வெள்ளி, 28 பிப்ரவரி, 2014

காதல் தேவதையை தேடுகிறார் ஆர்யா!

Arya searching her partner சினிமா பார்ப்பது, சினிமாக்காரர்களை பார்ப்பது என்றால் அனைவருக்கும் பிடிக்கிறது. ஆனால் சினிமாக்காரனுக்கு பெண் கொடுக்கத்தான் நாட்டில் ஆள் இல்லை. அதனால்தானோ என்னவோ, ஆள் நல்ல வாட்ட சாட்டமாக கட்டுமஸ்தாக இருக்கும் ஆர்யாவுக்கு இன்னமும் பெண் கிடைத்தபாடில்லை. சினிமாவில் உள்ள தற்போதைய ஹீரோக்களில், நடிகைகளிடம் அதிக நட்பு வளர்த்து வருபவர் ஆர்யா. அதனால் அவ்வப்போது அவர் கிசுகிசுக்களில் சிக்கியும் வருகிறார். அதோடு, சில சினிமா மேடைகளில் அவரது நட்பு வட்டார நடிகர்களே, நடிகைகளுடன் அவரை இணைத்து சிக்க வைத்து விடுகிறார்கள். இதனால், ஆர்யாவின் பெயர் எக்கச்சக்கமாக சிக்கி சிதைந்து கிடக்கிறது.

ஆனால், இந்த நிலையில் இருந்து மாற வேண்டும் என்று தற்போது உறுதி எடுத்துள்ளார் ஆர்யா. அதனால், நடிகைகளுடனான நட்பை ஓரங்கட்டி விட்டார். வீடடில் பெண் பார்க்கிறார்கள் என்றதும், நயன்தாராவுடனான நெருக்கத்தைகூட தள்ளி வைத்து விட்டார். ஆக, இப்போது ரொம்ப நல்ல பிள்ளையாகி விட்டார். இனிமேல் எந்த ஹீரோவும மூக்கின் மேல் விரல் வைத்து ஆர்யா பற்றி அவதூறு பேச முடியாது என்ற நிலையாகி விட்டது.

இருப்பினும், இன்னும் ஆர்யாவுக்குகேற்ற பெண் அமையவில்லையாம் அவரது பெற்றோர் தொடர்ந்து தேடிக்கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில், எனக்கு காதல் கல்யாணம்தான் செட்டாகும் என்று சொல்லிக்கொள்ளும் ஆர்யாவும், தனது காதல் தேவதையை தேடிக்கொண்டு அலைகிறார். இதுபற்றி கேட்கும் நண்பர்களிடமும், சீக்கிரம் செட்டாகிடும் பாஸ் என்றும் நம்பிக்கை பீறிட குதூகலிக்கிறார் பாஸ் என்ற பாஸ்கரன்.

உதயநிதி படத்துக்கு வரிவிலக்கு அளியுங்கள்: உயர்நீதிமன்றம் உத்தரவு

 உதயநிதி ஸ்டாலின், நயன்தாரா, சந்தானம் நடித்த இது கதிர்வேலன் காதல் படம் சமீபத்தில் ரிலீசானது. எஸ்.ஆர்.பிரபாகரன் டைரக்ட் செய்திருந்தார். இந்த படத்துக்கு தணிக்கை குழு யூ சான்றிதழ் வழங்கியது. இதைத் தொடர்ந்து வரி விலக்கு கமிட்டிக்கு விண்ணப்பத்தினர் படக்குழுவினர். ஆனால் வரிவிலக்கு கொடுக்கவில்லை. இதனால் உதயநிதி சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடாந்தார். "எனது படத்துக்கு அரசியல் உள்நோக்கத்துடன் வரிவிலக்கு மறுக்கப்பட்டுள்ளது. இது தவறானது. என் படத்துக்கு கேளிக்கை வரி விலக்கு அளிக்க உத்தரவிடவேண்டும்" என்று தனது மனுவில் கூறியிருந்தார்.

மனுவை விசாரித்த நீதின்றம் இது தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. அதன்படி அரசு பதில் மனு தாக்கல் செய்தது. அந்த மனுவை நீதிபதி ராமசுப்பிரமணியம் விசாரித்தார். பதில் மனு அவருக்கு திருப்தி அளிக்கவில்லை. இதை தொடர்ந்து "இது கதிர்வேலன் காதல் படத்துக்கு தமிழக அரசின் கமிட்டி ஆய்வு செய்து வரிவிலக்கு அளிக்க வேண்டும்" என்று உத்தரவிட்டார்.

"படம் கடந்த பிப்ரவரி 14ந் தேதி ரிலீசானது. 14 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் இந்த வரிவிலக்கால் உதயநிதிக்கு பெரிய லாபம் எதுவும் ஏற்படப் போவதில்லை. கோர்ட் உத்தரவை தமிழக அரசு மதித்தால் இதுவரை வசூலித்த தொகையை அரசு திருப்பிக் கொடுக்க வேண்டியது இருக்கும்" என்று சட்டவல்லுனர்கள் தெரிவிக்கிறார்கள்.

அரைசதம் அடித்த தல, தளபதி

தல நடித்த வீரமும், தளபதி நடித்த ஜில்லாவும் 50 நாட்கள் ஓடி அரைசதம் அடித்துள்ளது. அஜீத், தமன்னா, விதார்த், பாலா, சந்தானம் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்த படம் வீரம். சிறுத்தை சிவா டைரக்டர். பாட்டு, பைட்டு, தலயின் வில்லேஜ் கெட்டப்பு, சால்ட் அண்ட் பெப்பர் லுக்குன்னு தல ரசிகர்களும், பொது ரசிகர்களும் தலப்பொங்கலை கொண்டாடினார்கள். "நல்லவன்னு சொல்வாங்க நம்பிடாதீங்க... என்னை கெட்டவன்னு சொல்வாங்க திட்டிடாதீங்க..."ன்னு இன்னும் முணுமுணுத்துக் கொண்டிருக்கிறார்கள். இப்போது 50வது நாளுக்கு வந்துவிட்டது வீரம். 

சென்னையில் சத்யம், எஸ்கேப், ஐநாக்ஸ், தேவி, சாந்தி, அபிராமி, மாயாஜால் ஆகிய மால் தியேட்டர்களில் தல இன்னும் வேட்டிய மடிச்சுக்கட்டியபடி நடைபோட்டுக் கொண்டிருக்கிறார். தமிழ்நாடு முழுவதும் சுமார் 100 தியேட்டர்களில் வீரம் வெற்றி நடைபோடுவதாக விநியோகஸ்தர்கள் ஏரியா தகவல்கள் தெரிவிக்கிறது.

இளைய தளபதி விஜய்யும், கேரள சூப்பர் ஸ்டார் மோகன்லாலும் இணைந்து நடித்த ஜில்லாவை ஆர்.டி.நேசன் டைரக்ட் செய்திருந்தார். காஜல் அகர்வால் ஹீரோயின். பொங்கலையொட்டி வெளியான ஜில்லா 50வது நாளுக்கு வந்துவிட்டது. சத்யம், ஸ்கேப், தேவி, அபிராமி, சங்கம், ஆல்பட், பெரம்பூர் எஸ் 2, பிவிஆர், உதயம், கமலா, வளாகங்களில் ஜில்லா கொடி இன்னும் பறக்கிறது. தமிழ்நாட்டில் 60 திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருப்பதாக விநியோகஸ்தர்கள் கூறுகிறார்கள்.

100 வது நாளை தொடுவது யார்? தலையா, தளபதியா? 'வீ ஆர் வெயிட்டிங்'.

செவ்வாய், 25 பிப்ரவரி, 2014

எல்லை மீறிப் போறீங்க, இது நல்லதுக்கில்லே.. : சிம்புவை எச்சரித்த நயன்தாரா!

nayanatara-Anamika-Movie-Photos-10 ‘இது நம்ம ஆளு’ படப்பிடிப்பில் சிம்புவின் எல்லை மீறலால் செம கடுப்பில் இருக்கிறாராம் நயன்தாரா. இதனால் படப்பிடிப்பை தொடர்ந்து சுமூகமாக நடத்த முடியாமல் திண்டாடி வருகிறார் டைரக்டர் பாண்டிராஜ்.
சிம்புவின் சொந்த தயாரிப்பான ‘இது நம்ம ஆளு’ படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். பாண்டிராஜ் டைரக்‌ஷனில் தயாராகும் இந்தப் படத்தில் நயன்தாராவை சிம்புவுக்கு ஜோடியாக்க திட்டமிட்டதே டைரக்டர் பாண்டிராஜ் தான்.
சிம்புவுக்கு ஜோடி என்றவுடன் உடனே மறுத்த நயன் பிறகு கதையை கேளுங்க, பிடிச்சிருந்தா நடிங்க என்று பாண்டிராஜ் சொன்னதால் கதையைக் கேட்டு ஓ.கே சொன்னார்.
அவர் உள்ளே வந்த நேரம் ஹன்ஷிகா உடனான காதலும் பிரேக்கப் ஆகி விட்டது. இதனால் மனம் நொந்து போயிருக்கும் சிம்பு இப்போது தனது சொந்தப் படப்பிடிப்பில்  நயன்தாராவின் எல்லை மீறி சில சமாச்சாரங்களை செய்து வருகிறாராம்.
குறிப்பாக நயனின் பெர்மிஷன் இல்லாமலேயே அவரது கேரவனுக்குள் போய் உட்கார்ந்து கொள்வது நயனுக்கு பிடிக்கவே இல்லையாம். இதனால் கடுப்பான நயன் டைரக்டர் பாண்டிராஜிடம் புகார் கூறியிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் உங்களுக்காகத் தான் இந்தப்படத்துல நடிக்கவே நான் ஓ.கே சொன்னேன். ஆனால் சிம்பு இப்படி பண்ணினார்னா நான் பாட்டுக்கு ஷூட்டிங் ஸ்பாட்ல இருந்து வெளியேறி போய்க்கிட்டே இருப்பேன் என்று எச்சரிக்கை செய்திருக்கிறார்.
சிம்புவின் சொந்தப்படம் என்பதால் அவரிடமும் இதுபற்றி எதுவும் சொல்ல முடியாமல் இந்த பஞ்சாயத்துக்கு மத்தியில் படம் எடுத்து முடிப்பதற்குள் நம்ம தாவு தீர்ந்திடும் போல என்று புலம்பு வருகிறார் பாண்டிராஜ்!
அதானே சிம்புவை வெச்சி நிம்மதியா படம் எடுத்துற முடியுமா என்ன?

இத்தனை வருஷமா நடிக்கிறே, தமிழ் பேசத் தெரியாதா..? : காஜல் அகர்வாலுக்கு டேக்கா கொடுக்கும் டைரக்டர்கள்!

