சனி, 24 மே, 2014

கிளாமருக்கு குறுக்கே அம்மா வருகிறாரா? துளசி பளிச்

கிளாமருக்கு குறுக்கே அம்மா வருகிறாரா? துளசி பளிச் ராதாவின் வாரிசுகள் கார்த்திகா, துளசி இருவரையும் திரையுலகம் பெரிதும் எதிர்பார்க்கிறது. அக்காவை  எப்படியாவது முந்திச்செல்ல வேண்டும் என்ற வெறியெல்லாம் துளசியிடம் இல்லை. தேடி வந்த  வாய்ப்புகளை ஒப்புக்கொண்டு நடித்து, அம்மாவுக்கு இருக்கும் நல்ல பெயரைக் கெடுக்காமல் இருந்தாலே  போதும் என்கிறார். இப்போது ஒளிப்பதிவாளர் ரவி கே.சந்திரன் இயக்கும் ‘யான்’ படத்தைப் பெரிதும்  எதிர்பார்க்கிறார்.

‘யான்’ எப்படி கிடைச்சது?
‘கடல்’ படத்தில் என் பெர்ஃபாமன்சை பார்த்திருக்காங்க. ‘யான்’ கதைக்கு நான் பொருத்தமா இருப்பேன்னு  டைரக்டர் சொன்னார். அம்மா கதை கேட்டாங்க. முதல்லயே பிரமிப்பு ஏற்பட்டது. கண்டிப்பா இந்தப் படத்தை  தவறவிடக் கூடாது என்ற எண்ணம் வந்ததும், பத்தாம் வகுப்பு தேர்வைக் கூட பொருட்படுத்தாம நடிக்க  ஒப்புக்கிட்டேன்.’

ராணுவ அதிகாரி மகளாமே?

படத்தில் நாசர் மகள் ஷீலாவா நடிக்கிறேன். பவர்ஃபுல் கேரக்டர். ஹீரோ ஜீவாவுக்கு நிகரா என் கேரக்டரும்  இருக்கும். இதுவரை எந்த ஹீரோயினையும் இவ்வளவு அழகா, அம்சமா பாடல் காட்சிகளில் பார்த்திருக்க  முடியாது. அப்படி விதவிதமான காஸ்டியூம்கள் போட்டுகிட்டு நடிச்சிருக்கேன். வெளிநாடுகளில் படமான  பாடல் காட்சிகள் எல்லாமே ரசிகர்களுக்கு புதிய துளசியை அறிமுகம் செய்யும். 

ஜீவா?

ஏற்கனவே என் அக்கா கார்த்திகா அவருக்கு ஜோடியா ‘கோ’ படத்தில் நடிச்சார். அப்பவே ஜீவா பற்றி  சொல்வார். ரொம்ப கம்ஃபர்ட்டபிளான நடிகர். ஷூட்டிங் ஸ்பாட்டில் நிறைய டிப்ஸ் கொடுத்தார். அது  உதவியா இருந்தது. முதல்நாள் ஷூட்டிங்கில் அவர் கூட நடிச்ச எனக்கு படபடப்பா இருந்தது. காரணம், அவர்  நிறைய படங்களில் ஹீரோவா நடிச்சவர். அவரோட எக்ஸ்பீரியன்சுக்கும் எனக்கும் நிறைய வித்தியாசம்  உண்டு. எனக்கு இது இரண்டாவது படம். அந்த படபடப்பு வேற இருந்தது. ஆனா, அவர் கொடுத்த  தைரியத்தில் போகப்போக உற்சாகமா நடிக்க ஆரம்பிச்சேன்.

‘கடல்’ ஹிட்டாகாதது வருத்தம்தானே?

அப்படி சொல்ல முடியாது. என் முதல் படமே எனக்கு பெரிய விலாசத்தை கொடுத்தது. ராதா மகள் என்ற  பிளஸ் பாயின்ட் ஒருபுறம் இருந்தாலும், மணிரத்னம் அறிமுகம் செய்யும் ஹீரோயின் என்ற பெரிய சுமை  என்மீது விழுந்தது. அவர் எதிர்பார்த்த மாதிரி நல்லா நடிச்சேன். அந்தப் படத்தின் ஷூட்டிங்கில் நடந்த எந்த  விஷயத்தையும் மறக்க முடியாது. வாழ்நாள் முழுக்க நினைச்சு, நினைச்சு ரசிச்சுகிட்டே இருக்கலாம்.  மணிரத்னம், கவுதம் கார்த்திக், ஏ.ஆர்.ரஹ்மான் இப்படி ஒரே படத்தில் அமைந்த காம்பினேஷன், 
அவ்வளவு சுலபமா என்னை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தது.

கதைகள் கேட்பது அம்மாவா?

அம்மாவும் நானும் கேட்போம். ஆனா, இறுதி முடிவை நான்தான் எடுக்கணும்னு சொல்வார். சினிமாவில்  அவருக்கு நிறைய அனுபவம் உண்டு. தனக்கு தெரிந்ததை எனக்கு சொல்வார். ஆனா, சுயமா முடிவு பண்ணி  செயல்படணும்னு வலியுறுத்துவார். அந்த தன்னம்பிக்கையை எனக்கு சின்ன வயதில் இருந்தே வளர்த்து  வந்தார். ஆனா, இப்ப அக்கா கார்த்திகாவும் எனக்கு உதவி பண்றார். மேக்கப், மேனரிசம், காஸ்டியூம், ஆக்டிங்  இப்படி நிறைய விஷயங்களுக்கு அக்காவின் டிப்ஸ் கிடைச்சுகிட்டே இருக்கும். 

கிளாமரா நடிப்பது உங்க முடிவா?

ஆமா. கதை கேட்டவுடனே, அதில் என்ன பண்ணணும்னு முடிவாயிடும். எவ்வளவு தூரம் கிளாமரா நடிக்க  முடியும்னு யோசிப்பேன். ‘கடல்’ படத்தில் வந்த முத்தக்காட்சியும் ஒரு எல்லைக்கு உட்பட்டுதான் இருக்கும்.  வலுக்கட்டாயமா வரும் கிளாமர் காட்சிகளை உடனே மறுத்துடுவேன். எனக்கும் சில பொறுப்புகள் இருக்கு.  சினிமாவில் நடிப்பது ஒரு ஃபேஷன். அதையும் கடைசிவரை கண்ணியமா பண்ணணும்னு நினைக்கிறேன்.
 
அடுத்து என்ன படம்?

நிறைய வாய்ப்புகள் வருது. ஆனா, நான் 11ம் வகுப்பு தேர்வு எழுதிகிட்டிருக்கேன். ‘யான்’ ரிலீசான பிறகு  சினிமாவில் எனக்குன்னு தனி இடம் கிடைக்கும். அந்த இமேஜை பயன்படுத்தி அடுத்தடுத்த படத்தில்  நடிப்பேன். இப்ப என் கவனம் முழுக்க படிப்பு, எக்ஸாம் பற்றி மட்டுமே இருக்கு. ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு  ஒருமுறை அம்மா வருவார். இன்னொரு முறை அப்பா வருவார். ஆனா, யாரும் என் நடிப்பு விஷயத்தில்  தலையிட மாட்டாங்க. 

வடிவேலுவுடன் இனி சேரவே மாட்டேன் சுந்தர்.சி சபதம்

 வடிவேலுவுடன் இனி சேரவே மாட்டேன் சுந்தர்.சி சபதம் சென்னை:‘கிரி படத்தில் ‘என்னை ரொம்ப நல்லவன்னு சொல்லிட்டான்டா, ‘தலைநகரம் படத்தில் ‘பில்டிங் ஸ்டிராங்... பேஸ்மென்ட் வீக்கு, ‘வின்னர் படத்தில் ‘இன்னுமா இந்த ஊரு நம்மள நம்பிட்டிருக்கு.. போன்ற வசனங்களும் அந்த படங்களில் இடம்பெற்ற காமெடி காட்சிகளும் வடிவேலுவை டாப் கிளாஸ் காமெடியனாக மாற்றியது. இப்படங்களை சுந்தர்.சியுடன் இணைந்து அவர் செய்திருந்தார். இந்நிலையில் இருவருக்கும் இடையே மனஸ்தாபம் ஏற்பட்டு பிரிந்தனர். வடிவேலுக்கு பதிலாக தனது அடுத்தடுத்த படங்களில் சந்தானத்தை பிரதான காமெடியனாக ஒப்பந்தம் செய்தார் சுந்தர்.சி.‘கலகலப்பு படத்தில் அஞ்சலியின் முறைமாமனாக நடித்த சந்தானம். இப்போது சுந்தர்.சி இயக்கி நடிக்கும் ‘அரண்மனை படத்தில் பழைய நினைவுகளை மறந்துபோகும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ‘இப்படத்தில் வடிவேலு நடிப்பதாக முதலில் கூறப்பட்டதே என்று சுந்தரிடம் கேட்டபோது, ‘இதில் வடிவேலு நடிப்பதாக நான் எந்த நேரத்திலும் சொல்லவில்லை. இப்போதைக்கு அல்ல இனி எந்த படத்திலும் அவரை வைத்து இயக்க மாட்டேன் என்றார். சுந்தர்.சி இப்படி சொல்லும் அளவுக்கு இருவருக்கும் இடையே அப்படி என்ன பிரச்னை? என முணுமுணுக்கிறது கோடம்பாக்க வட்டாரம்.

