ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி சமீபத்தில் சமந்தாவை சந்தித்து தனது கட்சிக்கு தேர்தல் பிரசாரம் செய்ய வேண்டும் என்று கேட்டதாகவும், சமந்தாவின் தந்தை தேர்தலில் வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்றும் பரபரப்பாக பேசப்படுகிறது. இதையறிந்து அவர் நடித்துவரும் பட இயக்குனர்கள் ஷாக் ஆகினர். இதுபற்றி சமந்தாவிடம் பத்திரிகையாளர்கள் கருத்து கேட்ட வண்ணம் இருந்தனர்.
இந்நிலையில் சமந்தா தனது இணைய தள டுவிட்டர் பக்கத்தில் இதுபற்றி கருத்து தெரிவித்திருக்கிறார். அரசியலுக்கு வரப்போவதாக என்னைப்பற்றி தகவல் வெளியான வண்ணம் உள்ளது. நான் எந்த கட்சிக்கும் தேர்தல் பிரசாரம¢ செய்யப்போவதில்லை. எதிர்காலத் திலும் அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை என்றார்.
0 உங்கள் கருத்து:
கருத்துரையிடுக