K வட இந்தியாவிலிருந்து வரும் நடிகைகளை தமிழ்ப்படங்களில் நடிக்க வைப்பதற்குள் போதும் போதுமென்றாகி விடும். குறிப்பாக அவர்கள் பேசும் தமிழை காது கொண்டு கேட்க முடியாத அளவுக்கு கர்ணக் கொடூரமாக இருக்கும்.
புதுமுக நடிகைகள் என்றால் பரவாயில்லை, பல வருடங்களாக தமிழில் நடித்துக் கொண்டிருக்கும் பிரபல நடிகைகளே தமிழை கற்றுக்கொள்ள கொஞ்சமும் முன் வருவதில்லை. மாறாக வந்தோம், நாலு வார்த்தைகளுக்கு தமிழில் லிப் மூவ்மெண்ட் கொடுத்தோம் என்று போய் விடுகிறார்கள்.
அதுவும் தமிழ் சுத்தமாக தெரியாத நடிகைகளை புக் செய்யும் டைரக்டர்கள் அந்த நடிகைகளுக்கு வசனத்தை சொல்லிக் கொடுத்து காட்சிகளை புரிய வைப்பதற்குள் தாவு தீர்ந்து விடும். இந்த ஒரு மொழிச் சிக்கலில் தான் இப்போது காஜல் அகர்வால் வசமாக மாட்டுக்கொண்டு முழிக்கிறார்.
அவர் தமிழில் நடிக்க வந்து பல வருடங்கள் ஆகி விட்ட நிலையிலும் இன்னும் வணக்கம், நன்றி என்றளவில் மட்டும் தமிழை கற்றுக் கொண்டிருக்கிறார். இதனால் ஓரளவுக்காவது தமிழ் தெரியாத அவரை படங்களில் நடிக்க வைக்க டைரக்டர்கள் தயங்குகிறார்களாம்.
அதே சமயம், நயன்தாரா, அமலாபால் போன்ற நடிகைகளுக்கு தமிழ் நன்றாக தெரியும் என்பதால், அதிக சம்பளம் கொடுத்தாலும் படப்பிடிப்பு சீக்கிரமே முடிந்து விடும். இதனால் படப்பிடிப்பு செலவு மிச்சமாகிவிடும் என்று கணக்குப்பார்க்கிறார்களாம் தயாரிப்பாளர்கள்.
உதயநிதியின் நடிக்கும் நண்பேன்டா படத்தில் முதலில் கமிட்டாகியிருந்த காஜலை, பின்னர் கழட்டி விட்டதற்கு காரணம் இந்த மொழிப்பிரச்சனை தானாம்.
இதனால் அதிர்ச்சியடைந்திருக்கும் காஜல் எப்படியாவது அடிப்படைத் தமிழை கற்றுக்கொள்ள முடிவெடுத்து நல்ல தமிழ் டியூசன் வாத்தியாரை தேடி வருகிறார்.

‘விஜய்’ படத்தால என்னோட கெரியரே டேமேஜ் ஆயிடுச்சு : சோகத்தில் புலம்பும் அமலாபால்

A மைனா கொடுத்த உற்சாக வெற்றியில் ஒரு சுற்றுப் பெருத்துப் போன அமலாபால் இப்போது பட வாய்ப்புகள் இல்லாததால் சோகத்தில் இருக்கிறார்.
பழம் நழுவி பாலில் விழுவதைப் போல எல்லாப் பட வாய்ப்புகளும் தன்னைத் தேடி வரும் என்று எதிர்பார்த்த அமலாபாலுக்கு தமிழில் நம்பர் 1 நடிகையாக வேண்டும் என்கிற பெருங்கனவை விஜய்யின் ‘தலைவா’ கலையோ கலையென்று கலைத்து விட்டது.
கைவசம் ‘நிமிர்ந்து நில், வேலையில்லா பட்டதாரி’ ஆகிய ரெண்டு படங்களை மட்டுமே கையில் வைத்திருக்கும் அவர் தலைவாவில் விட்டதை இந்தப் படங்களில் பிடித்து விட வேண்டும் என்கிற ஆசையில் இருக்கிறார்.
இந்நிலையில், மேலும் புதிய பட வாய்ப்புகளுக்காக தனது சம்பளத்தை கணிசமாக குறைத்திருக்கும் அவர் ‘பொல்லாதவன், ஆடுகளம்’ படங்களை அடுத்து தனுஷ் – வெற்றி மாறன், மீண்டும் இணையும் புதிய படத்திலும், கொடுக்கிற சம்பளத்தை மட்டுமே வாங்கிக் கொண்டு நடிக்கிறாராம்.
அதுமட்டுமில்லாமல் விஜய் சாரோட ‘தலைவா’ படத்தை ரொம்பவே நம்பியிருந்தேன். ஆனா அந்தப்படம் என்னோட சினிமா கெரியரையே டேமேஜ் பண்ணிடுச்சு என்று தன்னை பார்ப்பவர்களிடமெல்லாம் சொல்லி சொல்லி சோகத்தில் புலம்புகிறார் அமலாபால்.

டாஸ்மாக்’ பாட்டு : சிவகார்த்திகேயனுடன் அனிருத் போட்ட செம குத்தாட்டம்!

anirudh-with-sivakarthikeyan ‘மான் கராத்தே’ படத்தில் ஒரு டாஸ்மாக் பாட்டுக்கு சிவகார்த்திகேயனுடன் செம குத்தாட்டம் போட்டிருக்கிறார் இசையமைப்பாளர் அனிருத்.
ஏ.ஆர்.முருகதாஸ் உதவியாளர் திருக்குமரன் இயக்கும் படம் ‘மான் கராத்தே’. சிவகார்த்திகேயன், ஹன்சிகா நடிக்கும் இப்படத்துக்கு அனிருத் தான் மியூசிக் டைரக்டர். இப்படத்திற்காக ஒரு கானா பாடலை உருவாக்கியுள்ளார்  அனிருத்.
இந்தப் பாடலை பாட, வித்தியாசமான குரலைத் தேடிய அனிருத்துக்கு உடனே நினைவுக்கு வந்தவர் இசையமைப்பாளர் தேவா. அடுத்த நிமிஷம் அவரைத் தொடர்பு கொண்டு விருப்பத்தை சொன்னபோது அவரும் உடனே சம்மதித்துப் பாடி கொடுத்துள்ளாராம்.
‘படத்தின் க்ளைமாக்ஸில் இடம் பெறும் இப்பாடல் இந்த வருடத்தின் சூப்பர் ஹிட் பாடலாக அமையும்’ என்று கூறியுள்ள அனிருத் இந்தப் பாடலில் சிவகார்த்திகேயனுன் சேர்ந்து செம குத்தாட்டம் போட்டிருக்கிறார்.
‘எதிர் நீச்சல்’ படத்தில் ஒரு பாடலுக்கு வந்து போன அனிருத் ‘வணக்கம் சென்னை’ படத்தில் சென்னை கேங்ஸ்டார் பாடலில் ஆடினார். தற்போது ‘மான் கராத்தே’ படத்துக்காக ஒரு பாடலுக்கு  டான்ஸ் ஆடியிருக்கிறார். இந்தப்பாடல் ஒரு டாஸ்மாக் பேக்-கிரவுண்ட் பாடல் என்பதால் நேர்த்தியாக ஆடியிருக்கிறாராம் அனிருத்.

சினிமாவுக்கு குட்பை; நடிகை அஞ்சலி தலைமறைவு? : அடுத்தடுத்து கசிந்த சீக்ரெட் சமாச்சாரங்கள்!

anjali-hot-pics-at-masala-platinum-disc-function-27-25 சென்னையில் இருந்து தமிழ்ப் படங்களில் நடித்தபோது தனது சித்தியுடன் ஏற்பட்ட தகராறினால் தனது சொந்த ஏரியாவான ஆந்திராவுக்கு ஓடினார் அஞ்சலி.
அங்கே பாதுகாப்பாக இருந்து படங்களில் நடிக்கலாம் என்று கணக்கு போட்டவர் தமிழ்ப் படங்களுக்கு குட்பை சொன்னார். பல படங்கள் அவரைத் தேடி வந்தும் கூட ‘மசாலா’ என்ற ஒரே ஒரே தெலுங்கு படத்தில் தான் அவர் நடித்தார். கடந்த 2013-ஆம் வருடம் ரிலீசான அந்தப்படம் தான் அவருக்கு கடைசிப்படம். அதற்குப் பிறகு தெலுங்கிலும், தமிழிலும் எந்த ஒரு புதிய படத்திலும் அவர் நடிக்கவில்லை.
இதற்கிடையே சில தினங்களுக்கு முன்பு ஷகிலாவின் சுயசரிதையை மையமாக வைத்து வெளிவர இருக்கும் படத்தில் அஞ்சலி நடிக்கப் போகிறார் என்றும், அதில் அஞ்சலிதான் ஷகிலாவாக நடிக்கப் போகிறார் என்று செய்தி வெளியாகின.
ஆனால் தற்போது அஞ்சலி அந்தப்படத்தில் நடிக்கவில்லை என்றும், கூடவே இந்த நிமிடம் வரை அவர் எங்கிருக்கிறார் என்பதே தெரியவில்லை இல்லை என்றும் சீக்ரெட் தகவல் கசிந்திருக்கிறது.
சென்னையிலும் இல்லை, ஆந்திராவில் எந்த ஒரு பட விழாவிலும் அஞ்சலியை பார்க்க முடிவதில்லை, அவர் இப்போது எங்கிருக்கிறார் என்பதும் யாருக்கும் தெரியவில்லை.  அதுமட்டுமில்லாமல் அவர் வைத்திருக்கும் இரண்டு மொபைல் எண்களை தொடர்பு கொண்டால் இரண்டிலுமே எந்த ரெஸ்பான்ஸும் இல்லை.
அப்படியானால் அஞ்சலி எங்கே போனார்? யாருடைய பிடியில் இருக்கிறார்? என்பது மர்மமாகவே உள்ளது.
இதனால் அஞ்சலியை தங்கள் படங்களில் நடிக்க வைப்பதற்காக யோசிக்கும் டைரக்டர்கள் அவரை யார் மூலம் எப்படி தொடர்பு கொள்வது? என்கிற குழப்பத்தில் இருக்கிறார்கள்.
ஆனால் அஞ்சலியோ சினிமாவுக்கு நிரந்தரமாக முழுக்கு போட்டு விட்டு ஒரு ‘பெரிய புள்ளி’யின் அன்புப் பிடியில் அடைக்கலமாகி விட்டார் என்றும், இனிமேல் அஞ்சலி சினிமாவில் நடிக்க மாட்டார் என்றும் கூடுதல் தகவல்களை அவரது நெருங்கிய வட்டாரங்கள் சொல்கிறார்கள். இன்னும் சிலரோ அஞ்சலி அதே பெரிய புள்ளியுடன் வெளிநாட்டில் செட்டிலாகி விட்டதாகவும் சொல்கிறார்கள்.
இதெல்லாம் உண்மையா? பொய்யா? என்ன என்பதை அஞ்சலியே நேரில் வந்து சொன்னால் தான் உண்டு. சொல்லுங்க எங்க இருக்கீங்க அஞ்சலி?

திங்கள், 24 பிப்ரவரி, 2014

தமிழ் தெரியாது என்பதால் காஜலை நிராகரிக்கும் கோடம்பாக்கம்!

