ஞாயிறு, 29 ஜூன், 2014


‪#‎AmaraKaaviyam‬ ‪#‎Sathya‬ ‪#‎JeevaSankar‬ ‪#‎MiaGeorge‬ ‪#‎Ghibran‬ நீ உண்மையிலயே என்னை லவ் பண்றியா?
நான் என்ன பண்ணா என் காதலை நம்புவ- அமரகாவியம் டிரெய்லர்!

புதன், 25 ஜூன், 2014

அனன்யாவின் திருமண சர்ச்சை படமாகிறதா?

அனன்யாவின் திருமண சர்ச்சை படமாகிறதா? நாடோடிகள், சீடன், எங்கேயும் எப்போதும் என விரல்விட்டும் எண்ணும் அளவுக்கே தமிழ் படங்களில் நடித்திருக்கும் அனன்யா கடைசியாக புலிவால் என்ற படத்தில் நடித்தார். இதற்கிடையில் அனன்யாவுக்கு திருமணம் செய்ய குடும்பத்தினர் முடிவு செய்தனர். இதில் பிரச்னை ஏற்பட்டது. திடீரென்று குடும்பத்தினரே திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து தனக்கு பார்த்த மாப்பிள்ளையை திருப்பதியில் ரகசிய திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் அதிதி என்ற படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார் அனன்யா. இது திருமணம் ஆன ஒரு பெண்ணின் வாழ்க்கைபற்றி கதை என்பதால் அனன்யாவின் வாழ்க்கை கதைதான் இது என்று பரபரப்பு எழுந்தது. இதுபற்றி இயக்குனர் பரதன் கூறும்போது, அனன்யா வாழ்க்கை கதையா என்கிறார்கள். 

அவரது வாழ்க்கைக்கும் பட கதைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. திருமணத்துக்கு பிறகு ஒரு சில பெண்களின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து இக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. இது திகில் கதை இல்லை ஆனால் அந்த உணர்வு படம் முழுவதும் இருக்கும். நந்தா, நிகேஷ்ராம் முக்கிய வேடத்தில் நடித்திருக்கின்றனர் என்றார்.

சிகரெட் பிடிக்க விசாகா டிரைனிங்

சிகரெட் பிடிக்க விசாகா டிரைனிங் சிகரெட் பிடிக்க கற்று வருகிறார் விசாகா சிங். சினிமாவில் யதார்த்தம் என்ற வார்த்தைக்காக உடலை ஒல்லியாக்குவது, குண்டாக்குவது, சிக்ஸ் பேக் வைப்பது என்று நடிகர், நடிகைகள் மெனக்கெடுகின்றனர். கண்ணா லட்டு தின்ன ஆசையா ஹீரோயின் விசாகா சிங் சிகரெட் புகைப்பதற்கு பயிற்சி பெற்றார். ரவுடி பெல்லோ என்ற தெலுங்கு படத்தில் தற்போது அவர் நடித்து வருகிறார். சில மாதங்களுக்கு முன் இப்படத்திற்காக நடன காட்சியில் நடித்தபோது தவறி விழுந்ததில் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு மாதக்கணக்கில் பெட் ரெஸ்ட்டில் இருந்தவர் சிகிச்சைக்கு பிறகு மீண்டும் படப்பிடிப்பில் கலந்துகொண்டார்.

இம்முறை சிகரெட் பிடிக்கும் காட்சியில் நடித்தார். இது பற்றி விசாகா கூறும்போது, எனக்கு சிகரெட் பிடிக்கும் பழக்கம் கிடையாது. அதை எப்படி விரலில் பிடிப்பது, எப்படி தீப்பற்ற வைப்பது என்றுகூட தெரியாது. ஆனால் இப்போது எல்லாம் அத்துப்படி. அதற்காக பயிற்சி எடுத்துவிட்டேன். கல்லூரி மாணவியாக இப்படத்தில் நடிக்கிறேன். குறும்புத்தனம் கொண்ட வேடம் என்பதால் சிகரெட் பிடிக்கும் காட்சியிலும் நடிக்க வேண்டி இருந்தது. 

தொழில் ரீதியான நடிகை என்பதால் அதை மறுக்க முடியவில்லை. கொஞ்சம் கஷ்டமான வேலையாகத்தான் இருந்தது. ஆனாலும் ஒன்றிரண்டு டேக்கில் நடித்து முடித்துவிட்டேன் என்றார்.

வதந்தி கிளப்பினால் சட்டப்படி நடவடிக்கை நயன்தாரா எச்சரிக்கை

வதந்தி கிளப்பினால் சட்டப்படி நடவடிக்கை நயன்தாரா எச்சரிக்கை இளம் நடிகருடன் இணைத்து கிசுகிசு வெளிவருவதைஅறிந்து கோபம் அடைந்தார் நயன்தாரா. நயன்தாரா தீவிர நடிப்பில் கவனம்செலுத்தி வருகிறார். மாஜி காதலன் சிம்புவுடன் இது நம்ம ஆளு என்ற படத்தில் நடிக்கிறார். ராஜா இயக்கத்தில் தனியொருவன் என்ற படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக நடிக்கிறார். இதேபடத்தில் கணேஷ் வெங்கட்ராமனும் நடிக்கிறார். அவருடன் நட்பாக பழகும் கதாபாத்திரம் ஏற்றிருக்கிறார் நயன். ஆனால் நயனும், கணேஷ் வெங்கட்ராமனும் ஷூட்டிங்கில் நீண்ட நேரம் மனம்விட்டு பேசி பழகுவதாகவும், இருவரும் காதல் வயப்பட வாய்ப்பிருக்கிறது என்றும் பட யூனிட்டில் சிலர் கிளப்பிவிடுகிறார்களாம். இது மெதுவாக நயன்தாரா காதில் விழ கொதித்துவிட்டாராம்.  

