வெள்ளி, 6 ஜனவரி, 2017

லைஃப் ஈஸ் பியூட்டிஃபுல்! அமலா

லைஃப் ஈஸ் பியூட்டிஃபுல்! அமலாமைதிலி என்னை காதலி, மெல்ல திறந்தது கதவு, பன்னீர் நதிகள், கண்ணே கண்மணியே, உன்னை ஒன்று கேட்பேன், பூ பூவா பூத்திருக்கு, வேதம் புதிது, கவிதை பாட நேரமில்லை, இது ஒரு தொடர்கதை - இவையெல்லாம் எண்பதுகளில் ரசிகர்களை கவர்ந்த திரைப்படங்கள் என்பது நமக்குத் தெரியும். இன்னொரு முறை இந்தப் பெயர்களை வாசித்துப் பாருங்கள். எல்லாமே கவிதைகளின் இடையில் வரும் வரிகளைப் போல தெரியும். அந்நாளைய நாயகி அமலா நடிக்கும் படங்கள் என்றாலே, இயக்குநர்களுக்கு கவித்துவம் பொத்துக் கொண்டு வரும். சில நடிகைகளின் கட்டுக்கோப்பான உடல் அழகை ரசித்திருப்போம். சில நடிகைகளின் நேர்த்தியான நடிப்பை ரசித்திருப்போம். சில பேருடைய ஸ்டைலான உடல்மொழியை ரசித்திருப்போம். 

ஒரு முகத்தை ரசித்து நேசிப்பது என்பது மிகக்குறைவான நடிகைகளுக்கு மட்டுமே. அவர்களில் ஒருவர் அமலா. அவரது முகத்தில் ஒளிந்திருக்கும் குழந்தைத்தனத்தின் குறும்புதான் அவரது பலம். எனவேதான் அவரை கவர்ச்சியான உடையில் பார்க்க வேண்டும் என்று ரசிகர்களுக்கு தோன்றவில்லை. அவரும் அதற்கு இடம் கொடுக்கவில்லை. டி.ராஜேந்தரின் இயக்கத்தில் மைதிலி என்னை காதலி திரைப்படத்தில் அறிமுகமானதில் தொடங்கி, திருமணமாகி குடும்பத்தில் செட்டில் ஆகும்வரை தென்னிந்திய சினிமாவில் அமலாவுக்கு பின்னடைவு என்பதே இல்லை. ஒரே இரவில் புகழின் உச்சியில் அமர்ந்தவர் இந்த கலாக்ஷேத்திர நாட்டியப் பள்ளியின் மாணவி. தமிழ் சமூகத்துக்கு சம்பந்தமேயில்லாத பெங்காலிப் பொண்ணு. எப்படியோ நம் அனைவரின் மனதிலும் நீங்காத இடத்தைப் பிடித்தார். 

புகழின் உச்சியில் இருக்கும்போதே தெலுங்கு ஹீரோ நாகார்ஜுனாவை திருமணம் செய்துகொண்டு முழுமையான குடும்பத்தலைவியாக தன்னை மாற்றிக் கொண்டார். பழம்பெரும் நடிகர் நாகேஸ்வரராவின் மருமகள் என்கிற அந்தஸ்தை, எவ்வித குறைபாடும் இல்லாமல் பார்த்துக் கொண்டார். நாகேஸ்வரராவின் அக்கினேனி குடும்பம் ஆந்திராவில் பிரபலம். அந்தக் குடும்பத்தின் புகழ் தன்னால் குன்றிவிடக் கூடாது என்கிற காரணத்துக்காகவே கேரியரில் உச்சத்தில் இருந்தாலும் தனக்கு வந்த பெரிய சினிமா வாய்ப்புகள் அத்தனையையும் உதறினார். ஆடிய காலும், பாடிய வாயும் சும்மா இருக்காது என்கிற பழமொழி இவரது விஷயத்தில் பொய்யானது.