தலைப்பை மாத்துங்க புதுமுக ஹீரோ உத்தரவால் வாயடைத்து போன டைரக்டர்

 தலைப்பை மாத்துங்க புதுமுக ஹீரோ உத்தரவால் வாயடைத்து போன டைரக்டர் சென்னை:அமலா பால் பட பெயரை தனது கேரக்டர் பெயரில் மாற்ற வேண்டும் என புதுமுக ஹீரோ கண்டிஷன் போட்டார். இதை கேட்டு டைரக்டர் அதிர்ச்சியில் உறைந்தார்.டைரக்டர் விஜய்-அமலா பால் திருமணம் வரும் ஜூன் மாதம் 12ம் தேதி நடக்க உள்ளது. இதையடுத்து நடிப்புக்கு முழுக்கு போட முடிவு செய்துள்ளார் அமலாபால். இதற்கிடையில் மலையாளத்தில் ‘மிலி’ என்ற படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். இது இவர் நடிக்கும் கடைசி படம் என்று கூறப்படுகிறது. ‘வாழ்நாளில் இப்படியொரு கேரக்டர் கிடைப்பது அரிது என்பதால்தான் இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன் என்று அமலாபால் ஏற்கனவே தெரிவித்திருக்கிறார். ராஜேஷ் பிள்ளை இயக்கும் இப்படத்தில் மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் ‘நேரம் பட ஹீரோ நிவின் நடிக்கிறார். ஓரிரு படங்களில் நடித்திருந்தாலும் இவர் புதுமுக ஹீரோவாகவே பார்க்கப்படுகிறார். இவருக்கு மலையாள சினிமாவிலும் மார்க¢கெட் எதுவும் கிடையாது. இந்நிலையில் மிலி படத்தில் வேடம் சிறிதாக இருந்தாலும் முக்கியமான வேடம் என்பதால் ‘மிலி என்ற டைட்டிலை ‘மிலன்’ என மாற்ற வேண்டும் என இயக்குனரிடம் கண்டிஷன் போட்டார் நிவின். இதை கேட்டு அதிர்ச்சியில் உறைந்தார் ராஜேஷ் பிள்ளை.‘இப்படி கூறியது ஏன்? என்று நிவினிடம் கேட்டபோது,‘படத்தில் எனக்கு சிறிய வேடம்தான் ஆனால் மிக முக்கிய வேடம். அமலாபாலுக்கும் அவரது சினிமா வாழ்க்கையில் மிக முக்கிய வேடமாக  இருக்கும். இயக்குனரிடம் நான் பேசிக்கொண்டிருந்தபோது படத்தின் டைட்டிலை ‘மிலி‘ என்பதற்கு பதிலாக எனது கதாபாத்திரம் மிக முக்கியமாக அமைந்திருப்பதால் ‘மிலன் என மாற்றும்படி கேட்டது உண்மைதான் என்றார்.

அம்மா வேடமாவது கிடைக்க பச்சை குத்திக்கொண்ட கனிகா

அம்மா வேடமாவது கிடைக்க பச்சை குத்திக்கொண்ட கனிகா  சென்னை: அம்மா வேடத்தில் நடிக்க முடிவு செய்திருக்கும் கனிகா, அதற்காக சான்ஸ் பிடிக்கும் வகையில் உடலில் பச்சை குத்திக்கொண்டார்.‘பைவ் ஸ்டார், ‘ஆதிரை, ‘டான்ஸர் படங்களில் நடித்துள்ள கனிகா தமிழில் கடைசியாக கடந்த 2006ம் ஆண்டு ‘வரலாறு என்ற படத்தில் நடித்தார். அதன்பிறகு தமிழ் பக்கம் தலைவைக்காதவர் மலையாள படங்களில் மட்டும் நடித்து வந்தார். இந்நிலையில் கடந்த 2008ம் ஆண்டு அமெரிக்க மாப்பிள்ளை ஷியாம் ராதாகிருஷ்ணன் என்பவரை மணந்துகொண்டு குடும்பம் நடத்த சென்றுவிட்டார். ஒரு வருடத்திலேயே குடும்ப வாழ்க்கை போரடித்துவிட மீண்டும் நடிக்க வந்தார். ‘பழஸி ராஜா’வில் தொடங்கி தொடர்ச்சியாக அம்மா மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.ஹீரோயின்கள் நயன்தாரா, திரிஷா, இலியானா தங்கள் உடலில் பிறர் பார்வைபடும் இடங்களில் காதலன் பெயர், அல்லது வேலைப்பாடுடன் கூடி டிசைனில் டாட்டூ வரைந்துகொள்கின்றனர். இந்த பட்டியல் நீள்கிறது. திருமணத்துக்கு பிறகு படங்கள் தேடி வராததால் கனிகா வருத்தம் அடைந்தார். அம்மா வேடம் வந்தால் கூட போதும் என்ற தனது எண்ணத்தை வெளிப்படுத்தும் விதமாக சமீபத்தில் தனது வலது கை மேல்புறத்தில் குழந்தையை அன்பாக அரவணைத்து முத்தமிடும் தாய் உருவத்தை டாட்டூவாக வரைந்திருக்கிறார்.

வியாழன், 22 மே, 2014

கோச்சடையான் படம் மீது ராம்கோபால் வர்மா கடும் தாக்கு ரசிகர்கள் ஷாக்

கோச்சடையான் படம் மீது ராம்கோபால் வர்மா கடும் தாக்கு ரசிகர்கள் ஷாக் சென்னை: ‘கோச்சடையான் படத்தில் ரஜினியின் நடிப்பை பற்றி கடுமையாக விமர்சித்துள்ளார் ராம்கோபால் வர்மா.ரஜினிகாந்த் நடித்திருக் கும் படம் ‘கோச்சடையான். அவரது மகள் சவுந்தர்யா இயக்கி இருக்கிறார். 3டி மோஷன் கேப்சர் அனிமேஷன் முறையில் முதன்முறையாக இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்திருக்கிறார். இப்படம் 23ம் தேதி (நாளை ) திரைக்கு வருகிறது. ரசிகர்களும் ஆர்வமுடன் தியேட்டர்களில் முன்பதிவு செய்து வருகின்றனர். இதற்கிடையில் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட படங்களை இயக்கிய ராம் கோபால்வர்மா தனது இணையதள பக்கத்தில் கோச்சடையானில் ரஜினி நடிப்பு பற்றி விமர்சித்திருக்கிறார். ‘ரஜினியின் திறமை பற்றி எனக்கு தெரியும். என்னுடைய சங்கடம் என்னவென்றால் ரஜினியின் நடிப்பையும் தோற்றத்தையும் 3டி அனிமேஷன் முறையில் காட்டியது எதற்காக என்பதுதான் புரியவில்லை என்று குறிப்பிட்டிருக்கிறார். ஒன்றரை வருடத்துக்கும் மேலாக இப்படத்தின் பணியில் ஈடுபட்டு படத்தை இயக்கி முடித் திருக்கும் சவுந்தர்யாவுக்கு அமிதாப், ஷாருக்கான் உள்ளிட்ட பல்வேறு டாப் ஹீரோக்கள் வாழ்த்து தெரிவித்திருக்கும் நிலையில் வர்மா தாக்கி இருப்பது ரஜினி ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

