வியாழன், 16 ஜனவரி, 2014

Filled Under:

லிங்குசாமி இயக்கும் சூர்யாவின் அடுத்த படம் 'அஞ்சான்'

லிங்குசாமி இயக்கும் சூர்யாவின் அடுத்த படம் 'அஞ்சான்' யூடிவி அறிவிப்பு

சூர்யாவின் அடுத்த புதிய மெகா பட்ஜெட் படத்தை திருப்பதி பிரதர்ஸ் தயாரிக்கிறது. அத்துடன் தயாரிப்பில் கை கோர்த்து யூடிவி மீண்டும் இணைந்து பயணிக்கிறது.

இதுவரை ரசிகர்களின் உதடுகளில் ஒட்டிக் கொண்டிருந்த கேள்வி சூர்யாவின் அடுத்த படத்தின் பெயர் என்ன ?என்பதுதான்.

இதோ அறிவித்து விட்டார்கள். சூர்யா நடிக்கும் அடுத்த படத்தின் பெயர் 'அஞ்சான்' அதாவது அஞ்சாதவன்,
அச்சம் இல்லாதவன் என்பது இதன் பொருள்

புதிய தோற்றத்தில் புதிய மிடுக்குடன் தென்னிந்திய சூப்பர் ஸ்டார் சூர்யா நாயகனாக நடிக்கிறார். வித்யுத் ஜம்வால், சமந்தா, மனோஜ் பாஜ்பாய், தலிப் தாஹில், பிரமானந்தம் உள்பட முன்னணி நட்சத்திரங்கள் பங்கேற்று நடிக்கிறார்கள்.

என் .லிங்குசாமி எழுதி இயக்கும் இப்படத்திற்கு ஒளிப்பதிவு கேமரா மேதை சந்தோஷ் சிவன். இசை யுவன் சங்கர்ராஜா. கலை இயக்கம் ராஜீவன். எடிட்டிங் ஆண்டனி.

இந்தப்படம் பட்ஜெட்டாலும் நட்சத்திரங்களாலும் படப்பிடிப்பு இடங்களாலும் தமிழ்த்திரை இதுவரை காணாத வகையில் இருக்கும். இப்படம் மிகப்பெரிய மாஸ் எண்டர் டெய்னராக இருக்கும் ஆகஸ்ட் 2014 ல் வெளியாகும் இது ரசிகர்களுக்குப் புதிய அனுபவமாக இருக்கும்."என்று லிங்குசாமி நம்பிக்கையுடன் கூறுகிறார்.

மும்பையில் முதல் கட்டமாக 35 நாட்கள் நடந்த 'அஞ்சான்' படப்பிடிப்பு அண்மையில்தான் முடி வடைந்தது.

அடுத்தகட்டம் ஜனவரி இறுதியில் புறப்பட உள்ளது படக்குழு. கோவா பயணப்பட்டு மகாராஷ்டிரா செல்கிறது. தமிழ்த்திரை காணாத பல புதிய இடங்களுக்கு செல்லவுள்ளது..

முழுப்படமும் தமிழ்நாடு அல்லாத வெளியிடங்களில் படப்பிடிப்பு நடத்தத் திட்டமிடப் பட்டுள்ளது.

தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் 'அஞ்சான்'ஒரே நேரத்தில் உருவாகிறது. சூர்யாவின் அடுத்த புதிய மெகா பட்ஜெட் படத்தை திருப்பதி பிரதர்ஸ் தயாரிக்கிறது. அத்துடன் தயாரிப்பில் கை கோர்த்து யூடிவி மீண்டும் இணைந்து பயணிக்கிறது.

இதுவரை ரசிகர்களின் உதடுகளில் ஒட்டிக் கொண்டிருந்த கேள்வி சூர்யாவின் அடுத்த படத்தின் பெயர் என்ன ?என்பதுதான்.

இதோ அறிவித்து விட்டார்கள். சூர்யா நடிக்கும் அடுத்த படத்தின் பெயர் 'அஞ்சான்' அதாவது அஞ்சாதவன்,
அச்சம் இல்லாதவன் என்பது இதன் பொருள்

புதிய தோற்றத்தில் புதிய மிடுக்குடன் தென்னிந்திய சூப்பர் ஸ்டார் சூர்யா நாயகனாக நடிக்கிறார். வித்யுத் ஜம்வால், சமந்தா, மனோஜ் பாஜ்பாய், தலிப் தாஹில், பிரமானந்தம் உள்பட முன்னணி நட்சத்திரங்கள் பங்கேற்று நடிக்கிறார்கள்.

என் .லிங்குசாமி எழுதி இயக்கும் இப்படத்திற்கு ஒளிப்பதிவு கேமரா மேதை சந்தோஷ் சிவன். இசை யுவன் சங்கர்ராஜா. கலை இயக்கம் ராஜீவன். எடிட்டிங் ஆண்டனி.

இந்தப்படம் பட்ஜெட்டாலும் நட்சத்திரங்களாலும் படப்பிடிப்பு இடங்களாலும் தமிழ்த்திரை இதுவரை காணாத வகையில் இருக்கும். இப்படம் மிகப்பெரிய மாஸ் எண்டர் டெய்னராக இருக்கும் ஆகஸ்ட் 2014 ல் வெளியாகும் இது ரசிகர்களுக்குப் புதிய அனுபவமாக இருக்கும்."என்று லிங்குசாமி நம்பிக்கையுடன் கூறுகிறார்.

மும்பையில் முதல் கட்டமாக 35 நாட்கள் நடந்த 'அஞ்சான்' படப்பிடிப்பு அண்மையில்தான் முடி வடைந்தது.

அடுத்தகட்டம் ஜனவரி இறுதியில் புறப்பட உள்ளது படக்குழு. கோவா பயணப்பட்டு மகாராஷ்டிரா செல்கிறது. தமிழ்த்திரை காணாத பல புதிய இடங்களுக்கு செல்லவுள்ளது..

முழுப்படமும் தமிழ்நாடு அல்லாத வெளியிடங்களில் படப்பிடிப்பு நடத்தத் திட்டமிடப் பட்டுள்ளது.

தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் 'அஞ்சான்'ஒரே நேரத்தில் உருவாகிறது

0 உங்கள் கருத்து:

கருத்துரையிடுக