புதன், 22 ஜனவரி, 2014

Filled Under:

ஜி.வி.பிரகாஷை கழட்டி விட்ட பாலா!

வெயில் படத்தில் தனது இசைப்பயணத்தை தொடங்கிய ஜி.வி.பிரகாஷ்குமார் 50-வது படத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறார். சிறிய வயதாக இருந்தபோதும், அவரிடமிருந்து மெச்சூரிட்டியான இசை வெளிப்பட்டதால், மதராசபட்டினம் படத்துக்குப்பிறகு, பாரதிராஜாவின் அன்னக்கொடி, பாலாவின் பரதேசி, விஜய்யின் தலைவா என மெகா படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்பினை பெற்றார் ஜி.வி.பிரகாஷ்.

இதனால் அவருக்கு முன்பாக சென்று கொண்டிருந்த சில இசையமைப்பாளர்களுக்கு தேக்கநிலை உருவானது. இப்படி பலருக்கு அதிர்ச்சி கொடுத்த அவர், திடீரென்று பென்சில் படம் மூலம் நாயகனாகி விட்டதால், மற்றவர்களுக்கு கொடுத்து வந்த அதிர்ச்சி இப்போது அவர் பக்கமே திரும்பி நிற்கிறது.

அதாவது, நடிப்பில் ஏற்பட்ட ஆர்வம் காரணமாக, சமீபகாலமாக படங்களுக்கு சரியானபடி இசையமைப்பதில்லையாம் ஜி.வி.பிரகாஷ். அதிக காலஅவகாசம் எடுத்துக்கொள்கிறாராம். ஆனபோதும், இவர் கொடுக்கிற இசை இயக்குனர்களுக்கு முன்புபோல் திருப்திகரமாக இல்லையாம். அதனால், ஏற்கனவே அவரை வைத்து தங்கள் படங்களுக்கு இசையமைத்து வந்தவர்கள் இப்போது வேறு இசையமைப்பாளர்களை நாடிச்சென்று கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில், பரதேசி படத்துக்கு ஜி.வி.பிரகாஷிடம் அற்புதமான இசையை பெற்றிருந்த டைரக்டர் பாலா, அடுத்து சசிகுமாரைக்கெண்டு கரகாட்டத்தை மையமாக வைத்து தான் இயக்கும் படத்திற்கும் அதே பழைய நம்பிக்கையுடன் அவரிடமே சென்றார். ஆனால், ஜி.வி., கொடுத்த பாடல் டியூன்கள் எதுவும் பாலாவுக்கு திருப்தியை கொடுக்கவில்லையாம்.

அதனால், மறுபடியும் தனது ஆஸ்தான இசையமைப்பாளரான இசைஞானியிடமே சென்றிருக்கிறாராம் பாலா. ஏற்கனவே கரகாட்டக்காரன் என்றொரு படத்துக்கு மண் மனக்கும் பாடல்களை கொடுத்து தமிழகத்திலுள்ள பட்டிதொட்டியெல்லாம் மனம் பரப்பிய இளையராஜா, பாலாவின் கரகாட்டக்கதைக்கும் அடுத்து ஒரு புதிய மனம் பரப்பும் இசையை கொடுக்க தயாராகிக்கொண்டிருக்கிறாராம்.
Tags »

0 உங்கள் கருத்து:

கருத்துரையிடுக