பெட் ரூம் சீனுக்கு முன் ஹீரோவுடன் பூஜா ரகசிய பேச்சு

பெட் ரூம் சீனுக்கு முன் ஹீரோவுடன் பூஜா ரகசிய பேச்சு சென்னை: பெட் ரூம் சீனுக்கு முன் நெருங்கி நடிப்பது பற்றி நடிகருடன் ரகசியமாக பேசினார் பூஜா காந்தி.தமிழில் ‘கொக்கி, ‘திருவண்ணாமலை, ‘தலையெழுத்து படங்களில் நடித்தவர் பூஜா காந்தி. தற்போது கன்னட படங்களில் நடித்து வருகிறார். நடிகையின் வாழ்க்கை கதையொன்றில் பல ஆண்களுடன் தொடர்புகொண்டவராக பெயரிடப்படாத கன்னட படத்தில் நடித்து வருகிறார். பெட் ரூம் காட்சியில் நடிகர் ரவிசங்கரும், பூஜாவும் தத்ரூபமாக நடிக்க வேண்டும் என்று இயக்குனர் சதிஷ் பிரதான் இருவரிடம் கேட்டுக்கொண்டார். ‘கொஞ்சம் இருங்க இதோ வந்துவிடுகிறேன் என்று ரவி சங்கரை காரில் அழைத்துக்கொண்டு தனியாக சென்றார் பூஜா. அரை மணி நேரம் கழித்து அவர்கள் திரும்பி வந்தனர். பிறகு பெட் ரூம் சீனுக்கு இருவரும் தயாராக வந்தனர். கேமராமேன். இயக்குனர் ஒன்றிரண்டு லைட் மேன் தவிர மற்றவர்கள் வெளியேற்றப்பட்டனர். பிறகு இருவரும் நடித்த கிக்கான காட்சி படமாக்கப்பட்டது. இதுபற்றி யூனிட்டார் கூறுகையில், பெட்ரூம் காட்சியில் நெருக்கமாக நடிக்கும்போது கூச்சம் இருக்கக்கூடாது என்று டைரக்டர் கூறினார். இதனால் அந்த காட்சியில் எப்படி நடிப்பது என்பது குறித்து பேசவே அவர்கள் காரில் தனியாக சென்றனர் என கூறினர்.

தனுஷ்-அக்ஷரா பற்றி அமிதாப் கமென்ட்

தனுஷ்-அக்ஷரா பற்றி அமிதாப் கமென்ட் சென்னை: தனுஷ், அக்ஷரா  தன்னுடன் எப்படி பழகுகின்றனர் என்பதற்கு பதில் அளித்தார் அமிதாப் பச்சன்.பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் நடிக்கும் புதிய இந்தி படத்தை ஆர்.பால்கி டைரக்டு செய்கிறார். இப்படத்துக்கு இன்னும் பெயரிடவில்லை. ‘ராஞ்சனா படத்துக்கு பிறகு இந்தியில் தனுஷ் நடிக்கும் படம் இது. மாற்றுதிறனாளி வேடம். ஜோடியாக கமலின் 2வது மகள் அக்ஷரா ஹாசன் அறிமுகமாகிறார். இதன் ஷூட்டிங் நீலகிரியில் நடக்கிறது. இதுபற்றி அமிதாப்பச்சன் தனது இணைய தள பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறார். ‘தனுஷ், அக்ஷரா என்னுடைய சக நடிகர்கள். ஒவ்வொரு நாளும் என்னுடன் இணைந்து பணியாற்றுகிறார்கள். அவர்களது நடிப்பு திறமையும், உணர்வுகளும் தென்னிந்தியாவுக்கே உரிய ஒழுக்க நெறிமுறைகளுடன் அமைந்திருக்கிறது. அவர்களைப் பற்றி என் மனதில் எழுந்திருக்கும் எண்ணம் இதுதான். அவர்களைப்பற்றி தனிப்பட்ட முறையில் எதுவும் எனக்கு தெரியவில்லை. இன்னும் நன்கு பழகும் சந்தர்ப்பங்களில் அவர்களைப் பற்றி நிறைய சொல்ல வாய்ப்பு கிடைக்கும். ஜோக், விளையாட்டு என்று பொழுதுபோக்குடன் ஷூட்டிங் சென்றுகொண்டிருக்கிறது. ஒவ்வொரு நிமிடத்தையும் நான் அனுபவித்துக் கொண்டி ருக்கிறேன் என்று அமிதாப் குறிப்பிட்டிருக்கிறார்.

மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க சிரஞ்சீவி மறுப்பு

மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க சிரஞ்சீவி மறுப்பு  சென்னை:மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க மறுத்துவிட்டார் சிரஞ்சீவி.‘கடல் படத்தையடுத்து புதிய படம் இயக்குவதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார் மணிரத்னம். நாகார்ஜுனா, மகேஷ்பாபு இணைந்து நடிக்கும் தெலுங்கு படத்தை இயக்க முடிவு செய்தார். இது குறித்து இருவரிடமும் பேசி சம்மதம் பெற்றார். திருமணத்துக்கு பிறகு நடிக்காமல் ஒதுங்கி இருந்த ஐஸ்வர்யாராய் இப்படம் மூலம் ரீஎன்ட்ரி ஆக முடிவு செய்தார். தற்போது இப்படத்தின் ஷூட்டிங் தொடங்குவதில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. மகேஷ்பாபு ஏற்கனவே வேறு படங்களில் நடிக்க கால்ஷீட் கொடுத்திருப்பதால் அவரது கால்ஷீட் கிடைப்பது தாமதமாகிறது. எனவே இப்படம் இயக்குவதை தள்ளிவைத்துவிட்டு புதிய படம் இயக்க முடிவு செய்துள்ளார் மணிரத்னம்.சமீபத்தில் ஐதராபாத் சென்ற மணிரத்னம் சிரஞ்சீவியை சந்தித்து அவர் நடிக்க முடிவு செய்துள்ள 150 வது படத்தை இயக்குவது பற்றி பேசினார். ஆனால் இதற்கு சிரஞ்சீவி சம்மதம் தெரிவிக்கவில்லை. இதையடுத்து நாகார்ஜுனா, மகேஷ்பாபு இணைந்து நடிக்க உள்ள படத்தில் ராம் சரணும் நடிக்க கேட்டார். அதையும் ஏற்க மறுத்த சிரஞ்சீவி, ராம் சரண் சோலோ ஹீரோவாக நடிக்கும் படத்தை இயக்கும்படி யோசனை கூறினார். வேறு வழியில்லாமல் அதை மணிரத்னம் ஏற்றுக்கொண்டார். இந்த சந்திப்புக்கான ஏற்பாடுகளை சுஹாசினி செய்திருந்தார்.

ஹீரோவானதும் சம்பளம் அதிகம் கேட்கிறேனா? சந்தானம் பதில்

ஹீரோவானதும் சம்பளம் அதிகம் கேட்கிறேனா? சந்தானம் பதில்  சென்னை:ஹீரோ ஆனதும் சம்பளத்தை உயர்த்தி கேட்கிறீர்களாமே என்றதற்கு பதில் அளித்தார் சந்தானம்.சந்தானம் ஹீரோவாக நடித்து திரைக்கு வந்த படம் ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம். இப்படம் குறித்து நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:இப்படத்தின் வெற்றி எனக்கு தொடர்ந்து ஹீரோவாக நடிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதேநேரம் எனக்கேற்ற விதத்தில் பொருத்தமான காமெடி வேடங்கள் வந்தால் ஏற்று நடிப்பேன். அடுத்து ரஜினியின் ‘லிங்கா‘ படத்தில் காமெடி வேடத்தில் நடிக்கிறேன். நான் அவரது ரசிகன். ஏற்கனவே எந்திரன் படத்தில் அவருடன் நடித்திருக்கிறேன். கமல் படத்திலும் நடிக்க ஆசை இருக்கிறது. ‘ஹீரோ ஆனதும் சம்பளத்தை உயர்த்திவிட்டீர்களா? என்கிறார்கள். அப்படி இல்லை. எப்போதும்போல் எவ்வளவு நாள் கால்ஷீட் கேட்கிறார்களோ அதற்கு ஏற்பத்தான் சம்பளத்தை பெற்றுக்கொள்கிறேன். அடுத்து நான் ஹீரோவாக நடிக்கும் படத்தை முருகானந்த் டைரக்டு செய்ய உள்ளார். ஆகஸ்ட் மாதம் ஷூட்டிங் தொடங்குகிறது. ‘வல்லவனுக்கு  புல்லும் ஆயுதம் படத்தில் நடித்த ஆஷ்னா இதிலும் ஹீரோயின். இதுவரை காமெடி படங்களில் என்னை பார்த்த எனது அம்மா, ஹீரோ வேடத்தில் நடித்து அடி வாங்குவதை கண்டு அழுதுவிட்டார். நான் அடிவாங்கும் காட்சியில் அவர் 2 முறை எழுந்து வெளியே சென்றுவிட்டார். 3வது முறைதான் முழு படத்தையும் பார்த்தார் என்றார்.

புதன், 21 மே, 2014

கார்த்தி நடிக்கும் புதிய படம் மெட்ராஸ்!

பருத்தி வீரன் கார்த்தி சில படங்களின் வெற்றி காரணமாக வேகமாக வளர்ந்து வந்தார். அந்த நேரங்களில் அவர் தனது அண்ணன் சூர்யாவுடன் இணைந்து ஏதாவது சினிமா விழாக்களுக்கு வந்தால், எம்.ஜி.ஆர்., சிவாஜி ரேஞ்சுக்கு சில சினிமா பிரபலங்கள் அவர்களை உயரத்தில் தூக்கி வைத்து கொண்டாடினார்கள்.

