வியாழன், 23 ஜனவரி, 2014

Filled Under:

நண்பேன்டா படப்பிடிப்பு தொடங்கியது: மீண்டும் உதயநிதி, நயன்தாரா, சந்தானம் கூட்டணி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

உதயநிதி ஸ்டாலின், நயன்தாரா, சந்தானம் நடித்துள்ள இது கதிர்வேலன் காதல் படத்தின் அத்தனை பணிகளும் முடிந்து விட்டது. பிப்ரவரி மாதம் ரிலீசாக இருக்கிறது. இதனை சுந்தரபாண்டியன் படத்தை டைரக்ட் செய்த எஸ்.ஆர்.பிரபாகரன் டைரக்ட் செய்துள்ளார்.

இப்போது இதே கூட்டணி நண்பேன்டா படத்தில் மீண்டும் இணைகிறது. படத்தை டைரக்ட் செய்பவர் மட்டுமே மாறுகிறார். எஸ்.எம்.எஸ், ஓகே ஓகே படங்களில் டைரக்டர் ராஜேஷ்.எம்மிடம் உதவியாளராக பணியாற்றிய ஏ.ஜெகதீஷ் என்பவர் இயக்குகிறார். மற்றபடி உதயநிதி, நயன்தாரா, சந்தானம் ஆகியோர் கூட்டணி தொடர்கிறது. ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கிறார், பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்கிறார். இவர்களும் உதயநிதியின் கூட்டணிதான். ஆர்ட் டைரக்டரும், டான்ஸ் மாஸ்டரும் கூட மாறவில்லை.

கதையும், காதலையும் நட்பையும் காமெடியாக சொல்லும் அதே கதைதான். திரைக்கதையும், கதையின் களமும், காமெடி ஐடியாவும் புதுசாம். முந்தைய படங்களை விட் பட்ஜெட்டும் அதிகமாம். நண்பேண்டா படத்தின் படப்பிடிப்புகள் இன்று (ஜனவரி 23) முதல் தொடங்கியது.

0 உங்கள் கருத்து:

கருத்துரையிடுக