பாட்டு வாய்ப்பு கேட்டு ரம்யா நம்பீசன் கண்டிஷன்
1/8/2014 3:13:11 PM
நடிக்க கால்ஷீட் கேட்டால் பாட்டு பாட வாய்ப்பு கேட்டு கண்டிஷன் போடுகிறாராம் ரம்யா நம்பீசன். ‘பீட்சா‘ படத்தையடுத்து 1 வருடத்துக்கு பிறகு ரம்யா நம்பீசன் நடிக்கும் தமிழ் படம் ‘டமால் டுமீல்‘. இப்படத்தை ஸ்ரீ டைரக்டு செய்கிறார். சி.ஜே.ஜெயகுமார் தயாரிக்கிறார். இப்படத்தில் நடிப்பதுபற்றி ரம்யா நம்பீசன் கூறியதாவது: ப¦ட்சா படத்துக்கு பிறகு தமிழில் நடிக்காதது ஏன் என்கிறார்கள். அப்படத்துக்கு பிறகு மலையாள படங்களில் பிஸியாகிவிட்டதால் நிறைய வாய்ப்புகள் வந்தும் தமிழ் படங்களை ஏற்க முடியவில்லை. இந்நிலையில்தான் டமால் டுமீல் படத்தின் கதையை எனக்கு செல்போனில் சொன்னார் இயக்குனர் ஸ்ரீ. பிடித்திருந்தது. பிறகு நேரில் கதை கேட்டேன். ஹாலிவுட் பாணியில் பிளாக் காமெடி ஸ்டைலில் இதன் ஸ்கிரிப்ட் அமைக்கப்பட்டிருக்கிறது.
காமெடி, கிரைம், த்ரில் எல்லாம் இதில் மிக்ஸ் ஆகி இருக்கிறது. வைபவ் ஹீரோ. இப்படத்தில் தமன் இசையில் சொந்த குரலில் ஒரு பாடலும் பாடி இருக்கிறேன். ‘என்னிடம் கால்ஷீட் கேட்டு வரும் இயக்குனர்களிடம் பாடல் பாட வாய்ப்பு தரும்படி கண்டிஷன் போடுகிறீர்களா?‘ என்கிறார்கள். கண்டிஷன் எதுவும் நான் போடுவதில்லை. மலையாள படங்களில் நான் பாடிய பாடல் ஹிட்டானது. அதேபோல் தமிழில் பாடிய ஃபை ஃபை பாடலும் ஹிட்டானதால் பாடுவதற்கும் எனக்கு தானாகவே வாய்ப்பு வருகிறது. அதை ஏற்கிறேன். இவ்வாறு ரம்யா நம்பீசன் கூறினார்.
0 உங்கள் கருத்து:
கருத்துரையிடுக