ஆனால், அதன்பிறகு கார்த்தி நடித்த சில படங்கள் தொடர்ந்து தோல்வியடைந்து அவரது காலை வாரிவிட்டதால், தடுமாறிப்போய்க் கிடக்கிறார். சகுனி, அலெக்ஸ்பாண்டியனை அடுத்த அவர் அதிக நம்பிக்கை வைத்து நடித்த அழகுராஜா, பிரியாணி படங்களும் தோற்று விட்டதால் இப்போது அட்டகத்தி ரஞ்சித் இயக்கும் படத்தை ரொம்பவே எதிர்பார்த்துககொண்டிருக்கிறார்.

இந்த படத்தைப்பற்றி இதுவரை எந்தவித தகவலும் வெளியிடாமல் நடித்து வரும் கார்த்தி, படத்தின் தலைப்பு விசயத்தில் ரொம்பவே யோசிக்கச்சொன்னாராம. அதனால் முதலில் கபாலி என்று வைத்த டைரக்டர் ரஞ்சித், அதையடுத்து பலத்த ஆலோசனைக்குப்பிறகு இப்போது மெட்ராஸ் என்றொரு தலைப்பை வைத்திருக்கிறாராம்.

இந்த தலைப்பு கதைக்கு ரொமப் பொருத்தமாக இருப்பதாக ஓ.கே செய்திருக்கும் கார்த்தி, தனது பிறந்த நாளான மே 25-ந்தேதி இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிடப்போகிறாராம்.

6 ஆயிரம் தியேட்டர்கள்...! பரபரப்பானது கோச்சடையான் வெளியீடு!!

 கோச்சடையான் படம் வெளியாக இன்னும் இரு தினங்களே இருப்பதால் படத்திற்கான ரிலீஸ் வேலைகள் பரபரப்பு அடைந்துள்ளன. சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துள்ள படம் கோச்சடையான். ரஜினி இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். ரஜினி ஜோடியாக இந்தி நடிகை தீபிகா படுகோனே நடித்துள்ளார். கூடவே சரத்குமார், ஆதி, நாசர், ஜாக்கி ஷெரப், ஷோபனா, ருக்மணி உள்ளிட்ட ஏகப்பட்ட திரை நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

கே.எஸ்.ரவிக்குமாரின் மேற்பார்வையில், ரஜினியின் இளையமகள் செளந்தர்யா ரஜினிகாந்த் இப்படத்தை இயக்கி, இயக்குநராக களம் இறங்கியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்தியாவிலேயே முதன்முதலாக மோசன் கேப்சர் அனிமேஷன் தொழில்நுட்பத்தில் தயாராகி உள்ளது இப்படம். சுமார் 150 கோடி ரூபாய் செலவில் தயாரகி உள்ள இந்தப்படத்தை ஈராஸ் இன்டர்நேஷனல் நிறுவனமும், மீடியா ஒன் குளோபல் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது.

பல்வேறு பிரச்னைகளால் இப்படம் ரிலீஸ் ஆவதில் அடிக்கடி தாமதம் ஏற்பட்டது. இதுவரை இப்பட ரிலீஸ் 6 முறை தள்ளிப்போய் உள்ளது. இந்நிலையில் வருகிற மே 23ம் தேதி படம் ரிலீஸ் ஆவது உறுதி செய்யப்பட்டு, அதற்கான வேலைகளும் பரபரப்பாக நடந்து வருகிறது. தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 6 மொழிகளில் இப்படம் ரிலீஸ் ஆக இருக்கிறது.

உலகம் முழுக்க சுமார் 6000 தியேட்டர்களில் கோச்சடையான் வெளியாக இருக்கிறது. இதில் தமிழகத்தில் மட்டும் சுமார் 450 தியேட்டர்களிலும், கேரளாவில் 140 தியேட்டர்களிலும், ஆந்திராவில் 650 தியேட்டர்களிலும், கர்நாடகாவில் 300 தியேட்டர்களிலும், போஜ்புரி, பஞ்சாபி, இந்தி, குஜராத்தி உள்ளிட்ட மொழி பேசும் மாநிலங்களில் 1200 தியேட்டர்களிலும் ஆக மொத்தம் இந்தியாவில் மட்டும் 3000 தியேட்டர்களிலும், வெளிநாடுகளில் 3000 தியேட்டர்களிலும் கோச்சடையான் ரிலீஸ் ஆக இருக்கிறது. நேற்றே வெளிநாடுகளுக்கான தேவையான 3000 பிரிண்ட் காப்பிகளும் அனுப்பி வைக்கப்பட்டு விட்டன. தமிழகம் மற்றும் இந்தியாவின் பிற மாநிலங்களில் பிரிண்ட் காப்பிகள் அனுப்பி வைக்கும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது.

அஜீத்துடன் டூயட் பாட வரும் வித்யாபாலன்!

 கெளதம்மேனன் இயக்கும் தனது 55வது படத்தில் படு சீரியசாக நடித்துக்கொண்டிருக்கிறார் அஜீத். என்றாலும், அவ்வப்போது இயக்குனர்களிடம் கதை கேட்கவும் நேரம் ஒதுக்கி வருகிறார். மங்காத்தாவிற்கு பிறகு தொடர் வெற்றிகளை சந்தித்து வருபவர், அதை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக இப்போது கதை விசயத்தில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார்.

அதேபோல் தன்னுடன் இணைந்து நடிக்கும் ஹீரோயின், வில்லன் போன்ற முக்கிய நடிகர்களும் திறமையானவர்களாக இருக்க வேண்டும் என்றும் நினைக்கிறார். அதனால், மங்காத்தாவில் த்ரிஷா, ஆரம்பம் படத்தில் நயன்தாரா, வீரம் படத்தில் தமன்னா என்று நடித்த அஜீத், இப்போது தனது 55வது படத்தில் அனுஷ்காவுடன் இணைந்திருக்கிறார்.

இதையடுத்து மீண்டும் வீரம் சிவா இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கும் அஜீத், அந்த படத்திற்கு நல்ல பர்பாமென்ஸ் பண்ணக்கூடிய ஹீரோயினாக புக் பண்ண சொன்னாராம். அதையடுத்து, இப்போது இந்தியில், தி டர்ட்டி பிக்சர்ஸ், கஹானி போன்ற அதிரடிப்படங்களில் நடித்த வித்யாபாலனை, அஜீத்துடன் ஜோடி சேர்க்க பேசி வைத்துள்ளார் டைரக்டர் சிவா.

ஆக, தமிழ் சினிமாவில் இருந்து ஏற்கனவே சில படவாய்ப்புகள் சென்றபோது பாலிவுட்டில் பிசி என்று கைவிரித்த வித்யாபாலன் இப்போது அஜீத் படம் என்றதும் கண்டிப்பாக கால்சீட் தருவதாக டைரக்டர் சிவாவிடம் உறுதி அளித்துள்ளாராம்.

வியாழன், 15 மே, 2014

சிம்பு - செல்வராகவன் இணையும் படம் எப்போது?

Simbu- Selvaraghavans new film delayed இரண்டாம் உலகம் படத்தின் மெகா தோல்வியினால் செல்வராகவனை திரையுலகம் சுத்தமாக மறந்துவிட்டது. அவர் பெயரை சொன்னாலே தயாரிப்பாளர்கள் அலறி ஓடுமளவுக்கு நிலவரம் கலவரம் ஆனநிலையில், தன் தம்பி தனுஷ் மூலம் சிம்புவை அணுகினார் செல்வராகவன். 
செல்வராகவனிடம் கதை கேட்க ஒப்புக்கொண்ட சிம்பு, சில மாதங்கள் காத்திருக்கவிட்டு பிறகு செல்வராகவனிடம் கதை கேட்டார். கதை கேட்டபோது, ஏகப்பட்ட கண்டிஷன்களையும், கரெக்ஷன்களையும் சொல்லி செல்வராகவனின் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார் சிம்பு. சிம்புவும், செல்வராகவனும் இணைந்து பணியாற்றப் போகும், அந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கப் போவதாகவும் செய்திகள் அடிபட்டன. 
கூடுதல் தகவலாக, அண்மையில் வெளியான 'வாய் மூடி பேசவும்' படத்தை தயாரித்த ரேடியன்ஸ் மீடியா படநிறுவனம் தான் செல்வராகவன் இயக்கும் படத்தைத் தயாரிக்கப் போவதாகவும் சொல்லப்பட்டது. ஆனால், ரேடியன்ஸ் மீடியா நிறுவனத்தின் உரிமையாளரான வருண் மணியன் சொல்வதைப் பார்த்தால் சிம்பு - செல்வராகவன் இணையும் படத்தை அவர் தயாரிக்க மாட்டார் என்றே தோன்றுகிறது. 
அப்படி என்ன சொன்னாரய்யா? 
“செல்வராகவன் , 'இரண்டாம் உலகம்' படத்தை இயக்கியபோது அவருக்கும் அந்த படத்தைத் தயாரித்த பிவிபி நிறுவனத்துக்கும் ஏதோ பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளன. அவற்றை அவர் சரி செய்தால்தான், அவர் இயக்கும் புதிய படத்தை நான் தயாரிப்பேன். இல்லை என்றால் நான் தயாரிக்க வாய்ப்பில்லை” என்று தெரிவித்திருக்கிறார் வருண்மணியன். 
ஆக...சிம்பு - செல்வராகவன் கூட்டணி கை கோர்க்கும் படம் இப்போதைக்கு இல்லை என்பதே இறுதி நிலவரம்!

