தற்போது, தனுஷ் நடித்து வரும் வேலையில்லா பட்டதாரி, சிவகார்த்திகேயன் நடிக்கும் மான்கராத்தே உள்பட சில மெகா படங்களுக்கு இசையமைத்து வரும் அனிருத், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கயிருக்கும் புதிய படத்திற்கும் இசையமைக்க உள்ளார். ஆக, குறுகிய காலத்திலேயே முன்னணி இசையமைப்பாளர் அந்தஸ்தை எட்டிப்பிடித்து விட்டார்.
இந்நிலையில், சித்தார்த் நடித்த காதலில் சொதப்புவது எப்படி படத்தை இயக்கிய பாலாஜி மோகன் தற்போது இயக்கி வரும் வாய் மூடி பேசவும் படத்துக்கு இசையமைத்து தருவதாக 5 லட்சம் அட்வான்ஸ் வாங்கிய அனிருத், இப்போது அப்படத்திற்கு குறித்த நேரத்தில் இசையமைத்து தரவில்லை என்று ஷான் ராகவேந்திரா என்ற புதிய இசையமைப்பாளரை வைத்து இசையமைத்துக் கொண்டிருக்கிறார்களாம்.
இதனால், அனிருத்திடம் கொடுத்த அட்வான்சை திருப்பிக்கேட்டபோது, அவர் தரவில்லையாம். அதனால் அப்படத்தின் தயாரிப்பாளரான வருண் மணியன் இதுகுறித்து அனிருத் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகார் குறித்த விசாரணை நடக்கிறதாம்.
0 உங்கள் கருத்து:
கருத்துரையிடுக