ஏற்கனவே பல்வேறு கிசுகிசுக்களால் பாதிக்கப்பட்ட நயன்தாரா மற்றொரு சக நடிகருடன் இணைத்து கிசு கிசு கிளம்பியதை அறிந்து அப்செட் ஆனார். என்னைப் பற்றி இனியும் வதந்தி கிளப்பி விட்டால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் தயங்க மாட்டேன் என்று கூறி உள்ளாராம். இதுபற்றி கணேஷ் வெங்கட்ராமன் கூறும்போது,இதுபோல் வதந்தி எப்படி வருகிறது என்று தெரியவில்லை. நயன்தாராவும், நானும் சக கலைஞர்கள். என்னைப்பற்றி இப்படியொரு தகவலை நான் கேட்பது இதுதான் முதல்முறை என்றார்.

இளம் ஹீரோ கதை என் வயதுக்கு மாற்றப்பட்டது மெட்ராஸ் பற்றி கார்த்தி

இளம் ஹீரோ கதை என் வயதுக்கு மாற்றப்பட்டது மெட்ராஸ் பற்றி கார்த்தி சின்ன வயசு ஹீரோ கதையை என் வயசுக்கு ஏற்ப மாற்றி நடிக்கிறேன் என்றார் கார்த்தி. கார்த்தி நடிக்கும் புதிய படம் மெட்ராஸ். அட்டகத்தி ரஞ்சித் டைரக்ஷன். ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். கேத்ரினா ஹீரோயின். சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். இதன் ஆடியோவை நடிகர் சூர்யா வெளியிட்டார். இப்படத்தில் நடிப்பதுபற்றி கார்த்தி கூறும்போது, ஒரு நல்ல ஸ்கிரிப்ட் பல மாதமாக கோடம்பாக்கத்தில் சுற்றிக்கொண்டிருக்கிறது என்று கேள்விப்பட்டதும் இயக்குனர் ரஞ்சித்தை வரவழைத்தேன். ஏற்கனவே இந்த ஸ்கிரிப்ட்டை கேட்டிருந்தேன். நன்றாக இருந்தது. 

இதில் நான் நடிக்கலாமா என்று அவரிடம் கேட்டபோது, நீங்கள் நடித்தால் இன்னும் சந்தோஷம் என்றார். கதைப்படி சின்ன வயது ஹீரோவை என் வயதுக்கு மாற்றி இருக்கிறோம். மற்றபடி ஸ்கிரிப்ட்டில் ஒரு மாற்றமும் இல்லை. வட சென்னையில் நடக்கும் கதையை யதார்த்தமாக சொல்கிறது. 

அட்டகத்தி படத்தில் எல்லா காட்சி களையும் காமெடியா சொன்ன ரஞ்சித் இப்படத்தில் எல்லாவற்றிலும் ஒரு சீரியஸ்னஸ்சுடன் சொல்லி இருக்கிறார். தமிழ் சினிமாவுக்கு இது ரொம்பவும் முக்கியமான படமாக இருக்கும் என்றார்.

படு கிளாமர் போட்டோ ஷூட் தமன்னா

படு கிளாமர் போட்டோ ஷூட் தமன்னா அதிரடி முடிவு படுகிளாமராக போட்டோ ஷூட் நடத்த திடீரென முடிவு செய்துள்ளார் தமன்னா.தமிழ், தெலுங்கில் ஒரு ரவுண்டு வந்த தமன்னா இந்தியில் கவனத்தை திருப்பினார். அவர் நடித்த முதல் படம் ஹிம்மத்வாலா கைகொடுக்கவில்லை. நீண்ட நாட்களுக்கு பிறகு ஹம்ஷகல்ஸ் என்ற படத்தில் கவர்ச்சி தூக்கலாக நடித்தார். இப்படமும் அவருக்கு கைகொடுக்கவில்லை. அத்துடன் படத்தில் அவர் நடிப்பு பற்றி விமர்சிக்கப்பட்டது. தென்னிந்தியாவில் டாப் ஹீரோக்களுடன் ஜோடி போட்ட தமன்னாவுக்கு பாலிவுட் கைவிட்டதை எண்ணி கலக்கம¢ அடைந்தார்.

தற்போது டாப் ஹீரோக்களின் கவனத்தை கவர புதிய திட்டம் வகுத்து வருகிறார். படுகவர்ச்சிக்கு மாறினால் வாய்ப்பு வருமா என்று நெருக்கமானவர்களிடம் ஆலோசித்து வருகிறார். முத்தக்காட்சியில் நடிக்க மாட்டேன், டூ பீஸ் உடையில் நடிக்க மாட்டேன். இது என் பாலிசி என்று நீ போடும் கண்டிஷன் பாலிவுட்டில் எடுபடாது. இந்த நிபந்தனைகளை தூக்கிப் போடும்வரை பெரிய படங்கள் வராது என்று நட்பு வட்டாரங்கள் கறாராக கூறிவிட்டார்களாம். 

மார்க்கெட்டை பிடிக்க தமன்னா தனது பாலிசியை காற்றில் பறக்க விட யோசித்துள்ளாராம். இதற்காக முதல்கட்டமாக டூ பீஸ் உடைகளில் போட்டோ ஷூட் நடத்தி பாலிவுட்டில் பரப்பிவிடவும் திட்டமிட்டுள்ளாராம்.

திங்கள், 23 ஜூன், 2014

6 மாதத்தில் 3 படம் ரிலீஸ் கமலின் ஹாட்ரிக் திட்டம்

6 மாதத்தில் 3 படம் ரிலீஸ் கமலின் ஹாட்ரிக் திட்டம் 6 மாதத்தில் 3 கமல் படம் ரிலீஸ் ஆக உள்ளது. ஒன்றரை ஆண்டு இடைவெளி விட்டதற்கு வட்டியும் முதலுமாக சேர்த்து வரும் 6 மாதத்துக்குள் 3 படங்கள் ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறார் கமல். இறுதிகட்ட மற்றும் பேட்ச் ஒர்க் பணிகள் நடந்து வந்த விஸ்வரூபம் 2 ரிலீசுக்காக தயாராகிவிட்டது. இதையடுத்து ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் டபுள் வேடத்தில் கமல் நடித்து வரும் உத்தம வில்லன் ஷூட்டிங் இறுதிகட்டத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறது. இன்னும் சில வாரங்களுக்குள் இப்படம் முடிந்துவிடும். ஷூட்டிங்கிற்கு பின்னர் நடக்கும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் வேகமாக நடக்கிறது. திட்டமிட்டபடி எல்லாம் முடிந்துவிட்டால் செப்டம்பர் மாதம் இப்படம் ரிலீஸ் என்று பட வட்டாரங்கள் தெரிவிக்கிறது. 

