இதில் விஜய்யின் அப்பாவாக மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடித்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவர் நடித்த தமிழ்ப்படம் என்பதாலும், ஹீரோ விஜய் என்பதாலும் படத்தில் நடிக்க தனக்கு சம்பளம் எதுவும் வாங்கிக் கொள்ளவில்லை. மாறாக ஜில்லாவின் கேரள வினியோக உரிமையை மட்டும் வாங்கிக் கொண்டார்.
சுமார் 207 தியேட்டர்களில் அவர் ‘ஜில்லா’வை ரிலீஸ் செய்தார். ஹீரோ விஜய்யாக இருந்தாலும் அங்குள்ள மோகன்லால் ரசிகர்கள் அவருடைய போட்டோக்களை போட்டு அது மோகன்லாலின் படம் என்றே போஸ்டர்கள் ஒட்டி விளம்பரம் செய்தார்கள்.
இந்நிலையில் கடந்த 10 ஆம் தேதி மிகுந்த எதிர்பார்ப்புடன் கேரளாவில் ரிலீசான ‘ஜில்லா’ படம் காலை 4 மணிக்கு ஆரம்பித்த முதல் காட்சியிலேயே படத்தை பார்த்த ரசிகர்கள் வெறுத்துப் போயினராம். இதனால் முதல்நாளிலேயே அடுத்தடுத்த காட்சிகளில் ரசிகர்களின் கூட்டம் குறைய ஆரம்பித்தது.
இதற்கும் ‘ஜில்லா’வில் விஜய்க்கு நிகராகவே மோகன்லாலும் வந்து போனார். அப்படியும் கூட ‘ஜில்லா’ கேரளாவில் ஓடாமல் போனதைக் கேள்விப்பட்ட மோகன்லால் கடுமையான அப்செட்டில் இருந்து வந்தார். இதற்கிடையே அவருடைய ‘திருஷ்யம்’ படத்துக்கு மீண்டும் ரசிகர்கள் கூட்டம் படையெடுக்க ஆரம்பித்திருப்பதால் மோகன்லால் சந்தோஷத்தில் உள்ளார்.
தனது ஆசீர்வாத் சினிமாஸ் கம்பெனி மூலம் அவர் தயாரித்த ‘திருஷ்யம்’ கடந்த டிசம்பர் 19-ஆம்தேதி கேரளாவில் ரிலீசானது. மோகன்லாலுடன் மீனா இணைந்து நடித்துள்ள இந்தப்படம் அங்கு மெகா ஹிட்டாகி வசூலை வாரிக் குவித்து வருகிறது.
திருஷ்யத்தில் மோகன்லாலின் அட்டகாசமான நடிப்பை சிலாகித்துக் கொண்டிருந்த கேரள ரசிகர்களுக்கு திருஷ்யத்தை கம்பேர் செய்யும்போது ‘ஜில்லா’வில் அவருடைய காட்சிகள் எதுவுமே திருப்திகரமாக இல்லையாம்.
இதனால் கடுப்பான அவர்கள் ஒட்டுமொத்தமாக ‘ஜில்லா’வை புறக்கணித்து விட்டு மீண்டும் தொடர்ந்து 4-வது வாரமாக கேரளாவில் ஓடிக்கொண்டிருக்கும் ‘திருஷ்யம்’ படம் ஓடும் தியேட்டர்களுக்கு படையெடுக்க ஆரம்பித்துள்ளனர்.
‘ஜில்லா’ தந்த நஷ்டத்தை தனது ‘திருஷ்யம்’ படத்தில் மீட்டெடுக்க நினைத்த மோகன்லாலும் வரும் திங்கட்கிழமை முதல் ஜில்லா ஓடும் சில தியேட்டர்களில் மீண்டும் தனது ‘திருஷ்யம்’ படத்தை திரையிட முயற்சி மேற்கொண்டுள்ளார்.
0 உங்கள் கருத்து:
கருத்துரையிடுக