சனி, 29 மார்ச், 2014

நடிகை ரதி மகனுடன் கமல் மகள் அக்ஷரா காதல்

நடிகை ரதி மகனுடன் கமல் மகள் அக்ஷரா காதல்
கமல் மகள் அக்ஷராவுக்கும் பழைய நடிகை ரதியின் மகன் தனுஜ்வில்வானிக்கும் காதல் மலர்ந்துள்ளதாக மும்பையில் பரபரப்பு செய்தி பரவி உள்ளது. அக்ஷரா தாய் சரிகாவுடன் மும்பையில் வசிக்கிறார். அக்கா சுருதிஹாசன் நடிகையானதால் அக்ஷராவையும் சினிமாவுக்கு கொண்டு வர முயற்சிகள் நடந்தன.

தற்போது தனுஷ் ஜோடியாக இந்தி படமொன்றில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். பால்கி இப்படத்தை இயக்குகிறார். 1970 மற்றும் 80 களில் ரதி தமிழ் படங்களில் முன்னணி நடிகையாக கலக்கினார். புதிய வார்ப்புகள், நிறம் மாறாத பூக்கள், உல்லாச பறவைகள், முரட்டுக்காளை, கழுகு உள்பட பல படங்கில் நடித்தார்.

ரதியின் மகன் தனுஜ் இந்திப் படங்களில் நடித்து வருகிறார். அக்ஷரா தனுஜ் இடையே நட்பு ஏற்பட்டு காதலாக மலர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இருவரும் அடிக்கடி தனியாக சந்தித்து காதலை வளர்ப்பதாகவும் கிசுகிசுக்கின்றனர். இவர்கள் காதல் விவகாரம் தெரிந்து சரிகா அதிர்ச்சியாகி உள்ளார்.

அக்ஷரா இப்போது தான் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். காதல் விவகாரங்களில் சிக்கி எதிர்காலத்தை பாழ்படுத்த வேண்டாம் என்று அவர் கவலைப்படுகிறாராம். சினிமாவில் முழு கவனமும் செலுத்தும் படியும் காதலில் நேரத்தை வீணாக்க வேண்டாம் என்றும் மகளுக்கு அறிவுரை கூறி வருகிறார்.

ஹரி இயக்கத்தில் மீண்டும் நடிக்கிறார் கவுசல்யா

ஹரி இயக்கத்தில் மீண்டும் நடிக்கிறார் கவுசல்யாநடிகை கவுசல்யா மீண்டும் சினிமாவில் நடிக்கிறார். இவர் காலமெல்லாம் காதல் வாழ்க படம் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். 1997–ல் இப்படம் வந்தது. நேருக்கு நேர், சொல்லாமலே, பிரியமுடன், வானத்தை போல உள்பட பல ஹிட் படங்களில் நடித்தார்.

அதன் பிறகு அக்காள், அண்ணி வேடங்கள் ஏற்றார். கடைசியாக ஜெயம் ரவியுடன் சந்தோஷ் சுப்பிரமணியம் படத்தில் நடித்தார். இது 2008–ல் வந்தது. அதன் பிறகு தமிழ் படங்களில் நடிக்கவில்லை.

தற்போது 5 வருட இடைவெளிக்கு பிறகு ஹரி இயக்கும் ‘பூஜை’ படம் மூலம் மீண்டும் சினிமாவுக்கு வருகிறார். இதில் விஷால் நாயகனாக நடிக்கிறார். கவுசல்யாவுக்கு இதில் முக்கிய வேடமாம். படப்பிடிப்பு விரைவில் துவங்குகிறது.  

சிம்பு-நயன்தாரா இணைந்து நடிப்பது தெரியாது: பிரபுதேவா

நயன்தாராவின் முன்னாள் காதலர் பிரபுதேவா, சிம்புவும்-நயன்தாராவும் இணைந்து நடிப்பது எனக்குத் தெரியாது என்று கூறியுள்ளார். இதுபற்றி அவர் மேலும் கூறியிருப்பதாவது: நான் இப்போது மும்பைவாசியாகிவிட்டேன். என் ரூட்டு வேறமாதிரி போயிட்டிருக்கு. தமிழ்நாட்டுல என்ன நடந்துக்கிட்டிருக்குன்னு, தமிழ்நாட்டுல இருக்குறப்பவே கவனிக்க மாட்டேன். இப்போ சுத்தமா இல்லை. என்னோட கவனம், உழைப்பு சினிமா சினிமாதான். யார் யாரோட நடிக்கிறாங்க. யார் யாரை காதலிக்கிறாங்க என்பது மாதிரியான விஷயங்களை கவனிக்கவே மாட்டேன். காலை 7 மணியிலிருந்தே இரவு 1 மணி வரைக்கும் சினிமாவில் உழைக்கிறேன். இதில் மற்ற விஷயங்களை எங்கே நான் தெரிந்து கொள்வது.

சினிமாவில நான் சாதிக்க வேண்டியது நிறைய இருக்கு. இப்போ கமர்ஷியல் படங்கள்தான் பண்ணிக்கிட்டிருக்கேன். மனசை ஊடுருவுகிற மாதிரி அழுத்தமான கதையோட ஒரு படம் பண்ணணும், அதே நேரத்துல தி லார்ட் ஆப் ரிங்ஸ், ஸ்பைடர் மேன் மாதிரியும் ஒரு படம் பண்ணணும்.

சோனாக்ஷி சின்ஹா என் படங்களில் தொடர்ந்து நடிப்பதற்கு தனியான காரணம் எதுவும் இல்லை. என்னோட ஹீரோயின்கள் பக்கா இண்டியன் லுக்கோட இருக்கணும், அதுக்கு சோனாக்ஷி பொருத்தமா இருப்பதால் அவர் நடிக்கிறார்.

இவ்வாறு பிரபு தேவா கூறியுள்ளார்.

உதயநிதி படத்தை டீலில் விட்ட நயன்தாரா!

இது கதிர்வேலன் காதல் படத்தில் நடித்தபோது நயன்தாராவை தனது ஆஸ்தான நாயகி போன்று பில்டப் கொடுத்தார் உதயநிதி. எனது முதல் படமான ஒரு கல் ஒரு கண்ணாடியில் நடிக்கவே அவரைத்தான் அழைத்தோம். ஆனால் அப்போது அவர் நடிக்கிற மூடில் இல்லாததால்தான் ஹன்சிகாவை புக் பண்ணினோம் என்றுகூட சொன்னார். அதோடு தனது மூன்றாவது படமான நண்பேன்டா படத்திற்கும் அவரையே புக் பண்ணியவர் இனி எனது படங்களில் அதிகமாக நயன்தாராதான் நடிப்பார் என்றும் சொன்னார்.

ஆனால், இப்போது பார்த்தால், நண்பேன்டா படத்திற்கு இரண்டு வாரம் மட்டுமே கால்சீட் கொடுத்து நடித்த நயன்தாரா, சிம்பு, ஜெயம்ரவியுடன் நடிக்கும் படங்களுக்கு கால்சீட் கொடுத்து நடித்து வந்தவர், இப்போது சில தெலுங்கு படங்களுக்கும் கால்சீட்டை வாரி வழங்கி விட்டு உதயநிதி படத்திற்கு கேட்ட நேரத்தில் கால்சீட் கொடுக்காமல் டீலில் விட்டுக்கொண்டிருக்கிறாராம்.

இதனால் அடுத்தகட்ட படப்பிடிப்புக்கு செல்ல முடியாமல் நின்று கொண்டிருக்கிறார்கள். அதோடு, ஏற்கனவே நண்பேன்டா படத்தில் நடிக்க காத்திருநத காஜல்அகர்வாலை கழட்டிவிடடுவிட்டு, நயன்தாராவை கமிட் பண்ணியதை நினைத்து வருத்தத்தில் இருக்கிறாராம் உதயநிதி. ஆக, இதன்பிறகு உதயநிதியின் படங்களில் நயன்தாரா இருக்க மாட்டார் என்று தெரிகிறது.

அசர வைத்த விஜய்யின் கலக்கல் நடனம்!!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடித்து வரும் 2வது படம் கத்தி. இப்படத்தில் இரண்டு வேடங்களில் நடிக்கும் விஜய்க்கு இது 57வது படமாகும். நல்லவன், கெட்டவன் என இரண்டு விதமான கதாபாத்திரங்களில் நடிக்கும் கத்தியில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார்.

தமிழில் ஒரு சரியான என்ட்ரிக்காக காத்திருந்த சமந்தா, சூர்யாவுடன் அஞ்சான் படத்தில் நடித்த கையோடு இப்போது விஜய்யுடன் கத்தியில் நடித்துக்கொண்டிருக்கிறார். ஆரம்பத்திலிருந்தே ஆக்ஷன் சம்பந்தப்பட்ட காட்சிகளையே படமாக்கி வந்த முருகதாஸ், இப்போது ரொமான்ஸ், பாடல் என்று அடுத்த கட்டத்துக்கு சென்றிருக்கிறார்.

அதனால், இதுவரை சமந்தாவை கண்டுகொள்ளாமல் இருந்தவர் இப்போது, அவரையும் வரவைத்து விஜய்யுடன் ரொமான்ஸ் காட்சிகளாக படமாக்கிக்கொண்டிருக்கிறார். ஆரம்பத்தில் கலகலப்பு, கிளுகிளுப்பு என்று காட்சிகளை நகர்த்தியவர், தற்போது ஐதராபாத்தில் விஜய்-சமந்தா கலக்கல் நடனமாடும் பாடலை படமாக்கி வருகிறார்.

ஏற்கனவே நடனத்தில் புயலான விஜய், இந்த பாடல் காட்சியில் சமந்தாவே அசறும் அளவுக்கு சில நடன அசைவுகளில் பின்னி பெடலெடுத்து விட்டாராம். அதைப்பார்த்து சமந்தா அசந்து விட்டாராம். நானும் இதுவரை எத்தனையோ நடிகர்களுடன் நடனமாடியிருக்கிறேன். ஆனால் விஜய்யின் துடிப்பும், வேகமும் வேறு யாரிடத்திலும் கண்டதில்லை. மேலும், அவரைப்போலவே நாமும் அதிரடியாக நடனமாட வேண்டும் என்ற உற்சாகமும் எனக்குள் ஏற்பட்டது என்கிறார்.

ரஜினியின் வாழ்க்கை திரைப்படமாகிறது!

ரஜினியின் வாழ்க்கையை பின்பற்றி ஒரு படம் தயாராகிறது. தனது வாழ்க்கையை பஸ் கண்டக்டராக அவர் தொடங்கியது முதல், சினிமாவில் நடிக்க வந்தது, சாதித்தது, ஆன்மீகத்தில் ஈடுபட்டது என அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கி இந்த படம் தயாராகிறதாம். தமிழில் நானே ரஜினிகாந்த், இந்தியில் மை ஹோ ரஜினிகாந்த் என்ற பெயரில் உருவாகும் இப்படத்தை பைசல்பை என்பவர் இயக்குகிறார்.

இப்படத்தில் ரஜினி வேடத்தில் ஆதித்யா மேனன் என்பவர் நடிக்கிறார். மலையாளம், தெலுங்கு படங்களில் வில்லனாக நடித்து வரும் இவர், தமிழில் ஆஞ்சநேயா, சத்ரபதி, நெறஞ்ச மனசு அசல், பில்லா, சிங்கம், ஓநாயும் ஆட்டுக்குட்டியும், உள்பட பல படங்களில் நடித்திருக்கிறார்.

ரஜினியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்கும் வாய்ப்பு கோலிவுட் நடிகர்களுக்கே கிடைக்காதபோது, தனக்கு கிடைத்திருப்பதை பெரும் பாக்கியமாக கருதும் ஆதித்யாமேனன், இது கிடைப்பதற்கரிய வாய்ப்பு. இந்த படத்தை நாங்கள் ரஜினிக்கு அர்ப்பணிக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

திருமணமான பிறகும் ஆபாசமாக நடிக்க சொல்கிறார்கள்: கனிகா கடும் கோபம்

திருமணமான பிறகும் ஆபாசமாக நடிக்க சொல்கிறார்கள்: கனிகா கடும் கோபம்தமிழ் பட இயக்குனர்களுக்கு பக்குவம் இல்லை. திருமணம் ஆன பிறகும் கிளாமர் காட்டச்சொல்கிறார்கள் என்றார் கனிகா. பைவ் ஸ்டார், ஆட்டோகிராப், வரலாறு உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் கனிகா. அவர் கூறியதாவது: சினிமாவுக்கு வந்த புதிதில் எல்லோரும் என்னைப் பற்றி பேச வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆனால் இப்போது அப்படி இல்லை. பெயருக்காக படங்கள் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. அர்த்தமுள்ள கதாபாத்திரங்கள் வந்தால் மட்டுமே ஏற்கிறேன். இப்படித்தான் நடிக்க வேண்டும் என்ற கொள்கை எதுவும் வகுத்துக்கொள்ளவில்லை. ஆனால் எனக்கு பொருத்தமான வேடமா என்று பார்க்கிறேன். இல்லாவிட்டால் நடிப்பதில்லை. என் குடும்பத்தினர் எனக்கு ஆதரவாக உள்ளனர்.