சினிமா உலகைப்பொறுத்தவரை பெரிய பட்ஜெட் படங்களை 100 நாட்களையும் தாண்டி படப்பிடிப்பு நடத்துவார்கள். ஆனால், பட்ஜெட் படங்களென்றால் அதிகபட்சம் 40 முதல் 60 நாட்களுக்குள் முடித்து விடுவார்கள். இப்படி விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடத்த படத்தில் நடிப்பவர்கள் அனுபவசாலிகளாக இருப்பதோடு, தமிழ் தெரிந்தவர்களாகவும இருக்க வேண்டும்.

ஒருவேளை தமிழ் தெரியாத நடிகைகளாக இருந்தால், அவர்களுக்கு வசனம் சொல்லிக்கொடுப்பதிலேயே பாதி நேரம் கழிந்து விடும். இந்த பிரச்னை காஜல்அகர்வாலிடம் இருப்பதினால்தான் அவரை புக் பண்ண படாதிபதிகள் தயங்குகிறார்களாம். அதேசமயம், நயன்தாரா, அமலாபால் போன்ற நடிகைகளுக்கு தமிழ் நன்றாக தெரியும் என்பதால், அதிக சம்பளம் கொடுத்தாலும் படப்பிடிப்பு சீக்கிரமே முடிந்து விடும். இதனால் படப்பிடிப்பு செலவு மிச்சமாகிவிடும் என்று கணக்குப்பார்க்கிறார்களாம்.

இது கதிர்வேலன் காதல் படத்தை அடுத்து, உதயநிதி நடிக்கும் நண்பேன்டா படத்தில் முதலில் கமிட்டாகியிருந்த காஜலை, பின்னர் கழட்டி விட்டதும் இந்த பிரச்னைக்காகத்தானாம். இதையடுத்து, தன்னை கோடம்பாக்கம் நிராகரிப்பதின் காரணத்தை தெரிந்து கொண்ட காஜல், அடுத்து தமிழ்நாட்டுக்குள் வரும்போது, தனக்குத் தெரிந்த ஒன்றிரண்டு தமிழ் வார்த்தைகளை கடித்து துப்பியாவது, தனக்கும் தமிழ் தெரியும் என்பதை நிரூபிக்க முடிவு செய்திருக்கிறாராம்.

படங்கள் கைமீறிப் போனதால் அதிர்ச்சியில் ஜி.வி.பிரகாஷ்குமார்!

 வெயில் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜி.வி.பிரகாஷ்குமார். ஏ.ஆர்.ரகுமானின் சகோதரியின் மகனான இவர், குறுகிய காலத்திலேயே பாரதிராஜா, பாலா, விஜய் போன்ற முன்னணி கலைஞர்களின் படங்களுக்கு இசையமைக்கும் அளவுக்கு உயர்ந்து நின்றார். இதனால் வளர்ந்த இசையமைப்பாளர்கள் ஜி.வி.பிரகாஷினால் பாதிக்கப்படும் நிலை உருவானது.

ஆனால், இப்படி வேகமாக வளர்ந்து கொண்டிருந்த அவர், தற்போது பென்சில் படத்தில் நாயகனாக நடித்து வருவதையடுத்து, இசையில் சரியான ஆர்வம் காட்டுவதில்லை என்று பரதேசிக்கு பிறகு தான் இயக்கும் கரகாட்ட படத்திற்கு இசையமைக்க இளையராஜாவை தேடிச்சென்று விட்டார் பாலா. அவரைத் தொடர்ந்து இப்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ஆக, தலைவா படத்திற்கு இசையமைத்த ஜி.வி.பிரகாஷினால் விஜய் படத்தை தக்க வைத்துக்கொள்ள முடியவில்லை.

இதனால், பலத்த அதிர்ச்சியடைந்திருக்கும் ஜி.வி.பிரகாஷ், இன்னும் சிறிது காலம் நடிப்பிலேயே சென்று கொண்டிருந்தால், எஞ்சியுள்ள இயக்குனர்களும் தன்னை தண்ணி தெளித்து விடுவார்கள் என்பதை புரிந்து கொண்ட அவர், பென்சில் படத்தின் ரிலீசுக்குப்பிறகு நடிப்பா? இசையா? என்று திட்டவட்ட முடிவெடுக்க உள்ளாராம்.

ஞாயிறு, 23 பிப்ரவரி, 2014

ரஜினி, கமலை இயக்குகிறார் ஷங்கர்?!

 சிங்கம்-2 , பீட்சா-2 படங்களைத் தொடர்ந்து விஸ்வரூபம்-2, ஜெய்ஹிந்த்-2 உள்பட பல படங்களின் இரண்டாம் பாகங்கள் வளர்ந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில, இதுவரை இரண்டாம் பாகம் இயக்காமல் இருந்த பிரமாண்ட இயக்குனர் ஷங்கருக்கும இரண்டாம் பாகம் இயக்கும் ஆசை மேலோங்கியிருக்கிறதாம்.

அதனால், 1996ல் கமலை இரண்டு வேடங்களில் இயக்கிய இந்தியன் படத்தையும், 2010ல் ரஜினியை இயக்கிய எந்திரன் ஆகிய படங்களின் இரண்டாம் பாகங்களை அடுத்தடுத்து இயக்க திட்டமிட்டுள்ளாராம். தற்போது விக்ரம நடிப்பில் ஐ படத்தை இயக்கி முடித்து விட்ட ஷங்கர், அடுத்தபடியாக ரஜினியை வைத்து எந்திரன்-2வை முதலில் தொடங்குகிறாராம்.

அதையடுத்து, கமலை வைத்து இந்தியன்-2வை இயக்குகிறாராம். தற்போது விஸ்வரூபம்-2 படத்தை முடித்து விட்டு இறுதிகட்ட பணிகளில் ஈடுபட்டுள்ள கமல், அதைத் தொடர்ந்து உத்தமவில்லன், த்ரிஷ்யம் ரீமேக் ஆகிய படங்களில நடிப்பதால், இந்த படங்களை முடித்து விட்டு ஷங்கர் இயககும் படத்தில் இணைவார் என்று கூறப்படுகிறது. மேலும், இந்த இரண்டு படங்களுமே இதுவரை எந்த தமிழ் படங்களும் உருவாகாத அளவுக்கு மெகா பட்ஜெட்டில் பிரமாண்டமாக தயாராகிறதாம்.

அஜீத்துக்கு ஜோடியாக அனுஷ்கா நடிக்கவில்லையாம்

வீரம் படத்தை அடுத்து கெளதம்மேனன் இயக்கத்தில் நடிக்கும் படத்திற்காக, தனது உடம்பை ஸ்லிம் பண்ணிக்கொண்டிருக்கிறார் அஜீத். ஏற்கனவே ஆரம்பம் படத்திற்காக உடல் எடையை குறைத்திருந்தவர், வீரம் படத்திற்கு சற்று அதிகப்படுத்தினார். ஆனால், இப்போது நடிப்பது அவரை இன்னும் இளமையாக வித்தியாசமான கோணத்தில் வெளிப்படுத்தும் கதை என்பதால், இந்த படத்திற்காக தனது உடலை கணிசமான அளவு குறைத்துக்கொண்டிருக்கிறார் அஜீத்.

இதற்கிடையே, இப்படத்தைப்பற்றிய செய்திகள் வெளியானபோது, அனுஷ்காவே அஜீத்துக்கு ஜோடியாக நடிப்பதாக செய்திகள் பரவின. ஆனால், இப்போது விசாரித்தால் அனுஷ்கா நடிப்பதற்கான வாய்ப்புகள் இல்லை என்கிறார்கள். அஜீத்துடன் நடிப்பதற்கு அனுஷ்கா தயாராக இருந்தபோதும், அவர் தற்போது ராணி ருத்ரம்மா தேவி, பாகுபாலி படங்களுக்காக தனது பாடி லாங்குவேஜை பழைய காலத்து ராணிகள் ஸ்டைலுக்கு மாற்றியிருப்பதால், அவரால் திடீரென்று அஜீத் படத்திற்காக உடற்கட்டை மாற்ற முடியாத நிலையாம். அப்படி மாற்றினால் அவரை நம்பியுள்ள சரித்திர படங்களின் படப்பிடிப்புகள் பல மாதங்களுக்கு கிடப்பில் போட வேண்டிய சூழ்நிலை வந்து விடுமாம்.

அதனால்தான், சூழ்நிலையை கெளதம்மேனனிடம் விளக்கி விட்டாராம் அனுஷ்கா. அதனால், இப்போது அஜீத்தின் இளமையான கெட்டப்புக்கு பொருத்தமான லேட்டஸ்ட் நடிகையாக தேடிக்கொண்டிருக்கிறார்கள். தமிழில் சரியான நடிகை கிடைக்கவில்லை என்றால், பாலிவுட் நடிகையை இறக்குமதி செய்யவும் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சனி, 22 பிப்ரவரி, 2014

மனீஷாவை ஓரங்கட்டிய அமலாபால்

 விக்ரமுடன் நடித்த தெய்வத்திருமகள் படத்திலிருந்து ஸ்டார் வேல்யூ கொண்ட படங்களாக தேர்வு செய்து நடித்து வருகிறார் அமலாபால். அதிலும் தலைவா படத்தில் விஜய்யுடன் நடித்த பிறகு பிரபலமில்லாத நடிகர்களுடன் நடிக்க வாய்ப்பு வந்தால் இறங்கி வரமாட்டேன் என்று உறுதியாக இருக்கிறார். அதன்காரணமாக, தற்போது தனுஷ், ஜெயம்ரவியுடன் நடித்து வரும் அமலாபால், அடுத்தபடியாக விஜய், அஜீத், சூர்யா என மேல்தட்டு ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்தே தீருவேன் என்று கங்கனம் கட்டிக்கொண்டு கோடம்பாக்கத்தில் முகாம் போட்டிருக்கிறார்.

இந்த நேரத்தில், பொல்லாதவன், ஆடுகளம் படத்திற்கு பிறகு மீண்டும் தனுஷ்-வெற்றிமாறன் இருவரும் மீண்டும் ஒரு படத்தில் இணைந்திருக்கிற சேதியறிந்த அமலாபால், அந்த படத்தை எப்படியேனும் கைப்பற்றி விட வேண்டும் என்று திரைக்குப்பின்னால் தீவிர முயற்சிகளை எடுத்தார். விளைவு தனுஷின் ஆதரவும் அவருக்கு இருந்ததால் எளிதாக அந்த வாய்ப்பு இப்போது அமலாபாலுக்கு கிடைத்திருக்கிறது.

ஆனால், முதலில் அந்த படத்துக்காக மேக்கப் டெஸ்ட் எடுக்கப்பட்டு ஓ,கே ஆகியிருந்தவர் வழக்கு எண் பட நாயகி மனீஷா யாதவ் தான். இந்த படத்திற்காக தன்னை அழைப்பார்கள் என்று மாதக்கணக்கிலும் காத்திருந்தார். ஆனால் இப்போது தனக்கான வாய்ப்பை அமலாபால் அபகரித்து விட்ட சேதியறிந்து மனசொடிந்து போய் இருக்கும் மனீஷா, அடுத்து விதார்த்துடன் நடித்துள்ள பட்டய கிளப்பு பாண்டியாவாவது தன்னை காப்பாற்றுமா? என்று எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்.

தெலுங்கு த்ரிஷியத்தில் மீனா!