அமலா, அதன்பிறகு ஒரு சமூகசேவகியாக ஹைதராபாத்தில் விஸ்வரூபம் எடுத்தார். புளூகிராஸ் அமைப்பில் தன்னை இணைத்துக் கொண்டு வாய்பேச முடியாத விலங்கினங்களுக்காக உரிமைக்குரல் கொடுத்தார். ஆந்திராவில் இன்றும்கூட யாராவது ஆட்டையோ, மாட்டையோ அடித்தால் பக்கத்தில் இருப்பவர்கள் விளையாட்டாக, “உன்னை அமலா கையிலே பிடிச்சிக் கொடுத்துடுவேன்” என்று சொல்லுமளவுக்கு ஜீவகாருண்யத்தில் பெயர் பெற்றார். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தெலுங்கில் லைஃப் ஈஸ் பியூட்டிஃபுல் படத்தில் மட்டும் சில காட்சிகளில் நடித்தார் அமலா.

இதில் நடிக்க முடியாது என்றுதான் இயக்குநர் சேகர் கம்முலாவிடம் மறுத்துக் கொண்டிருந்தார். “நீங்கள் நடிக்காவிட்டால், இந்தப் படத்தையே எடுக்க மாட்டேன்” என்று பதிலுக்கு இயக்குநர் குண்டுபோட, அன்புக்காக நடித்துக் கொடுத்தார் அமலா. நாலே காட்சிகள்தான். இருந்தாலும் இவ்வளவு ஃபோர்ஸான கம்பேக் வேறு எவருக்காவது கிடைத்திருக்குமா என்று தெரியவில்லை. அமலாவை நோக்கி மீண்டும் வாய்ப்புகள் குவிந்தன. அழகான புன்னகையால் அத்தனை புகழையும், பணத்தையும் மறுத்தார். நிஜமாகவே அமலாவின் லைஃப் ஈஸ் பியூட்டிஃபுல்!

‛என்னை அறிந்தால் 2' - விரைவில்

அஜித் - கவுதம் மேனன் முதன்முறையாக இணைந்த படம் ‛என்னை அறிந்தால்'. அஜித் போலீஸ் அதிகாரியாக சால்ட் அண்ட் பெப்பர் ஸ்டைலிலேயே நடித்திருந்தார். அஜித்துடன் த்ரிஷா, அனுஷ்கா என இரண்டு ஹீரோயின்கள் நடித்தனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்த பாடல்கள் சூப்பர் ஹிட்டாக அமைந்தன. கடந்தாண்டு வெளியான இப்படம் சூப்பர் ஹிட்டாக அமைந்தது. என்னை அறிந்தால் வெளிவந்த சமயத்திலேயே இதன் இரண்டாம் பாகம் உருவாகும் என பேச்சு எழுந்தது. இந்நிலையில், சென்னையில் உள்ள கல்லூரி ஒன்றின் நிகழ்ச்சியில் பங்கேற்ற இயக்குநர் கவுதம் மேனன், மாணவர்களிடம் உரையாற்றினார். அப்போது, என்னை அறிந்தால் 2 பற்றிய தகவலை வெளியிட்டார். அவர் பேசும்போது... ‛‛என்னை அறிந்தால் படத்தின் 2ம் பாகம் குறித்து விரைவில் அஜித்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்போவதாக கூறினார். கவுதம் மேனனின் இந்த அறிவிப்பு, அஜித் ரசிகர்களிடையே மிகுந்த மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் கொடுத்துள்ளது.

வெள்ளி, 19 டிசம்பர், 2014

அடுத்த சூப்பர் ஸ்டார் அஜித்?

ரஜினியின் அறிவிக்கப்படாத அடுத்த வாரிசாக அமர்க்களப்படுத்திவருகிறார் அஜித். தொடர்ந்து வெற்றி களைக் குவித்துவரும் இவருக்கு ரசிகர்களின் வட்டம், மாவட்டமாய் வளர்ந்து, மாநிலங்கள் தாண்டி விரிந்து கொண்டிருக்கிறது.

படம் வெளியாகும்போது தியேட்டர்களில் பேனர் கட்டி புகழ்பாடவேண்டாம், கட்-அவுட் வைத்து பால்குளியல் நடத்த வேண்டாம், எல்லாவற்றுக்கும் மேலாக ரசிகர்மன்றமே வேண்டாம் என்று கலைத்துவிட்டபிறகும், ‘அதச்சொல்றதுக்கு நீ யாருய்யா? நாங்க அப்பிடித்தான் செய்வோம்’ என்று பாசக்காரப்புள்ளைகளாக அஜித்தைத் தூக்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறது ரசிகர் வட்டம். ஜீன்ஸ் மாறாத டீன்ஸ் ரசிகர்கள் கூட, ‘வீரம்’ படம் வந்த பிறகு வேட்டி- சட்டைக்கு மாறுவதை ஃபேஷனாகக் கொண்டார்கள்.