ஜோசியக்காரரின் அறிவுறுத்தல் காரணமாகவே லிங்கா படம் தொடங்கப்பட்டதா?

Is Linga film started of the instruction of astrologer கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் மீண்டும் இணைந்து நடிக்கும் லிங்கா படம் கடந்த சில தினங்களுக்கு முன் துவங்கப்பட்டது. மே 2 ஆம் தேதி மைசூர், சாமுண்டீஸ்வரி கோயிலில் ஆரம்பமான படப்பிடிப்பு தொடர்ந்து மைசூர் சுற்று வட்டாரங்களில் நடைபெற்று வந்தது. அங்குள்ள கன்னட அமைப்புகள் ரஜினிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியதால், பலத்த பாதுகாப்புடன் படப்பிடிப்பு நடந்தது. 
லிங்கா படத்தின் இரண்டு நாயகிகளில் ஒருவரான சோனாக்ஷி சின்ஹா கலந்து கொண்டு ரஜினி உடன் நடித்தார். சில நாட்கள் படப்பிடிப்பு நடந்தநிலையில் இப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதற்குள் படப்பிடிப்பு முடிவடைய என்ன காரணம்? 
கர்நாடகாவில் ரஜினிக்கு எழுந்த எதிர்ப்பின் காரணமாக சீக்கிரமே கடையை கட்டிவிட்டார்களா? 
அதுதான் இல்லை..! 
இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் சுறுசுறுப்புக்கு பேர்போனவர். திட்டமிட்டபடி பரபரவென காட்சிகளைப் படமாக்கி திட்டமிட்டபடியே முதல் கட்டப் படப்பிடிப்பை முடித்திருக்கிறார் என்று ஒரு சாரர் சொல்கின்றனர். மைசூரில் நடைபெற்ற முதல்கட்ட படப்பிடிப்பை அடுத்து விரைவில் அடுத்த கட்டப் படப்பிடிப்பு ஹைதராபாத் அல்லது மும்பையில் தொடங்கப்படுமாம். 
அதில் அனுஷ்கா கலந்து கொள்வார் என்று கூறுகின்றனர். 
இதற்கிடையில் லிங்கா படத்தின் முழு திரைக்கதையும் இன்னும் ரெடியாகவில்லை. ஜோசியக்காரரின் அறிவுறுத்தல் காரணமாகவே லிங்கா படத்தின் படப்பிடிப்பை மே 2 ஆம் தேதி துவங்கினார்கள். அடுத்தக் கட்ட படப்பிடிப்பு இப்போதைக்கு இல்லை. முழு திரைக்கதையும் ரெடியாகி ரஜினி ஓகே சொன்ன பிறகுதான் அடுத்தக் கட்ட படப்பிடிப்பு தொடங்கும் என்றும் சிலர் சொல்கிறார்கள். 

புதன், 14 மே, 2014

இசைப் பேரறிவாளன் - இமானுக்கு புதுப்பட்டம்!!

 மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், இசைஞானி இளையராஜா, இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான், தேனிசைத்தென்றல் தேவா என அடைமொழி இல்லாத இசையமைப்பாளர்கள் தமிழ்த்திரையுலகில் அரிது. முந்தா நேத்து கீபோர்ட் வாசிக்க ஆரம்பித்து, நேற்று இசையமைக்க ஆரம்பித்த பிரேம்ஜிக்குக் கூட இசை இளவல் என்ற பட்டத்தைக் கொடுத்துள்ளனர். 12 வருடங்களுக்கு முன் இசையமைப்பாளராக அறிமுகமாகி, ஐம்பதுக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து எத்தனையோ சூப்பர்ஹிட் பாடல்களைக் கொடுத்தவர் இசையமைப்பாளர் இமான். ஆனாலும் இதுநாள்வரை தன் பெயருக்கு முன்னால் எந்தவொரு அடைமொழியும், பட்டமும் இல்லாமல்தான் இருந்தார் இமான்.

இந்நிலையில், இமானுக்கு இசைப் பேரறிவாளன் என்ற படத்தை வழங்கி இருக்கிறார்கள். பாலாவின் இணை இயக்குநரும், ஆச்சார்யா என்ற படத்தை இயக்கியவருமான ரவி தற்போது என்னதான் பேசுவதோ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்திற்கு இமான்தான் இசையமைப்பாளர். என்னதான் பேசுவதோ படம் விரைவில் வெளியாக உள்ளது. நேற்று இப்படத்தின் இசை வெளியாகி உள்ளது. வேகம் பிடித்துள்ள இப்படத்தின் விளம்பரங்களில் எல்லாம் இமானின் படத்தை பெரிய அளவில் போட்டு இசைப் பேரறிவாளன் இமான் என்று குறிப்பிட்டிருக்கின்றனர்.

23ல் கோச்சடையான் ரிலீசாவது உறுதி: தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வ அறிவிப்பு

KOCHADAIYAN RELEAS ON 23RD சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துள்ள கோச்சடையான் படம் மோசர் கேப்சர் அனிமேஷன் தொழில்நுட்பத்தில் தயாராகி உள்ளது. சுமார் 150 கோடி ரூபாய் செலவில் தயாரகி உள்ள இந்தப் படம் வெளிவருவதில் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டது. 6 முறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு தள்ளி வைக்கப்பட்டது. இப்போது கடைசியாக வருகிற 23ந் தேதி ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றும் வெளிவருவது சந்தேகம்தான் என்று பரவலாக பேசப்பட்டு வருகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் 23ந் தேதி படம் வெளிவருவது உறுதி என்று அதன் தயாரிப்பு நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: 
ரஜினிகாந்த்-தீபிகா படுகோன் நடித்துள்ள கோச்சடையான் படம் தமிழ், தெலுங்கு, இந்தி, பஞ்சாபி, போஜ்புரி, மராட்டி என 6 இந்திய மொழிகளில் வெளியாகிறது. இந்திய சினிமா வரலாற்றிலேயே ஒரே நேரத்தில் 6 மொழிகளில் வெளியிடப்படும் முதல் படம் இதுதான்.
இதில் சரத்குமார், ஜாக்கி ஷராப், ஆதி, நாசர், ஷோபனா, ருக்மணி ஆகியோரும் நடித்துள்ளனர். இந்த படம், கடந்த 9-ந்தேதி வெளியாக இருந்தது. தொழில்நுட்ப காரணங்களினால் படம் திரைக்கு வருவதை தள்ளி வைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இந்த நிலையில் சில உண்மையற்ற செய்திகள் வெளிவந்திருப்பதாக அறிகிறோம்.
கோச்சடையான் படம் 6 மொழிகளிலும் 2டி வடிவத்தில் தயாராகி, ஏற்கனவே தணிக்கை செய்யப்பட்டு சான்றிதழ் பெறப்பட்டு விட்டது. மேலும் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் 3டி வடிவத்தில் தயாரான திரைப்படத்துக்கும் தணிக்கை செய்யப்பட்டு விட்டது. 3டி வடிவத்தில் தயாராக கூடுதல் கால அவகாசம் தேவைப்பட்டதால்தான் குறிப்பிட்ட தேதியில் படத்தை வெளியிட இயலவில்லை.
இதுதவிர, ஏற்கனவே சுமார் 4 ஆயிரம் திரையரங்குகள் ஒப்பந்தம் செய்யப்பட்ட நிலையில், சென்னையில் முன்பதிவு தொடங்கிய 2 மணி நேரத்துக்குள் ஒரு லட்சத்து 25 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்று விட்டன. அதன்பிறகு மேலும் 2 ஆயிரம் திரையரங்குகள் கோச்சடையான் படத்தை திரையிட முன்வந்துள்ளன.
3டி வடிவத்தில் தயாராவதில் ஏற்பட்ட தாமதத்தினால், கோச்சடையான் படத்தை அனைத்து திரையரங்குகளுக்கும் குறிப்பிட்ட நேரத்தில் அனுப்ப கால அவகாசம் தேவைப்பட்டது. படம், வருகிற 23-ந் தேதி அன்று வெளியாக தயார் நிலையில் உள்ளது. வதந்திகளை நம்ப வேண்டாம். ஏற்கனவே நாங்கள் அறிவித்தபடி, கோச்சடையான் படம் மே 23-ந் தேதி உறுதியாக வெளியாகும் என்று தெரிவித்துக் கொள்கிறோம். 
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருக்கிறது.

