வைத்து யோஹன் அத்தியாயம் ஒன்று படத்தை இயக்கயிருந்தது தடைபட்டது. அதன்பிறகு சூர்யாவைக்கொண்டு இயக்கயிருந்த துருவநட்சத்திரம் தடைபட்டது. என மாறி மாறி படங்கள் முடக்கப்பட்டு அவரை நிலைதடுமாற வைத்தன.
இருப்பினும், அஜீத், சிம்பு போன்ற நடிகர்கள் அவருக்கு தக்க சமையத்தில் கால்சீட் கொடுத்து ஆதரித்ததால் தற்போது சிம்பு நடிககும் படத்தை இயக்கி வருபவர், அடுத்து அஜீத்தை இயக்கும் பட வேலைகளிலும் இறங்க தயாராகி விட்டார். ஆக, கெளதம்மேனனின் வட்டாரம் தற்போது பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் இந்தி ரீமேக்கான ஏக் தீவானா தா என்ற படத்தை தயாரித்த ஆர்.எஸ். இண்போடெயின்மென்ட் என்ற பட நிறுவனத்திடம் கெளதம்மேனனின் போட்டோன் கதாஸ் நிறுவனம் பண மோசடி செய்து விட்டதாக அவர் மீது உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
ஆனால் இந்த வழக்கினை கண்டு தடுமாறாமல் அதை தில்லாக சந்திக்க தயாராகி விட்டார் கெளதம்மேனன். நான் எந்த தவறும் செய்யவில்லை. அதற்கு போதுமான ஆதாரமும் என்னிடம் உள்ளது. பிறகு நான் எதற்காக களங்க வேண்டும் என்கிறார்.
மேலும், இந்த விசயத்தில் எனது நண்பர்களான நடிகர் சரத்குமார், இசையமைப்பாளர் ஹாரிஸ்ஜெயராஜ் ஆகியோரும் என்பக்கம் உள்ள நியாயத்தை தயாரிப்பாளர் சங்கத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். அதனால் இதுபோன்ற நல்லவர்களின் ஆதரவும், எனது நியாயமான செயல்பாடும் எனக்கு கண்டிப்பாக வெற்றியை பெற்று தரும் என்று நம்பிக்கையோடு சொல்கிறார் கெளதம்மேனன்.
0 உங்கள் கருத்து:
கருத்துரையிடுக