 மலையாளத்தில் வெளிவந்து பம்பர் ஹிட் அடித்த த்ரிஷயத்தின் ரீமேக் சீசன் இது. விட்டால்... ஒரியா, போஜ்புரி, அசாமி மொழியில் கூட ரீமேக் செய்து விடுவார்கள் போலிருக்கிறது. அந்த அளவிக்கு த்ரிஷியத்தின் ரீமேக் அலை வீசுகிறது. 

தெலுங்கில் த்ரிஷியத்தின் ரீமேக்கில் மோகன்லால் கேரக்டரில் வெங்கடேஷ் நடிக்கிறார். மீனா நடித்த கேரக்டரில் அவரே நடிக்கிறார். 22 பீமேல் கோட்டையம் படத்தை தமிழிலும், தெலுங்கிலும் ரீமேக் செய்த ஸ்ரீப்ரியாதான் த்ரிஷியத்தை தெலுங்கில் இயக்குகிறார். 

இதுபற்றி மீனா கூறியதாவது: தெலுங்கில் வெங்கடேசுடன் சண்டி, அப்பாய்காரு, சுந்தரகாண்டா,, சூரியவம்சம், படங்களில் நடித்திருக்கிறேன். அத்தனையும் ஹிட் படங்கள். இப்போது த்ரிஷியம் ரீமேக்கில் அவருடன் இணைகிறேன். செண்டிமெண்டாக அதுவும் ஹிட்டாகும். மார்ச் மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது. த்ரிஷியத்தின் தமிழ், கன்னட ரீமேக்கில் நான் நடிக்கவில்லை. என்கிறார் மீனா.

காஜல்அகர்வாலுக்கு பீதியை ஏற்படுத்திய தீபிகா படுகோனே

தமிழில் முன்னணி ஹீரோக்களுடன் தொடர்ந்து நடித்த போதும் படங்களின் தோல்வி காரணமாக, ஆந்திரா சென்று நடித்து வருகிறார் காஜல்அகர்வால். அதிலும், அங்குள்ள இளவட்டங்களான மகேஷ்பாபு, ராம்சரண், நாகசைதன்யா போன்றவர்கள் அவரது பாக்கெட்டில் இருப்பதால், எளிதாக படங்களை புக்காகிக்கொண்டிருக்கின்றன.

ஆனால், இந்த மூவரில் காஜல், முக்கியமான ஹீரோவாக கருதப்பட்டு வரும் ராம்சரண், தற்போது தான் நடிக்கும் புதிய படமொன்றிற்கு பாலிவுட்டிலிருந்து தீபிகா படுகோனேயே அழைத்து வந்திருக்கிறாராம். தெலுங்கு, இந்தி என இரண்டு மொழிகளையும் கருத்தில் கொண்டு தான் நடித்து வரும் சில படங்கள் உருவாவதால், அந்த படங்களுக்கு இந்தியில் பிரபலமான நடிகைகளை புக் பண்ணுகிறார் ராம்சரண்.

அந்த வகையில், பிரியங்கா சோப்ராவை ஜோடியாக்கி அவர் நடித்த ஜாஞ்சீர் என்ற படம் படுதோல்வியடைந்து விட்டதையடுத்து, தற்போது தான் நடிக்கும் புதிய படத்திற்கு தீபிகாவை புக் பண்ணியிருக்கிறார் ராம்சரண். இதையடுத்து, இதுவரை மும்பையிலேயே நிலைகொண்டிருந்த தீபிகா, இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஆந்திராவில் ஒரு கிளை அலுவலகத்தை திறந்துள்ளார்.

இதனால் ராம்சரணின் பாசறை நடிகையான காஜல்அகர்வால்தான் நொந்து போயிருக்கிறார். ஒருவேளை ராம்சரணுடன், தீபிகா இணைகிற படம் பெரிய அளவில் ஹிட்டாகி விட்டால் தன்னை கழட்டி விட்டு அந்த இடத்தை தீபிகாபடுகோனேவுக்கு கொடுத்து விடுவாரோ என்ற பீதியில் இருக்கிறார் காஜல்.

சி.பி.ஐ. அதிகாரி வேடத்தில் பிரியாமணி

சி.பி.ஐ. அதிகாரி வேடத்தில் பிரியாமணிநடிகை பிரியாமணி கன்னட படமொன்றில் சி.பி.ஐ. அதிகாரி வேடத்தில் நடிக்கிறார். இந்த படத்தை ஆர்.பி. பட்நாயக் இயக்குகிறார்.

இதுபற்றி பிரியாமணி கூறியதாவது:–

டைரக்டர் ஜே.பி. பட்நாயக் எனக்கு நெருங்கிய நண்பர். அவர் படத்தில் நடிக்கும்படி என்னை அழைத்தார். மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டேன். இந்த படத்தில் சி.பி.ஐ. அதிகாரி காயத்ரி கேரக்டரில் வருகிறேன். இதற்கு முன் இதுபோல் நடித்தது இல்லை. எனது நடிப்பை ரசிகர்கள் நிச்சயம் வரவேற்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

எனக்கு சில நல்ல கதையம்சம் உள்ள படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்துள்ளன. தற்போது மலையாளம் மற்றும் கன்னட படங்கள் கைவசம் உள்ளது. அவற்றை முடித்த பிறகு புது படத்தில் நடிப்பேன்.

இவ்வாறு பிரியாமணி கூறினார்.

வெள்ளி, 21 பிப்ரவரி, 2014

நீச்சல் டிரெஸ்சில் என்னைப் பார்க்க சகிக்காது : ஐஸ்வர்யா ராஜேஷ்


நீச்சல் டிரெஸ்சில் என்னைப் பார்க்க சகிக்காது : ஐஸ்வர்யா ராஜேஷ்பண்ணையாரும் பத்மினியும் படத்தில் ஹீரோயினாக நடித்திருப்பவர் ஐஸ்வர்யா ராஜேஷ். அவரிடம் பேசியதில் இருந்து...

டி.வி. டூ சினிமா. எப்படி சாத்தியம்?
ஒரு டி.வியில் டான்ஸ் நிகழ்ச்சி நடத்தினாங்க. அதுல கலந்துகிட்டேன். கஷ்டப்பட்டு ஆடி, கடைசியில் தேர்வு செய்யப்பட்டேன். அந்த நேரத்துல சினிமா வாய்ப்பு வந்தது. அவர்களும் இவர்களும் படத்தில் ரெண்டு ஹீரோயின்களில் ஒருத்தியா நடிச்சேன். முதல் படமா இருந்தாலும், தனி ஹீரோயினா நடிக்க சந்தர்ப்பம் கிடைக்கல. ஆனா, அதுக்காக நான் வருத்தப்படல. வந்த வாய்ப்பை சரியா பயன்படுத்திக்கணும்னு என் மனசை நானே தேத்திகிட்டேன். அந்த தன்னம்பிக்கைதான் இவ்வளவு தூரம் என்னை கூட்டிகிட்டு போயிருக்கு.

தொடர்ந்து டபுள் ஹீரோயின் சப்ஜெக்ட்?
அதுக்கு நான் என்ன பண்றது? தமிழில் எந்த படத்தை எடுத்துகிட்டாலும், அதில் ரெண்டு, இல்லன்னா, மூணு ஹீரோயின்கள் இருக்கிற மாதிரிதான் கதை எழுதுறாங்க. ஆடியன்சும் ஒரு படத்தில் ரெண்டு, மூணு ஹீரோயின்களை பார்க்கத்தான் ஆசைப்படறாங்க. எல்லா படத்திலும் ரெண்டு ஹீரோயின்கள் நடிக்கிறது தவிர்க்க முடியாத விஷயமாயிடுச்சி. அவர்களும் இவர்களும் ரிலீசான பிறகு சட்டப்படி குற்றம், உயர்திரு 420, அட்ட கத்தி, ரம்மி படங்களில் ரெண்டு ஹீரோயின்களில் ஒருத்தியா நடிச்சேன். பண்ணையாரும் பத்மினியும் படத்தில் மட்டும் தனி ஹீரோயின்.

வில்லேஜ் ரோலை விடவே மாட்டீங்களா?
நானா அதை பிடிச்சுகிட்டிருக்கேன்? அந்த மாதிரி வாய்ப்புதான் வருது. வில்லேஜ் ரோல்களில் நடிக்கிறதுக்கும் திறமை வேணும். மாடர்ன் கேரக்டர்கள் பண்ண நிறையபேர் இருக்காங்க. வில்லேஜ் ரோலுக்குன்னு சிலபேர் மட்டும்தான் இருக்காங்க. நான் எப்படி நடிச்சாலும் ரசிகர்கள் பார்ப்பாங்க. ஒரு நடிகையா பலவிதமான கேரக்டர்களில் நடிச்சு திறமையை வெளிப்படுத்தணும். எல்லாமே நாம் நினைச்ச மாதிரி நடந்துடாது. நாம் எதிர்பார்க்கிற வாய்ப்புகள் கிடைக்கலன்னா, கிடைச்ச வாய்ப்புகளை வச்சு முன்னுக்கு வர பார்க்கணும். திருடன் போலீஸ் படத்தில் மாடர்ன் கேரக்டரில் நடிக்கிறேன். காக்காமுட்டை படத்தில் ஸ்லம் ஏரியாவில் வசிக்கும் பொண்ணா நடிக்கிறேன். 

நீச்சல் டிரெஸ் போடுவீங்களா?
நான் கிளாமர் டிரெஸ் போட்டு நடிச்சா பொருந்தமா இருக்குமா? கவர்ச்சியா நடிக்கிறதுக்குன்னு நிறையபேர் இருக்காங்க. அவங்க கூட போட்டி போட எனக்கு விருப்பம் இல்ல. எனக்குன்னு ஃபேமிலி இமேஜ் இருக்கு. அதை கடைசிவரை காப்பாத்தினா போதும். ஆக்டிங் ஸ்கோப் உள்ள கேரக்டர்களில் மட்டுமே நடிப்பேன். நீச்சல் டிரெஸ் போட மாட்டேன். அது எனக்கு பொருத்தமாவும் இருக்காது. அந்த டிரெஸ்சில் என்னை பார்க்க எனக்கே சகிக்காது.

விஜய் சேதுபதிக்கும் உங்களுக்கும்..?
அய்யா சாமி. ஒரு பெரிய கும்பிடு. என்னடா இதுவரை என்னை பற்றி ஒரு கிசுகிசுவும் வரலையேன்னு பார்த்தேன். அவருக்கும், எனக்கும் எதுவும் இல்ல. அவர் எனக்கு சிபாரிசு பண்ணி வாய்ப்பு வாங்கி தர்றாருன்னு எழுதறாங்க. அப்படி இருந்தா, அவர் நடிக்கிற எல்லா படத்திலும் நான்தானே ஹீரோயினா நடிக்கணும்? இதிலிருந்தே தெரியலையா, இதெல்லாம் வதந்தின்னு.