த்ரிஷாவுக்கு ஏற்பட்ட எல்லையில்லா மகிழ்ச்சி!

Trisha in lot of happiness என்றென்றும் புன்னகை படத்தையடுத்து, கடந்த இரண்டு ஆண்டுகளாக ஜெயம் ரவியுடன் பூலோகம் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் த்ரிஷா. அந்த இரண்டு ஆண்டுகளில் அஜீத்துடன் நடித்த மங்காத்தா படம் ஹிட்டானதை முன்வைத்து சில மேல்தட்டு டைரக்டர்களிடம் சான்ஸ் கேட்டு படையெடுத்தார்.

ஆனால், நயன்தாரா, ஹன்சிகா, அமலாபால், லட்சுமிராய் என்று சென்று கொண்டிருந்த டைரக்டர்கள் த்ரிஷாவை திரும்பிகூட பார்க்கவில்லை. அதனால் வீட்டு மோட்டு வளையத்தையே பார்த்துக்கொண்டிருந்த அவர், வேறு வழியில்லாமல் ஒரு கன்னட படத்தில் நடிக்கக்கூட சைன் பண்ணினார். இங்குள்ள மூன்றாம்தட்டு நடிகைகள் வாங்கும் குறைவான படக்கூலிதான் என்றாலும், சும்மா உட்கார்ந்து போரடித்துப்போன த்ரிஷா அந்த படத்தில் நடித்து சில மாதங்களை டைம்பாஸ் செய்தார்.

இந்த நேரத்தில்தான், அவரே எதிர்பாராதவிதமாக செல்வராகவன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படத்தில் நடிக்க அழைப்பு வந்தது. அதனால் இன்னொரு விண்ணைத்தாண்டி வருவாயா போன்றுகூட அந்த படம் அமையலாம் என்று முத்தக்காட்சிகளில் நடிக்கவும் சம்மதம் சொன்னார் த்ரிஷா. ஆனால் சிம்புவுடன் கமிட்டான ராசி இப்போது கெளதம்மேனன் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படத்திலும் த்ரிஷாவுக்கு சான்ஸ் கிடைத்திருக்கிறது.

அதனால் இதுவரையில்லாத அளவுக்கு பெரிய நம்பிக்கையுடன் இப்போது காணப்படுகிறார் த்ரிஷா. அந்த எல்லையில்லாத மகிழ்ச்சியை கொண்டாடும் விதமாகத்தான் சமீபத்தில் தனது பிறந்த நாளின்போது தனது கோலிவுட் தோழர், தோழிகள் அனைவருக்கும் ஸ்டார் ஹோட்டலில் ட்ரீட் கொடுத்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டாராம் த்ரிஷா.

ஆசை நாயகனுடன் மீண்டும் இணையும் சமந்தா!

Samantha again pair with Siddharth சித்தார்த்-சமந்தா இருவரும் தெலுங்கில் ஒரேயொரு படத்தில்தான் இணைந்தார்கள். அதோடு அவர்களுக்கிடையே காதல் தீயும் பத்திக்கொண்டது. அதையடுத்து அவர்கள் ஐதராபாத்தில் அடிக்கடி ஜாலி டூர் அடித்ததால் அவர்களது காதல் செய்தி ஆந்திராவில் கொளுந்து விட்டு எரிந்தது. அதனால் பின்னர் அவர்கள் இணைந்து நடிப்பதைகூட தவிர்த்தனர்.

இந்த நேரத்தில் அவர்களுக்கு ரகசியமாக திருமணம் நடந்து விட்டதாககூட செய்திகள் பரவின. ஆனபோதும், அதற்கு இருவருமே எந்த பதிலும் கொடுக்கவில்லை. சித்தார்த்திடம் கேட்கப்பட்ட கேள்விக்கு, பர்சனல் விசயத்தைப்பற்றி எதுவும் கேட்காதீர்கள் என்று மறுத்து வந்தார். அதையடுத்து,சித்தார்த் நடித்த தீயா வேலை செய்யனும் குமாரு படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்த சமந்தா, இப்போது ஒரு படத்தில் மீண்டும் சித்தார்த்துடன் டூயட் பாடப்போகிறார்.

நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் படத்தை இயக்கிய பாலாஜி தரணீதரன் இயக்கும் அப்படம் உயிரோட்டமான ஒரு காதல் கதையை மையமாகக்கொண்டு உருவாகிறதாம். அதனால் அந்த கதையில் சித்தார்த், சமந்தா போன்றவர்கள் நடித்தால் இன்னும உயிரோட்டமாக காட்சிகள் அமையும் எனறுதான் அவர்களை ஒப்பந்தம் செய்திருக்கிறாராம் இயக்குனர். தற்போது சித்தார்த் நடித்துக்கொண்டிருக்கும் லுசியா, காவியத்தலைவன் படப்பிடிப்புகள் முடிந்ததும் சமந்தாவுடன் கைகோர்க்கிறாராம் சித்தார்த்.

ஞாயிறு, 11 மே, 2014

அஜீத் - அனுஷ்கா காட்சிகள் ரகசிய இடத்தில் ஷூட்டிங்

அஜீத் - அனுஷ்கா காட்சிகள் ரகசிய இடத்தில் ஷூட்டிங் அஜீத் - அனுஷ்கா நடித்த காட்சியை ரகசியமாக படமாக்கினார் கவுதம் மேனன். கவுதம் மேனன் இயக்கும் புதிய படத்தில் அஜீத் நடிக்கிறார். ஜோடியாக அனுஷ்கா நடிக்கிறார். இப்படத்துக்காக ரகசிய இடத்தில் ஷூட்டிங் நடத்தப்பட்டதாக கோலிவுட்டில் பேசப்படுகிறது. பாஹுபாலி ஷூட்டிங்கில் இருந்த அனுஷ்காவுக்கு, ஸ்பெஷல் நண்பர் ஒருவர் செல்போனில் அழைக்க திடீரென்று ஷூட்டிங்கில் பிரேக் எடுத்து கொண்டு சென்னைக்கு புறப்பட்டார். தொடர்ந்து கவுதம் மேனன், அஜீத் பட ஷூட்டிங்கில் பங்கேற்க வந்தார். கடந்த 3 நாட்களாக பட குழுவில் பலருக்கு ஓய்வு தரப்பட்டிருந்தாலும் கேமராமேன் மற்றும் இரண்டொரு லைட்மேன் ஆகியோருடன் ரகசிய இடத்துக்கு கவுதம் மேனன் சென்றார். 

அங்கு அஜீத் - அனுஷ்கா நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டன. ரகசியமாக ஷூட்டிங் நடந்ததற்கு காரணம் கதையின் முக்கிய காட்சி படமாக்கப்பட்டதுதான் என்று ஒரு தரப்பு சொன்னாலும் அஜீத் - அனுஷ்கா இருவரின் நெருக்கமான காட்சியை படமாக்கவே குறைந்த எண்ணிக்கையில் படக்குழுவினருடன் ஷூட்டிங் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் மறைந்திருக்கும் ரகசியம் படம் ரிலீஸ் ஆகும் போதுதான் தெரியும் என்கின்றனர்.

சிம்பு-நயன்தாரா மீண்டும் காதல்

சிம்பு-நயன்தாரா மீண்டும் காதல் சமீபத்தில் நடந்த திரிஷா பிறந்த நாள் விழாவில் நயன்தாரா, சிம்பு, அமலா பால் என நட்சத்திரங்கள் பங்கேற்றனர். அப்போது திரிஷாவை கட்டிப்பிடித்து நயன்தாரா வாழ்த்து தெரிவிக்கும் படங்கள் வெளியாயின. சிம்பு பங்கேற்ற படம் இப்போது லேட்டாகதான் ரிலீஸ் ஆகி உள்ளது. படத்தில் நயன்தாராவை அன்பாக கட்டிப்பிடித்து காதல் அரவணைப்பு கொடுத்திருக்கிறார். சிம்பு மார்பின் மீது சாய்ந்து சிரித்தபடி போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளார் நயன்.

