வியாழன், 9 ஜனவரி, 2014

Filled Under:

‘ஜில்லா’ படத்துக்கு தடை கேட்டவர் மீது விஜய் ரசிகர்கள் கொடூர தாக்குதல்?



vijay_85_1231201042936123
டைட்டில் பிரச்சனையில் ‘ஜில்லா’ படத்தை தடை செய்ய வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தவர் மீது மர்மக் கும்பல் ஒன்று கொடூர தாக்குதலை நடத்தியுள்ளது.
எந்த சிக்கலும் இல்லாமலேயே ‘ஜில்லா’ படத்தை ரிலீஸ் செய்து விட வேண்டும் என்பது தான் விஜய்யின் ஆசை. அதனால் தான் இந்தப்படத்தில் நடித்ததோடு அமைதியாகி விட்டார்.
நாளை 10-ஆம் தேதி ‘ஜில்லா’ படம் ரிலீசாக உள்ள நிலையில் படத்திற்கு தடை விதிக்கக் கோரி சவுமிதாஸ் ஸ்ரீ ஆர்ட்ஸ்’ நிறுவனத்தின் நிர்வாகி மகேந்திரன் என்பவர் சென்னை சிவில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது
 இந்நிலையில் மகேந்திரன் தனது வழக்கறிஞரை சந்தித்துவிட்டு வீடு திரும்பிய போது 4 பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று அவரை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டது. இதில் மகேந்திரனின் முகத்தில் காயம் ஏற்பட்டது. தற்போது அவர் வடபழனியிலுள்ள சூர்யா ஹாஸ்பிட்டலில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
‘தலைவா’ படத்துக்கு பெரும் சிக்கல் உண்டாதனால் ஜில்லா படம் எந்த சிக்கலும் இல்லாமல் ரிலீசாக வேண்டும் என்று எதிர்பார்த்தார் விஜய். ஆனால் அவரது ரசிகர்களே ‘ஜில்லா’ படத்தின் ரிலீசுக்கும் சட்ட சிக்கலை உண்டு பண்ணியிருப்பது விஜய்க்கு கடும்கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறதாம்.
அனேகமாக இந்த தாக்குதல் விஜய் ரசிகர்களின் வேலையாகத்தான் இருக்கும் என்று சந்தேகப்பட்ட போலீஸார் அவர்களை வலைவீசித் தேடி வருகிறார்கள்.

0 உங்கள் கருத்து:

கருத்துரையிடுக