சாதாரணமாக ஒரு படம் 2 மணி 10 நிமிடம் இருந்தாலே ரசிகர்களுக்கு போரடிக்கத் துவங்கி விடும். அப்படிப்பட்ட சூழலில் இதுவரை ரிலீசான எந்த விஜய் படத்திலும் இல்லாத வகையில் ‘ஜில்லா’ படம் சுமார் 3 மணி நேரத்தை தாண்டி ஓடுகிறது.
இதனால் தியேட்டரில் படத்தை உட்கார்ந்து பார்க்கும் ரசிகர்கள் சீக்கிரத்திலேயே சோர்வடைந்து விடுவதாகவும், படம் ஓடிக்கொண்டிருக்கும் போதே அடிக்கடி எழுந்து வெளியே போய் விடுவதாகவும் தியேட்டர்கள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து ரசிகர்கள், மற்றும் நண்பர்கள் வேண்டுகோளுக்கு இணங்க ‘ஜில்லா’ படத்தின் நீளத்தை 10 நிமிடம் குறைக்க உத்தரவிட்டிருக்கிறாராம் தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரி.
இன்று இரவுமுதல் இந்த நீளம் குறைக்கப்பட்ட ‘ஜில்லா’ படத்தை ரிலீசாகியுள்ள எல்லா தியேட்டர்களிலும் பார்க்கலாம் என்று தெரிவித்துள்ளார் தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரி.
0 உங்கள் கருத்து:
கருத்துரையிடுக