அவர்கள் எனக்கு எந்த நிபந்தனையும் விதிப்பதில்லை. தமிழ் திரையுலகை பொருத்தவரை திருமணம் ஆன நடிகைகள் என்றால் அவர்களை ஓரம்கட்டவே பார்க்கிறார்கள். எனக்கு திருமணம் ஆனபிறகும் ஆடை குறைத்து கிளாமராக நடிக்க வேண்டும் என்று சொன்னார்கள். கிளாமர் காட்டாமல் சேலை கட்டி நடிப்பதாக கூறினேன். அதற்கு பதில் எதுவும் அவர்களிடம் இல்லை. மலையாள திரையுலகில் அப்படி இல்லை. ஹீரோயின்களை ஓரம்கட்ட மாட்டார்கள். வயதானவராக இருந்தாலும் அவரை நாயகியாக நடிக்க வைப்பார்கள். அதற்கு காரணம் மலையாள இயக்குனர்கள் பக்குவப்பட்டவர்கள்.

திங்கள், 24 மார்ச், 2014

என்ன ஆனார் கலை இயக்குநர் வினோ மிர்தாத்?

என்ன ஆனார் கலை இயக்குநர் வினோ மிர்தாத்?மலேசியா விமானம் மாயமானதைப் பரபரப்பாகப் பேசிக்கொண்டிருக்கும் நேரத்தில், இன்னொரு ’மாயமான’ செய்தி. பிப்ரவரி 27-ல், கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி மலை ஆண்டவர் கோயிலுக்குச் சென்ற 'மதுபானக்கடை’ படத்தின் கலை இயக்குநர் வினோ மிர்தாத், வழிதவறிக் காணாமல் போனார். இன்றுவரை வனத் துறை, காவல் துறை, நண்பர்கள்... என வினோ மிர்தாத்தைப் பல குழுக்கள் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.

''வினோத்தோட சொந்த ஊர் திண்டுக்கல். 'மதுபானக்கடை’தான் அவருடைய முதல் படம். இப்போது 'ஒன்பது குழி சம்பத்’, 'நீர் நிலம் காற்று’ போன்ற படங்களில் நடித்து வருகிறார. பிப்ரவரி 27 அன்னைக்கு வெள்ளியங்கிரிக்கு போறேன்னு சொல்லிட்டுப் போனவர்தான். அடுத்த நாள் காலை 5 மணிக்கு 'மதுபானக்கடை’ டைரக்டர் கமலக்கண்ணன் சாருக்கு 'நான் வழிதவறி வந்துட்டேன்’னு மெசேஜ் அனுப்பியிருக்கார். பதறிப்போன அவரும் உடனே போன் பண்ணிப் பேச, 'எங்கே இருக்கேன்னு கரெக்டா சொல்லத் தெரியலை... ஒரு குறிப்பிட்ட லேண்ட் மார்க்ல வந்ததும் சொல்றேன்’னு சொல்லியிருக்கார். ஆனா அதுக்குப் பிறகு வினோத்தின் போன் ஸ்விட்ச் ஆஃப் ஆகிடுச்சு. வினோத் வீட்டில் சொல்லி, போலீஸிடம் கம்ப்ளெய்ன்ட் கொடுத்துட்டு, எல்லா நண்பர்களும் சேர்ந்து தேடலாம்னு முடிவு செய்தனர். ஒருபக்கம் கமலக்கண்ணன், வினோத்தின் மத்த நண்பர்கள்னு பல குழுக்களாகப் பிரிஞ்சு காட்டில் தேடினர். இன்னொரு பக்கம் போலீஸ்காரர்களும் ஃபாரஸ்ட் ஆபீஸர்ஸும் தேடினர். நாலைஞ்சு நாள் காட்டையே அலசிப் பார்த்தார்கள். அவர் இருக்கிற இடமே தெரியவில்லை. போன் ஸ்விட்ச் ஆஃப் ஆகிவிட்டதால், ஐ.எம்.ஈ.ஐ நம்பரை வைத்தும் கண்டுபிடிக்க முடியவில்லை.



அவர் ரொம்ப தைரியமான ஆள். ஒரே ஒரு வேட்டியை மட்டும் எடுத்துக்கிட்டு மலையேறிடுவார். இதே மலைக்கு இதுக்கு முன்னாடி நிறையத் தடவை போயிருக்கார். அவருக்கு அம்மா கிடையாது, அப்பா மட்டும்தான். வெள்ளியங்கிரி மலைப்பகுதியில் முரட்டுத்தனமான மிருகங்கள் எதுவும் கிடையாது. அதனால் வினோ இறந்திருக்க வாய்ப்பு இல்லை என்று போலீஸ்காரர்கள் தெரிவித்தனர்.

'மதுபானக்கடை’ படத்துல தன்னோட விவசாய நிலத்தை டாஸ்மாக் கடைக்குக் கொடுத்துவிட்டு, மனநோயாளியாத் திரியும் கேரக்டரில் நடித்தவர்.

ராஜா ராணி பட போஸ்டரை போல் நயன்தாரா-சிம்பு திருமணம் என விளம்பரம்


ராஜா ராணி பட போஸ்டரை போல் நயன்தாரா-சிம்பு திருமணம் என விளம்பரம்ராஜா ராணி படத்தை போலவே இது நம்ம ஆளு படத்தின் புரமோஷனுக்கும் நயன்தாராவுக்கு திருமணம் என போஸ்டர்கள் ஒட்ட உள்ளனர். சிம்பு, பிரபுதேவாவை பிரிந்த பிறகு ஆர்யாவுடன் நட்பாக பழகினார் நயன்தாரா. இதை தனது பட புரமோஷனுக்கு பயன்படுத்திக் கொள்ள நினைத்த இயக்குனர் அட்லி, ராஜா ராணி பட போஸ்டரில் ஆர்யா வெட்ஸ் நயன்தாரா என அச்சிட்டு, கிறிஸ்தவ முறைப்படி இருவரும் திருமண கோலத்தில் இருப்பதுபோல் ஊர் முழுக்க போஸ்டர் ஓட்ட வைத்தார். இது சினிமா வட்டாரத்திலும் ரசிகர்கள் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தியது. கேரக்டர்களின் பெயரை போட்டு இவர்களுக்கு திருமணம் என போட்டிருந்தால் பரவாய¤ல்லை. ஆர்யா வெட்ஸ் நயன்தாரா என குறிப்பிட்டது ஏன் என டைரக்டரை நயன்தாரா கடிந்துகொண்டார்.

இந்த கோபத்தால்தான் அந்த பட நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்கவில்லை என்றும் கூறப்பட்டது. இந்நிலையில் சிம்புவுடன் மீண்டும் இணைந்து இது நம்ம ஆளு படத்த¤ல் நடிக்கிறார் நயன்தாரா. இதுவும் ராஜா ராணி படத்தை போல தம்பதியின் காதல் கதை. இதிலும் திருமண காட்சி ஒன்று இடம்பெறுகிறது. மே 1ம் தேதி இந்த பட போஸ்டர்களை ஒட்டும்போது அதில் சிம்பு-நயன்தாரா திருமணம் என திருமண கோலத்தில் இருக்கும் போட்டோவுடன் விளம்பரம் செய்ய சிம்பு
திட்டமிட்டுள்ளாராம்.

இந்த விவரம் நயன்தாராவுக்கு தெரியாது என சொல்லப்படுகிறது. ஆர்யாவை தொடர்ந்து சிம்புவும் நயன்தாராவின் உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் நடந்து கொள்கிறார் என கோடம்பாக்கத்தில் முணுமுணுக்கிறார்கள்.

கோச்சடையான் படம் மே 1 ஆம் தேதி வெளியாவது உறுதி!

சில தினங்களுக்கு முன் தணிக்கைக் குழுவினருக்கு கோச்சடையான் படத்தை திரையிட்டுக்காட்டினார் சௌந்தர்யா ரஜினிகாந்த். படத்தைப் பார்த்தத் தணிக்கைக் குழுவினர் கோச்சடையான் படத்துக்கு யு சான்றிதழ் வழங்கினார்கள். இ
தில் வேடிக்கை என்னவென்றால்...

கோச்சடையான் படத்தின் ரீ ரெக்கார்டிங் பணியே இன்னும் தொடங்கப்படவில்லை. ஏப்ரல் மாதம்தான் தொடங்கப்படவிருக்கிறது. கோச்சடையான் படத்தின் கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் இறுதிக்கட்ட பணிகள் சீனாவில் நடைபெற்று வருகின்றன. அந்த பணிகளை விரைந்து முடித்து அவுட்புட்டை வாங்கி வருவதற்காக சீனாவுக்குச் சென்றிருக்கிறார் சௌந்தர்யா ரஜினிகாந்த். சீனாவிலிருந்து அவர் வந்த பிறகே ரீ ரெக்கார்டிங் பணிகளை தொடங்க இருக்கிறார் ஏ.ஆர்.ரகுமான்.

இந்தநிலையில் கோச்சடையான் படத்துக்கு எப்படி தணிக்கை சான்றிதழ் கிடைத்தது என்பதுதான் திரையுலகில் பலரும் கேட்கும் கேள்வியாக இருக்கிறது. தணிக்கையின்போது கடைசி நேரத்தில் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டு அதனால் கோச்சடையான் படத்தின் வெளியீட்டில் சிக்கல் வரக்கூடாது என்று நினைத்தாராம் ரஜினி. எனவே முன் எச்சரிக்கை காரணமாக டம்மியாக ஒரு மியூஸிக் ட்ராக்கைப் பயன்படுத்தி தணிக்கைக் குழுவினருக்கு கோச்சடையான் படத்தைப் போட்டுக்காட்டினார்களாம்.

கோச்சடையான் படத்தின் ரிலீஸ் பற்றி லேட்டஸ்ட் அப்டேட் என்ன தெரியுமா? மே 1 ஆம் தேதி படம் வெளியாவது உறுதி. தியேட்டர்களை புக் பண்ண ஆரம்பித்துவிட்டனர்.

வியாழன், 20 மார்ச், 2014

புதிய படத்தில் இருந்து நஸ்ரியா திடீர் விலகல்

புதிய படத்தில் இருந்து நஸ்ரியா திடீர் விலகல்நடிகை நஸ்ரியா புதிய படத்திலிருந்து திடீரென வெளியேறினார்.நேரம், நய்யாண்டி, ராஜா ராணி என பல படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டிருந்த நஸ்ரியா நாசிமுக்கு திடீரென்று மல்லுவுட் நடிகர் பஹத் பாசிலுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. விரைவில் திருமணம் நடக்க உள்ளது. ஆனாலும் நஸ்ரியா படங்களில் நடிக்க பஹத் குடும்பம் தடை போடவில்லை. அவர் விரும்பினால் தொடர்ந்து நடிக்கலாம் என்று பஹத் பாசிலும் கூறினார். இதையடுத்து நிச்சயதார்த்தம் முடிந்த கையோடு மல்லுவுட் நடிகர் லால் தயாரிக்க அவரது மகன் லால் ஜூனியர் நடிக்கும் ஹை ஐ யம் டோனி என்ற படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார் நஸ்ரியா.

ஆனால் சமீபத்தில் இப்படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் பற்றிய விவரம் வெளியிடப்பட்டது. அதில் நஸ்ரியா பெயர் இடம்பெறவில்லை. அவருக்கு பதிலாக மியா என்ற ஹீரோயின் பெயர் இடம்பெற்றிருக்கிறது. அப்படத்திலிருந்து நடிக்காமல் நஸ்ரியா விலகிவிட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அதற்கான காரணம்பற்றி சரியாக தெரியவில்லை. திருமணத்துக்கு பிறகு தொடர்ந்து நஸ்ரியா நடிக்க விரும்பினாலும் அவரது குடும்பத்தினர் அதற்கு சம்மதிக்கவில்லை என்பதால்தான் அவர் படத்திலிருந்து விலகிவிட்டதாக சொல்லப்படுகிறது.