‘உயிரினும் மேலான ரசிகர்களே! புகை, மது இரண்டுமே தீங்கானது. திரைப் படத்தின் பாதிப்புகளில் கெட்டவைகளை அரங்கின் வாயிலோடு விட்டுவிட்டு, நல்லவைகளை வீட்டிற்கு எடுத்துச் செல்லுங்கள். உங்கள் நல் ஆரோக்யம், மகிழ்ச்சி, வெற்றி என்றென்றும் நிலைத்திருக்க... வாழ்த்துக்களுடன் அஜித்குமார்’ என்று ரசிகர்களுக்கு ‘தல’ எழுதிய கடிதம், அவர்களது குடும்பத்தையும் கவர்ந்தது. அப்புறமென்ன, அவர்களும் ரசிகர்களானார்கள்.

இமேஜ் பற்றிக் கவலைப்படாமல் அஜித் ஏற்கும் கதாபாத்திரங்களை பொது ரசிகர்களும் ஏற்றுக்கொள்வதே இவரது வெற்றிக்கு உத்தரவாதத்தை எந்த வாதம், விவாதமும் இல்லாமல் தருகிறது. மவுனப்படம் எடுத்தாலும், அதைப் பேசவைத்துவிடும் இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனனுடன் ‘தல’ கைகோர்த் திருக்கும் ‘என்னை அறிந்தால்’ படம், பூஜைபோட்ட நாளிலிருந்தே பண்டிகைக் கோலம் கண்டுவருகிறது. யூடியூபில் தூண்டல் காட்சி வெளியானபோது முதல் பன்னிரண்டு மணி நேரத்துக்குள் 5 லட்சம் பேர் பார்த்து ரசித்திருக்கிறார்கள் என்பது இதுவரை இல்லாத திரைச் சாதனை.

தன்னை நல்லவராக மட்டுமே காட்டிக்கொண்டு, ரசிகர்களுக்கு வஞ்சக வலை வீசாமல், கெட்டவனாகவும் வருவேன் என்று நெஞ்சக வலை விரிப்பதால் உஷார் பேர்வழிகளும் இவரிடம் சுலபமாக சிக்கிக் கொள்கிறார்கள். இவரது வெளிப்படையான பேச்சுக்கு, எழுந்து நின்று கைதட்டும் ரஜினிகாந்தின் அடுத்த வாரிசாகவே ‘தல’யை தலையில் வைத்துக் கொண்டாடுகிறார்கள் பொது ரசிகர்கள்.  பக்குவ முதிர்ச்சியும், தேர்ந்தெடுத்த கதாபாத்திரமும் அஜித்தை அடுத்த சூப்பர் ஸ்டார் ஆக்கும் என்பதே மனச்சாட்சியோடு பேசும் கோடம்பாக்க சினிமாக்காரர்களின் கருத்து. - See more at: http://cinema.dinakaran.com/cine-news-details.aspx?id=14770&id1=3#sthash.oaSaRtff.dpuf

மீண்டும் வருகிறார் சங்கீதா

பூவே உனக்காக, கண் திறந்து பாரம்மா, ரத்னா போன்ற படங்களில் நடித்தவர் சங்கீதா. இவர் ஒளிப்பதிவாளர் சரவணனை மணந்து கொண்டு சினிமாவை விட்டு ஒதுங்கினார். கடைசியாக மேரி ஆல்பட் படத்தில் கடந்த 2003ம் ஆண்டு நடித்திருந்தார். அதன்பிறகு முழுகவனத்தையும் குடும்பத்தின் பக்கம் திருப்பி இருந்தார். சமீபகாலமாக ஜோதிகா, அபிராமி, மஞ்சு வாரியர், கனிகா என திருமணம் ஆன நடிகைகள் மீண்டும் நடிப்புக்கு திரும்பி இருக்கின்றனர். இவர்களைப் பார்த்ததும் சங்கீதாவுக்கும் மறுபடியும் நடிப்பாசை வந்துவிட்டது.  தமிழ் பட வாய்ப்புகளுக்கு தூதுவிட்டு பார்த்தார் பலனில்லை. 

