திங்கள், 20 ஜனவரி, 2014

Filled Under:

விஜய்யை விமர்சித்த ரசிகர் மன்னிப்பு கேட்டார்! ரசிகர்களுக்கும் விஜய் வேண்டுகோள்!!

இருதினங்களுக்கு முன்னர் ரசிகர்களுடன் வலைதளத்தில் கலந்துரையாடினார் விஜய். அப்போது அவரது ரசிகர்கள் ஆர்வமுடன் அவரிடம் கேள்விகள் கேட்டனர். அதற்கு விஜய்யும் சுவாரஸ்யமாக பதிலளித்தார். ஆனால் அந்தநேரம் பார்த்து, ரசிகர் ஒருவர் புகுந்து விஜய்யை தரக்குறைவாக விமர்சனம் செய்து பதிவு செய்திருந்தார். இதனையடுத்து கோபம் அடைந்த விஜய் ரசிர்கள், அவர் யார் என்பதை கண்டுபிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

பின்னர் இதுப்பற்றி விஜய் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது, என்னை தவறாக விமர்சித்த அந்த ரசிகரின் புகைப்படம் இணையதளங்களில் வெளியாவதாக அறிந்தேன். அதோடு அந்த நபரை காவல் துறையில் ஒப்படைக்கப்பட்டதாகவும் கூறினார்கள். நானே தொடர்பு கொண்டு அந்த ரசிகரை உடனடியாக வெளியிடுமாறு கேட்டுக்கொண்டேன். அதையடுத்து அவர் மீது வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்று கூறியுள்ள விஜய், நாட்டின் எதிர்காலம் இளைஞர்களின் கையில் என்கிறார்கள். அதனால் நீங்கள் உங்கள் வாழ்க்கையை முதலில் பாருங்கள். பெற்றோரை கவனித்துக்கொள்ளுங்கள். தேவையற்ற விசயங்களில் தலையிட்டு உங்கள் வாழ்க்கையை கெடுத்துக்கொள்ளாதீர்கள். இதை நான் ஒரு நடிகனாக இருந்து சொல்லவில்லை,. உங்களில் ஒருவராக, உங்கள் சகோதரனாகத்தான் சொல்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, அந்த ரசிகர் தான் வெளியிட்ட தவறான செய்தி குறித்து மன்னிப்பு கேட்டுள்ளார். அந்த வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது.

0 உங்கள் கருத்து:

கருத்துரையிடுக