வியாழன், 20 பிப்ரவரி, 2014

வீரமும் ,ஜில்லாவும் செம லாஸ்! : மாஸ் ஹீரோக்களின் ‘வசூல்’ ரகசியத்தை போட்டுடைத்த தயாரிப்பாளர்

ajith-vijay விஜய்யின் ஜில்லா ஒரே வாரத்தில் 50 கோடியை வசூல் செய்தது, அஜித்தின் வீரம் ஒரே வாரத்தில் 40 கோடியை வசூல் செய்தது என்றெல்லாம் அந்தப் படங்கள் ரிலீசான போது செய்திகளை பரப்பி விட்டார்கள். இரண்டு ஹீரோக்களின் ரசிகர்களும் கூட இந்த விஷயத்தை வைத்துக் கொண்டு சோஷியல் நெட்வொர்க் தளங்களில் தங்களுக்குள் மோதிக் கொண்டார்கள்.
ஆனால் உண்மை நிலவரம் வேறுமாதிரியாகத் தான் உள்ளது என்று வெளிப்படையாக விழா மேடையில் போட்டுடைத்தார் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கேயார்.
நேற்று நடைபெற்ற ‘குக்கூ’ ஆடியோ பங்ஷனில் பேசிய அவர், இந்த வருடம் ரிலீசான படங்களின் வசூல் நிலவரத்தை புட்டு புட்டு வைத்தார்.
அவர் பேசும்போது, இந்த வருடம் ஜனவரி 1-ஆம் தேதியிலிருந்து பல படங்கள் ரிலீஸ் ஆயிருக்கு. ஆனால் வியாபார ரீதியாக வெற்றிப்பெற்ற படம்னு சொன்னா அது உண்மையிலேயே ‘கோலிசோடா’ படம் ஒண்ணு தான் உண்மையான வெற்றிப்படம்.
வியாபார ரீதியான வெற்றின்னு சொல்லும் போது அது என்ன?ன்னு நீங்க கேட்கலாம். எடுக்கிற டெக்னிஷியன்களுக்கும், எடுக்கிற தயாரிப்பாளர்களுக்கும் அதை வாங்கிய விநியோகஸ்தர்களும் லாபத்தை கொடுக்கும் போது தான் அந்த படத்தை முழுமையான வெற்றிப்படம்னு சொல்ல முடியும். இப்படி எல்லா விதத்திலும் லாபம் அடைந்த ஒரு படம் தான் வெற்றிப்படம்.
இந்த வருஷத்துல அப்படிப்பட்ட ஒரே படம்னு சொன்னா அது ‘கோலிசோடா’ படம் மட்டும் தான். அந்த வெற்றிப்படம் போல இந்த ‘குக்கூ’ படமும் வெற்றி பெற வேண்டும் என்றார்.
அவர் சொன்ன ஹிட் லிஸ்ட்டில் கோடிக்கணக்கில் வசூல் சாதனை செய்தது என்று சொல்லப்பட்ட விஜய்யின் ‘ஜில்லா’ படமும், அஜித்தின் ‘வீரம்’ படமும் இடம்பெறவில்லை. அந்த இரண்டு படங்களுமே செம லாஸ் என்கிற தொணியில் தான் பேசிவிட்டுப் போனார் கேயார்.
அவர்  பேசியதின் அர்த்தம் புரிந்தும் புரியாதது போல அதே மேடையில் தான் அமைதியாக இருந்தார்கள் ‘கோடீஸ்வர’ ஹீரோக்களான கமலும், சூர்யாவும்!
நெஜம் இப்படி இருக்கும் போது எதுக்குங்க ஓவர்………. பில்டப்பு?

சோனம் கபூரும் இல்லை; ஐஸ்வர்யா ராயும் இல்லை : பி.வாசுவின் ரெண்டாவது ‘அண்டப்புழுகு’

Aishwarya_Rai_hot தமிழ்சினிமாவில் பல ஹிட் படங்களைக் கொடுத்து கவனிக்கத்தக்க டைரக்டர்களில் ஒருவராக இருக்கும் பி.வாசு சமீபகாலமாக சில தவறான படத்தகவல்களை மீடியாக்களுக்கு கொடுத்து ரொம்பவே கவனிக்க வைக்கிறார்.
எல்லாமே அவர் சம்பந்தப்பட்ட படச்செய்தி தான் என்றாலும் ஹீரோயின்கள் விவகாரத்தில் மட்டும் அவர் சொல்வதெல்லாம் அண்டப்புழுகு என்பது வெட்ட வெளிச்சமாகிறது.
கடந்த வருடம் ஜூலை மாதம் தான் ஒரு ஹாலிவுட் படத்தை டைரக்ட் செய்யப் போவதாகவும் அதில் அனில்கபூரின் மகள் சோனம் கபூர் ஹீரோயினாக நடிக்கப் போகிறார் என்றும் பிரஸ்மீட் வைத்து தகவலைச் சொன்னார் பி.வாசு. ஆனால் சம்பந்தப்பட்ட அந்தப் படத்தின் வெப்சைட்டில் சோனம்கபூர் நடிப்பது பற்றிய எந்த்ச்ச் செய்தியும் இல்லை. அதோடு ராஞ்சனா தமிழ்படத்தின் பிரஸ்மீட்டுக்காக மும்பையிலிருந்து சென்னை வந்த சோனத்திடம் இதுபற்றி நிருபர்கள் கேட்டார்கள்.
அவரோ பி.வாசுவா அப்படி யாரையும் எனக்கு தெரியாது. நான் எந்த ஹாலிவுட் படத்திலும் நடிக்கவில்லை என்று ஒரே போடாக போட்டார்.
பிறகு அந்தப்படத்தின் வளர்ச்சி அத்தோடு நின்று போனது. இடையில் கொஞ்சகாலம் அமைதியாக இருந்தவர் மீண்டும் சில தினங்களுக்கு முன்பு ஐஸ்வர்யாராயை ஹீரோயினாக வைத்து ஒரு அனிமேஷன் படத்தை டைரக்ட் செய்யப் போவதாகவும் அதற்கு ஐஸ்வர்யாவும் ஆயிரம் காக்காவும் என்று டைட்டில் வைத்திருப்பதாகவும் ஒரு பிரஸ் ரிலீசை மீடியாக்களுக்கு அனுப்பினார்.
ஐஸ்வர்யாராய் நியூஸ் என்றால் கேட்க வேண்டுமா என்ன? எல்லா மீடியாக்களும் போட்டி போட்டுக் கொண்டு அந்தச் செய்தியை வெளியிட்டது.
தமிழ்நாட்டு ஊடகங்களில் வெளியான இந்தச் செய்தி அப்படியே மும்பையில் இருக்கும் ஐஸ்வர்யாராயின் காதுகளுக்கு எட்டிவிட இதென்னா எனக்கே தெரியாம ஒரு படம் என்று டென்ஷனாகி விட்டாராம் ஐஸ்.
என்னிடம் நெறைய பேர் வந்து கதை சொல்லிவிட்டுப் போகிறார்கள். அதில் பி.வாசுவும் ஒரு ஆளாக இருக்கலாம். ஆனால் அவரது படத்தில் நடிப்பது பற்றி இன்னும் நான் எந்த முடிவும் எடுக்கவில்லை. பி.வாசு படத்தில் நடிக்கப் போகிறேன் என்று செய்தி வெளியானதும் என்னை ஏற்கனவே கமிட் செய்தவர்கள் என்னை நச்சரிக்க ஆரம்பித்து விட்டார்கள். அதனால் தான் இப்படி அவசர அறிக்கை ஒன்றை வெளியிட வேண்டியதாகி விட்டது என்று கூறியிருக்கிறார் ஐஸ்.
என்னாச்சு வாசு சார்..? ஏன் இப்படியெல்லாம் ஃபீலா விடுபறீங்க..?

ரஜினியிடம் போய் நான் சான்ஸ் கேட்கமாட்டேன்! -கொலவெறி அனிருத்

இசையமைப்பாளர் அனிருத் மீது வழக்கு ஐகோர்ட் புதிய உத்தரவு     ரஜினி மகள் ஐஸ்வர்யா தனுஷ் இயக்கிய 3 படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். இவர் ரஜினிக்கு நெருங்கிய உறவினர். மேலும், எதிர்நீச்சல், வணக்கம் சென்னை, இரண்டாம் உலகம் என சில படங்களுக்கு மட்டுமே இசையமைத்திருக்கும் இவர் தற்போது தனுஷின் வேலையில்லா பட்டதாரி, சிவகார்த்திகேயனின் மான்கராத்தே ஆகிய படங்களுக்கு இசையமைத்திருக்கிறார்.

இதையடுத்து, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடிக்கும் படம், கெளதம்மேனன் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படம் என மெகா ஹீரோக்களின் படங்களுக்கு இசையமைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளார். இதனால் யுவன் ஷங்கர் ராஜா, ஹாரிஸ் ஜெயராஜ் போன்ற முன்னணி இசையமைப்பாளர்கள் பின் தள்ளிவிட்டு முன்னுக்கு சென்றிருக்கிறார் அனிருத்.

அதனால், இப்படி குறுகிய காலத்தில் முன்னணி இசையமைப்பாளராகி விட்ட அனிருத், அடுத்தபடியாக ரஜினியின் புதிய படத்திற்கு இசையமைப்பாரா? என்ற கேள்விகள் எழுந்துள்ளது. இதுபற்றி அவரைக்கேட்டால், ரஜினி சார் படத்தில் இசையமைக்க சான்ஸ் கிடைத்தால் ரொம்ப சந்தோசப்படுவேன். ஆனால், அவர் உறவினர் என்பதற்காக நான் போய் சான்ஸ் கேட்க மாட்டேன. அடுத்து அவர் படத்தை இயக்குபவர் என்னை அழைத்தால் மட்டுமே செல்வேன். அப்படி அவர்கள் என்னை அழைத்து நான் இசையமைத்தால்தான் அது சரியாக இருக்கும். சந்தோசமாகவும இருக்கும் என்கிறார் அனிருத்.

தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல் வழக்கு : தாணு மனு தள்ளுபடி!

 தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திற்கு கடந்த ஆண்டு தேர்தல் நடந்தது. இதில் கேயார் தலைமையிலான அணி அமோக வெற்றி பெற்றது. தோல்வி அடைந்த தாணு, தேர்தலை நடத்திய நீதிபதிகள் கேயார் அணிக்கு சாதகமாக செயல்பட்டார்கள், விதிகளை மீறி பத்திரிகைகளில் விளம்பரம் கொடுத்தார்கள் எனவே தேர்தல் செல்லாது என்று வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிமன்றம் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் கொள்கை முடிவு எடுக்க இடைக்கால தடைவிதித்தது. இந்நிலையில் இதுதொடர்பான வழக்கில் தாணு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்துள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் கேயார், உறுப்பினர்கள் ஞானவேல் ராஜா மற்றும் அம்மா கிரியேசன்ஸ் சிவா ஆகியோர் கூறுகையில், தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு நீண்ட நாட்களாக நீடித்து வந்த பிரச்னை தீர்ந்து விட்டது. இனி சங்கம் புதுத்தெம்போடு செயல்படும் என்றனர். 

விஜய்யின் 57வது படம் தீரன்?

திடுதிப்பென்று படங்களுக்கான டைட்டிலை அறிவித்தால் பிரச்னைகள் பலரூபங்களில் வருகிறது என்பதால், சமீபகாலமாக முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கு உடனடியாக டைட்டிலை அறிவிப்பதில்லை. அந்த வகையில், லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்திற்கு முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்த பிறகுதான் அஞ்சான் என்று அறிவித்தார்கள்.