மலையாளத்தில் அவரது முயற்சி கைகொடுத்திருக்கிறது. ‘நகரவருதி நடுவில் நிஜன் என்ற படத்தில் நடிகர் சீனிவாசன் ஜோடியாக சங்கீதா நடிக்கிறார். இதுபற்றி அவர் கூறும்போது,‘சினிமாவில் எனக்கு நண்பர்களோ, தோழிகளோ அதிகம் கிடையாது. எனது சிறுவயது முதல் இன்றுவரை உள்ள ஒரேதோழி இந்திரஜா. அவருடன் மட்டும்தான் நான் தொடர்பில் இருக்கிறேன். நல்ல கதாபாத்திரங்களில் மட்டுமே நடிப்பது என்ற பாலிசியை ஹீரோயினாக நடித்தபோதே பின்பற்றினேன். இனியும் அப்படித்தான் என்றார். - See more at: http://cinema.dinakaran.com/cine-news-details.aspx?id=14773&id1=3#sthash.0ZhvzIlp.dpuf

சனி, 29 நவம்பர், 2014

விஜய்க்கு, அஜித் செய்த அட்வைஸ்!

இளையதளபதி விஜய் புதிதாக வாங்கி இருக்கும் ஹார்லி டேவிட்சன் பைக்கில் தான் சில தினங்களாகவே சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் நடந்து வரும் தனது 58-வது படத்தின் படப்பிடிப்புகளுக்கு சென்று வருகிறாராம்.
முகத்தில் கர்சீப் கட்டிக்கொண்டு கொண்டு செல்லும் விஜயை ரசிகர்கள் பலரும் பார்த்திருக்கின்றனர். இதை கேள்விப்பட்ட தல அஜித், நடிகர் விஜயை தனது போனில் அழைத்து "பைக்ல போறது ஜாலியாதான் இருக்கும் கொஞ்சம் ஹெல்மெட் போட்டீங்கன்ன சேஃப்" என்றாராம்.

வியாழன், 4 செப்டம்பர், 2014

நயன்தாராவுடன் காதல் தோல்வியால் தற்கொலை முயற்சியா?: உதயநிதி விளக்கம்

இது கதிர்வேலன் காதல் படத்தில் இணைந்து நடித்த நயன்தாரா, உதயநிதி தற்போது நண்பேன்டா படத்திலும் இணைந்து நடிக்கிறார்கள். இருவருக்கும் இடையில் நெருக்கமான காதல். உதயநிதியின் காதலை நயன்தாரா ஏற்காததால் உதயநிதி தற்கொலைக்கு முயன்றார் என்றெல்லாம் செய்திகள் வெளிவந்தது. இதற்கு முதன் முறையாக இப்போது விளக்கம் அளித்துள்ளார் உதயநிதி.

இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: நயன்தாராவால் தான் நான் ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆனேன்ங்றது உண்மைதான். ஆனால் அது தற்கொலை முயற்சியில்லை. நண்பேன்டா படத்தில் ஒரு சண்டைக் காட்சியில் என்னை தாக்க வரும் வில்லனை அடித்து விட்டு அவர் கையை என்பக்கம் கொண்டு வரவேண்டும். அந்தக் காட்சி எடுக்கும்போது டைமிங் மிஸ்சாகி வில்லனை அடிக்க வேண்டியவர் என்னை அடித்து விட்டார். அவரது விரல் நகம் கண்ணில் குத்தி கிழித்து விட்டது. இதனால் ரத்தம் வழிந்ததும் ஆஸ்பத்திரியில் அட்மிட்டாகி சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டியது வந்தது. இதுதான் நடந்தது.

இதே மாதிரி காஜல் அகர்வாலுக்கு எனக்கும் காதல் அதனால் அவருக்கு கொடுத்திருந்த 40 லட்சம் அட்வான்ஸ் பணத்தைகூட நான் திரும்ப வாங்கவில்லை என்ற ஒரு வதந்தியை கிளப்பினார்கள். உண்மையில் நான் அந்த 40 லட்சத்தை திருப்பி வாங்கித் தரச்சொல்லி தயாரிப்பாளர் சங்கத்துல புகார் கொடுத்திருக்கிறேன்.