இதற்கிடையில் மலையாளத்தில் வெற்றி பெற்ற திரிஷ்யம் தமிழில் ரீமேக் ஆகிறது. மல்லுவுட்டில் மோகன்லால் ஏற்ற வேடத்தை கமலும், மீனா ஏற்ற வேடத்தை கவுதமியும் ஏற்று நடிக்கின்றனர். ஜூலை 15ம் தேதி முதல் ஷூட்டிங் தொடங்கப்பட உள்ளது. மற்ற நட்சத்திரங்களின் தேர்வு நடந்து வருகிறது. விரைந்து ஷூட்டிங் தொடங்கி எவ்வளவு வேகமாக முடியுமோ அவ்வளவு வேகமாக முடிக்கப்படும் என்றார் இயக்குனர் ஜீது ஜோசப். 

இந்த ஆண்டு இறுதியில் இப்படம் ரிலீஸ் செய்யப்பட திட்டமிடப்பட்டிருக்கிறது. சுமார் ஒன்றரை ஆண்டாக கமலுக்கு படமே ரிலீஸ் இல்லை. இந்த ஆண்டு வரும் 6 மாதத்துக்குள் 3 படம் ரிலீஸ் செய்து ஹாட்ரிக் அடிக்க திட்டமிட்டிருக்கிறார்.

இளையராஜா-மிஷ்கின் மோதலா?

இளையராஜா-மிஷ்கின் மோதலா? பூட்டிய அறைக்குள் இளையராஜாவுடன் மிஷ்கின் வாக்குவாதம் செய்தும் புதுபடத்துக்கு இசை அமைக்க மறுத்துவிட்டார். டைரக்டர் மிஷ்கின் இயக்கும் திகில் படம் பிசாசு. இப்படத்துக்கு  இளையராஜா இசை அமைக்க உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் மிஷ்கின் நேரில் சென்று இளையராஜாவை சந்தித்து இசை அமைக்க  கேட்டார். தனது இசைக்கு படத்தில் முக்கியத்துவம் தரப்படவில்லை என்று கூறி புதுபடத்துக்கு இசை அமைக்க இளையராஜா மறுத்துவிட்ட£ராம். பூட்டிய அறைக்குள் இளையராஜாவுடன் வாக்குவாதம் நடந்ததா என்ற கேள்விக்கு பதில் அளித்திருக்கிறார் மிஷ்கின். இதுபற்றி அவர் கூறும்போது,பூட்டிய அறைக்குள் நானும், இளையராஜாவும் பேசிக்கொண்டிருந்தோம். அந்த விவாதத்தை நேரில் கேட்டதுபோல் சிலர் சொல்கிறார்கள். 

என்ன பேசினோம் என்று அவர்களுக்கு தெரியுமா? இளையராஜா சாரை எனது தந்தைபோல் மதிக்கிறேன். அவரிடம் வாக்குவாதம் செய்யமாட்டேன். பிசாசு படத்துக்கு புதிய இசை அமைப்பாளரை ஒப்பந்தம் செய்ய உள்ளதுபற்றி அவரிடம் கூறினேன். அவரும் அதற்கு சம்மதம் தெரிவித்தார். அருள் குரோலி என்ற புது இசை அமைப்பாளர் படத்துக்கு இசை அமைக்கிறார் என்றார்.

சமந்தா நக்கல்

படம் ரிலீஸ் ஆனா சொல்லுங்க... சமந்தா நக்கல் என் படம் ரிலீஸ் ஆகிறதா? யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள் என்று நக்கலடித்திருக்கிறார் சமந்தா. சமீபகாலமாக பட ரிலீசுக்கு முன்பே அப்படத்தை ரசிகர்களுக்கு கொண்டு சென்று சேர்க்கும் விதமாக படத்தில் நடித்த ஹீரோ, ஹீரோயின்கள் புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்பது சகஜமாகிவிட்டது. இந்நிலையில் படத்தில் நடித்த ஹீரோயினுக்கே தெரியாமல் ஒரு படம் ரிலீஸ் ஆக உள்ளது. அந்த ஹீரோயின் வேறு யாருமல்ல சமந்தாதான். தமிழ், தெலுங்கு என பிஸியாக நடித்துக்கொண்டிருந்தாலும் தனது ஒவ்வொரு படத்தை பற்றியும் அவ்வப்போது இணைய தள பக்கத்தில் கருத்து பகிர்ந்துகொள்பவர் சமந்தா. 

நீண்ட நாட்களுக்கு முன் இவர் தெலுங்கில் நடித்த படம் ஆட்டோ நகர் சூர்யா. நாக சைதன்யா ஹீரோ. இப்படம் பைனான்ஸ் பிரச்னை காரணமாக ரிலீஸ் ஆகாமல் முடங்கிக்கிடந்தது. டோலிவுட் பட தயாரிப்பாளர் ஒருவர் பிரச்னையில் தலையிட்டு சிக்கலை தீர்த்து வைத்தார். இதையடுத்து வரும் 27ம் தேதி படம் ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இதுபற்றி ஹீரோயின் சமந்தாவுக்கு எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. 

உங்க படம் ரிலீஸ் ஆகப்போகிறதாமே? என்று சமந்தாவிடம் கேட்டபோது எந்த படம் என்று தெரியாமல் திருதிருவென முழித்தார். இதுகுறித்து தனது இணைய தள பக்கத்தில் அவர் கூறும்போது,நான் நடித்த படமொன்று வரும் 27ம் தேதி ரிலீஸ் ஆகப்போகிறதாமே யாருக்காவது தெரிந்தால் எனக்கும் கொஞ்சம் சொல்லுங்கள் என்று நக்கலாக குறிப்பிட்டிருக்கிறார்.

