ஞாயிறு, 5 ஜனவரி, 2014

Filled Under:

நண்பேண்டா பணிகளை துவக்கினார் உதயநிதி

Udayanidhi starts Nanbebanda                                                                                                 உதயநிதி ஸ்டாலின் தற்போது நடித்து வரும் இது கதிர்வேலன் காதல் பணிகள் முடிந்து விட்டது. இதில் உதயநிதிக்கு நயன்தாரா ஜோடி. சுந்தர பாண்டியன் படத்தை டைரக்ட் செய்த எஸ்.ஆர்.பிரகாரன் டைரக்ட் செய்துள்ளார். இது காமெடி ரொமாண்டிக் பிலிம். பிப்ரவரியில் ரிலீசாகிறது.
இது கதிர்வேலன் காதல் படத்தின் பணிகள் அத்தனையையும் முடித்துக் கொடுத்துவிட்டு அடுத்த படமான நண்பேண்டாவை துவக்கி விட்டார். இதில் உதயநிதிக்கு காஜல் அகர்வால் ஜோடி. ஜே.ஜெகதீஸ் டைரக்ட் செய்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கிறார். பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்கிறார். இதுவும் காதல் ரொமாண்டிக் படம்தான். உதயநிதியும், சந்தானமும் படம் முழுக்க இணைந்து வருகிறார்கள். படப்பிடிப்புக்கு முந்தைய பணிகள் வேகமாக நடந்து வருகிறது. பிப்ரவரி முதல் ஷூட்டிங் ஆரம்பிக்கிறார்கள்

0 உங்கள் கருத்து:

கருத்துரையிடுக