நடந்தது இப்படி இருக்க... அதுக்கு கண், காது, மூக்கு வச்சி செய்தியாக்குறாங்க. சரி படத்துக்கு இலவசமா பப்ளிசிட்டி கிடைக்குதுன்னு சும்மா இருந்து விடுகிறேன். நயன்தாராவும், என் மனைவி கிருத்திகாவும் நல்ல நண்பர்கள் அதனால் எந்த செய்தி வந்தாலும் அதைப் பற்றி இருவருமே கவலைப்படுவதில்லை. நயன்தாராவுக்கு லண்டனில் வீடு வாங்கி கொடுத்திருப்பதாககூட எழுதுகிறார்கள். சந்தானம்தான் "நயன்தாராவுக்கு லண்டன்ல வீடு வாங்கி கொடுத்திருக்கீங்க எனக்கு பல்லாவரத்துலயாவது ஒரு வீடு வாங்கி கொடுங்க"ன்னு சதாய்க்கிறார்.

நான் தெளிவாக இருக்கிற வரைக்கும் எந்த வதந்தியும், செய்தியும் என்னை பாதிக்காது. கொஞ்சம் கூட உண்மையில்லாத செய்திகளுக்கு விளக்கம் கொடுத்து நேரத்தை வீணாக்கவும் விரும்பவில்லை. என்கிறார் உதயநிதி.

மாஸ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசர்! விரைவில் வெளியாகிறது

Mass first look to be release soonஅஞ்சான் படத்தின் தோல்வியினால் கடும் அப்ஸெட்டில் இருந்த சூர்யா, வெங்கட்பிரபு இயக்கும் மாஸ் படத்தின் படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டார். ஒருவழியாக மனசை தேற்றிக் கொண்டு தற்போது வெங்கட்பிரபுவின் இயக்கத்தில் மாஸ் படத்தின் படப்பிடிப்பில் நடித்து வருகிறார் சூர்யா. நயன்தாரா, எமி ஜாக்சன் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கும் மாஸ் படத்தில் பிரேம்ஜி அமரன், ஜெயராம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். மாறுபட்ட வில்லன் கதாபாத்திரம் ஒன்றில் இயக்குநர் சமுத்திரக்கனி நடிக்கிறார்.

வெங்கட் பிரபு இயக்குநராக அறிமுகமான சென்னை - 600028 படம் தொடங்கி பிரியாணி படம் வரை அவரது அனைத்து படங்களுக்கும் இசையமைத்த யுவன்சங்கர்ராஜாவே இந்தப்படத்துக்கம் இசையமைக்கிறார். வெங்கட்பிரபு- யுவன்சங்கர்ராஜா இணையும் 6 ஆவது படம் இது. சூர்யா பங்குதாரராக உள்ள ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் படம் இது என்பதால், மாஸ் படத்திற்கு மிகப்பெரிய பட்ஜெட்டை ஒதுக்கி இருக்கின்றனர். சில வாரங்களுக்கு முன்புதான் படப்பிடிப்பு தொடங்கியது. என்றாலும், பரபரப்பாக பணியாற்றியதால் ஏறக்குறைய 40 சதவிகித படப்பிடிப்பை முடித்துவிட்டார் வெங்கட்பிரபு.

இதுவரை எடுத்த காட்சிகளை வைத்து மாஸ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசரை தயார் பண்ணி வருகிறாராம் வெங்கட்பிரபு. அதை விரைவில் வெளியிடப்போவதாக டுவிட்டரில் தெரிவித்திருக்கிறார் மாஸ் படத்தின் இயக்குநர் வெங்கட்பிரபு. அஞ்சான் படத்தின் தோல்வியை மக்கள் மறக்கும் அளவுக்கு மாஸ் படத்தின் வெற்றி இருக்க வேண்டும் என்று வெங்கட்பிரபுவிடம் கேட்டுக்கொண்டிருக்கிறாராம் சூர்யா.