அதையடுத்து, பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் படத்திற்கும் சமீபத்தில்தான் இது நம்ம ஆளு என்று பெயர் வைத்தனர். ஆனால், கெளதம்மேனன் இயக்கத்தில் அஜீத் மற்றும் சிம்பு நடித்து வரும் படங்கள், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படங்களுக்கு இன்னும் அதிகாரப்பூர்வமாக எந்த தலைப்பும் அறிவிக்கப்படவில்லை.

இதில், முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் அவரது 57-வது படத்திற்கு வாள் என்று தலைப்பு வைத்திருப்பதாக ஆரம்பத்தில் செய்திகள் கசிந்தன. ஆனால், பின்னர் அதை அவர்கள் மறுத்து விட்டனர். அதைத் தொடர்ந்து இப்போது தீரன் என்ற பெயரை முருகதாசும், விஜய்யும் பரிசீலித்துக்கொண்டிருப்பதாக அப்பட வட்டாரம் கிசுகிசுக்கிறது.

இதற்கிடையே, ஆரம்பம் படத்தின் படப்பிடிப்பு முடிகிற வரைக்கும் அப்படத்தின் டைட்டிலை அறிவிக்காமல் இருந்தபோது, அஜீத்தின் ரசிகர்கள் குழம்பிப்போய் இருந்தது போல், இப்போது விஜய் ரசிகர்களும் இந்த தாமதத்தினால் குழம்பிப்போய் கிடக்கிறார்கள்.

மதகஜராஜா மூலம் மீண்டும் கோடம்பாக்க கதவுகளை தட்டுகிறார் அஞ்சலி!

சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடித்த முதல்படம் மதகஜராஜா. இந்த படத்தில் அஞ்சலி-வரலட்சுமி இருவரும் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தனர். இப்படத்துக்காக மூன்று விதமான கெட்டப்புகளில் ரிஸ்க் எடுத்து நடித்திருந்தார் விஷால். அதனால் அதிக எதிர்பார்ப்புடன இருந்தார். ஆனால் படத்தை தயாரித்த நிறுவனம் ஏற்கனவே சில தோல்வி படங்களை கொடுத்ததால், அந்த படங்களை வாங்கி நஷ்டப்பட்ட விநியோகஸ்தர்களும், தியேட்டர்காரர்களும் குறைந்த விலைக்கு விஷால் படத்தை கேட்டனர். அதற்கு தயாரிப்பு நிறுவனம் மறுக்கவே படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது.

இதனால், ஒரு கட்டத்தில் நான் ரிலீஸ் பண்ணிக்காட்டுகிறேன் என்று சவாலாக களத்தில் இறங்கினார் விஷால். ஆனால், அவர் வேறு பேனரில் படத்தை ரிலீஸ் செய்ய களமிறங்கினபோதும் யாரும் உடன்படவில்லை. இதனால் பல லட்சங்களை செலவு செய்த விஷால், அதனால் ஏற்பட்ட மன உளச்சலால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதோடு, அந்த பிரச்னையில் இருந்தும் விலகிக்கொண்டார்.

அதையடுத்து, பல மாதங்களாக மதகஜராஜாவை வெளியிட நடந்த பேச்சுவார்த்தை, முயற்சிகளின் பலனாக இப்போது மார்ச் 7-ந்தேதி வெளியிடுவதாக ஒரு முடிவுக்கு வந்திருக்கிறார்கள்.ஆனால், இந்த படத்தின் வெற்றி தோல்வி விசயத்தில் எந்த அக்கறையும் இல்லாமல் விஷால் இருந்தபோதும், படத்தில் நடித்துள்ள அஞ்சலி மதகஜராஜாவை பெரிய அளவில் எதிர்பார்க்கிறார். 

இப்படத்தில் கலகலப்பு படத்தை மிஞ்சும் வகையில், கவர்ச்சிக்கோதாவில் இறங்கியுள்ள அவர், இப்படம் திரைக்கு வரப்போகிறது என்ற தகவல் தனக்கு கிடைத்ததும், இந்த சூட்டோடு சூடாக சில படங்களை கைப்பற்றி விட வேண்டும் என்பதற்காக தனது அபிமானத்திற்குரிய இயககுனர்களுக்கு போன் போட்டு நலம்குலம் விசாரிக்கும் சாக்கில் சான்ஸ் கேட்டும் கல்லெறிந்து வருகிறார். மேலும், தனது அன்பிற்குரிய ஹீரோக்கள் சிலரிடமும் சிபாரிசு கோரியுள்ளாராம் அஞ்சலி.

சிறுமுதலீட்டு படங்களுக்காக அம்மா திரையரங்கம்?

 சமீபகாலமாக தமிழக அரசு சார்பில் அம்மா உணவகம், அம்மா காய் கனி அங்காடி, அம்மா மினரல் வாட்டர் என மக்களுக்கு மலிவு விலையில் அத்தியாவசிய உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் ஏழை எளிய மக்கள் பயன்பட்டு வருகிறார்கள். கூடவே விரைவில் மருந்து பொருட்களையும் அரசு சார்பில் விற்பனை செய்யும் திட்டமும் விரைவில் நடைமுறைப்படுத்தவிருக்கிறது.

இந்தநிலையில், சினிமா ரசிகர்களின் நலனை கருத்தில் கொண்டு விரைவில் அம்மா திரையரங்கம் உதயமாக இருக்கிறது. தற்போது நடந்து வரும் மாநகராட்சி பட்ஜெட் கூட்டத்தொடரில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இதற்கு தேவைப்படும் திரையரங்குகளை அரசே அமைத்து குறைந்த விலை டிக்கெட்டில் ரசிகர்களுக்கு படங்களை திரையிடப்போகிறார்களாம்.

குறிப்பாக, இந்த அம்மா திரையரங்குகளில் சிறிய பட்ஜெட் படங்களுக்கே முன்னுரிமை கொடுக்கப்போகிறார்களாம். இதன்காரணமாக சிறுமுதலீட்டு படங்களை தயாரிப்பவர்களுக்கு இந்த திட்டம் பெரும் பயனாக அமையப்போகிறது.

ஒருபக்கம் சிறுபட்ஜெட் படங்களை திரையிட இது உதவும் என்றாலும், மற்றொரு பக்கம், தமிழகத்தில் எவ்வளவோ பிரச்னைகள் இருந்து வரும் நிலையில், இது அவசியம் தானா...? என்ற கேள்வியும் மக்கள் மத்தியில் எழத்தான் செய்கிறது.

பி.வாசு யார் என்றே தெரியாது: ஐஸ்வர்யாராய் கோபம் - ஐஸ்வர்யாவை சந்தித்தது உண்மை: பி.வாசு

 தமிழின் பிரபல இயக்குனர் பி.வாசு. கடந்த சில தினங்களுக்கு முன்பு ஐஸ்வர்யாவும் ஆயிரம் காக்காவும் என்ற படத்தை தமிழ், தெலுங்கில் டைரக்ட் செய்ய இருப்பதாகவும். இது அனிமேட்ரானிக்ஸ் தொழில்நுட்பத்தில் தயாராகிறது என்றும். இதில் நடிக்க ஐஸ்வர்யாராய் சம்மதித்துவிட்டார் என்றும் அதிகாரபூர்வமாக செய்தி வெளியிட்டார். அது தொடர்பான படம் ஒன்றையும் வெளியிட்டார். இதனை இப்போது ஐஸ்வர்யாராய் மறுத்திருப்பதோடு பி.வாசு யார் என்னே தனக்கு தெரியாது எனவும் கூறியிருக்கிறார். 

மும்பை நிருபர்கள் ஐஸ்வர்யாராயை நேற்று சந்தித்து பேட்டி எடுத்தனர். அப்போது இதுபற்றி அவரிடம் கேட்டபோது சற்று கோபமாகவே பதில் அளித்திருக்கிறார். அவர் கூறியதாவது: நான் அப்படி எந்தப் படத்திலும் நடிக்கவில்லை. நடிக்க ஒப்புக் கொள்ளவும் இல்லை. நீங்கள் குறிப்பிடும் இயக்குனர் யாரென்றே எனக்குத் தெரியாது. தினம் நாற்பது ஐம்பது பேர் என்னை வைத்து படம் எடுக்க வேண்டும் என்று வருகிறார்கள். சிலரை மரியாதை நிமித்தமாக நேரில் சந்திக்கிறேன். அதையே அட்வான்சாக எடுத்துக் கொண்டு இதுபோன்ற அறிவிப்புகளை வெளியிடுவது சரியல்ல. என்று கூறியிருக்கிறார்.

ஆனால் ஐஸ்வர்யராயை சந்தித்தது உண்மை. அவர் எனது படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டதும் உண்மை என்று தெரிவித்திருக்கிறார் பி.வாசு. அவர் மேலும் கூறியிருப்பதாவது: நான் ஐஸ்வர்யாராயை சந்தித்ததும், கதை சொன்னதும் 100 சதவிகிதம் உண்மை. நான் ரஜினி படங்களை இயக்கியவன். ஐஸ்வர்யாராய் பெயரைப் பயன்படுத்தி சம்பாதிக்க வேண்டும் என்கிற அவசியம் எனக்கு இல்லை. ஐஸ்வர்யா, பி.வாசு யார் என்று கேட்கவில்லை. பி.வாசு, மணிரத்தினம் உள்ளிட்ட பலரிடம் கதை கேட்டுள்ளேன் எந்தப் படத்தில் நடிப்பது என்று முடிவு செய்யவில்லை என்றுதான் கூறியுள்ளார்.

எனது படத்தின் கதை ஐஸ்வர்யாராயை சுற்றித்தான் நடக்கும், ஹீரோவையும் தொழில்நுட்ப கலைஞர்களையும் ஒப்பந்தம் செய்யும்போது ஹீரோயின் யார் என்று கேட்பார்கள் அதற்காகத்தான் அவர் நடிக்கும் தகவலை வெளியிட்டேன். படப்பிடிப்புக்கு இன்னும் 8 மாதம் இருக்கும்போது இப்போதே ஏன் செய்தி கொடுத்தார் என்கிற வருத்தம் வேண்டுமானால் என்மீது இருக்கலாம். அதற்குரிய காரணங்களை அவரிடம் நான் தெரிவித்து விட்டேன். எனது படத்தில் ஐஸ்வர்யாராய் நடிப்பது முழு உண்மை. 

இவ்வாறு பி.வாசு கூறியிருக்கிறார்.