சசி,வரலட்சுமியை பாடாய் படுத்தும் பாலா

சசி,வரலட்சுமியை பாடாய் படுத்தும் பாலாசசிகுமார் வரலட்சுமியை தனது படத்துக்காக கடுமையான பயிற்சிகளை அளித்து பெண்டு நிமிர்த்துகிறார் பாலா. பரதேசி படத்தையடுத்து பாலா இயக்கும் புதிய படத்தில் சசிகுமார் ஹீரோவாக நடிக்கிறார். கரகாட்ட கலைஞர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகும் இப்படத்திற்கு தாரை தப்பட்டை என பெயரிடப்படுகிறது. போடா போடி படத்தில் நடித்த வரலட்சுமி சரத்குமார் கதாநாயகியாக நடிக்கிறார். வெஸ்டர்ன் நடனத்தில் தேர்ச்சி பெற்ற வரலட்சுமிக்கு கரகாட்டம் ஆடிய அனுபவம் கிடையாது.

பாலா படத்துக்காக அதை முறைப்படி கற்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. தஞ்சையை சேர்ந்த கரகாட்ட கலைஞர்கள் குழு அவருக்கு பயிற்சி அளிக்கிறது. காலையில் தொடங்கி மாலைவரை வரலட்சுமிக்கு பயிற்சி தருவதால் அவருக்கு கடும் சோர்வு ஏற்பட்டுள்ளதாம். மேலும் வேடத்துக்கு ஏற்ப உடல் எடையை குறைப்பதற்காக உணவு கட்டுப்பாடும் மேற்கொண்டிருக்கிறார். தாடிதான் தனது அடையாளம் என்றிருந்த சுப்ரமணியபுரம் சசிகுமார் இப்படத்துக்காக தாடியை இழக்கிறார்.

கற்றை மீசையையும் மெலிதாக மாற்றிக்கொள்கிறார். நாதஸ்வர கலைஞராக சசி வேடம் ஏற்பதால் அதற்கான பயிற்சியை மேற்கொண்டிருக்கிறார். இளையராஜா இசை அமைக்கும் இப்படத்திற்கு ஏற்கனவே சில பாடல்கள் பதிவு செய்யப்பட்டுவிட்டன. படப்பிடிப்பு தொடங்குவதற்கான வேலை மும்முரமாக நடக்கிறது.

மகேஷ் பாபுவுடன் நடிக்க சமந்தா மறுப்பு

மகேஷ் பாபுவுடன் நடிக்க சமந்தா மறுப்புமகேஷ் பாபுவுடன் மோதல் ஏற்பட்டதால் அவருக்கு ஜோடியாக நடிக்க சமந்தா மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. பாணா காத்தாடி படத்தில் நடித்த சமந்தாவுக்கு பட வாய்ப்புகள் இங்கொன்றும் அங்கொன்றுமாகவே வந்துகொண்டிருந்தது. நான் ஈ படத்துக்கு பிறகு வாய்ப்பு மழை கொட்டத் தொடங்கியது. இந்நிலையில் தோல் நோயால் பாதிக்கப்பட்டதால், மணிரத்னம், ஷங்கர் படங்களில் நடிக்க வந்த வாய்ப்பை நழுவவிட்டார். சிகிச்சைக்குபிறகு குணம் அடைந்தவர் சூர்யாவுடன் அஞ்சான் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார்.

அதேபோல் முருகதாஸ் இயக்கும் படத்தில் விஜய் ஜோடியாக நடிக்கிறார். லண்டன் பயணத்தை முடித்துக்கொண்டு சமீபத்தில் சென்னை திரும்பினார். இதையடுத்து விளம்பர படம் ஒன்றில் நடிக்க வந்தார் சமந்தா. மகேஷ்பாபு, நாகார்ஜுனா நடிக்க மணிரத்னம் இயக்கும் படத்தில் நடிக்க உங்களுக்கு அழைப்பு வந்ததாகவும், அதை ஏற்க மறுத்ததாகவும் கூறப்படுகிறதே என்று கேட்டபோது,மணிரத்னத்திடமிருந்தோ, அவரது அலுவலகத்தில் இருந்தோ புதிய படத்தில் நடிக்க கேட்டு என்னை யாரும் அணுகவில்லை என்றார்.

சமீபத்தில் மகேஷ்பாபு பட போஸ்டரை பார்த்து சமந்தா கொதிப்படைந்தார். அதில் பட ஹீரோயினை நாயை போல் சித்தரித்து இருப்பதாக டுவிட்டரில் கண்டனம் தெரிவித்தார். பதிலுக்கு சமந்தாவை மகேஷ்பாபு ரசிகர்கள் சாடினர். ரசிகர்களை மகேஷ்பாபு தடுக்கவில்லை. மறைமுகமாக சமந்தா&மகேஷ்பாபு இடையே மோதல் ஏற்பட்டது. இந்நிலையில் அவருக்கு ஜோடியாக நடிக்க மணிரத்னம் தரப்பில் கேட்டபோதுதான் சமந்தா நடிக¢க மறுத்துவிட்டதாக சொல்லப்படுகிறது.

சனி, 15 மார்ச், 2014

அப்பா எழுதிய பாட்டை பாடிய ஸ்ருதிஹாசன்

சிவாஜிகணேசன்-கமல்ஹாசன் இருவரும் அப்பா மகனாக நடித்த படம் தேவர்மகன். இந்த படத்தில் சிவாஜியை போற்றும்படியாக அமைந்த போற்றி பாடடி
பெண்ணே என்ற பாடலை சில குழந்தைகளுடன் இணைந்து இளையராஜாவின் இசையில் பாடியவர் ஸ்ருதிஹாசன். அதிலிருந்து தொடர்ந்து பல இசையமைப்பாளர்களின் இசையிலும் பாடி வந்த ஸ்ருதி, கமல் நடித்த உன்னைப்போல் ஒருவன் படத்தில் இசையமைப்பாளராகவும் பிரவேசித்தார்.

அதையடுத்து நடிகை என்ற அரிதாரத்தை பூசிக்கொண்டபோதும், தொடர்ந்து பின்னணியும் பாடிவரும் ஸ்ருதி, தற்போது அஸ்ஸாமை சேர்ந்த ஜோய் பரூவா என்பவருடன் இணைந்து ஒரு இசை ஆல்பத்தை உருவாக்கியிருக்கிறார். பல மொழிகளிலும் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ள இந்த ஆல்பத்திலுள்ள பாடலை தற்போது தமிழ் மற்றும அஸ்ஸாம் மொழிகளில் பாடியுள்ளனர்.

இதில் தமிழில் பாடல் எழுத கமலிடம், ஸ்ருதி கேட்டுக்கொண்டபோது, உடனே எழுதிக்கொடுத்து விட்டாராம். ஆக, கமல்ஹாசன், ஸ்ருதிஹாசன், ஜோய்பரூவா ஆகிய மூவர் கூட்டணியில் பிரமாண்டமாக உருவாகியுள்ள அந்த மியூசிக் ஆல்பம், உலக அளவில் ரசிகர்களை கவரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாம்.

8-ம் நூற்றாண்டு கூத்து கலைஞர் ; 21-ம் நூற்றாண்டு சினிமா ஸ்டார்

'விஸ்வரூபம்-2' படத்திற்கு பிறகு கமல்ஹாசன் நடித்து வரும் படம் ''உத்தம வில்லன்''. படத்தை துவங்குவதற்கு முன்பே உத்தம வில்லன் பர்ஸ்ட்லுக் போஸ்டரை வெளியிட்டார் கமல். அதில் கமல், கூத்து கலைஞராக நடிக்கிறார் என்று பார்க்கும்போதே அனைவருக்கும் தெரிந்தது. அதேசமயம் அதனைத்தொடர்ந்து வெளியான பிற போஸ்டர்களில் கமல் சினிமா இயக்குநர் போன்றும், நடிகர் போன்றும் இருப்பது போன்ற ஸ்டில்கள் வெளியாகின. இதனால் இப்படம் எப்படிப்பட்ட கதையாக இருக்கும் என்ற குழப்பம் அனைவருக்கும் எழுந்தது. இந்நிலையில் 'உத்தம வில்லன்' படம் பற்றி படக்குழுவை ஒரு செய்தியை வெளியிட்டு உள்ளது.

அதில் கூறியுள்ளதாவது, கமல்ஹாசன் இரண்டு விதமான கதாபாத்திரங்களில் நடிக்கிறார். ஒன்று, 8ம் நூற்றாண்டை சேர்ந்த 'உத்தமன்' என்ற கூத்துகலைஞர் வேடம், மற்றொன்று 21ம் நூற்றாண்டின் சினிமா நட்சத்திரமான 'மனோரஞ்சன்'. இந்த இரண்டு காலகட்டங்களில் நடக்கும் கதை தான் உத்தம வில்லன். இவர்களுடன் மனோரஞ்சனை கண்டெடுத்து, நட்சத்திர அளவுக்கு உயர்த்திய குருவாக இயக்குநர் கே.பாலசந்தர் நடிக்கிறார். மனோரஞ்சனின் மனைவியாக ஊர்வசியும், மனோரஞ்சனின் மாமனாராக இயக்குநர் விஸ்வநாத்தும், மனோரஞ்சனின் ரகசிய காதலியாக ஆண்ட்ரியாவும் நடிக்கின்றனர்.

8-ம் நூற்றாண்டில் நடக்கும் உத்தம வில்லனின் கதையில் மனநோயால் பாதிக்கப்பட்ட இளவரசியாக பூஜா குமாரும், முத்தரசன் என்ற 8-ம் நூற்றாண்டுக் கொடுங்கோல் சர்வாதிகாரியாக நாசரும், ஜோசப் ஜக்காரியா என்ற பாத்திரத்தில் ஜெயராமும், ஜெயராமின் வளர்ப்பு மகளாக முக்கிய பாத்திரத்தில் பார்வதி மேனன் நடிக்கிறார்கள். எம்.எஸ்.பாஸ்கர் சொக்கு செட்டியார் என்ற நினைவில் நிற்கக் கூடிய ஒரு பாத்திரத்தில் நடிக்கிறார்.

கமலின் கதை-திரைக்கதையில் உருவாகி வரும் இப்படத்தை கமலின் நண்பரும், பிரபல நடிகருமான ரமேஷ் அரவிந்த் இயக்குகிறார். விஸ்வரூபம்-2 படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக இந்தப்படத்தில் ஜிப்ரான் இசையமைக்கிறார். ஷியாம் தத் ஒளிப்பதிவு செய்ய, விஜய் சங்கர் எடிட்டிங் செய்கிறார். லிங்குசாமியின் திருப்தி பிரதர்ஸ் இப்படத்தை பிரமாண்டமாக தயாரிக்கிறது.

ரீமேக் படங்களுக்கு குட்பை சொல்லும் டைரக்டர்

மீண்டும் ஜெயம் ராஜா இயக்கத்தில் ஜெயம்ரவி!ஜெயம் படத்தில் இயக்குனராக அறிமுகமானவர் ராஜா. அப்படத்தில் கதாநாயகனாக அவரது தம்பி ரவி நடித்தார். அப்படம் ஹிட்டானதையடுத்து, அவர்கள் இரண்டு பேரின் பெயருக்கு முன்பு ஜெயம் ஒட்டிக்கொண்டது. அதற்கேற்ப, அதையடுத்து தொடர்ந்து வெற்றிப்படங்களாகவே கொடுத்து வந்தனர்.

ஆனால், அப்படி ஜெயம் ராஜா இயக்கியதில் பல படங்கள் மற்ற மொழிகளில் ஹிட்டடித்த படங்களின் ரீமேக்காகவே இருந்தன. அதனால் அவரை ஜெயம்ராஜா என்று சொல்வதை விடுத்து ரீமேக் ராஜா என்று சொல்லத்தொடங்கினர். அதோடு, சிலர் அவருக்கு சொந்தமாக கதை பண்ணத் தெரியாது என்றும் கூறத் தொடங்கினர்.