ஹேப்பி பர்த் டே சொல்லி லட்சுமிராயை புல்லரிக்க வைத்த ரஜினிகாந்த்

ஹேப்பி பர்த் டே சொல்லி லட்சுமிராயை புல்லரிக்க வைத்த ரஜினிகாந்த் லட்சுமிராயை புல்லரிக்க வைத்துள்ளார் ரஜினிகாந்த். இதுபற்றி லட்சுமிராய் டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: இத்தனை வருட பிறந்த நாளில் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருந்த தருணம் சமீபத்தில் வந்த பிறந்த நாள்தான். இந்தியாவின் சூப்பர் ஸ்டார் ரஜினி சார் என்னை வாழ்த்தி இருந்தார். இது எனக்கு மிகவும் ஸ்பெஷல் வாழ்த்து. நான் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறேன். இது எனக்கு சிறப்பான நாள் என்று நான் கூறியதற்கு காரணம், அவரிடம் இருந்து வாழ்த்து வரும் என்று நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. எதிர்பாராமல் கிடைத்த வாழ்த்துதான் என்னை புல்லரிக்க வைத்தது. 

என் வாழ்வில் சிறந்த நாள் இது.  லிங்கா பட இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் கவனத்துக்கு என்று குறிப்பு போடாதது ஒன்றுதான் குறை. அந்தளவுக்கு சகட்டுமேனிக்கு ரஜினியை புகழ்ந்து தள்ளி இருக்கிறார் லட்சுமிராய்.

வயதாகிவிட்டது இனி நோ டான்ஸ் ஷோபனா

வயதாகிவிட்டது இனி நோ டான்ஸ் ஷோபனா வயதாகிவிட்டதால் இனி சினிமாவில் நடனம் ஆட முடியாது என்றார் ஷோபனா. தளபதி, சிவா, இது நம்ம ஆளு,  என பல்வேறு படங்களில் நடித்திருப்பவர் ஷோபனா. நீண்ட வருடங்களுக்கு பிறகு கோச்சடையான் படத்தில் நடித்தார். தொடர்ந்து அவருக்கு படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தபோதும் அதை ஏற்க மறுத்து வருகிறார். இதுபற்றி ஷோபனா கூறும்போது,நான் ஒரு நடன ஆசிரியை. சினிமாவில் அடுத்து என்ன வேடம் ஏற்பது என்று எனக்கு தெரியவில்லை. நிறைய படங்களில் நடிக்க வாய்ப்பு வருகிறது. அதெல்லாமே நடன ஆசிரியை போன்ற வேடம்தான். அதை நான் ஏற்பதில்லை. சினிமாவில் நடனம் ஆடும் வயதை நான் கடந்துவிட்டேன் என்றார்

பாலா படத்துக்காக 10 கிலோ குறைத்தார் வரலட்சுமி

பாலா படத்துக்காக 10 கிலோ குறைத்தார் வரலட்சுமி போடா போடி படத்தில் சிம்பு ஜோடியாக அறிமுகமானார் வரலட்சுமி சரத்குமார். இப்படத்தையடுத்து விஷாலுடன் மதகஜ ராஜா படத்தில் நடித்தார். அப்படம் இன்னும் திரைக்கு வராமல் பென்டிங்கில் உள்ளது. இதற்கிடையில் சுதீப் ஜோடியாக மாணிக்யா என்ற கன்னட படத்தில் நடித்தார். தற்போது பாலா இயக்கும் தாரை தப்பட்டை படத்தில் நடிக்கிறார். நடனத்தில் ஸ்பெஷலிஸ்ட் என்ற வகையில் முதலில் இந்த வாய்ப்பு ஸ்ரேயாவுக்கு சென்றது. பின்னர் அது வரலட்சுமிக்கு மாறியது. இவரும் நடனம் கற்றுத்தேர்ந்தவர். அவரிடம் கரகாட்டத்துக்கு பயிற்சி பெற வேண்டும் என்று கண்டிஷன் போட்ட பாலா, அடுத்தமுறை பார்க்கும்போது உடல் எடையும் குறைத்து ஸ்லிம்மாக இருக்க வேண்டும் என்றார். 

பாலா படத்தில் வாய்ப்பு என்பது ஹீரோயின்களுக்கு குதிரைகொம்பு என்பதால், ஒன்றிரண்டு மாதத்திலேயே ஸ்லிம் ஆகிக்காட்டுகிறேன் என்றார் வரலட்சுமி. பார்க்கலாம் என்று பாலா கூறியதும் வரலட்சுமி ஒல்லியாவதற்கான பயிற்சியில் கவனம் செலுத்த தொடங்கினார். உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி என கடுமையான பயிற்சி மூலம் 10 கிலோ எடையை குறைத்து ஸ்லிம் தோற்றத்துக்கு மாறி விட்டார். கரகாட்டகாரர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து இக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது

வெள்ளி, 9 மே, 2014

அமலாபால் வெளியே...! அமலா உள்ளே...!!

 வீரசேகரன், சிந்து சமவெளி என்ற சிறு படங்களில் அறிமுகமாகி, மைனா படத்தின் மூலம் பிரபலமாகி, தெய்வதிருமகள் படத்தின் மூலம் கமர்ஷியல் நடிகையான அமலாபாலின் வளர்ச்சி அபாரமாக இருந்தது. அறிமுகமான இரண்டு வருடத்திற்குள் விஜய்யுடன் ஜோடியாக நடித்தார். வந்த வேகத்திலேயே இயக்குனர் விஜய்யை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகப்போகிறார். விரைவில் சினிமாவுக்கு முழுக்க போடவும் இருக்கிறார்.
அவர் போனால் என்ன. அதே மலையாள தேசத்திலிருந்து இன்னொரு அமலா வருகிறார். வெற்றிவேலா என்ற படத்தின் ஹீரோயின். "யாருடைய பெயரையும் வைத்துக் கொண்டு குறுக்கு வழியில் விளம்பரம் தேட வேண்டிய அவசியம் இல்லை. தமிழ் ரசிகர்களை நம்பி நடிக்க வந்திருக்கிறேன். என்னை நிச்சயம் ஏற்றுக் கொள்வார்கள். நான் பெயரை மாற்றிக்கொள்ள முடிவு செய்திருந்தேன். படத்தின் இயக்குனர் பிரபுராஜா என்னுடைய ஒரிஜினல் பெயரான அமலா என்பதையே வைத்துக் கொள்ளச் சொன்னார். எனக்கு ஜோடியாக ராம்தேவ் என்பவர் நடிக்கிறார். புகழ் பெற்ற எல்லோரும் சின்ன படத்திலிருந்துதான் கேரியரை தொடங்கியிருக்கிறார்கள். நானும் அப்படித்தான் தொடங்கியிருக்கிறேன். என்கிறார் புது அமலா.

அஜீத்தின் சைக்கிள் பயணம்

 தல அஜீத் கார் ரேஸ் பிரியர். உலக அளவிலான கார் ரேஸ்களில் கலந்து கொண்டிருக்கிறார். அவரது மனைவி ஷாலினி, முக்கிய தயாரிப்பாளர்கள் அந்த ஆபத்தான கார் ரேஸ் வேண்டாம் என்று சொன்ன பிறகு கார் ரேஸ் செல்வதை நிறுத்திவிட்டார். அடுத்து பைக்கை கையில் எடுத்தார். ஆயிரக்கணக்கான மைல்கள் பைக்கிலேயே பயணம் செய்வார். சமீபத்தில் புனேயில் இருந்து பெங்களூருக்கு பைக்கிலேயே வந்தார். ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி இந்த பயணத்தை மேற்கொண்டார்.

இப்போது அஜீத்தை அடிக்கடி ஈசிஆர் ரோட்டில் சைக்கிளில் செல்வதை பார்க்க முடிகிறதாம். ஒரு டவுசர், டீசர்ட், சின்ன ஹெல்மெட் கையில் ஒரு பேக் சகிதம் சைக்கிளில் கிளம்பி விடுகிறாராம். உடன் இரண்டு-மூன்று நண்பர்கள் மட்டும் செல்கிறார்கள். போகிற வழியில் சிறுவர்கள் தன்னை அடையாளம் கண்டுகொண்டால் ரோட்டோர மரத்தடியில் அவர்களுடன் உட்கார்ந்து மனம்விட்டு பேசிவிட்டுச் செல்கிறாராம்.