புதன், 19 பிப்ரவரி, 2014

வருகிறது ஷகிலாவின் சுயசரிதை : பீதியில் திரையுலக பெரும்புள்ளிகள்!

shakila-malayalam-tamil-actress-007 அமைஞ்சிக்கரைக்கு எந்த பஸ் போகும்னு தெரியாத பசங்க கூட இருக்கலாம். ஆனா அஞ்சரைக்குள்ள வண்டி படத்தை தெரியாதவர்கள் இருக்கவே முடியாது. 11 மணிக்காட்சி பட உலகில் கவர்ச்சி நடிகை ஷகிலாவின் சேவை என்பது எல்லா டீன்-ஏஜ் ரசிகர்களாலும் கொண்டாடப்பட்ட ஒன்று. அவருடைய அந்த கலைச் சேவையால் ஒருகாலத்தில் மலையாளத் திரையுலகில் பெரிய பெரிய ஸ்டார்களாக இருந்த மம்முட்டி, மோகன்லால் ஆகியோரின் படங்களே ஓடாமல் பெட்டிக்குள் சுருண்டு விழுந்தன.
இதனால் கொதித்தெழுந்த அவர்கள் ஒரு கட்டத்தில் ஷகிலாவை மலையாள திரையுலகை விட்டே விரட்டியடித்தனர். இப்படி திரையுலகில் ஷகிலா சந்தித்த சம்பவங்கள் ஏராளம். அப்படிப்பட்ட ஷகிலா தனது திரையுலக வாழ்க்கையில் சந்தித்த கசப்பான அனுபவங்களையும், திரையுலகில் இருட்டுக்குள் நடக்கும் சமாச்சாரங்களையும் தனது சுயசரித்த புத்தகமாக எழுதியிருக்கிறாராம்.
அவரின் சுயசரிதையில் பலருடைய அந்தரங்க விஷயங்களும் வரலாம் என்பதால் பிரபல மலையாள நடிகர்களும், டைரக்டர்களும் அச்சத்தில் இருப்பதாக தெரிகிறது.
இதுபற்றி ஷகிலாவிடம் கேட்டால், சினிமாவில் வரும்போது என் உடம்பை முழுவதும் மறைத்துக் கொண்டு குடும்பப் பாங்காக நடிக்க வேண்டும் என்றுதான் ஆசைப்பட்டேன். ஆனால் எனக்கு கவர்ச்சியான வேடங்களை கொடுத்து கவர்ச்சி நடிகையாக்கி விட்டனர். இதற்காக வருத்தம் இல்லை. நான் சுயசரிதை எழுதுவதால் திரையுலகில் இருக்கும் சிலர் பயப்படுவதாக செய்திகள் வந்துள்ளன. அவர்கள் ஏன் பயப்படுகிறார்கள் என்று புரியவில்லை.
என் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களைத்தான் புத்தகமாக வெளியிடுகிறேன். நான் சினிமாவில் அறிமுகமானபோது சினிமாவில் பலர் உதவியும் செய்து இருக்கின்றனர். நடக்காத எதையும் நான் எழுதவில்லை. அழுது அழுதுதான் இதை எழுதி இருக்கிறேன். புத்தகம் தயாராகி விட்டது. என்று கூறும் ஷகிலா இந்தப்புத்தகத்தை முதலில் மலையாளத்திலும் பிறகு தமிழிலும் வெளியிட இருக்கிறாராம்.

ஏம்பா… அஜீத் நீ வெளிய வரவே மாட்டியா..? : பட விழாவில் பரபரப்பை கிளப்பிய தயாரிப்பாளர்!

தயாரிப்பாளர் கே.ராஜன் சும்மா இருந்த சங்கை ஊதிக்கெடுத்தான் ஆண்டிங்கிற மாதிரி தான் இருந்தது தயாரிப்பாளர் கே.ராஜனின் பேச்சு. அதிலும் அஜித்தை அவர் தேவையில்லாமல் வம்புக்கிழுத்து அப்புறம் என் மனசுல தோணுச்சு நான் பேசிட்டேன் என்று முடித்தார்.
”வீரன் முத்து ராக்கு” என்ற படத்தின் ஆடியோ பங்ஷனில் தான் இந்த காமெடி கலாட்டா நடந்தது. விழாவில் பேசிய தயாரிப்பாளர் கே.ராஜன் விஜய்யையும், அஜித்தையும் ஒரு பிடிபிடித்தார்.
குறிப்பான இருவருமே டாஸ்மாக் சீன்களில் நடித்து இளைஞர்களை கெடுப்பதாக குறைபட்டுக் கொண்டார்.
விழாவில் அவர் தொடர்ந்து பேசியதாவது :
லேட்டஸ்ட்டா வர்ற எந்தப்படமா இருந்தாலும் அதுல டாஸ்மாக் சீன் இல்லாம வர்றதில்லை. குறிப்பா விஜய் அஜித் ரெண்டு பேரோட படங்களேயும் இது அதிகமா இருக்கு. ரெண்டு பேருமே அநியாயத்துக்கு குடிக்கிறதையே படத்துல காட்டுறாய்ங்க.. பிரபல ஹீரோக்களை இளைஞர்கள் எல்லா விஷயத்திலேயும் பாலோ பண்றாங்க. ஒரு ஹீரோ தலையை தூக்கி நிப்பாட்டுனா இவனும் நிப்பாட்டுறான். ஒருத்தன் கத்தியை வெச்சு பேண்ட்டை கிழிச்சி விட்டுக்கிட்ட இவனும் கிழிச்சி விட்டுக்
அப்படி இருக்கும் போது விஜய் அஜித் மாதிரியான ஹீரோக்கள் எல்லாரும் நல்ல சீன்கள்ல நடிக்க வேண்டியது தானே? எதுக்கு டாஸ்மாக் சீன்கள்ல நடிக்கிறாங்க? அஜித் வீட்டை விட்டு வெளியில வர்றதே கெடையாது. ரசிகர்களை சந்திக்கிறதும் கெடையாது. அப்படிப்பட்ட அவரோட படத்தை ரசிகர்கள் தேடிப்போய் தியேட்டர்ல கூட்டம் கூட்டமா பார்க்குறாங்க.
ஹீரோ படத்துல காலேஜ் முடிஞ்ச உடனே நேரா டாஸ்மாக் கடைக்கு போனா அதைப் பார்க்குற ரசிகனும் அப்படியே காலேஜ் முடிஞ்ச உடனே டாஸ்மாக் கடைக்கு போறான்.
சுப்ரமணியபுரம், வெண்ணிலா கபடி குழு மாதிரியான நல்ல படங்கள் வருது. அந்த மாதிரி படங்களை நாம வரவேற்கணும். என்றார் கே.ராஜன்.

ஞாயிறு, 16 பிப்ரவரி, 2014

யான் படப்பிடிப்புகள் நிறைவடைந்தது!

 பிரபல ஒளிப்பதிவாளர் ரவி.கே.சந்திரன் இயக்கும் படம் யான். ஜீவாவுடன் துளசி நாயர் நடிக்கிறார். ஆர்.எஸ்.இன்போடையின்மெண்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரிக்கிறார். இந்தப் படத்தின் பெரும்பாலான காட்சிகள் முடிந்து விட்ட நிலையில் தென் ஆப்பிரிக்காவில் உள்ள மொராக்கோவில் இதன் கிளைமாக்ஸ் காட்சி படமாக்கப்பட வேண்டியது இருந்தது. ஆனால் அந்த நாட்டில் படப்பிடிப்பிற்கு அனுமதி பெறுவதில் பெறும் சிக்கல் எழுந்தது.

மொராக்கோ கட்டுப்பாடான முஸ்லிம் நாடு. அந்த நாட்டில் சர்வதேச தீவிரவாதிகளிடம் மாட்டிக் கொள்ளும் ஜீவா அங்கிருந்து எப்படி தப்பிக்கிறார் என்பதை ஷூட் பண்ண வேண்டும். அந்த நாட்டில் படப்பிடிப்பு நடத்த அனுமதி கேட்கும்போது படத்தின் ஸ்கிரிப்டை கொடுக்க வேண்டும். யான் ஸ்கிரிப்டை படித்த அந்த நாட்டு அதிகாரிகள், எங்கள் நாட்டில் சர்வதேச தீவிரவாதிகள் இல்லை. இங்குள்ள மக்கள் அமைதியாக இருக்கிறார்கள். என்று அனுமதி மறுத்தனர்.

வேறு நாட்டு தீவிரவாதிகள் மொராக்கோ வழியாக செல்கிறார்கள் என்று சமாதானம் சொல்லி அனுமதி பெறப்பட்டிருக்கிறது. இதற்காக 8 மாதங்கள் வரை காத்திருந்தார்கள். அனுமதி கிடைத்தும் கிளம்பிச் சென்று 15 நாட்கள் அங்கு தங்கி இருந்து கிளைமாக்சை படம்பிடித்து திரும்பி இருக்கிறார்கள். தற்போது படப்பிடிப்புகள் முடிந்து மற்ற வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது.

"காத்திருந்தாலும் அதற்கும் நல்ல பலன் கிடைத்துள்ளது. மொராக்கோவில் படம்பிடிக்க கேமரா குழுவினர் கடுமையாக உழைத்தனர். எதிர்பார்த்த மாதிரியே காட்சிகள் வந்திருக்கிறது. ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றி. இப்போது படம் எடிட்டர் டேபிளில் இருக்கிறது" என்று தனது பேஸ்புக்கில் குறிப்பிட்டிருக்கிறார் இயக்குனர் ரவி.கே.சந்திரன்.

சனி, 15 பிப்ரவரி, 2014

உள்ளே வராதீங்க மெளனிகா… : டைரக்டர் பாலாவை தூண்டி விட்டது யார்?

