அப்படி எந்தெந்த முன்னணி ஹீரோ படங்களுக்கு இசையமைக்கிறார் என்று விசாரித்தபோது, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய படம் மற்றும் கெளதம்மேனன் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படம் என இரண்டு மெகா ஹீரோக்களின் படங்களுக்கும் அனிருத்தான் இசையமைக்கிறாராம். இந்த இரண்டு படங்களும்தான் சினிமாவில் தனது எதிர்காலத்தை முடிவு செய்யக்கூடியவை என்று கருதும் அனிருத், இப்படங்களுக்காகத்தான் கடந்த சில மாதங்களாகவே ஏராளமான டியூன்களை உருவாக்கிக்கொண்டிருக்கிறாராம். அப்படி தான் உருவாக்கும் டியூன்களை உடனுக்குடன் சம்பந்தப்பட்ட டைரக்டர்களின் கவனத்துக்கு கொண்டு சென்று அவர்களின் அபிப்ராயத்தையும் கேட்டு வருகிறாராம்.
விஜய்யின் தலைவாவுக்கு ஜி.வி.பிரகாசும், ஜில்லாவுக்கு இமானும் இசையமைத்திருந்தனர். அதேபோல் அஜீத்தின் ஆரம்பம் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜாவும், வீரத்துக்கு தேவி ஸ்ரீபிரசாத்தும் இசையமைத்திருந்தனர். ஆனால் இவர்கள் போன்ற முன்னணி இசையமைப்பாளர்களையெல்லாம் பின்தள்ளிவிட்டு, அஜீத், விஜய் ஆகிய இருவரின் படங்களையும் ஒரே நேரத்தில் கைப்பற்றி அதிரடி சாதனை செய்திருக்கிறார் அனிருத்.
அவரது இந்த மின்னல் வேகம் மேல்தட்டு இசையமைப்பாளர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.
0 உங்கள் கருத்து:
கருத்துரையிடுக