இதனால் டென்சன் ஆகி விட்டார் ராஜா. அதனால் விஜய் நடித்த வேலாயுதம் படத்திற்கு பிறகு ஒரு கதையை தனது சொந்த கற்பனையிலேயே தயார் செய்து வந்தவர், அதற்கு தனி ஒருவன் என்று பெயர் வைத்து தற்போது தனது தம்பி ஜெயம்ரவியை வைத்தே இயக்கிக்கொண்டிருக்கிறார்.

ஜெயம்ரவி-நயன்தாரா இருவரும் ஜோடி சேர்ந்துள்ள இப்படம் அதிரடியான ஆக்சன் கதையில் உருவாகி வருகிறது என்று சொல்லும் ஜெயம்ராஜா, இந்த கதையையும் ரீமேக் என்று மற்றவர்கள் நினைத்து விடக்கூடாது என்பதற்காக, இது என் சொந்த கதையில் உருவாகிறது,. இமேலும் இதே ரூட்டை தொடர்வேன் எனறும் கூறி வருகிறார்.

வெள்ளி, 14 மார்ச், 2014

ரஜினியின் கோச்சடையானை பார்க்க ஆசைப்பட்ட அவதார் டைரக்டர் ஜேம்ஸ் கேமரூன்

உலக அளவில் முதன்முறையாக மோஷன் கேப்சர் முறையில் அவதார் படத்தை எடுத்து சாதனை நிகழ்த்தியவர் ஜேம்ஸ் கேமரூன். 237 மில்லியன் அமெரிக்க டாலர் செலவில் ஐந்து ஆண்டுகளாக இப்படம் உருவாக்கப்பட்டது. ஆனால், 3000 மில்லியன் அமெரிக்க டாலரை வசூலித்தது இப்படம். இப்படம் உருவான மோஷன் கேப்சர் டெக்னாலஜியை தழுவித்தான் ரஜினி நடித்துள்ள கோச்சடையானும் உருவாகியிருக்கிறது. ஆனால் 125 கோடி பட்ஜெட்டில் 2 வருடங்களில் படத்தை முடித்துள்ளார்கள். இப்படியொரு படம் இந்தியாவில் உருவாகியிருக்கிற விசயம் ஜேம்ஸ் கேமரூனுக்கு தெரிந்ததையடுத்து, கோச்சடையான் படத்தை தான் பார்க்க வேண்டும் என்று படத்தின் டைரக்டரான செளந்தர்யாவை தொடர்பு கொண்டு கேட்டுள்ளாராம் அவர். அதைத் தொடர்ந்து, தற்போது படத்தை ஏப்ரலில் வெளியிடும் வேலைகள் துரிதமாக நடந்து வரும் நிலையிலும், விரைவில் ஜேம்ஸ் கேமரூனுக்கு கோச்சடையானை திரையிட்டு காண்பிக்கவும் முடிவு செய்திருக்கிறார் செளந்தர்யா

ஆகஸ்ட் 21-ல் நஸ்ரியா-பஹத் திருமணம்

நஸ்ரியா என்னை மணப்பது பெரிய ரிஸ்க் : பஹத் ஷாக் பேட்டி சினிமாவுக்கு வந்த குறுகிய காலத்திலேயே பிரபலமானவர் நடிகை நஸ்ரியா நசீம். மலையாளத்து வரவான இவர், ஏராளமான மலையாள படங்களில் நடித்துள்ளார். தமிழில் ராஜா ராணி, நய்யாண்டி போன்ற படங்களில் நடித்துள்ளார். இதில் நய்யாண்டி படத்தில் நடித்தபோது இவர் ஏற்படுத்திய தொப்புள் பிரச்னை மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது திருமணம் எனும் நிக்காஹ், வாயை மூடி பேசவும் போன்ற படங்களில் நடித்து முடித்துவிட்டார். இப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இதற்கிடையே மலையாள நடிகர் பஹத் பாசில் உடன் நஸ்ரியாவுக்கு திருமணம் நிச்சயமாகியுள்ளது. திருமணம் ஆகஸ்ட் மாதம் நடைபெற இருக்கிறது.

இந்நிலையில் வாயைமூடி பேசவும் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. அதில் நஸ்ரியாவும் பங்கேற்றார். அப்போது திருமணம் பற்றி அவரது தாயாரிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது, எங்களது குடும்பமும், பஹத்தின் குடும்பமும் நெருங்கிய நண்பர்கள். இவர்களது இருவரது திருமணமும் ஆகஸ்ட் மாதம் 21ம் தேதி கேரள மாநிலம் அல்சாஜ் எனும் இடத்தில் நடைபெறுகிறது. தொடர்ந்து திருமண வரவேற்பு ஆகஸ்ட் 24ம் தேதி ஆலப்புழாவில் நடைபெறுகிறது. திருமணத்திற்கு பிறகு நஸ்ரியா நடிப்பாரா என்பது அவருக்கு தான் தெரியும். ஒருவேளை பஹத்பாசில் நடிக்க சம்மதித்தால், திருமணத்திற்கு பிறகும் நஸ்ரியா நடிப்பார் என்றார்.

கிரிக்கெட் படத்தில் இணைந்த செண்டிமென்ட் நாயகி விஜயலட்சுமி!

 வெங்கட்பிரபு கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து விளையாட்டாக எடுத்த படம்தான் சென்னை 28. அது அவரது முதல் படம் என்பதோடு, ஜெய், சிவா, பிரேம்ஜி, விஜயலட்சுமி என முற்றிலும் புதுமுகங்களை வைத்து அப்படத்தை எடுத்தார். ஆனால் படம் வெளியாகி தாறுமாறாக ஓடி, அனைவருக்குமே திருப்புமுனையாக அமைந்தது.

அதையடுத்து வெங்கட்பிரபு உள்பட அப்படத்தில் நடித்த அனைவருமே வெவ்வேறு படங்களில் கமிட்டாகி பிசியாகி விட்டனர். இந்த நிலையில், தற்போது கிரிக்கெட்டை மயமாக வைத்து ஆடாம ஜெயிச்சோமடா என்றொரு படத்தை இயக்குகிறார் பத்ரி. அப்படத்தில் நடிப்பதற்கும் சென்னை 28ல் நடித்த சிவாவையே ஒப்பந்தம் செய்திருக்கிறார். அதோடு, சிவாவும் ஒரு கிரிக்கெட் பிளேயர் என்பதால் அப்படத்துக்கு வசனம் எழுதும் பொறுப்பையும் அவரிடமே ஒப்படைத்திருக்கிறார் பத்ரி.

மேலும், இப்படத்தில் நாயகியாக யாரை நடிக்க வைக்கலாம் என்று யோசித்தவர்கள், அதே சென்னை 28 படத்தில் அறிமுகமான விஜயலட்சுமியையே புக் பண்ணியுள்ளனர். தற்போதைய நிலவரப்படி சரியான படமே இல்லாமல் ஓய்ந்திருந்த நேரத்தில் இந்த படவாய்ப்பு கிடைத்திருப்பதால் உற்சாகம் பீறிட களத்தில் இறங்கி விட்டார் விஜயலட்சுமி. அதோடு, நான் அறிமுகமான முதல் படத்திலும் கிரிக்கெட், இந்த படத்திலும் கிரிக்கெட், ஆக கிரிக்கெட் செண்டிமென்ட் மீண்டும் எனக்கு ஒரு பெரிய ஹிட்டை கொடுக்கப்போகிறது என்கிறார் விஜயலட்சுமி.

நிமிர்ந்து நில் விமர்சனம்

  • நடிகர் : ஜெயம் ரவி
  • நடிகை : அமலா பால்
  • இயக்குனர் :சமுத்திரக்கனி                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                            பி.சமுத்திரகனியின் இயக்கத்தில், சமூகபொறுப்புணர்வுடன் வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் ''நிமிர்ந்து நில்''. பொதுவாக இதுமாதிரி சமூகத்திற்கு பாடம் சொல்லும் நற் கருத்துடைய திரைப்படங்கள், போதனையாக, சோதனையாக... போரடிக்கும்! ஆனால் பெரும் சாதனையாக சமுத்திரகனியின் 'நிமிர்ந்து நில்' திரைப்படம், தியேட்டரில் சீட்டு நுனியில் நம்மை நிமிர்ந்து உட்கார வைத்து, ஆரம்பகாட்சி முதல் இறுதிகாட்சி வரை கண்கொட்டாமல் கை தட்டவைப்பது தான் ஹைலைட்!

    கதைப்படி, அரவிந்த் சிவசாமி எனும் ஜெயம் ரவி, இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ப வளைந்து கொடுத்து வாழத்தெரியாமல் சட்டத்திட்டங்களுக்கு மட்டுமே கட்டுப்பட்டு, ஒரு பைசா லஞ்சம் கொடுக்காமல் வாழும் ஒரு தனியார் நிறுவன ஊழியர். ஒருநாள் அறை நண்பரும், அலுவலக நண்பருமான சூரி உடன் இல்லாமல் பைக்கில் வேலையாக கிளம்பும் ஜெயரம் ரவி, லைசன்ஸ், ஆர்.சி. புக், இன்சூரன்ஸ் உள்ளிட்ட எல்லா பேப்பர்களும் இருந்தும் டிராபிக் போலீஸ் எதிர்பார்க்கும் காந்தி தாள் தராததால் போலீஸ், கோர்ட், கேஸ் என ஏகத்துக்கும் அலைகழிக்கப்படுகிறார். டிராபிக் கான்ஸ்டபிளில் தொடங்கி புரோக்கர் வைத்து லஞ்சம் வாங்கும் நீதிபதி வரை எல்லோரையும் போட்டு உடைக்கும் அரவிந்த் சிவசாமி அதாங்க, ஜெயம் ரவி, இச்சயமத்தில் தன்னை லஞ்சம் தந்து காபந்து செய்த ஆரூயிர் நண்பர் சூரியையும், அவருக்கு ஐடியா தரும் (ஜெயம் ரவியை ஒரு தலையாக காதலித்த படி) அமலாபாலையும் கூட போட்டுக் கொடுக்க, படம் பார்க்கும் நமக்கே 'பகீர்' என்கிறது.

    அப்புறம்? அப்புறமென்ன? ஜெயம் ரவி அதிகார வர்க்கத்தால் சட்டத்திற்கு புறம்பாக செமையாக பந்தாடப்படுகிறார். குற்றுயிரும், கொலை உயிருமாக குப்பையில் கிடக்கும் ரவியை தேடிப்பிடித்து மருத்துவமனையில் சேர்த்து மெல்ல தேற்றுகின்றனர் சூரி, அமலாபால் மற்றும் கோர்ட்டில் ஜெயம் ரவியின் நேர்மை கண்டு ஈர்க்கப்பட்ட வக்கீல் சுப்பு பஞ்சு உள்ளிட்டோர். இவர்களது கனிவாலும், கவனிப்பாலும் விரைந்து தேறும் ரவி, மீண்டும் திமிருகிறார். ஆனால் இந்தமுறை சும்மா சட்டம் பேசிக் கொண்டிருக்காமல், மருத்துவத்துறை, மின்சாரத்துறை, வருவாய்த்துறை, காவல்துறை, நீதித்துறை.. என சகலத்துறைகளிலும் இருக்கும் ஊழல் பெருச்சாளிகளை ஒட்டு மொத்த சமுதாயத்திற்கும் அடையாளம் காட்டும் விதமாக புத்திசாலித்தனமாக களம் இறங்க திட்டமிடுகிறார் ரவி! இதில் நமக்கெதுக்கு வேண்டாத வேலை... என வெகுண்டெழும் அமலாபால், தான் ரவியின் நேர்மைகண்டு ஆறுமாத காலமாக ரவிக்கே தெரியாமல் ரவியை பின்தொடர்ந்து, அவரை காதலிக்கத் தொடங்கியவர் என்பதையும் மறந்து அரவிந்த் சிவசாமி 'அலைஸ்' ஜெயம் ரவியை பிரிகிறார். ஜெயம் ரவி அதுப்பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் சூரி, வக்கீல் சுப்பு பஞ்சு, நேர்மையான ஏட்டு தம்பி ராமைய்யா, உண்மை டிவி. அபாரதீப்பந்தம் நிகழ்ச்சி தொகுப்பாளர் கோபிநாத் மற்றும் நேர்மையான அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் உதவியுடன் பல்வேறு துறைகளில் இருக்கும் ஊழல் பேர்வழிகள் 147 பேருக்கு உண்மை டி.வி. கோபிநாத் ஆப்பு வைக்கிறார். அதில் ரவியை அடித்து துவைத்த போலீஸ்காரர்களும் அடக்கம்!