வெள்ளி, 15 ஆகஸ்ட், 2014

அஞ்சான் விமர்சனம்

சிங்கம், சிங்கம்-2 என்று வசூல் வேட்டை நடத்திவிட்டு சூர்யா அடுத்த அதிரடிக்கு ரெடியான திரைப்படம் தான் அஞ்சான். இயக்குனர் லிங்குசாமியின் ஹை ஸ்பீட் திரைகதையை நம்பி சூர்யா மறுபடியும் வசூல் வேட்டையாட அஞ்சானாக மாறியிருக்கிறார்.தமிழ் சினிமாவிற்கு என சில தத்துவங்கள் இருக்கிறது, அதை இந்த படமும் பின்பற்றி டான் கதையை கையில் எடுத்தது மட்டுமில்லாமல், வழக்கம் போல் அதை மும்பையில் எடுத்துள்ளார்கள். சமீப காலமாக மாஸ் ஹீரோக்களின் படங்கள் எல்லாம் மும்பையை சுற்றி தான் எடுக்கவேண்டும் போல, மங்காத்தா, துப்பாக்கி படத்தின் விளைவு தான் இது.படத்தின் கதையாக பார்த்தோமேயானால் லிங்குசாமி சொன்னது போல் பாட்ஷா படத்தின் டெக்னாலஜி டெவலப்மெண்ட் தான் இந்த அஞ்சான். ராஜு பாய் தம்பி கிருஷணா தன் அண்ணனை தேடிக்கொண்டு மும்பை வர, அங்கு கரீம் பாயிடம் தன் அண்ணனை பற்றிய உண்மைகளை கேட்டு அறிகிறார். ராஜு பாய், சந்துரு இருவரும் பாட்ஷா, மாணிக்கம் டைப் நண்பர்கள். இவர்கள் இணைந்து மும்பையில் நடக்கும் அனைத்து கட்டபஞ்சாயத்துகளிலும் முதல் ஆளாக தலையிட்டு முடிக்கின்றனர். இதில் சில சந்தர்ப சூழ்நிலையால் சமந்தாவை, சூர்யா கடத்த பின் வழக்கம் போல் காதலில் முடிகிறது.நல்ல டான் இருக்கும் போது கெட்ட டான் வேண்டும் அல்லவா? அதேபோல் இம்ரான் என்பவர் மற்றொரு டான், இவர் ஒரு கட்டத்தில் சந்துருவை(வித்யூ) கொல்ல, அதை பார்க்க வந்த இடத்தில் சூர்யாவையும் சுட்டு தள்ள, அதன் பின் என்ன நடக்கிறது என்பது தான் மீதிக்கதை. நடிப்பு குறித்து சொல்லவேண்டுமென்றால் சமந்தா வேறு எந்த படத்திலும் இல்லாத அளவிற்கு கவர்ச்சி காட்டியுள்ளார், சண்டைக்கோழி படத்தில் வரும் மீராஜாஸ்மின் போன்று துறு துறு என வந்து ரசிகர்களை கவர்கிறார். சூரி சில நிமிடம் வந்தாலும் செம்ம கலாட்டா செய்துவிட்டு போகிறார்.படத்தின் பலம் கண்டிப்பாக சூர்யா தான், ராஜு பாயாக கலக்குகிறார், சண்டைபோடுகிறார், அதே நிமிடம் சமந்தாவுடன் டூயட் பாடி அசத்துகிறார். சந்தோஷ்சிவனின் ஒளிப்பதிவு, நாங்கள் சொல்லி தெரியவேண்டியதில்லை, ஒவ்வொரு காட்சியையும் கலர்ஃபுல்லாக படம் பிடித்தது மட்டுமில்லாமல் படத்திற்கு டான் கோட்டிங் கொடுத்துள்ளார்.யுவனின் பாடல்கள் ’பேங் பேங்’, ஏக் தோன் தீன் பாடல்கள் மட்டும் கேட்கலாம், ஆனால் பின்னணி இசையில் கலக்கி எடுத்திருக்கிறார். பலவீனம் கண்டிப்பாக படத்தின் நீளம் தான், இன்றைய சூழ்நிலையில் மக்கள் மிக வேகமாக ஓடிக்கொண்டிருக்க, 2 மணி நேரமே அதிகம் போல் தெரிய, 2.45 மணி நேரத்திற்கு மேல் படம் ஓடுவது தேவை தான? படம் வழக்கமான டான் கதை, யூகிக்க கூடிய திருப்பங்கள் என செல்கிறது.மொத்தத்தில் அஞ்சான் மும்மை டான் கதையை எடுக்க கொஞ்சம் அஞ்ச வைத்துவிட்டான்.