கவுதம் மேனன் இயக்கி வரும் படத்தில் அடுத்து ஆக்ஷன் காட்சிகளில் நடிக்க வேண்டியது இருப்பதாகவும். காலில் உள்ள பிரச்னையை தற்போதைக்கு சரிபடுத்திக் கொள்வதற்காகவும் இந்த சைக்கிள் பயணத்தை அடிக்கடி மேற்கொள்வதாகவும் அவரது நண்பர்கள் வட்டாரம் தெரிவிக்கிறது. செப்டம்பர் மாதத்திற்குள் கவுதம் மேனன் படத்தை முடித்துவிட்டு, ஆபரேஷன் செய்து கொள்ள இருக்கிறார். படத்தில் அஜீத் கேரடக்டரின் பெயர் சத்யதேவ். அநேகமாக படத்தின் பெயரும் அதுவாகவே இருக்கலாம் என்கிறார்கள்.

வெள்ளி, 2 மே, 2014

என் காதல் ஒன்றுதான் காதலிகள்தான் மாறுகிறார்கள் சிம்பு தடாலடி

என் காதல் ஒன்றுதான் காதலிகள்தான் மாறுகிறார்கள் சிம்பு தடாலடி என் காதல் ஒன்றுதான்; காதலிகள்தான் மாறுகிறார்கள்? என்று தத்துவம் பேசுகிறார் சிம்பு. சிம்புவுக்கும், நயன்தாராவுக்கும் காதல் மலர்ந்து முறிந்த பிறகு ஹன்சிகாவுடன் காதல் மலர்ந்தது. அதுவும் முறிந்துவிட்டது. வாலு படத்தில் மலர்ந்த இந்த காதல், அப்படம் முடிவதற்குள் முடிந்துவிட்டது. இதனால் கடைசி கட்ட ஷூட்டிங் முடங்கியது. விவகாரம் தயாரிப்பாளர் சங்கத்தில் பஞ்சாயத்துக்கு போனது. பிறகு ஹன்சிகா நடிக்க ஒப்புக் கொண்டார். தற்போது பெங்களூரில் சிம்பு, ஹன்சிகா டூயட் படமாகிறது. இந்த அனுபவம் பற்றி ஹன்சிகாவிடம் கேட்ட போது, இப்படத்தை முடிக்க வேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கிறது. நான் சிம்புவுக்காக நடிக்கவில்லை. டைரக்டருக்காக நடிக்கிறேன். 

எங்களுக்குள் என்ன நடந்ததோ அது முடிந்துவிட்டது. நான் காழ்ப்புணர்ச்சி கொண்டவள் கிடையாது. பழையதை நினைத்து கொண்டிருக்காமல் எதிர்காலத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறேன் என்கிறார். இரண்டு முறை காதல் தோல்வி அடைந்து ஆன்மிகத்துக்கு மாறிவிட்ட சிம்புவிடம் கேட்டபோது, மாஜி காதலியுடன் நடிப்பது புதிதல்ல. என்னுடையது என்றைக்கும் ஒரே வகை காதல் தான். காதலிகள்தான் மாறி கொண்டிருக்கிறார்கள். 

யாராவது ஒருவரிடம் அன்பை நிலைக்க செய்ய முயல்கிறேன். அவர்கள் அதை புரிந்து கொள்ள வேண்டும். இப்போது ஆன்மிகத்துக்கு மாறி இருக்கிறேன். வலியை உணர்வது போல் அதிலிருந்து வெளிவந்து ஆறுதல் அடையவும் தெரிந்து கொண்டேன் என தத்துவம் உதிர்க்கிறார்.

வியாழன், 1 மே, 2014

சிவாஜி குடும்பத்திற்காக பணம் வாங்காமல் இசை நிகழ்ச்சி நடத்தினேன்: ஏ.ஆர்.ரகுமான் வாக்குமூலம்

 தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலா மீது பெங்களூர் கோர்ட்டில் சொத்து குவிப்பு வழக்கு நடந்து வருகிறது. இந்த வழக்கின் ஒரு பகுதி பிரமாண்டமாக நடத்தப்பட்ட ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரனின் திருமணம் சேர்க்கப்பட்டுள்ளது. திருமணத்தின் செலவு கணக்குகள் சொத்து குவிப்பு வழக்கின் கீழ் வருகிறது. இந்த திருமண நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சி நடத்தினார். அந்த நிகழ்ச்சிக்கு அவர் எவ்வளவு சன்மானம் பெற்றார் என்பது நீதிமன்றத்தின் கேள்வி.

இதுபற்றி ஏ.ஆர்.ரகுமான் அளித்த எழுத்துபூர்வமான வாக்குமூலத்தை வழக்கறிஞர் பவானி சிங் வாசித்தார் "சுதாகரனின் மனைவி நடிகர் திலகம் சிவாஜி குடும்பத்தைச் சேர்ந்தவர். தமிழ் திரையுலகின் மிக மூத்த கலைஞரின் குடும்ப விழா என்பதால் பணம் வாங்காமல் இசை நிகழ்ச்சி நடத்திக் கொடுத்தேன். இதற்காக ஜெயலலிதா வீட்டிலிருந்து வெள்ளி தாம்பூலம், வெள்ளிக் கிண்ணம், குங்கும சிமிழ் உள்ளிட்ட சில வெள்ளிப் பொருட்களை எனக்கு பரிசாக வழங்கினர்"
இவ்வாறு ஏ.ஆர்.ரகுமான் வாக்குமூலம் அளித்திருப்பதாக நீதிமன்றத்தில் வாசிக்கப்பட்டது.

அடடா மழை டா...! லிங்குசாமி காட்டில் அடைமழை டா...!!

50 நாட்களில் மும்பை மற்றும் கோவாவில் 'அஞ்சான்' படப்பிடிப்பை வெற்றிகரமாக முடித்துவிட்ட லிங்குசாமி, ஆகஸ்ட் 15ம் தேதி அஞ்சான் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார். சூர்யா-சமந்தா ஜோடியுடன் காமெடிக்கு சூரி மற்றும் பரமானந்தா கலக்கி உள்ளனர். காரணம் படம் தமிழ் தெலுங்கில் வெளியாக உள்ளது. இதை அடுத்து, ''எண்ணி ஏழு நாள்'' என்ற படத்தை எடுக்க இருக்கிறார் லிங்குசாமி. அக்டோபரில் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. கார்த்தி-சமந்தா ஜோடியாக நடிக்கின்றனர். மொத்தத்தில், அண்ணன்-தம்பி ரெண்டு பேரையும் வைத்து இயக்கி கொண்டிருக்கும் லிங்குசாமி காட்டில் அடைமழை தான் போங்க...!

காலத்திற்கேற்ப மாறிய ரஜினி!

 முன்பெல்லாம் ரஜினி, கமல் நடிக்கிற படங்கள் என்றாலே அப்படங்களின் பூஜையே படு விமரிசையாக நடைபெறும். அதேபோல்தான், கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கயிருந்த ராணா படத்தின் பூஜையும் சென்னை ஏவிஎம்மில் கோலாகலமாக நடைபெற்றது. அன்றைக்கு பூஜைக்கு வந்தபோதே அந்த படத்தில் தான் நடிக்கும் ராணா கெட்டப்புடனேயே கலந்து கொண்டார் ரஜினி.

ஆனால், அன்றைக்கு மாலையே திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு சென்னையிலுள்ள இசபெல்லா மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார் அதன்காரணமாக அன்றைக்கு மாலை நடைபெற்ற அப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்புக்கு ரஜினி வரவில்லை. கே.எஸ்.ரவிக்குமார், தீபிகா படுகோனே மற்றும் ரஜினி சார்பாக அவரது மகள் செளந்தர்யா ஆகியோர் மட்டுமே கலந்து கொண்டனர்.

அதையடுத்து, ரஜினியின் உடல்நிலை சீரியசான கண்டிசனுக்கு சென்றதால், பின்னர் ராணா படமே கைவிடப்பட்டது. அதோடு, தனது ஒவ்வொரு படங்களின் பூஜையையும் பரபரப்பாக நடத்தும் ரஜினி, அதன்பிறகு அதிலிருந்து மாறினார். அதிலும் சமீபகால படங்களுக்கு யாருமே பெரிய அளவில் பூஜை நிகழ்ச்சியை நடத்தாததால் தானும் காலத்திற்கேற்ப தற்போது மாறிக்கொண்டுள்ளார்.

தற்போது அவர் நடிக்கும் லிங்கா படத்திற்கு இப்போது உள்ள படங்களுக்கு நடைபெறுவது போலவே படப்பிடிப்பு தளத்தில் சிறிய அளவில் பூஜை நடத்தப்பட்டே படப்பிடிப்பு தொடங்குகிறதாம். அப்போது, ரஜினியின் நெருங்கிய நட்பு வட்டார நடிகர்கள் சிலர் அந்த ஸ்பாட்டுக்கு சென்று அவரை வாழ்த்துகிறார்களாம். ஆக, எளிமையான முறையில் பூஜை நடக்கிறதாம்.