    பாதிக்கப்பட்ட 147 பேரும் சேர்ந்து ஒரு குழு அமைத்து 14.7 கோடி கொடுத்து, ஜெயம் ரவி சாயலிலேயே ஆந்திராவில் இருக்கும் மற்றொரு ஜெயம் ரவியை நரசிம்மரெட்டி எனும் பெயருடைய ரவியை அழைத்து வந்து, தங்கள் மீது போடப்பட்ட வழக்குகளை நமத்து போகச் செய்து தங்களது அரசு உத்தியோகத்தையும், சலுகைகளையும் தக்க வைத்துக் கொள்ள காய் நகர்த்துகின்றனர். இறுதியில் வென்றது ஆந்திர ஜெயம் ரவியும், அவரது பின்னணியில் இருக்கும் 147 ஊழல் பேர்வழிகளுமா? அல்லது தமிழக ரவியா.? அமலாபாலும் அவரது காதலும் என்னவாயிற்று...? என்பது உள்ளிட்ட இன்னும் பல வினாக்களுக்கு வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் விடையளிக்கிறது 'நிமிர்ந்து நில்' படத்தின் மீதிக்கதை!

    ஜெயம் ரவி, அரவிந்த் சிவசாமியாகவும், நரசிம்ம ரெட்டியாகவும் இருவேறு பரிமாணங்களில் பொளந்து கட்டியிருக்கிறார். அதிலும் அரவிந்த சிவசாமி ரவி, ஊழல் எதிர்ப்பாளராக அலட்டிக் கொள்ளாமல் நடித்து அசால்ட்டாக ஸ்கோர் செய்திருக்கிறார். ஆரம்பகாட்சிகளில் அநியாயங்களை கண்டு அவர் பொங்கும் காட்சிகளில் தியேட்டரே அதிர்கிறது. வளைந்து கொடுத்து போகத்தெரியாதவனை வாழத்தெரியாதவன் என சிரிப்பது தானே நம் இயல்பு, அப்படித்தான் சிரிக்கிறோம்... ஆரம்பகாட்சிகளில் ஜெயம் ரவியை பார்த்து, ஆனால் அதன்பின் அவர் எடுக்கு அவதாரங்களும், விஸ்வரூபங்களும் தான் 'நிமிர்ந்து நில்' படத்தில் நம்மை நிமிர்ந்து உட்கார வைக்கும் விஷயங்கள்! வாவ், ஜெயம் ரவி வாயிலாக இயக்குநர் சமுத்திரகனி தெரிகிறார், என்ன துடிப்பு, என்ன நடிப்பு!

    ஆந்திரா, ராஜமுந்திரி - நரசிம்ம ரெட்டியாக வரும் மற்றொரு ஜெயம் ரவியும், அவரது கன்னியர் புடை சூழ்ந்த ஆந்திர இருப்பிடமும் ஒருமாதிரி தெரிந்தாலும், அவரும் ஹீரோ தான் என க்ளைமாக்ஸில் நிரூபிக்கும் இடங்கள் சூப்பர்ப்! ஆனாலும் 'ஆதிபகவன்' ஜெயம் ரவிகளின் மேனரிஸங்கள் இரண்டு ரவிகளிடமும் இந்தப்படத்திலும் இருப்பது தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்! (ஆனாலும் 'ஆதிபகவன்' தோல்வியையும், 'நிமர்ந்து நில்' வெற்றி ஜெயம் ரவிக்கு ஈடுகட்டிவிடும் என்பது சிறப்பு!)

    ''உன்னை மாதிரி நேர்மையாக எல்லா சந்தர்ப்பத்திலும் என்னால் வாழமுடியாது... ஆனால், உன்கூட வாழமுடிவு செய்துவிட்டேன்...'' என ஜெயம்ரவியை உருகி உருகி காதலிக்கும் அமலாபால், ஒருகட்டத்தில் அதே நேர்மைக்காக அவரை பிரிவது சினிமாட்டிக்காக இருக்கிறது. ஆனால், அதேநேரம் ரவியுடன், அமலாபால் திரும்ப சேருவது அமலாவின் அப்பாவும், ஊழல் பேர்வழிகளில் ஒருவர் என்பது தெரிந்ததும் வீட்டில் போராடுவது அமலாவின் பாத்திரத்திற்கும், படத்திற்கும் வலு சேர்க்கின்றன!

    சூரி, இப்போதெல்லாம் கடிப்பதில்லை... கலாய்க்கிறார், ஜமாய்க்கிறார் என்பது 'நிமிர்ந்து நில்' படத்திற்கும் பலம்! கெஸ்ட் ரோலில் வரும் சரத்குமாரின் நேர்மை, 'இன்ஸ்' இம்சை அனில் மேனன், டாக்டர் நமோ நாராயணன், ஆமாம்மா அய்யாசாமி எம்.பி. ஞானசம்பந்தம், ஜட்ஜ் - சித்ரா லெட்சுமணன், ஏட்டு - தம்பி ராமையா, இன்னொரு நாயகி ராகினி திவேதி உள்ளிட்ட எல்லோரும் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர். அதனால் 'நிமிர்ந்து நில்' படமும் பளிச்சிடுகிறது!

    எம்.சுகுமார், எம்.ஜீவன் சகோதரர்களின் ஒளிப்பதிவு, ஜி.வி.பிரகாஷ்குமாரின் இசை, ஏ.எல்.ரமேஷின் படத்தொகுப்பு உள்ளிட்ட ப்ளஸ் பாயிண்ட்டுகளுடன் சமுத்திரகனியின் இயக்கத்தில் 'நிமிர்ந்து நில்' படம், பார்க்கும் ரசிகர்களையும் ஜெயம் ரவி மாதிரி லஞ்சம் கொடுப்பதில்லை... வாங்குவதில்லை... என உறுதி ஏற்க செய்வது தான் இப்படத்தின் இமாலய வெற்றி!

    ''அரசியல்வாதிக்கு ஆயுள் 5 ஆண்டு தான், ஆனா அவங்களுக்கு தப்பா ரூட் போட்டு கொடுக்கும் அரசு அதிகாரிகளுக்கு 58 வயசு வரை அதிகாரம்!'' என்பது உள்ளிட்ட இன்னும் பல அனல் பறக்கும் வசனங்களில் நம்மை கவரும் சமுத்திரகனி, சரத்குமாரின் காரை பறக்கவிட்டு டி.வி. லைவ் ரிலே டிரையிலர் லாரியை மோத விடுவதும், ஜெயம் ரவிகளை தேவை இன்றி மோதவிடுவதையும் தவிர்த்திருந்தார் என்றால் 'நிமிர்ந்து நில்' இன்னும் 'தில்'லாக இருந்திருக்கும்! ஆனாலும், ''நிமிர்ந்து நில்'' - ''சமுத்திரகனியின் - தில்'' - ''ரசிகர்களின் நெஞ்சில்!''
  • வியாழன், 13 மார்ச், 2014

    குலாப் ஜாமுன்களை வெளுத்து கட்டிய விசாகா

    படப்பிடிப்புக்காக வைத்திருந்த குலாப் ஜாமுன்களை வெளுத்து கட்டிய விசாகா படப்பிடிப்புக்காக வைத்திருந்த குலாப் ஜாமுன்களை மிச்சம் வைக்காமல் வெளுத்துகட்டினார் விசாகா. இதனால் பட யூனிட்டார் அதிர்ச்சி அடைந்தனர். கண்ணா லட்டு தின்ன ஆசையா ஹீரோயின் விசாகா சிங். வாலிப ராஜா என்ற படத்தில் நடித்து வருகிறார். சந்தோஷமான காட்சி ஒன்றில் எதிரில் வைக்கப்பட்டிருந்த குலாப் ஜாமுனை விசாகா சாப்பிடுவது போல் காட்சி படமாக்க இருந்தனர். காட்சி தொடங்கும் முன் ஒரு குலாப் ஜாமுனை சாப்பிட்ட விசாகா, அதன் சுவையில் தன்னை மறந்து கிண்ணத்தில் இருந்த 10க்கும் அதிகமான குலாப் ஜாமுன்களை வெளுத்து கட்டினார். இதை பார்த்து படக்குழு அதிர்ச்சி அடைந்தது. காட்சிக்கான டிஸ்கஷனில் இருந்த டைரக்டரோ தகவல் அறிந்து ஷாக் ஆனார். உடனே கடையிலிருந்து மீண்டும் குலாப் ஜாமுனை வாங்கிவந்து அதை காட்சிக்கான டேக் போகும்வரை மறைத்து வைக்க உதவியாளர்களுக்கு உத்தரவிட்டார்.

    இந்த ருசிகர சம்பவம் பற்றி விசாகா கூறும்போது, குடும்ப உறுப்பினர்கள் சந்தோஷமாக கூடி பேசிக்கொண்டிருந்த காட்சி படமாக்கப்பட்டது. ஒரு கிண்ணம் நிறைய குலாப் ஜாமுன் வைக்கப்பட்டிருந்தது. அதை சாப்பிட்டபடியே சிரித்து பேச வேண்டும் என்று இயக்குனர் கூறி இருந்தார். எனக்கு இனிப்பு என்றால் ரொம்ப பிடிக்கும். ஒரு ஜாமுனை எடுத்து வாயில்போட்டேன் அப்படியே கரைந்துவிட்டது. அந்த சுவை என்னை சுண்டி இழுக்கவே 10க்கும் மேற்பட்ட ஜாமுனை எடுத்து சாப்பிட்டேன். அருகில் இருந்த சக நடிகர்களும் ம்... வெளுத்துக்கட்டு என்று  ஊக்கப்படுத்தினார்கள். காட்சியை படமாக்குவதற்குள் எல்லாவற்றையும் எடுத்து சாப்பிட்டுவிட்டேன். இதைப்பார்த்த பட யூனிட்டார், அடுத்த டேக் எடுத்தால் ஜாமுன் தேவைப்படும் என்பதால் என் கண்ணில் படாமல் மறைத்துவைத்து விட்டனர். ஜாமுன் சுவை இன்னும் என் நாவில் ஒட்டிக்கொண்டிருக்கிறது என்றார். 

    போட்டோவை காப்பி அடிக்கவில்லை: கமல்

    பிரெஞ்சுகாரரின் போட்டோவை காப்பி அடிக்கவில்லை: கமல் பிரெஞ்சு போட்டோகிராபரின் ஸ்டில் பார்த்து தனது பட போஸ்டரை வடிவமைக்கவில்லை என்றார் கமல். உத்தமவில்லன் படத்திற்காக கமல்ஹாசன் வித்தியாசமான மேக்அப் அணிந்திருந்த ஸ்டில் வெளியானது. இது பிரெஞ்ச் போட்டோகிராபர் எரிக் என்பவர் எடுத்த போட்டோவை பார்த்து காப்பி அடித்திருப்பதாக இணைய தளங்களில் தகவல் வெளியானது. இது குறித்து கமலிடம் கேட்டபோது அவர் கூறியதாவது: தேயம் என்ற பழங்கால கலை ஆயிரம் வருடமாக இங்குள்ளது. கலைநயத்துடன் கூடிய இந்த ஆட்டத்தை ஆடும் பாரம்பரியத்தை சேர்ந்த 3வது தலைமுறை கலைஞர்தான் எனக்கு இந்த மேக்அப் அணிவித்தார். காதல் ஜோடி ஒன்று மார்பில் தலைவைத்தபடி போஸ் தந்தால் அது ஏக் துஜே கே லியே போஸ்டரின் காப்பி என்று சொல்வார்களா? உத்தம வில்லன் படத்தில் தமிழ்நாட்டின் பாரம்பரிய  கூத்து கலையுடன் கலந்த கலவையாக தேயம் நடனம் என் படத்தில் இடம்பெறுகிறது. 

    முகத்தில் பெயின்ட்டால் மேக்அப் அணிவது சாதாரண விஷயம் கிடையாது. நான் அணிந்திருப்பது முகமூடி அல்ல. என் முகத்தின்மேல் பெயின்ட்டால் வரையப்பட்டிருக்கிறது. இதற்கு 4 மணி நேரம் ஆனது. வில்லன் என்பதற்கு அர்த்தம் இருக்கிறது. வில் என்றால் அம்புவை குறிக்கும் வில்லன் என்றால் வில்லுடன் அம்புவை ஏந்தியவன் என்று பொருள். இதுவரை 18 நிமிடத்துக்காக 7 சீன்கள் படமாகிவிட்டன. இப்படத்தில் பல நடிகர்களிடமிருந்து ஆச்சரியப்படத்தக்க நடிப்பை நீங்கள் எதிர்பார்க்கலாம். இவ்வாறு கமல் பதில் அளித்தார். 