D
TAMIL CINEMA NEWS
ஒட்டுமொத்த திரையுலகமும் பாலுமகேந்திராவின் இறுதி அஞ்சலியில் கூடி நிற்க அவரது மனைவியும் நடிகையுமான மெளனிகாவுக்கு அங்கு வரவில்லை என்பது தான் எல்லோருடைய கேள்வியாகவும் இருந்தது.
ஆனால் அதன் பின்னணியை விசாரித்த போது டைரக்டர் பாலா தான் மெளனிகாவை வர விடாமல் தடுத்தார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பாலுமகேந்திரா உடல்னிலை மோசமாக உள்ளது என்ற விஷயத்தைக் கேள்விப்பட்டதும் சென்னையிலுள்ள விஜயா மருத்துவமனைக்கு ஓடோடிச் சென்று பார்க்க வந்திருக்கிறார் மெளனிகா.
அப்படி பார்க்க வந்தவரை டைரக்டர் பாலாவுடன் சேர்ந்து இன்னும் சில பேர் மெளனிகாவை உள்ளே வரவிடாமலும், அவரை பார்க்க விடாமலும் தடுத்துள்ளனர்.
இத்தனைக்கு மெளனிகாவுக்கும், பாலுமகேந்திராவுக்கு உள்ள உறவு எல்லாமே பாலாவுக்கு தெரியும். அப்படி இருந்திருந்தும் அவர் ஏன் மெளனிகாவை தடுத்தார்? அவரை அந்தளவுக்கு வெறுப்பு காட்ட வைத்தது யார் என்று விசாரித்த போது அகிலாவை குறிப்பிட்டுச் சொன்னார்கள்.
அகிலா பாலுமகேந்திராவின் முதல் மனைவி. அவரை எப்போதுமே அம்மா என்று தான் பாசத்தோடு அழைப்பாராம் பாலா. பாலாவிடமும் ஒரு மகனைப் போலத் தான் பாசம் காட்டியிருக்கிறார் அகிலா.
அப்படிப்பட்ட அகிலாவுக்கு மெளனிகா பாலுமகேந்திராவைப் பார்க்க வருவது சுத்தமாக பிடிக்கவில்லையாம். அம்மாவின் விருப்பத்திற்காகவே மெளனிகாவுக்கு தடை போட்டிருக்கிறார் பாலா.
இதனால் தான் சில மீடியாக்களிடன் இரண்டாவது மனைவியாக இருக்கு  எல்லா பெண்களுக்கும் நடக்கின்ற கொடுமை என்று வெகுண்டெழுந்து பேட்டி கொடுத்தார் மெளனிகா.
2000-ம் ஆண்டு முறைப்படி திருமணம் செய்து கொண்டு பாலுவும், மெளனிகாவும் வாழ்ந்து வந்தார்கள். அனைத்து இரு தார குடும்பத்தில் இருக்கும் பிரச்சனைகள் இங்கேயும் இருந்தாலும், மெளனிகாவுடனான உறவை பாலுமகேந்திரா மறுத்ததில்லை. கடந்த 2014 ஆம் ஆண்டு மெளனிகாவும் என் மனைவி தான் என்று வெளிப்படையாக ஒப்புக் கொண்டார் பாலு.
அவரே மெளனிகாவை வெறுக்காத போது அவரோடு பல ஆண்டுகள் குடும்பம் நடத்தி இழ்வாழ்க்கை வாழ்ந்த மெளனிகாவை அவரது கடைசி நாளில் கூட பார்க்க விடாமல் செய்வது எந்த விதத்தில் நியாயம் என்று தெரியவில்லை.
பாரதிராஜா உட்பட யார் சொல்லியும் சமாதானம் ஆகாமல் மெளனிகாவை பாலுமகேந்திரா பக்கம் நெருங்க விடாமலே இருந்திருக்கிறார் டைரக்டர் பாலா. பாலாவின் இந்தச் செயலை கடுமையாக கண்டித்த சில மூத்த பத்திரிகையாளர்கள் அவருக்கு போனை போட்டு உங்களுக்கு யார் அந்த அதிகாரத்தை தந்தது? கட்டிய கணவனை பார்க்க விடாமல் தடுக்க நீங்கள் யார்? என்று அடுத்தடுத்து கேள்விகளை எழுப்பியிருக்கிறார்கள்.
அதன்பிறகு தான் பாலுமகேந்திராவின் உடலை பார்க்க அனுமதித்தாராம் பாலா. தனது கட்டிய கணவரை அவர் வீட்டிலேயே பார்த்து கண்ணீர் விட்டு அழுத மெளனிகா சில நிமிட மெளனங்களுக்கும் பிறகு யாரிடமும் பேசாமல் அழுது கொண்டே அமைதியாகச் சென்று விட்டாராம்..
அந்த அமைதிக்குப் பின்னே என்னென்ன ரகசியங்கள் மெளனமாகிப் போனதோ…?

உதயநிதி படம் பார்த்தவர்களுக்கு வெங்காயம் பரிசு: அழுவதற்காகவா... பொதுமக்கள் கிண்டல்

TAMIL CINEMA NEWS
உதயநிதி ஸ்டாலின் நடித்த, இது கதிர்வேலன் காதல் திரைப்படம் பார்த்தவர்களுக்கு, நற்பணி மன்றம் சார்பில், பெரிய வெங்காயம் வழங்கப்பட்டது. இதைப் பார்த்து, பொதுமக்கள் சிலர், படத்தைப் பார்த்த பின் அழுவதற்காக, வெங்காயம் வழங்கப்படுகிறதோ... என, கிண்டலடித்துச் சென்றனர்.

தயாரிப்பாளரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின், ஒரு கல் ஒரு கண்ணாடி படத்திற்கு பிறகு நடித்து நேற்று வெளிவந்துள்ள படம் இது கதிர்வேலன் காதல். இப்படத்தை பார்க்க வந்த ரசிகர்களுக்கு, விழுப்புரம் மாவட்ட, உதயநிதி ஸ்டாலின் ரசிகர் நற்பணி மன்றம் சார்பில், வெங்காயம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.விழுப்புரம் மாவட்டத்தில், ஏழு தியேட்டர்களில், இப்படம் நேற்று வெளியானது. இந்த தியேட்டர்களில், உதயநிதி ஸ்டாலின் ரசிகர் நற்பணி மன்றம் சார்பில், படம் பார்க்க வந்த ஒருவருக்கு, தலா, ஒரு கிலோ வெங்காயம் வழங்கப்பட்டது.விழுப்புரம் கல்யாண் தியேட்டரில், மார்னிங் ஷோ பார்த்த, 500க்கும் மேற்பட்டோருக்கு, மாவட்ட தலைவர் பிரேம், மாவட்ட செயலர் சங்கர் தலைமையில், வெங்காயம் வழங்கப்பட்டது.

இதுகுறித்து, மன்ற தலைவர் பிரேம் கூறுகையில், படம் பார்த்து, வெளியே வருபவர்களுக்கு, ஏதேனும் பொருட்களை வழங்க வேண்டும் என்பதால், விழுப்புரத்தில் படம் திரையிட்ட, ஏழு தியேட்டர்களிலும் வெங்காயம் வழங்கினோம் என்றார்.

திரை அரங்குகளிலிருந்து, வெங்காயத்துடன் வெளியே வந்த ரசிகர்களைப் பார்த்த, பொதுமக்கள் சிலர், படத்தைப் பார்த்த பின் அழுவதற்காக, வெங்காயம் வழங்கப்படுகிறதோ... என, கிண்டலடித்துச் சென்றனர்.

மீனாவுக்கு போட்டியாக களமிறங்கிய நதியா!

 பூவே பூச்சுடவா நதியா, 1980-90களில் தென்னிந்திய சினிமாவில் முக்கிய நடிகையாக திகழ்ந்தவர். தமிழில் அவர் நடித்த உயிரே உனக்காக, சின்ன தம்பி பெரிய தம்பி, ராஜாதி ராஜா, ராஜகுமாரன் உள்பட பல படங்கள் மெகா ஹிட்டாக அமைந்தன. அதன்பிறகு எல்லா நடிகைகளையும் போலவே திருமணம் செய்து கொண்டு அமெரிக்கா சென்று விட்ட நதியா, 2004ல் எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி படத்தில் ஜெயம் ரவிக்கு அம்மாவாக நடித்தபடி ரீ-என்ட்ரி கொடுத்தார்.

அதையடுத்து, தாமிரபரணி, சண்டை போன்ற படங்களில் முக்கிய கேரக்டர்களில் நடித்தவர், மலையாளம், தெலுங்கிலும் பிசியாக நடித்துக்கொண்டிருக்கிறார். இந்த நேரத்தில், மலையாளத்தில் மோகன்லால்-மீனா நடித்த த்ரிஷ்யம் படத்தை தமிழ், தெலுங்கில் ரீமேக் செய்கிறார்கள் என்றதும், அதில் நடிக்க பலத்த முயற்சி எடுத்து வருகிறார் நதியா.

ஆனால், தமிழ் ரீமேக்கில் மீனா நடிப்பதாக செய்தி பரவியபோதும், அந்த படத்தில் கமல் ஹீரோவாக நடிக்கிறார் என்றதும் வாய்ப்பை கைப்பற்ற, அதிரடி அட்டாக் கொடுத்துக்கொண்டிருக்கிறார் நதியா. இதனால் இதுவரை மீனாதான் சரியாக இருப்பார் என்று கூறிவந்த அப்பட டைரக்டர் ஜீத்து ஜோசப், இப்போது மீனாவை விட நதியா நடித்தால் தமிழுக்கு ஒரு மாறுதலாக இருக்கும் என்று கூறி வருகிறாராம்.

இதனால், அவ்வை சண்முகிக்குப்பிறகு மீண்டும் த்ரிஷ்யம் ரீமேக்கில் கமலுடன் நடிக்கப்போகிறோம் என்று சந்தோசத்தில் இருந்த மீனா, நதியா குறுக்கால புகுந்து விட்டதால், கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போய்விடும் போலிருக்கே என்று புலம்பிக்கொண்டிருக்கிறார்.
TAMIL CINEMA NEWS

ராம்சரணுடன் மட்டும் கூடுதல் நெருக்கம்! காஜல்

TAMIL CINEMA NEWS
தெலுங்கில் மகதீரா படத்தில் ஜோடி சேர்ந்த ராம்சரண்தேஜா-காஜல்அகர்வாலுக்கு அந்த படம் மெகா ஹிட்டாக அமைந்ததால் அதையடுத்து தொடர்ச்சியாக பல படங்களில் நடித்தனர். நல்ல ரொமாண்டிக்கான கதைகள் வந்தால் ராம்சரணே காஜலின் பெயரை பரிந்துரை செய்து வந்தார். இதனால், அவர்களுக்கிடையிலான நட்பு ஆழமானது.

பின்னர், தமிழ்ப்படங்களில் காஜல் நடிக்க வந்து விட்டபோதும், அவ்வப்போது அவரை தன்னுடன் நடிக்க அழைப்பு விடுத்துக்கொண்டேயிருந்தார் ராம்சரண். அதனால் தற்போது தமிழில் படவாய்ப்புகள் குறைந்ததால் உடனே அவரிடம் தஞ்சமடைந்து விட்டார் காஜல். வழக்கம்போல் அவருக்கு இருகரம் நீட்டி அடைக்கலம் கொடுத்த ராம்சரண், தற்போது இரண்டு படங்களில் காஜலுடன் நடித்து வருகிறார்.

அப்படி நடிக்கும் இரண்டு படங்களுமே காதல் கதைகள் என்பதால், இதுவரை நடித்ததை விடவும் கூடுதல் நெருக்கம் காட்டி நடிக்கிறார்களாம். அவர்களது நெருக்கம் படத்துக்குப்படம் அளவுக்கதிகமாகிக்கொண்டே இருக்கிறதாம். ஆனால், ராம்சரணுடன் காட்டுவது போன்று மற்ற ஹீரோக்களுடன் காஜல் நெருக்கம் காட்டுவதில்லையாம். 

இதனால் ஆந்திராவிலுள்ள சில இளவட்ட ஹீரோக்கள் காஜல் மீது கடும் கோபத்தில் இருக்கிறார்களாம். இந்த அதிருப்தி விவகாரம் காஜலின் காதுகளை எட்ட உஷாராகி விட்டார். இப்படியேபோனால் தன்னை மற்றவர்கள் ஓரங்கட்டி விடுவர்கள் என்று நாக சைதன்யாவுடன் அடுத்து நடிக்கவிருக்கும் ஒரு படத்தின் போட்டோ செஷனிலேயே ஏகபோக தாராளம் காட்டி அசத்தி விட்டாராம். இதனால் அதிருப்தியாளர் கூட்டத்தில் உறுப்பினராக இருந்த நாகசைதன்யா இப்போது அதிலிருந்து நழுவி காஜலின் ஆதரவாளராகியிருக்கிறாராம். இதுபோன்று ஒவ்வொரு இளவட்டமாக அடுத்தடுத்து தனது பாசறைக்குள்இழுக்க திரைமறைவில் தீவிரம் காட்டி வருகிறாராம் காஜல்.