வெள்ளி, 13 ஜூன், 2014

எனக்கு மகன் இருக்கிறான் சித்தார்த் கொடுத்த ஷாக்

எனக்கு மகன் இருக்கிறான் சித்தார்த் கொடுத்த ஷாக் எனக்கு மகன் இருக்கிறான். அவன் பெயர் மோக்லி என்று ஷாக் கொடுத்திருக்கிறார் சித்தார்த். அடிக்கடி சர்ச்சைகளில் சிக்குவதும், அதற்கு கடுமையான பதிலடி கொடுப்பதும் சித்தார்த்துக்கு வாடிக்கையாகிவிட்டது. ஸ்ருதி ஹாசனுடன் இணைத்து பேசப்பட்ட சித்தார்த் தற்போது சமந்தாவுடன் இணைத்து கிசுகிசுக்கப்படுகிறார். இந்நிலையில் இணைய தள பக்கங்களில் சித்தார்த்துக்கு ஏற்கனவே திருமணம் ஆகி டீன் ஏஜ் வயதில் ஒரு மகன் இருக்கிறான் என்று சமீபத்தில் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதை மறுத்திருந்தார் சித்தார்த். 

ஆனாலும் கோபம் தீராமல் இருந்தவர் திடீரென்று தனது இணைய தள பக்கத்தில், எனக்கு மகன் இருக்கிறான் என்று தகவல் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். இதுபற்றி அவர் கூறியதில்,ஆம் எனக்கு மகன் இருக்கிறான். ஆனால் அவனுக்கு நான்கு கால் ஒரு வால் இருக்கிறது. அவன் பெயர் மோக்லி. 10 வயது ஆகிறது. குடிசை பகுதி ஒன்றின் அருகில் அவனை கண்டெடுத்தேன். அவனை நான் காப்பாற்றினேன். அன்பால் அவன் என்னை கட்டிப்போட்டிருக்கிறான். உலகத்திலேயே மிகவும் பயந்த சுபாவம் கொண்டவன் அவன் என்று குறிப்பிட்டிருப்பதுடன் அருகில் தான் வளர்க்கும் நாய் படத்தை வெளியிட்டு இவன்தான் அந்த மோக்லி என கூறி இருக்கிறார்.

ஆந்திரா காரத்துக்கு அடிமையான பூஜா

ஆந்திரா காரத்துக்கு அடிமையான பூஜா ஆந்திரா உணவை ரசித்த பூஜா அதற்கு அடிமையானார். கடந்த 2009ம் ஆண்டு பாலா இயக்கிய நான் கடவுள் படத்துக்கு பிறகு நடிக்க வந்த வாய்ப்புகளை ஏற்காமல் ஒதுங்கி இருந்தார் பூஜா. இந்த காலகட்டத்தில் இலங்கை படங்கள் 2ல் நடித்தார். தற்போது மீண்டும் தென்னிந்திய படங்கள் பக்கம் கவனத்தை திருப்பி இருக்கிறார். கடந்த ஆண்டு விடியும் முன் என்ற படத்தில் நடித்திருந்தார். தற்போது தெலுங்கில் சிரஞ்சீவி உறவினர் மகன் வருண் தேஜ் ஜோடியாக யவனம் என்ற படத்தில் நடிக்கிறார். இதன் ஷூட்டிங் கொளுத்தும் வெயிலில் ஆந்திராவில் நடந்தது. ஆனாலும் காரசாரமான ஆந்திர உணவை வெளுத்துகட்டினார் பூஜா.

இதுபற்றி அவர் கூறும்போது, யவனம் ஷூட்டிங் ஆந்திராவில் நடந்தது. மண்டை காயும் வெயில் கொடுமையாக இருந்தது. ஆனாலும் உணவு உச்கொட்ட வைக்கிறது. ஆளை அசத்தும் ஆந்திரா காரம் இப்போது நினைத்தாலும் நாவில் எச்சில் ஊறுகிறது. கண்களை கலங்க வைக்கும் காரமும், மணமும் நிறைந்த அந்த உணவு பிரமாதம். சாப்பிட்டதும் சொர்க்கத்துக்கே சென்றுவிட்டதுபோல் உணர்வு. இனி ஷூட்டிங் முழுவதும் உணவுக்கு தடை எதுவும் இல்லாமல் வெளுத்துக்கட்டப் போகிறேன் என்றார்.

துணிச்சல்காரி வேடத்தில் நடிக்க நடிகைகள் போட்டா போட்டி

துணிச்சல்காரி வேடத்தில் நடிக்க நடிகைகள் போட்டா போட்டி கங்கனா ரனவத் நடித்த இந்தி படம் தமிழில் ரீமேக் செய்யப்படுகிறது. இந்தியில் கங்கனா ரனவத் நடித்த படம் குயின். இதில் வைதீகமான பெண்ணாக இருந்து துணிச்சல்காரியாக மாறும் கேரக்டரில் கங்கனா ரனவத் நடித்திருந்தார். இப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமை வாங்குவதில் போட்டி நிலவியது. தற்போது நடிகரும் தயாரிப்பாளருமான தியாகராஜன் இதன் உரிமையை பெற்றிருக்கிறார். இதுபற்றி அவர் கூறும்போது,கங்கனா நடித்த கதாபாத்திரத்தில் நடிக்க அவரைப்போன்ற தோற்றமும், பாவமும் கொண்ட நடிகை அவசியம். சில பெரிய ஹீரோயின் இந்த வேடத்தில் நடிக்க ஆர்வம் காட்டுகிறார்கள். இந்தியில் நடித்த கங்கனா தோழியாக நடித்த லிசா ஹேடனுடனை அதே வேடத்தில் தமிழ் உள்ளிட்ட மொழிகளில் நடிக்க கேட்டிருக்கிறேன். 2 அல்லது 3 படங்களை மட்டுமே இயக்கியுள்ள இளம் இயக்குனர் இப்படத்தை இயக்குகிறார். பிரான்ஸ், நெதர்லாந்து, ஸ்பெயின் போன்ற நாடுகளில் ஷூட்டிங் நடக்கிறது என்றார். இப்படத்தில் நடிக்க நயன்தாரா, டாப்ஸி போன்றவர்கள் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது,

அனுஷ்காவுடன் இணைகிறார் திரிஷா

அனுஷ்காவுடன் இணைகிறார் திரிஷா அனுஷ்காவுடன் இணைந்து நடிக்கிறார் திரிஷா. விஷ்ணுவர்தன் இயக்கிய பில்லா படத்தில் நடித்த அஜீத் பின்னர் பில்லா 2-ம் பாகத்திலும் நடித்தார். இதையடுத்து ஆரம்பம், வீரம் படங்களில் நடித்தார். தற்போது கவுதம் மேனன் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்துக்கு இன்னும் பெயரிடப்படவில்லை. ஷூட்டிங் வேகமாக நடந்து வருகிறது. இதுபற்றி பட இயக்குனர் கவுதம் மேனன் கூறும்போது,சூர்யா படம் இல்லை என்றதும் சிம்புவை வைத்து படம் இயக்க எண்ணினேன். அப்போது அஜீத் போன் செய்து, உங்க ஸ்டைல் படத்துல நடிக்கவேண்டும் கதை தயார் பண்ணுங்க என்றார். 