    தமிழ் படம் இயக்காமல் பின்வாங்கினார் மணிரத்னம்

    பைனான்சியர்கள் ஜகா வாங்குவதால் தமிழ் படம் இயக்காமல் பின்வாங்கினார் மணிரத்னம் தமிழ் படம் இயக்காமல் பின்வாங்குகிறார் மணிரத்னம். ஆய்த எழுத்து, விக்ரம் நடித்த ராவணன், அபிஷேக்பச்சன் நடித்த குரு படங்களை இந்தி, தமிழ் என இருமொழிகளில் இயக்கினார் மணிரத்னம். இந்த படங்கள் எதிர்பார்த்த வெற்றியை தராததால் தமிழ், தெலுங்கில் அடுத்த படத்தை இயக்க எண்ணி இருந்தார். இதற்காக மகேஷ்பாபு, நாகார்ஜுனா  இருவரையும் ஹீரோக்களாக தேர்வு செய்தார். திருமணத்துக்கு பிறகு இப்படம் மூலம் ஐஸ்வர்யாராயும் ரீ என்ட்ரி ஆக உள்ளார். அதேபோல் தமிழுக்கும் நட்சத்திர தேர்வு நடத்த முடிவு செய்திருந்தார்.

    இந்நிலையில் தமிழில் கடைசியாக அவர் இயக்கிய கடல் படம் படு தோல்வி அடைந்தது. இதனால் பைனான்சியர்கள், வினியோகஸ்தர்கள் மணிரத்னம் அலுவலகம் அருகே போராட்டம் நடத்தினர். இப்போது அவரது அடுத்த தமிழ் படத்துக்கு பைனான்ஸ் செய்ய பலரும் யோசிக்கிறார்கள். இதனால் டோலிவுட்டுக்கு சென்று அந்த மொழியில் மட்டுமே இப்படத்தை எடுக்க மணிரத்னம் திட்டமிட்டுள்ளார். அதே சமயம், ஐஸ்வர்யாராய் மீண்டும் நடிக்க வருவதை அவரது மாமியார் ஜெயா பச்சன் விரும்பவில்லை. மகள் ஆராத்யாவை கவனித்துக்கொள்ள வேண்டிய பொறுப்பும் இருப்பதால் நீண்ட கால்ஷீட் தருவது முடியாத காரியம் என ஐஸ்வர்யா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு மொழியில் மட்டும் மணிரத்னம் படம் இயக்குவதற்கு இதுதான் காரணம் என்று அவர் தரப்பில் கூறப்படுகிறது. 

    31 வயது ஹீரோயினுக்கு அம்மாவா?

    31 வயது ஹீரோயினுக்கு அம்மாவா?  வாய்ப்பை உதறினார் தபு பிரியங்கா சோப்ராவுக்கு நான் அம்மாவா? மறுபடியும் இப்படி சொல்லாதீங்க என்று டைரக்டரிடம் கடிந்துகொண்டு பட வாய்ப்பை நிராகரித்தார் தபு. தமிழில் காதல் தேசம், சிறைச்சாலை, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், சிநேகிதியே, டேவிட் உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் தபு. பாலிவுட் நடிகையான இவருக்கு பட வாய்ப்புகள் நிறைய வந்தபோதும் மனதுக்கு பிடித்த வேடம் மட்டுமே ஏற்று நடிக்கிறார். சமீபத்தில் பெண் இயக்குனர் ஸோயா அக்தர் இயக்கும் இந்தி படத்தில் பிரியங்கா சோப்ராவுக்கு அம்மாவாக நடிக்க வாய்ப்பு வந்தது. பிரியங்காவுக்கு  31 வயது. தபுவுக்கு 42 வயது. 11 வயது மட்டுமே இருவருக்கும் வித்தியாசம். 

    வயது அதிகமான பெண்களுக்கு அம்மாவாக நடிக்கும் அளவுக்கு எனக்கு வயதாகிவிடவில்லை. அப்படியே அந்த வேடம் ஏற்று நடித்தாலும் அது எனக்கு பொருத்தமாக இருக்காது. இன்னொருமுறை இந்த வேடத்தில் நடிக்க கேட்காதீர்கள் என்று ஸோயாவிடம் எரிந்து விழுந்தார் தபு. பதறிப்போன ஸோயா, ஸாரி கேட்டுவிட்டு அங்கிருந்து நகர்ந்தவர் வேறு அம்மா நடிகையை தேடிக்கொண்டிருக்கிறார். சமீபத்தில் திரைக்கு வந்த சல்மான் கானின் ஜெய் ஹோ படத்தில் அவருக்கு அக்காவாக நடித்திருந்தார் தபு. 

    இண்டர்நெட்டில் கோச்சடையான் டிரெய்லரை 11 ½ லட்சம் பேர் பார்த்தனர்


    இண்டர்நெட்டில் கோச்சடையான் டிரெய்லரை 11 ½ லட்சம் பேர் பார்த்தனர்ரஜினியின் கோச்சடையான் பட டிரெய்லரும் பாடல்களும் கடந்த ஞாயிறன்று வெளியிடப்பட்டன.

    இரண்டு நாட்களில் உலகம் முழுவதும் 11 லட்சத்து 58 ஆயிரத்து 400 பேர் இன்டர்நெட், யு டியூப்பில் இந்த டிரெய்லரை பார்த்துள்ளனர். ரஜினி ரசிகர்கள் ஏராளமானோர் டிரெய்லரை பார்த்து பிடித்துள்ளதாக கருத்து பதிவு செய்தனர்.

    கோச்சடையான் கார்ட்டூன் படம் என்ற வதந்தி ஏற்கனவே பரவி இருந்தது. டிரெய்லர் பார்த்தவர்கள் கார்ட்டூன் படம் அல்ல என்பதை உறுதி செய்தனர். 3 டி மோஷன் பிக்சர் தொழில் நுட்பத்தில் இப்படம் தயாராகியுள்ளது. அவதார், டின் டின் போன்ற ஹாலிவுட் படங்கள் சாயலில் எடுத்துள்ளனர்.

    டிரெய்லர், பாடல் மிவும் பிடித்து இருந்ததாக நடிகர் சிம்பு, நடிகை நயன்தாரா, டைரக்டர் செல்வராகவன் போன்றோர் டுவிட்டரில் பாராட்டி உள்ளனர். அவர்களுக்கு படத்தின் டைரக்டர் சவுந்தர்யா நன்றி தெரிவித்துள்ளார்.

    கோச்சடையான் படம் ரூ.125 கோடி செலவில் தயா ராகியுள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் முரளி மனோகர் தெரிவித்துள்ளார். இதே தொழில் நுட்பத்தில் ஹாலிவுட்டில் வந்த அவதார் படத்துக்கு ரூ.3 ஆயிரம் கோடி செலவானது. படம் முடிய 5 ஆண்டுகள் ஆனது.

    டின் டின் படத்துக்கு ரூ.4 ஆயிரம் கோடி செலவானது. 4 வருடத்தில் இந்த படத்தை முடித்தனர் என்றும் அவர் கூறினார்.

    கோச்சடையான் நாயகி யாக தீபிகாபடுகோனே நடிக்கிறார். சரத்குமார், ஜாக்கி ஷெராப், நாசர், ஆதி, ஷோபனா, ருக்மணி போன்றோரும் முக்கிய கேரக்டரில் வருகின்றனர். அடுத்த மாதம் (ஏப்ரல்) 11–ந்தேதி படத்தை ரிலீஸ் செய்யப் போவதாக ஏற்கனவே அறிவித்து இருந்தனர். பாராளுமன்ற தேர்தல் நடப்பதால் ரிலீஸ் தேதி தள்ளிப் போகலாம் என கருதப்பட்டது.

    ஆனால் தயாரிப்பாளர் முரளி மனோகர் தேர்தலுக்காக படத்தை நிறுத்தமாட்டோம். ஏப்ரலில் படம் வெளிவரும் என்றார்.

    தமிழுக்கு ரீ-என்ட்ரி ஆகிறார் கஜாலா

    தமிழுக்கு ரீ-என்ட்ரி ஆகிறார் கஜாலாஇயக்குனர் அமீரின் ‘ராம்’ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தவர் கஜாலா. இப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி சிறந்த நடிகை என்ற பெயர் பெற்றார். அதன்பிறகு, ஒருசில படங்களில் நடத்த அவர், சமூக அந்தஸ்துக்கு கல்வி முக்கியம் என்பதை உணர்ந்து படிப்பிற்காக சில காலங்களாக நடிப்புக்கு முழுக்கு போட்டிருந்தார்.

    இந்நிலையில் தனது கல்வியை முடித்துவிட்ட கையோடு மீண்டும் சினிமாவில் கால்பதிக்க வந்துவிட்டார். இதுகுறித்து அவர் கூறுகையில், சினிமா என்பது படைப்பு திறனும் துடிப்பும் கூடியது. இதன் மூலம் பிரபலம் என்ற அந்தஸ்தை எளிதில் பெற்றுவிடலாம்.

    100 கோடிக்கு மேல் மக்கள் தொகை உள்ள இந்த நாட்டில் புகழ்பெற்ற நட்சத்திரமாக இருப்பது மிக எளிதானது அல்ல. மிகவும் அதிர்ஷ்டக்காரியாக இருப்பதால் தமிழ்நாட்டு நட்சத்திரங்களில் நானும் ஒருத்தியாக இருக்கிறேன்.

    புகழ்பெற்ற நடிகைகளான நதியா, ரேவதி, ஷாலினி ஆகியோர் எனது முன்மாதிரிகளாவார். கடின உழைப்பு மற்றும் ஈடுபாட்டின் மூலம் தமிழ் சினிமாவில் எனக்கென்று தனியொரு இடத்தை பிடிப்பேன் என்று தெரிவித்தார்

    வெள்ளி, 7 மார்ச், 2014

    சந்தானத்தின் குரு.. 'லொள்ளு சபா’ பாலாஜி திடீர் மரணம்

    சந்தானத்தின் குரு.. 'லொள்ளு சபா’ பாலாஜி திடீர் மரணம்

உடல்நலக் கோளாறு காரணமாக அவதிப்பட்டு வந்த காமெடி நடிகர் பாலாஜி இன்று காலை திடீர் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 43. தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘லொள்ளு சபா' நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் பாலாஜி. இதனால் இவரை லொள்ளு சபா பாலாஜி என்று அழைக்கப்பட்டார். இவர். சிலம்பாட்டம், திண்டுக்கல் சாராதி உள்பட 50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சிவா நடித்த தில்லு முல்லு படத்துக்கு காமெடி வசனம் இவர் தான் எழுதினார் சந்தானத்தின் குரு.. 'லொள்ளு சபா’ பாலாஜி திடீர் மரணம் சமீபகாலமாக மஞ்சள் காமாலை நோயால் அவதிப்பட்டு வந்த பாலாஜி, அதற்காக சிகிச்சைப் பெற்று வந்தார். இந்நிலையில் இன்று காலை அவரது உடல்நிலை மோசமானது. அதனைத் தொடர்ந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பாலாஜி சிகிச்சைப் பலனின்றி காலை 8 மணி சுமாருக்கு உயிரிழந்தார். காலமான பாலாஜிக்கு மனைவியும் 3 குழந்தைகளும் உள்ளனர். பிரபல காமெடி நடிகர் சந்தானத்தை டி.வி நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தியவர் பாலாஜி தான் என்பது குறிப்பிடத்தக்கது.

    உடல்நலக் கோளாறு காரணமாக அவதிப்பட்டு வந்த காமெடி நடிகர் பாலாஜி இன்று காலை திடீர் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 43. தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘லொள்ளு சபா' நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் பாலாஜி. இதனால் இவரை லொள்ளு சபா பாலாஜி என்று அழைக்கப்பட்டார். இவர். சிலம்பாட்டம், திண்டுக்கல் சாராதி உள்பட 50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சிவா நடித்த தில்லு முல்லு படத்துக்கு காமெடி வசனம் இவர் தான் எழுதினார் சந்தானத்தின் குரு.. 'லொள்ளு சபா’ பாலாஜி திடீர் மரணம் சமீபகாலமாக மஞ்சள் காமாலை நோயால் அவதிப்பட்டு வந்த பாலாஜி, அதற்காக சிகிச்சைப் பெற்று வந்தார். இந்நிலையில் இன்று காலை அவரது உடல்நிலை மோசமானது. அதனைத் தொடர்ந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பாலாஜி சிகிச்சைப் பலனின்றி காலை 8 மணி சுமாருக்கு உயிரிழந்தார். காலமான பாலாஜிக்கு மனைவியும் 3 குழந்தைகளும் உள்ளனர். பிரபல காமெடி நடிகர் சந்தானத்தை டி.வி நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தியவர் பாலாஜி தான் என்பது குறிப்பிடத்தக்கது.

