பிடிப்பு நடைபெறலாம் என்றும், இவ்வாண்டு தீபாவளியில் படம் வெளியாகலாம் என்றும் கிசுகிசுக்கள் பரவி வருகின்றன.
முருகதாஸ் படத்திற்குப் பிறகு விஜய் நடிக்கும் புதிய படத்தை இயக்கப் போவது யார் என்பதுதான் கோலிவுட்டின் லேட்டஸ்ட் டாக். கடந்த வாரம் இந்த லிஸ்டில் அட்லி இருந்தார். அவர்தான், விஜய்யின் அடுத்தப் படத்தை இயக்கப் போகிறார் என்று செய்திகள் வெளியானது நினைவிருக்கலாம். ஆனால், தற்போது திடீரென விஜய் படத்தை இயக்கும் அதிர்ஷ்டம் இயக்குனர் சிம்புதேவனுக்கு அடித்திருக்கிறது.
தனது நீண்டநாள் மேனேஜரும், பி.ஆர்.ஓ.வுமான பி.டி.செல்வகுமார் தயாரிக்கும் படத்தையே சிம்புதேவன் இயக்க இருக்கிறார். இதற்காக சிம்புதேவன் அட்வான்ஸ் வாங்கிவிட்டதாகவும் விஜய்யின் நெருங்கிய வட்டாராங்கள் தெரிவிக்கின்றன. தற்போது சிம்புதேவன் ‘ஒரு கன்னியும் மூணு களவாணிகளும்’ படத்தை இயக்கியிருக்கிறார். இப்படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது.

0 உங்கள் கருத்து:
கருத்துரையிடுக