ஒரு மாதத்தில் கதை தயார் செய்து ஓ.கே. வாங்கி ஷூட்டிங் கிளம்பிவிட்டேன். படத்தில் எதிர்பாராத ஒரு கதாபாத்திரத்தில் வருகிறார். பஞ்ச் டயலாக் எதுவும் வைக்க வேண்டாம் என்று அஜீத் கூறி விட்டார். இப்படம் ரிலீஸ் ஆன பிறகு 2ம் பாகம் எடுக்கும் எண்ணமும் இருக்கிறது. அனுஷ்கா, திரிஷா இதில் நடிக்கின்றனர் என்றார். ஏற்கனவே அஜீத், கவுதம் மேனன் படங்களில் பணியாற்றி இருக்கும் திரிஷா இப்படத்தில் நடிப்பதுபற்றி கூறும்போது,‘மீண்டும் எனக்கு பிடித்தவர்களுடன் இணைந்து பணியாற்றுகிறேன் என்றார்.

செவ்வாய், 10 ஜூன், 2014

ரசிகருக்கு அஞ்சலி செலுத்திய விஜய்...!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இவருக்கு என்று ரசிகர்கள் கூட்டமே உள்ளது. விஜய் எப்போதுமே தனது ரசிகர்களை ஒருங்கே அரவணைத்து செல்பவர். தான் எவ்வளவு தான் ஷூட்டிங்கில் பிஸியாக இருந்தாலும் ரசிகர்களை சந்திக்காமல் இருக்க மாட்டார். மாதம் இருமுறை, 2வது ஞாயிறு மற்றும் 4வது ஞாயிற்று கிழமைகளில் ரசிகர்களை சந்தித்து வருகிறார். ஆரம்பத்தில் சென்னை, சாலிகிராமத்தில் உள்ள அலுவலகத்தில் ரசிகர்களை சந்தித்து வந்த விஜய், போக்குவரத்து நெரிசல், போலீஸ் கெடுபிடி போன்ற காரணங்களால் ரசிகர்கள் சந்திப்பை நீலாங்கரையில் உள்ள தனது இல்லத்திற்கு மாற்றிவிட்டார்.

சமீபத்தில் சென்னை, காஞ்சிபுரம், பெங்களூரூ ஆகிய நகரங்களை சேர்ந்த ரசிகர்கள் விஜய்யை வந்து சந்தித்து விட்டு சென்றனர். இருதினங்களுக்கு முன்னர் சேலம், நெல்லை மற்றும் மதுரை மாவட்டத்தை சேர்ந்த ரசிகர்கள் சந்தித்துவிட்டு சென்றனர். அப்போது நெல்லையை சேர்ந்த ரசிகர் ஒருவர் இறந்துவிட்ட செய்தியை அறிந்து அவரது படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார் விஜய். கூடவே நெல்லையை சேர்ந்த ரசிகர்களும் அஞ்சலி செலுத்தினர். மேலும் நடிகர் விஜய்யின் பிறந்தநாள் வருகிற ஜூன் 22ம் தேதி வருகிறது. இதனை கொண்டாடுவது தொடர்பாக ரசிகர்கள், விஜய்யை சந்தித்து கலந்து ஆலோசித்து உள்ளனர்.

அனுஷ்காவிற்கு அடுத்த ஆண்டு டும் டும் !

அனுஷ்காவின் தீவிர ரசிகர்கள் யாராவது இருந்தால் கொஞ்சம் மனசைத் தேத்திக்குங்க…அவங்களுக்கு அடுத்த வருஷம் கல்யாணம் பண்ணி வைக்கிற எண்ணத்துல அவங்க பொற்றோர் இருக்காங்களாம். முப்பது வயதை அனுஷ்கா கடந்து விட்டதால்தான் இந்த முடிவு என்கிறார்கள்.

அனுஷ்கா தற்போது தமிழ், தெலுங்கு என முக்கியமான சில பிரம்மாண்டமான படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். விஜய், விக்ரம், சூர்யா, ஆர்யா, கார்த்தி என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக ஏற்கெனவே நடித்து விட்டார். தற்போது ரஜினிகாந்த், அஜித் ஆகியோருடன் நடித்துக் கொண்டிருக்கிறார். அதே போல், தெலுங்கிலும் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து விட்டார்.

கர்நாடக மாநிலம், மங்களூருவில் பிறந்த அனுஷ்கா பெங்களூருவில் பள்ளிப் படிப்பையும், கல்லூரிப் படிப்பையும் முடித்தவர். அதன் பின் யோகாவில் தேர்ச்சி பெற்று யோகா பயிற்சியாளராக இருந்தார். அப்போது அவருக்குக் கிடைத்த பழக்கத்தின் மூலம் நடிகர் நாகார்ஜுனா அவரை தெலுங்குத் திரையுலகில் அறிமுகப்படுத்தினார். 2005ம் ஆண்டு வெளிவந்த 'சூப்பர்' என்ற தெலுங்குப் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். தமிழில் 2006ம் ஆண்டு வெளிவந்த 'ரெண்டு' படத்தின் மூலம் அறிமுகமானார். ஆனால், அதன் பின் அருந்ததி படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்குப் பரிச்சயமானார்.

