இருப்பினும், மீண்டும் ஒரு புதிய சிக்கல் கெளதம்மேனனை சூழ்ந்துள்ளது. அதாவது, தமிழில் சிம்பு-த்ரிஷாவை ஜோடி சேர்த்து இயக்கிய விண்ணைத்தாண்டி வருவாயா படத்தை பின்னர் இந்தியில் ஏக் தீவானா தா என்ற பெயரில் ரீமேக் செய்தார் கெளதம். அந்த படத்தை தயாரித்த தயாரிப்பாளர்களுள் ஒருவரான ஜெயராமன் என்பவர், தங்களிடம் பெரும் தொகையை கெளதம்மேனின் போட்டான் கதாஸ் நிறுவனம் ஏமாற்றி விட்டதாக உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, கெளதம்மேனனின் நிறுவனத்தில் பணி புரியும் நான்கு பேரிடம் விசாரணை நடத்த சிபிஐக்கு உத்தரவிட்டுள்ளார்களாம். இதனால் சிம்பு நடிக்கும் படத்தையடுத்து அஜீத்தை இயக்கும் அவசர வேலைகளில் ஈடுபட்டுள்ள கெளதம்மேனன், எதிர்பாராத இன்னொரு சிக்கலையும் இப்போது சந்தித்துள்ளார்.
0 உங்கள் கருத்து:
கருத்துரையிடுக