புதன், 22 ஜனவரி, 2014

Filled Under:

மிரட்டலான வேடத்தில் விஜயசேதுபதி!

 கூத்துப்பட்டறை நடிகரான விஜயசேதுபதி ஆரம்பத்தில் சினிமாவில் சின்னச்சின்ன வேடங்களில்தான் நடித்து வந்தார். அப்படிப்பட்டவரை அடையாளம் கண்டுபிடித்து தனது தென்மேற்கு பருவக்காற்று படத்தில் கதாநாயகனாக்கியவர் சீனுராமசாமி. அதன்பிறகுதான் அடுத்தடுத்து நாயகன் வாய்ப்புகள் கிடைக்க தற்போது கோலிவுட்டின் தவிர்க்க முடியாத கதாநாயகனாகி விட்டார் விஜயசேதுபதி.

இந்த நிலையில், தென்மேற்கு பருவக்காற்று படத்தையடுத்து விஷ்ணுவைக்கொண்டு நீர்ப்பறவை படத்தை இயக்கிய சீனுராமசாமி, அடுத்து இடம் பொருள் ஏவல் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் முதலில் விஷ்ணுதான் நாயகனாக ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால், பின்னர் வியாபாரம் கருதி, ஒரு கேரக்டருக்காக விஜயசேதுபதியை இணைத்தார்.

ஆனால் இப்போது இன்னொரு ஹீரோ அளவுக்கு அவரது கேரக்டரும் பெருசுபடுத்தப்பட்டுள்ளதாம். இதற்கு முன்பு தாடி வைத்த, தாடி வைக்காத என இரண்டுவிதமாகவும் நடித்துள்ள விஜயசேதுபதி, இந்த படத்தில் கடாமீசை வைத்தபடி நடிக்கிறாராம். பார்ப்பதற்கு விருமாண்டி கமல் போன்று இருக்கும் அவருக்கு அந்த மீசைக்கேற்றபடி மிரட்டலான வேடமாம். அதனால் இதுவரை காதல், காமெடி என்று கலக்கிய விஜயசேதுபதி இந்த படத்தில் மிரட்டலாகவும் நடித்துக்கொண்டிருக்கிறாராம்.

0 உங்கள் கருத்து:

கருத்துரையிடுக