வெள்ளி, 4 ஜூலை, 2014

உதயநிதியை இயக்கும் மான் கராத்தே இயக்குநர் திருக்குமரன்

 முதல் படத்தை இயக்கிய புதுமுக இயக்குநருக்கு அடுத்தப்பட வாய்ப்பு கிடைப்பதை வைத்தே, அவரது முதல் படம் வெற்றிப்படமா தோல்விப்படமா என்று சொல்ல முடியும். சிவகார்த்திகேயன், ஹன்சிகா மோத்வானி நடித்த மான் கராத்தே படம் வெளியானபோது படம் எதிர்பார்த்தபடி இல்லை என்ற விமர்சனத்தை சந்தித்தது. அது மட்டுமல்ல, படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களுக்கு நஷ்டம் என்றும் சொல்லப்பட்டது. இதற்கிடையில் மான்கராத்தே சில தியேட்டர்களில் 100 ஆவது நாளைக் கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது. சரி..மான் கராத்தே வெற்றிப்படமா? தோல்விப்படமா? அதற்கான விடை தற்போது தெரிந்துவிட்டது.

யெஸ்..மான் கராத்தே படத்தின் இயக்குநர் திருக்குமரனுக்கு அடுத்தப்பட வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதுவும்..பெரிய பேனரில் இரண்டாவது படத்தை இயக்கும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறார் திருக்குமரன். ரெட் ஜெயன்ட் மூவீஸ் உதயநிதி ஸ்டாலின் அவரை ஒப்பந்தம் செய்துள்ளார். தற்போது நண்பேன்டா படத்தில் நடித்து வரும் உதயநிதி அடுத்து அஹ்மது இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப்படங்களைத் தொடர்ந்து உதயநிதி நடிக்கும் படத்தையே திருக்குமரன் இயக்க உள்ளார். திருக்குமரனை ஒப்பந்தம் செய்துள்ள உதயநிதி பெரிய சம்பளம் தர ஒப்புக்கொண்டிருக்கிறாராம்.

விஜய்க்கு ஜோடியான ஸ்ருதிஹாசன் - ஹன்சிகா!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடித்து வரும் ''கத்தி'' படம் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இதனையடுத்து சிம்புதேவன் இயக்கத்தில், விஜய் நடிக்கிறார். இவர்கள் இணையும் படம் உறுதிசெய்யப்பட்டு, அதற்கான வேலைகளில் மும்முரமாக இறங்கியுள்ளார் சிம்புதேவன்.

இந்தப்படம் வரலாற்று பின்னணியில் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. ராஜமௌலி இயக்கிய மகதீரா தெலுங்குப்படத்தைப்போல் பிரம்மாண்டமான பீரியட் பிலிமாக இந்தப்படத்தை இயக்க இருக்கிறாராம் சிம்புதேவன். மேலும் விஜய், இந்தப்படத்தில் அப்பா-மகன் என இரண்டு வேடங்களில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது இந்நிலையில், விஜய் ஜோடியாக இரண்டு நாயகிகளை நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் நடந்து வந்த நிலையில், ஸ்ருதிஹாசனும், ஹன்சிகாவும் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் ஸ்ருதிஹாசன், இப்போது தான் முதன்முறையாக விஜய்யுடன் ஜோடி சேர உள்ளார். ஹன்சிகாவோ, ஏற்கனவே விஜய்யுடன் வேலாயுதம் படத்தில் நடித்துள்ளார். விரைவில் படம் பற்றிய முழு அறிவிப்புகளையும் இயக்குநர் சிம்புதேவன் அறிவிக்க உள்ளார்..

ஞாயிறு, 29 ஜூன், 2014


‪#‎AmaraKaaviyam‬ ‪#‎Sathya‬ ‪#‎JeevaSankar‬ ‪#‎MiaGeorge‬ ‪#‎Ghibran‬ நீ உண்மையிலயே என்னை லவ் பண்றியா?
நான் என்ன பண்ணா என் காதலை நம்புவ- அமரகாவியம் டிரெய்லர்!

What's Trending?

Text Widget 2