இதுவரை சுமார் 40 படங்களில் நடித்துள்ள அனுஷ்காவிற்கு அவரது பெற்றோர் ஒரு சில வரன்களையும் பார்த்து விட்டார்களாம். தற்போது நடித்து வரும் படங்களின் படப்பிடிப்பு முடிந்ததும், அனுஷ்காவின் திருமணப் பேச்சு ஆரம்பமாகும் என்கிறார்கள். கடந்த சில நாட்களாக அனுஷ்காவின் திருமணச் செய்திதான் ஆந்திரத் திரையுலகில் அடிபட்டுக் கொண்டிருக்கிறதாம். ஒரு பக்கம் ரசிகர்களுக்கு ஏமாற்றமாக இருந்தாலும் சில ஹீரோக்களுக்கும் ஏமாற்றமாக இருக்கும் என்கிறார்கள். ஏனென்றால், அனுஷ்காவை தங்களது படங்களில் ஜோடியாக நடிக்க வைக்க வேண்டும் என இன்னும் சில ஹீரோக்கள் முயன்று வருகிறார்களாம்.

ரகசியம் காக்கும் அஜீத்..!

 கௌதம்மேனன் இயக்கத்தில் தற்போது நடித்து வரும் புதிய படத்தின் படப்பிடிப்புக்காக அஜீத் மலேஷியா புறப்பட்டுச் சென்றார். அவருடைய 55 வது படமாக உருவாகி வரும் இப்படத்துக்கு இன்னும் பெயர் சூட்டவில்லை. காரணம்...முன்கூட்டியே தலைப்பு வைத்தால் இது என்னுடைய தலைப்பு என்று யாராவது சொந்தம் கொண்டாடுவார்கள். பிறகு கோர்ட்டுக்குப் போவார்கள். இதனால் அனாவசிய பிரச்னை என்பதால் கடைசி நேரத்தில் தலைப்பு வைத்தால் போதும் என்று சொல்லிவிட்டாராம் அஜீத். அதேசமயம் இப்படத்தில் அஜீத் நடிக்கும் கேரக்டரான சத்யாவையே இப்படத்தின் தலைப்பாக வைக்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், சென்னையில் 75 சதவிகித படப்பிடிப்பு நிறைவுற்றநிலையில் க்ளமாக்ஸ் காட்சியை படமாக்க திட்டமிட்டார் இயக்குநர் கௌதம் மேனன். க்ளைமாக்ஸ் காட்சியை சென்னையில் எடுத்தால் அது பற்றிய தகவல் வெளியே கசிந்து மீடியாக்களில் செய்தியாகிவிடும். அது படத்துக்கு நல்லதல்ல என்று நினைத்தாராம் அஜீத். இது பற்றி இயக்குநருடன் கலந்து பேசிய பிறகு மலேஷியாவில் க்ளைமாக்ஸ்காட்சியை எடுக்கலாம் என முடிவு செய்துள்ளனர். அதன்படி கௌதம்மேனன் தலைமையிலான படக்குழு மலேஷியா புறப்பட்டுச் சென்றுள்ளது

மஞ்சப்பை

  • நடிகர் : விமல் , ராஜ்கிரண்
  • நடிகை : லட்சுமி மேனன்
  • இயக்குனர் :என்.ராகவன்





தாத்தாவக ராஜ்கிரண், பேரனாக விமல் நடிக்க இன்றைய நம் சமூக கட்டமைப்பில் அரிதாகி வரும் தாத்தா - பேரனின் பாசத்தையும், நேசத்தையும் மிக நேர்த்தியாக எடுத்து சொல்லியிருக்கும் திரைப்படம் தான் ‛‛மஞ்சப்பை''. இயக்குநர் சற்குணத்தின் உதவியாளர் என்.ராகவனின் இயக்கத்தில், இயக்குநர் சற்குணம் பிரதர்ஸூம், இயக்குநர் என்.லிங்குசாமி பிரதர்ஸூம் இணைந்து தயாரித்திருக்கும் ‛‛மஞ்சப்பை'' திரைப்படம் குறித்து பார்ப்போம்...

கதைப்படி, அப்பா, அம்மாவை சின்ன வயதிலேயே விபத்தொன்றில் பறிகொடுத்துவிட்டு, கிராமத்து தாத்தாவின் அரவணைப்பில் வளர்ந்து ஆளாகி, சிட்டியில் பெரிய ஐ.டி. கம்பெனியில் கைநிறைய சம்பளத்துடன் வேலை பார்க்கிறார் விமல். கூடவே, மருத்துவம் படிக்கும் லட்சுமிமேனின் கடைக்கண் பார்வையும், காதலும் கிடைக்க, மிகவும் சந்தோஷ வாழ்க்கை வாழும் விமலுக்கு, அவர் எதிர்பார்த்த மாதிரியே அமெரிக்காவில் செட்டில் ஆகும் வாய்ப்பும் தேடி வருகிறது. இன்னும் இரண்டொரு மாதங்களில் அமெரிக்கா செல்ல வேண்டிய சூழலில், அந்த கொஞ்சகாலத்திற்கு தன்னை வளர்த்து ஆளாக்கிய தாத்தாவை சிட்டிக்கு வரவழைத்து, சகல சவுகரியங்களும் நிரம்பிய பிளாட்டில் தங்க வைத்து சந்தோஷப்படுத்த எண்ணுகிறார் விமல்.

விமலின் விருப்பப்படி நகரத்திற்கு வரும் தாத்தா ராஜ்கிரணின் பட்டிக்காட்டு தனங்களால், விமலின் அமெரிக்க ஆசையும், காதலியை கல்யாணம் கட்டிக் கொள்ளும் எண்ணமும் தவிடு பொடியாகிறது. தன்னால் கெட இருந்த தன் பேரனின் ஆசை, அபிலானஷகளை, தன் பேரன் மீண்டும் அடைய ராஜ்கிரண் எடுக்கும் முயற்சியும், அதனால் விமலுக்கு கிடைக்கும் மகிழ்ச்சியும், நெகிழ்ச்சியும் தான் ‛மஞ்சப்பை' படத்தின் மொத்த கதையும்!