    வியாழன், 6 மார்ச், 2014

    தமிழில் வரும் சீக்ரட் ஆப் செக்ஸ்

    தமிழில் வரும் சீக்ரட் ஆப் செக்ஸ்பாலியல் விழிப்புணர்வுக்காக ‘சீக்ரட் ஆப் செக்ஸ்’ என்ற பெயரில் இந்தி படம் தயாராகி உள்ளது. இந்த படம் வடஇந்தியாவில் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடியது. வசூலையும் குவித்தது. தற்போது இப்படம் தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டு அடுத்தவாரம் தமிழகம் முழுவதும் ரிலீசாகிறது. பள்ளி செல்லும் பிராச்சியும், ரித்வியும் காதல் வயப்படுகின்றனர்.

    உடல்ரீதியாகவும் இணைகிறார்கள். பிராச்சியின் சகோதரி பாலியல் மருத்துவர். ரித்விச்சின் அண்ணனும் மருத்துவர். மனரீதியான பிரச்சினைகளால் இல்லற வாழ்வில் முழுமை பெற முடியாமல் தவிக்கின்றனர். வீட்டு வேலை செய்யும் சுசீலாவும் இளம் வயதில் நிகழ்ந்த கசப்பான அனுபவத்தால் இல்லற வாழ்வில் சுகமின்றி தவிக்கிறார். இவர்கள் வாழ்வில் நடக்கும் பிரச்சினைகளும், தீர்வுகளுமே கதை

    காதல் முறிவுக்கு பின் ஹன்சிகாவுடன் மீண்டும் நடிக்கும் சிம்பு

    காதல் முறிவுக்கு பின் ஹன்சிகாவுடன் மீண்டும் நடிக்கும் சிம்புஹன்சிகாவுடனான காதலை முறித்து விட்டதாக சமீபத்தில் சிம்பு அறிவித்தார். இருவரும் வாலு, வேட்டை மன்னன் படங்களில் ஜோடியாக நடிக்கின்றனர். படப்பிடிப்பில்தான் இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டு காதல் வயப்பட்டனர். பிறகு இருவருமே காதலை பகீரங்கமாக அறிவித்தார்கள். விரைவில் திருமணம் நடக்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

    இந்த நிலையில்தான் காதல் முறிந்து விட்டதாக பரபரப்பு அறிவிப்பை சிம்பு வெளியிட்டார். இதை அறிவிக்கும் போது இருவரும் ஐதராபாத்தில் நடந்த வாலு படப்பிடிப்பில் இருந்தனர். அப்போதுதான் இருவரும் மனம் விட்டு பேசி பிரிய முடிவு எடுத்ததாக கூறப்படுகிறது.

    வாலு படத்தில் ஹன்சிகாவை புகழ்ந்து ஒரு பாடலையும் சிம்பு பாடி இருந்தார். ‘நயன்தாரா வேண்டாம், ஆன்ட்ரியா வேண்டாம் நீ தான் என் டார்லிங்’ என்று அந்த பாடல் வரிகள் துவங்கின. இதன் மூலம் இருவரும் நெருக்கமாக இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் பிரிந்து விட்டார்கள். இவர்கள் பிரிவுக்கு நயன்தாரா காரணம் என்கின்றனர்.

    பாண்டிராஜ் இயக்கும் ஒரு படத்தில் சிம்புவும் நயன்தாராவும் இணைந்து நடிக்கின்றனர். இருவரும் சிரித்து பேசி நெருக்கமாக இருக்கும் படங்கள் வெளியாயின. இது ஹன்சிகாவுக்கு பிடிக்கவில்லை. இதனால் தகராறு ஏற்பட்டு பிரிந்துள்ளார்கள்.

    வாலு படத்தில் இரண்டு பாடல் காட்சிகள் பாக்கி உள்ளன. இதை விரைவில் படமாக்க திட்டமிட்டு உள்ளனர். காதல் முறிவுக்கு பிறகு இதில் இணைந்து நடிக்கிறார்கள்

    உத்தமவில்லனுக்கு எதிராக வில்லத்தனம் செய்வதா?

    உத்தமவில்லனுக்கு எதிராக வில்லத்தனம் செய்வதா?விஸ்வரூபம்’ படத்தின் 2-ம் பாகத்தை முடித்த கையோடு கமல், தன்னுடைய நண்பரும், நடிகருமான ரமேஷ் அரவிந்த் இயக்கும் உத்தம வில்லன் படத்தில் நடிக்கத் தொடங்கிவிட்டார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மார்ச்.3-ந் தேதி பெங்களூரில் தொடங்கியது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் சமீபத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த போஸ்டர் மற்றும் டீசர்களில் வெளியான கமலின் தோற்றம், பிரெஞ்சு புகைப்பட கலைஞர் ஒருவர் எடுத்த புகைப்படத்திலிருந்து திருடப்பட்டதாக இணையதளங்களில் பரவத் தொடங்கின. உண்மையில், இந்த தோற்றம் கேரளாவில் தெய்யம் என்ற ஆட்டத்தில் ஈடுபடும் கலைஞனுக்குண்டானது. கேரளாவின் வடக்கே மலபாரில், ஆலயங்களில் வேண்டுதல்கள் நிறைவேற்றியபின் தெய்வங்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் ஆடப்படும் ஒரு நடன வகைதான் தெய்யம்.

    இந்த ஆட்டக்கலையை தெய்யாட்டம் எனவும், வேடத்தை தெய்யக்கோலம் என்றும் கூறுகிறார்கள். இந்த ஆட்டத்தின் சிறப்பை தமிழுக்கு அறிமுகப்படுத்தவே உலக நாயகன் இந்த படத்தில் தெய்யக்கோலத்தில் தோன்றுகிறாராம். அதைவிடுத்து, அவர்மீது திருட்டு பட்டம் கூறுவது சரியல்ல.

    மேலும், படத்திற்கு படம் சினிமாவில் ஏதாவது புதுமுயற்சியை கையாள வேண்டும் என்ற முனைப்புடன் செயல்படும் கமலின் இந்த புதுமுயற்சியை களங்கடிக்க நினைப்பது தமிழ் சினிமாவுக்கு ஆரோக்கியமானதல்ல என்றும் சினிமா நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

    இன்டர்நெட்டில் ஆபாச படங்கள்: நடிகை நவ்நித் கவுர் புகார்

    இன்டர்நெட்டில் ஆபாச படங்கள்: நடிகை நவ்நித் கவுர் புகார்நடிகை நவ்நித் கவுர் ஆபாச படங்கள் இன்டர்நெட்டில் பரவி வருகின்றன. இதுகுறித்து அவர் போலீசில் புகார் அளித்து இருக்கிறார்.

    நவ்நித் கவுர் தமிழில் விஜயகாந்துடன் அரசாங்கம் படத்தில் நடித்தார். அம்பாசமுத்திரத்தில் அம்பானி படத்தில் கருணாஸ் ஜோடியாக நடித்தார். தெலுங்கிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

    நவ்நித் கவுருக்கும் மகராஷ்டிரா மாநிலம் பத்னேரா சட்டமன்ற தொகுதி சுயேச்சை எம்.எல்.ஏ. ரவி ராணாவுக்கும் 2011–ல் திருமணம் நடந்தது. அதன் பிறகு அவர் சினிமாவில் நடிக்கவில்லை.

    தற்போது நவ்நித் கவுர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து அரசியல் பணயாற்றி வருகிறார்.

    இந்த நிலையில் அவரது ஆபாச படங்கள் இன்டர்நெட்டில் பரவி உள்ளது. வாட்ஸ்அப், பேஸ்புக் போன்றவற்றிலும் இந்த படங்கள் அனுப்பப்படுகின்றன. அரகுறை ஆடையில் ஆபாசமாக இருப்பதுபோல் இந்த படங்கள் உள்ளது.

    இதனால் நவ்நீத் கவுர் அதிர்ச்சி அடைந்துள்ளார். இந்த படங்களை இன்டர்நெட்டில் பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

    நவ்நித் கவுர் கணவரும் எம்.எல்.ஏ.வுமான ரவிராணா கூறும்போது, நவ்நித் கவுர் பெயருக்கு களங்கள் ஏற்படுத்தும் நோக்கிலேயே இந்த படங்களை பரவவிட்டுள்ளனர் என்றார்.

    தேர்தல் காரணமாக ரஜினி, விஷால் படங்கள் தள்ளிப் போகின்றன


    தேர்தல் எதிரொலி: ரஜினி, விஷால் படங்கள் ரிலீஸ் தள்ளிவைப்பு?ரஜினியின் கோச்சடையான் படம் ஏப்ரல் 11–ந்தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் இசை வெளியீட்டு விழா வருகிற 9–ந்தேதி காலை சத்யம் தியேட்டரில் நடக்கிறது.

    இதில் ரஜினி, அமிதாப்பச்சன், தீபிகா படுகோனே போன்றோர் பங்கேற்கின்றனர்.

    கோச்சடையான் படத்தை உலகம் முழுவதும் 6 ஆயிரம் தியேட்டர்களில் திரையிட திட்டமிட்டுள்ளனர்.

    இந்த நிலையில் தமிழக பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 24–ந்தேதி நடைபெறும் என தேர்தல் கமிஷன் அறிவித்து உள்ளது. இதனால் கோச்சடையான் ரிலீசாவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. அடுத்த மாதம் தேர்தல் பணிகள் தீவிரமாக நடக்கும் என்பதால் கோச்சடையான் படத்தை ரிலீஸ் செய்வது சரியாக இருக்காது என படக்குழுவினர் கருதுகின்றனர். தேர்தல் முடிந்த பிறகு திரைக்கு கொண்டு வரலாம் என யோசிக்கிறார்கள்.

    இதுபோல் விஷால் நடிக்கும் நான் சிகப்பு மனிதன், சிவகார்த்திகேயன் நடிக்கும் மான் கராத்தே படங்களையும் அடுத்த மாதம் ரிலீஸ் செய்ய முன்னதாக முடிவெடுத்தனர். ஆனால், தேர்தல் காரணமாக அந்த படங்களின் ரிலீசும் தள்ளிப்போகிறது.

    அடுத்த மாதம் எந்த படமும் ரிலீசாகாது என தெரிகிறது.

    சனி, 1 மார்ச், 2014

    இலங்கையில் நடைபெற இருந்த ‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சி ரத்து . : டைரக்டரின் எச்சரிக்கைக்கு அடிபணிந்த விஜய் டிவி!

