வியாழன், 4 செப்டம்பர், 2014

நயன்தாராவுடன் காதல் தோல்வியால் தற்கொலை முயற்சியா?: உதயநிதி விளக்கம்

இது கதிர்வேலன் காதல் படத்தில் இணைந்து நடித்த நயன்தாரா, உதயநிதி தற்போது நண்பேன்டா படத்திலும் இணைந்து நடிக்கிறார்கள். இருவருக்கும் இடையில் நெருக்கமான காதல். உதயநிதியின் காதலை நயன்தாரா ஏற்காததால் உதயநிதி தற்கொலைக்கு முயன்றார் என்றெல்லாம் செய்திகள் வெளிவந்தது. இதற்கு முதன் முறையாக இப்போது விளக்கம் அளித்துள்ளார் உதயநிதி.

இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: நயன்தாராவால் தான் நான் ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆனேன்ங்றது உண்மைதான். ஆனால் அது தற்கொலை முயற்சியில்லை. நண்பேன்டா படத்தில் ஒரு சண்டைக் காட்சியில் என்னை தாக்க வரும் வில்லனை அடித்து விட்டு அவர் கையை என்பக்கம் கொண்டு வரவேண்டும். அந்தக் காட்சி எடுக்கும்போது டைமிங் மிஸ்சாகி வில்லனை அடிக்க வேண்டியவர் என்னை அடித்து விட்டார். அவரது விரல் நகம் கண்ணில் குத்தி கிழித்து விட்டது. இதனால் ரத்தம் வழிந்ததும் ஆஸ்பத்திரியில் அட்மிட்டாகி சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டியது வந்தது. இதுதான் நடந்தது.

இதே மாதிரி காஜல் அகர்வாலுக்கு எனக்கும் காதல் அதனால் அவருக்கு கொடுத்திருந்த 40 லட்சம் அட்வான்ஸ் பணத்தைகூட நான் திரும்ப வாங்கவில்லை என்ற ஒரு வதந்தியை கிளப்பினார்கள். உண்மையில் நான் அந்த 40 லட்சத்தை திருப்பி வாங்கித் தரச்சொல்லி தயாரிப்பாளர் சங்கத்துல புகார் கொடுத்திருக்கிறேன்.

நடந்தது இப்படி இருக்க... அதுக்கு கண், காது, மூக்கு வச்சி செய்தியாக்குறாங்க. சரி படத்துக்கு இலவசமா பப்ளிசிட்டி கிடைக்குதுன்னு சும்மா இருந்து விடுகிறேன். நயன்தாராவும், என் மனைவி கிருத்திகாவும் நல்ல நண்பர்கள் அதனால் எந்த செய்தி வந்தாலும் அதைப் பற்றி இருவருமே கவலைப்படுவதில்லை. நயன்தாராவுக்கு லண்டனில் வீடு வாங்கி கொடுத்திருப்பதாககூட எழுதுகிறார்கள். சந்தானம்தான் "நயன்தாராவுக்கு லண்டன்ல வீடு வாங்கி கொடுத்திருக்கீங்க எனக்கு பல்லாவரத்துலயாவது ஒரு வீடு வாங்கி கொடுங்க"ன்னு சதாய்க்கிறார்.

நான் தெளிவாக இருக்கிற வரைக்கும் எந்த வதந்தியும், செய்தியும் என்னை பாதிக்காது. கொஞ்சம் கூட உண்மையில்லாத செய்திகளுக்கு விளக்கம் கொடுத்து நேரத்தை வீணாக்கவும் விரும்பவில்லை. என்கிறார் உதயநிதி.

மாஸ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசர்! விரைவில் வெளியாகிறது

Mass first look to be release soonஅஞ்சான் படத்தின் தோல்வியினால் கடும் அப்ஸெட்டில் இருந்த சூர்யா, வெங்கட்பிரபு இயக்கும் மாஸ் படத்தின் படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டார். ஒருவழியாக மனசை தேற்றிக் கொண்டு தற்போது வெங்கட்பிரபுவின் இயக்கத்தில் மாஸ் படத்தின் படப்பிடிப்பில் நடித்து வருகிறார் சூர்யா. நயன்தாரா, எமி ஜாக்சன் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கும் மாஸ் படத்தில் பிரேம்ஜி அமரன், ஜெயராம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். மாறுபட்ட வில்லன் கதாபாத்திரம் ஒன்றில் இயக்குநர் சமுத்திரக்கனி நடிக்கிறார்.

வெங்கட் பிரபு இயக்குநராக அறிமுகமான சென்னை - 600028 படம் தொடங்கி பிரியாணி படம் வரை அவரது அனைத்து படங்களுக்கும் இசையமைத்த யுவன்சங்கர்ராஜாவே இந்தப்படத்துக்கம் இசையமைக்கிறார். வெங்கட்பிரபு- யுவன்சங்கர்ராஜா இணையும் 6 ஆவது படம் இது. சூர்யா பங்குதாரராக உள்ள ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் படம் இது என்பதால், மாஸ் படத்திற்கு மிகப்பெரிய பட்ஜெட்டை ஒதுக்கி இருக்கின்றனர். சில வாரங்களுக்கு முன்புதான் படப்பிடிப்பு தொடங்கியது. என்றாலும், பரபரப்பாக பணியாற்றியதால் ஏறக்குறைய 40 சதவிகித படப்பிடிப்பை முடித்துவிட்டார் வெங்கட்பிரபு.

இதுவரை எடுத்த காட்சிகளை வைத்து மாஸ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசரை தயார் பண்ணி வருகிறாராம் வெங்கட்பிரபு. அதை விரைவில் வெளியிடப்போவதாக டுவிட்டரில் தெரிவித்திருக்கிறார் மாஸ் படத்தின் இயக்குநர் வெங்கட்பிரபு. அஞ்சான் படத்தின் தோல்வியை மக்கள் மறக்கும் அளவுக்கு மாஸ் படத்தின் வெற்றி இருக்க வேண்டும் என்று வெங்கட்பிரபுவிடம் கேட்டுக்கொண்டிருக்கிறாராம் சூர்யா.