கரடுமுரடான நாயகராக இருந்து அதன்பின் அதேபாணியில் அப்பாவான ராஜ்கிரண்., இப்படத்தில் தாத்தாவாக நல்லி எலும்பு கடிப்பதில் தொடங்கி... நான்கைந்து பேரை தூக்கிபோட்டு பந்தாடுவது வரை தன் பாணியில் தாத்தாவாகவும், தன் பங்கை சரியாக செய்திருக்கிறார். அதிலும் பிரட்ரோஸ்ட் மெஷின் எனக்கருதி, விமலின் அமெரிக்க ஆசையை பூர்த்தி செய்யும் பிராஜக்ட்டுகளுடன் காத்திருக்கும், லேப்-டாப்பில் பிரட்டை வைத்து, அதை அடுப்பில் தூக்கி வைத்து வெடிக்க வைக்கும் பட்டிக்காட்டு தனத்தில் தொடங்கி, எலி மருத்து தின்ற குழந்தைக்கு உப்பு-புளி கரைசல் மருந்து கொடுத்து அதை பிழைக்க வைக்கும் பட்டிக்காட்டு மருத்துவம் பார்ப்பது வரை சகலத்திலும் சக்கை போடு போட்டிருக்கிறார்.

ஐ.டி. இளைஞராக விமல். விமலை ஐ.டி. இளைஞராக அதுவும், அமெரிக்க ஆசையுடன் திரியும் சாப்ட்வேர் ஹயாக பார்ப்பது சற்றே கடினம் என்றாலும், விமலின் நிறை, குறைகளை அறிந்து அவரை அழகாக வேலை வாங்கியிருக்கும் இயக்குநர் என்.ராகவன், விமல் வரும் காட்சிகளில் எல்லாம் விமல் வாயிலாக மிளிருகிறார். விமலும் வழக்கம் போலவே தாத்தா - பேரன் பாசக்காட்சிகளிலும், லட்சுமியுடனான காதல் காட்சிகளிலும் மிரட்டியிருக்கிறார் மிரட்டி! 

ேஹாய்... என ஒரு மாதிரி கவர்ந்திழுக்கும் சப்தத்துடன் வரும் லட்சுமி மேனன், லாங்-ஷாட்டுகளில் அழகாகவும், குளோசப் ஷாட்டுகளில் தன் வயதை தாண்டிய வளர்ச்சியுடனும் மிரட்டுகிறார். 

‛காதல்' சரவணன், ‛கும்கி' அஸ்வின், எல்.எம்.எம்.சுவாமிநாதன் உள்ளிட்டவர்களும் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர்.

என்.ஆர்.ரகுநந்தனின் இசையில், ‛இசைஞானி' இளையராஜா எட்டிப்பார்த்தாலும், ‛ஆகாசநிலவு', ‛அன்புதான்', ‛பத்து பத்து‛, ‛சட்டென' உள்ளிட்ட ஐந்து பாடல்களும் இதமாகவே இருப்பது ‛மஞ்சப்பை'யின் பெரும்பலம்! 

தேவாவின் படத்தொகுப்பு, மாசாணியின் ஒளிப்பதிவு உள்ளிட்டவைகளும் ப்ளஸ்!

ஆகமொத்தத்தில், என்.ராகவனின் எழுத்து-இயக்கத்தில், ‛மஞ்சப்பை' வழக்கமான ‛கமர்ஷியல், கலெக்ஷ்ன் - சினிமாபொய்' அல்ல...! மலிந்து வரும் தாத்தா - பேரன் பாச உறவிற்கு மகுடம் சூட்டியிருக்கும் ‛மெய்' என்றால் மிகையல்ல!!

ஞாயிறு, 1 ஜூன், 2014

இது நம்ம ஆளு பட வேலைகளை துரிதப்படுத்திய பாண்டிராஜ்!

 சிம்பு- பாண்டிராஜ் முதன்முதலாக இணைந்துள்ள படம் இது நம்ம ஆளு. இந்த படத்தில் சிம்புவின் தம்பி குறளரசன் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். மேலும், நயன்தாரா மீண்டும் சிம்புவுடன் ஜோடி சேர்ந்துள்ளார்.

இப்படத்தை தொடங்கியபோது, நயன்தாராவை நடிக்க வைப்பதாக உத்தேசமே இல்லை. இந்தி நடிகைகள் யாரையாவது சிம்புவுக்கு ஜோடி சேர்க்கலாம் என்று யோசித்து வந்த பாண்டிராஜ்க்கு திடீரென்று தோன்றிய யோசனைதான் நயன்தாரா. ஆனால் அந்த நேரத்தில் சிம்பு-நயன்தாராவுக்கிடையே பேச்சுவார்த்தைகூட கிடையாது.

அதனால் இதுபற்றி அவர் சிம்புவிடம் சொன்னபோது, இது சாத்தியமாகுமா? என்று தயங்கினார். அதற்கு, நான் பேசி சம்மதிக்க வைக்கிறேன் என்று நயன்தாராவை தொடர்பு கொண்ட பாண்டிராஜ், அவரை புக் பண்ணி இப்போது படத்தையும் கிட்டத்தட்ட இறுதிகட்டத்துக்கு கொண்டு வந்து விட்டார். இந்த நிலையில், திடீரென்று வாலு படத்தை முடித்துக்கொடுக்க சிம்பு சென்று விட்டதால், இது நம்ம ஆளு சிலகாலம் கிடப்பில் கிடந்தது.

ஆனால், இப்போது வாலு பட வேலைகள் முடிந்து விட்டதால் இது நம்ம ஆளு படத்தின் வேலைகளில் இறங்கி விட்டார் சிம்பு. ஏற்கனவே படமான காட்சிகளை எடிட் செய்து டப்பிங் பேசிவிட்டவர்கள், இப்போது படமாகும் காட்சிகளையும் உடனுக்குடன் எட்டி செய்து அவற்றுக்கு டப்பிங்கும் பேசி வருகிறார்களாம். ஆக, இழுத்தடித்துக்கொண்டு கிடந்த இது நம்ம ஆளு, விரைவில் திரைக்கு வரும் சூழல் நிலவியிருக்கிறது.

ஏ.ஆர்.முருகதாஸின் இயக்கத்தில் நடிக்க விருப்பம தெரிவித்த விக்ரம்!