    இலங்கையில் விஜய் டிவி சார்பில் நடைபெற உள்ள சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை நிறுத்த வேண்டும் இல்லையென்றால் மானமுள்ள தமிழர்களுக்கு அது பதில் சொல்லியாக வேண்டும் என்று எச்சரிக்கை செய்திருந்தார் டைரக்டர் கெளதமன்.
    இதையடுத்து நேற்றும் இரவோடு இரவாக விஜய் டிவியின் சார்பில் ஒரு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில் இலங்கையில் நடைபெறும் கலைநிகழ்ச்சிக்கும் தங்களது சேனலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று விஜய் டிவி சார்பில் விளக்கம் தரப்பட்டுள்ளது.
    இதுகுறித்து அந்த அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது :
    தமிழர்களின் உணர்வுகளை மதிப்பதிலும், தமிழ் மண்ணின் மான்பை நிலை நிறுத்துவதிலும் என்றென்றும் உறுதியான நிலைப்பாடுகளுடனே விஜய் டிவி இருந்திருக்கிறது. இனிமேலும் இருக்கும். உலக அளவில் தமிழர்களின் பெருமையையும், தி்றமையையும் முன்னிறுத்துவதை தனது முதல் கடமையாக வைத்துள்ளது. இந்நிலையில் விஜய் தொலைக்காட்சி குழுமம் பற்றிய உண்மைக்கு புறம்பாக வெளிவரும் சில செய்திகளுக்கு விளக்கம் அளிக்க விரும்புகிறோம்…
    மார்ச் 1, 2 தேதிகளில் இலங்கையில் நடக்கின்ற கலை நிகழ்ச்சிக்கும், விஜய் தொலைக்காட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அது மட்டுமல்ல இதற்கு முன் விஜய் டிவி இலங்கையில் எந்த ஒரு கலை நிகழ்ச்சியும் நடத்தியது இல்லை. விஜய் டிவி குறித்து இது போன்று வரும் அனைத்து செய்திகளும் உண்மைக்கு புறம்பானவை. விஜய்டிவி எப்போதும் தமிழர்களின் மன உணர்வுகளை புரிந்து கொண்டு பொறுப்புடன் செயல்பட்டு வந்திருக்கிறது என்பது தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    அப்படியானால் விஜய்டிவியின் லோகோவை போட்டு அங்கு விளம்பரப்படுத்தும் விழாக்குழுவினர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? எந்த சந்தேகத்துக்கு விஜய் டிவி சார்பில் சரியான விளக்கம் தரப்படவில்லை.
    இதற்கிடையே நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இலங்கை சென்று இருந்த சூப்பர் சிங்கர் பாடகர்களுக்கு எதிராகவும் தமிழகத்தில் மாணவர்கள் , உணர்வாளர்கள் பல்வேறு தரப்பில் இருந்து தொடர்ந்து எதிர்ப்பு கிளம்பியதால் அந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டு அனைவரும் நாடு திரும்பி உள்ளனர்.

    ரசிகர்களை குஷிபடுத்த வரும் சின்னத்திரை நடிகை!

    Sivappu Enakku Pidikkum (9) வித்தியாசமான கேரக்டர் என்றால் அதில் விலைமாதுவாக நடிப்பதும் ஒன்று என்பது தான் நடிகைகளின் சாய்ஸுகளில் ஒன்றாக இருக்கிறது. மேலும் அந்தக் கேரக்டரில் நடித்தால் தன்னுடைய இமேஜ் டேமேஜ் ஆகும் என்று துளியும் கவலைப்படுவதில்லை. மாறாக ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயர் கிடைக்கும் என்றும், அதன் மூலம் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைக்கும் என்று முடிவு செய்து விடுகிறார்கள்.
    ஏற்கனவே அனுஷ்கா, சங்கீதா, ஸ்ரேயா, ஸ்ருதிஹாசன் ஆகிய தமிழ்சினிமா ஹீரோயின்கள் விலைமாதுவாக கூச்சப்படாமல் நடித்துள்ளனர். அந்த வரிசையில் தான் வந்து சேர்ந்திருக்கிறார் ‘சின்னத்திரை’ புகழ் சாண்ட்ரா எமி. யுரேகா டைரக்ட் செய்யும் ‘சிவப்பு எனக்கு பிடிக்கும்’ படத்தில் எமி ஒரு விலைமாது.
    முதல்படமே விலைமாதுவா, இது உங்களுக்கே கூச்சமாக இல்லையா? என்று கேட்டால் இப்படி ஒரு கேரக்டரில் நடிப்பதே எனக்கு சேலஞ்சிங்கானது தான் என்கிறார் கூலாக…
    இது கிளாமர் படம், ஆனா படத்துல கிளாமரே இருக்காது. அப்படித்தான் படத்தை எடுக்கப் போகிறோம்னு டைரக்டர் சொன்னார். அப்போதே இந்தப்படத்தில் நடிக்கணும்னு முடிவு பண்ணிட்டேன்.
    இது ஒரு நல்ல கேரக்டர். குறிப்பாக, சமூக சேவை செய்கிற மாதிரியான வேடம் இது. அப்படிப்பட்ட இந்த கேடக்ரில் நடிக்க எனக்கு எந்த தயக்கமும் இல்லை. மேலும், இப்படத்தில் ஆபாசமாக காட்சிகள் எதுவும் இல்லை. என்னையும் அசிங்கமாக காட்டவில்லை. சமுதாய நலன் கருதும் வகையில் எடுக்கப்பட்டுள்ள படம் என்பதால், என்னை நல்லவிதமாகவே காண்பித்திருக்கிறார்கள் என்று நம்பிக்கையோடு சொன்னார் சாண்ட்ரா.
    வாயுள்ள பொண்ணு பொழைச்சுக்கும்னு சும்மாவா சொன்னாங்க…?

    மம்முட்டியை சம்மட்டியால் அடித்த ரசிகர்கள்

    Balyakalasakhi-movie-stills-(15)530 தன்னை விட வயது குறைந்த பெண்ணை காதலிக்கும் கேரக்டரில் நடித்த மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டிக்கு கேரளாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
    தமிழில் மிர்ச்சி சிவா ஜோடியாக ‘தில்லு முல்லு’ படத்தில் நடித்தவர் இஷா தல்வார். தமிழில் பட வாய்ப்புகள் இல்லாததால் ஹீரோயின்கள் அடுத்து ஒதுங்குவது மலையாளக் கரையோரம் தான். அப்படி ஒதுங்கியவருக்கு மம்முட்டி ஜோடியாக பால்ய கலாசக்தி படத்தில் நடிக்க சான்ஸ் கிடைத்தது. விடுவாரா.?
    வைக்கம் முகமது பஷீரின் கதையை அடிப்படையாகக் கொண்ட இந்தப் படத்தை பிரமோத் பய்யனூர் டைரக்ட் செய்திருக்கிறார். படப்பிடிப்பு முடிந்து கடந்த மாதம் 7 ஆம் தேதி ரிலீசான இந்தப்படத்துக்கு கேரளா மட்டுமில்லாமல் ரிலீசான எல்லா இடங்களிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
    படத்தில் 62 வயதான மம்முட்டி தன்னை விட 36 வயது குறைந்த இஷா தல்வாரை காதலிப்பதும், அவருடன் மம்முட்டி  காதல் காட்சிகளில் நெருக்கம் காட்டியிருப்பதும் தான் இந்த எதிர்ப்புக்கு காரணமாம். மம்முட்டி இப்படிப்பட்ட கேரக்டரில் நடிப்பார் என்று நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை. அதுவும் அவரது மகனே ஹீரோவாக நடிக்கும் போது அவர் இப்படி நடிக்கலாமா? என்பது தான் சம்மட்டியை வைத்து அடித்தது போல ரசிகர்கள் கேட்கும் கேள்வி?
    அதிர்ச்சியடைந்த மம்முட்டி படத்தில் அப்படிப்பட்ட சில காட்சிகளுக்கு கத்தரி போடச்சொன்னாராம், ஆனால் தயாரிப்பாளரோ முடியவே முடியாது என்று கட் அண்ட் ரைட்டாக சொல்லி விட்டார். இதனால் தனது ரசிகர்களை எப்படி சமாதானப்படுத்துவது என்று தெரியாமல் திணறி வருகிறார் மம்முட்டி.
    வயசானதுக்கப்புறம் தான் புத்தி சீரியஸா ‘வேலை’ செய்யுமோ..?

    ‘கோச்சடையான்’ ரிலீஸ் எப்போ..? : மீண்டும் மீண்டும் குழப்பும் ரஜினி மகள்!

    Soundarya-R-Ashwin இன்னும் எத்தனை தீபாவளிகளையும் எத்தனை பொங்கல்களையும் தாண்டப்போகிறதோ தெரியவில்லை. இதோ மீண்டும் கோச்சடையான் ரிலீஸ் தேதியை குழப்போ குழப்பு என்று குழப்பியிருக்கிறார் ரஜினியின் மகளும் டைரக்டருமான செளந்தர்யா ரஜினிகாந்த்.
    சில வாரங்களுக்கு முன்பு ‘கோச்சடையான்’ படம் ஏப்ரலில் ரிலீஸ் ஆகாது என்று எல்லா மீடியாக்களும் போட்டி போட்டுக்கொண்டு செய்திகளை பரப்பி வந்ததைப் பார்த்து பதறிய செளந்தர்யா உடனே கோச்சடையான் படம் வரும் ஏப்ரலில் ரிலீஸாகி விடும் என்று அறிக்கை அனுப்பினார்.
    இதனால் ஒட்டுமொத்த ரஜினி ரசிகர்களும் குஷியானார்கள். ரஜினியை இந்தப்படத்தில் அனிமேஷனில் வருவதால் அதில் பார்க்க அவர்களும் ஆவலாக உள்ளனர்.
    இதற்கிடையே நேற்று கார்பன் மொபைல்ஸ் ஸ்பெஷல் எடிசனாக வெளியிடும் கோச்சடையான் மொபைல்ஸ் அறிமுக விழாவில் கோச்சடையான் ரிலீஸ் பற்றி மீண்டும் ஒரு குழப்பச் செய்தியை சொல்லிவிட்டுப் போயிருக்கிறார்.
    அதாவது ‘கோச்சடையான்’ படத்தின் ஆடியோ பங்ஷன் மார்ச் 9-ம் தேதி கண்டிப்பாக நடைபெறும். அதற்குப் பிறகே ரிலீஸ் தேதி முடிவு செய்யப்படும் என்று கூறியிருக்கிறார்.
    இதனால் கோச்சடையான் படம் ஏப்ரலிலும் ரிலீசாகுமா..? என்று ரசிகர்களிடையே சந்தேகம் எழுந்துள்ளது

    இந்த டைரக்டர் ரொம்பப் பேசுறாரு… : ஏ.ஆர் ரகுமானையே மிரள வைத்த டைரக்டர்!

    Kaaviyathalaivan (9) தமிழ்ப்பட வாய்ப்புக்காக தன்னைத்தேடி வந்த ஹாலிவுட் பட வாய்ப்பை உதறித் தள்ளியிருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான்.
    ‘அரவான்’ படத்துக்குப் பிறகு வசந்தபாலன் டைரக்ட் செய்து வரும் ‘காவியத்தலைவன்’ படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் தான் இசையமைப்பாளர். நேற்று நடந்த இந்தப்படத்தின் பர்ஸ்ட் லுக் பிரஸ்மீட்டில் ஏ.ஆர் ரஹ்மானும் கலந்து கொண்டார்.
    சரியாக 7 மணிக்கு அரங்கில் நுழைந்த அவரை பேசிப்பேசியே மிரள வைத்தார் டைரக்டர் வசந்தபாலன். அவர் பேசிய பிறகு பேச வந்த ஏ.ஆர். ரஹ்மான் டைரக்டர் ரொம்ப பேசுறாரு… அதைப்பார்த்து நானே கொஞ்சம் ஷாக்காயிட்டேன் என்றார் சிரித்துக் கொண்டே…
    தொடர்ந்து அவர் பேசியதாவது :
    வசந்தபாலன் இப்படத்திற்காக மிகவும் கஷ்டப்பட்டு உழைச்சிருக்கார். நானும் மிகவும் கஷ்டப்பட்டேன். நான் இந்த படத்திற்கு இசையமைக்கும் பணியில் இருக்கும் போது, ஒரு ஹாலிவுட் படத்திற்கும் இசையமைத்துக் கொண்டிருந்தேன். ரொம்ப டார்க்கான படம் அது. இந்தப்படம் வந்த உடனே, ஹாலிவுட் படத்தை வேண்டாம் என்று விட்டு விட்டேன்.
    இந்த படத்தில் மொத்தம் 8 பாடல்கள் இருக்கிறது. நாடகம் சம்பந்தமான படம் என்பதால் ஒவ்வொரு பாட்டிலும் 8 பாட்டு இருக்கும். அந்தச் சின்ன சின்ன பாடல்களையெல்லாம் சேர்த்தால் படத்தில் மொத்தம் 20 பாடல்கள் இருக்கும். 1930-ல் நடக்கும் கதை என்பதால், எந்த மாதிரி பாடல்களுக்கு இசையமைத்தால் அதை இப்போதுள்ள ரசிகர்களும் விரும்பி கேட்பார்கள், அப்புறம் எந்த ராகம் உபயோகிக்கலாம் என்று நிறைய யோசித்து செய்திருக்கிறேன்.
    இப்படத்தில் பணியாற்றியதற்காக பெருமையடைகிறேன். என்றவர் பேசி முடிக்கும் போது தனது ட்ரேட் மார்க் வசனமான ”எல்லாப் புகழும் இறைவனுக்கே.” என்பதையும் சொல்லத் தவறவில்லை.