Vikram likes to act in A.R.Murugadas direction ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் கோலிசோடா விஜய்மில்டன் இயக்கும் படத்தில் தற்போது நடித்துக்கொண்டிருக்கிறார் விக்ரம். இந்த படத்திற்கு முருகதாஸிடம் அட்வான்ஸ் வாங்கும்போது, உங்கள் இயக்கத்திலும் சீக்கிரமே நான் நடிக்கனும் என்றொரு விண்ணத்தை அட்வான்சை கைப்பற்றியபடியே வைத்தாராம் விக்ரம்.

அதற்கு முருகதாஸ்தரப்பில் விக்ரம் எதிர்பார்த்த பதில் வரவில்லையாம். பார்க்கலாம். எல்லாவற்றையும் காலம்தான் முடிவு செய்ய வேண்டும் என்று ஒத்த வார்த்தையில் கூறி சீயானை அனுப்பி விட்டாராம்.

ஆனால், அப்படி முருகதாஸ் சொன்னதற்கு பின்னாடி ஒரு பெரிய ப்ளாஸ்பேக் உள்ளதாம். அதாவது, சூர்யா நடித்த கஜினி படத்தின் கதையை ஆஸ்கர் பிலிம்சிடம் ஓ.கே செய்த ஏ.ஆர்.முருகதாஸ் அதையடுத்து விக்ரமிடம் கதை சொல்லுமாறு அவர்கள் சொன்னதும், அவரை தேடிச்சென்று கதையை சொல்லிவிட்டு வந்திருக்கிறார்.

ஆனால், அந்த கதை விக்ரமிற்கு பிடித்து விட்டபோதும், பார்க்க சின்ன பையனாட்டம் இருக்கும் முருகதாஸ் மீது அவருக்கு நம்பிக்கை இல்லையாம். அதனால் தனது மனதில் பட்டதை ஆஸ்கர் பிலிம்சிடம் சொல்லி விட்டாராம். அதன்காரணமாக, அந்த படத்தை தயாரிக்கும் முயற்சியையும கைவிட்டதாம் ஆஸ்கர் பிலிம்ஸ்.

இப்படி விக்ரம் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்ததால் அப்போது கஜினி படமே நிறுத்தப்பட்டதாம். அதன்பிறகுதான் சூர்யாவிடம் அந்த கதையை சொல்லி, படத்தை ஹிட்டாக கொடுத்த முருகதாஸ், அதே கதையை தெலுங்கு. இந்தி என பல மொழிகளிலும் மாறி மாறி இயக்கி தொடர்ந்து ஹிட் கொடுத்தார். 

ஆக இதுதான் முன்பு நடந்திருக்கிறது. இருப்பினும் தனது தயாரிப்பில் விக்ரமுக்கு ஒரு படம் கொடுத்துள்ளார் முருகதாஸ். அதேபோல் விக்ரமும் பழைய கசப்பான சம்பவங்களை மறந்து மீண்டும் முருகதாசுக்கு கால்சீட் கொடுத்து அவரது இயக்கத்தில் நடிக்க வேண்டும் எனறு ஆசைப்படுகிறார். எப்படியோ முருகதாஸ் சொன்னது போல், இதற்கான பதிலை காலம்தான் சொல்ல வேண்டும்.

'காவியத் தலைவன்' தாமதம்…ஏ.ஆர். ரகுமான் காரணமா….?



  1. 'அரவான்' படத்திற்குப் பிறகு வசந்த பாலன் இயக்கி வரும் படம் 'காவியத் தலைவன்'. பல மாதங்களுக்கு முன் ஆரம்பிக்கப்பட்ட இந்த படம் மெதுவாகவே வளர்ந்து வந்தது. சமீபத்தில்தான் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது.

சுதந்திரக் காலத்திற்கு முந்தைய கதையாக இருப்பதாலும், பல சவாலான காட்சிகள் இருப்பதாலும் படத்தின் படப்பிடிப்பு தாமதமானாலும், ஏ.ஆர்.ரகுமானும் ஒரு காரணம் என்று சொல்லப்படுகிறது. படம் ஆரம்பமான நேரத்தில் ஒரு சில பாடல்களைக் கொடுத்த ஏ.ஆர். ரகுமான் அதன் பின் ஒவ்வொரு பாடலையும் இசையமைத்துக் கொடுப்பதற்கு மிகவும் நேரம் எடுத்துக் கொண்டாராம்.

படத்தை எப்படியாவது கோடை விடுமுறையில் வெளியிட்டு விடலாம் என்று நினைத்த தயாரிப்பு நிறுவனமும், இயக்குனரும் ரொம்பவே ஏமாந்து போய்விட்டார்களாம். ஒரு பாடலைக் கொடுப்பதற்கே ஏ.ஆர். ரகுமான் மூன்று மாதங்கள் எடுத்துக் கொண்டிருக்கிறார். 
மற்ற புது இசையமைப்பாளர்களாக இருந்தால் விரட்டி கேட்டு விடலாம், ரகுமானாயிற்றே அப்படியெல்லாம் கேட்க முடியாது. அதனால் அவர் தரும் பொறுமையாகக் காத்திருந்து படப்பிடிப்பை நடத்தியிருக்கிறார்கள். படத்திற்காக அவர் தர வேண்டிய கடைசிப் பாடலை தர மட்டும் மூன்று மாத காலம் எடுத்துக் கொண்டாராம். அதன் பின் இரவு பகலாக படப்பிடிப்பை நடத்தி முடித்திருக்கிறார்கள்.

ஏ.ஆர். ரகுமான் தமிழில் வருடத்திற்கு நான்கைந்து படங்களுக்கு மட்டுமே இசையமைக்கிறார். அதிலும் சிறிய படங்களுக்கு அவர் இசையமைப்பதேயில்லை என்ற குற்றச்சாட்டு பல வருடங்களாகவே இருந்து வருகிறது. ரஜினிகாந்த் போன்ற நடிர்களுக்கும், ஷங்கர் , மணிரத்னம் போன்ற மிகப் பெரிய இயக்குனர்களின் படங்களுக்கு மட்டுமே அவர் இசையமைக்கிறார் என மற்ற இயக்குனர்களே குற்றம் சாட்டி வருகிறார்கள். ஆனால், ரகுமான் இதற்கெல்லாம் பதிலளிப்பதேயில்லை.

தற்போது 'காவியத் தலைவன்' படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் ஆரம்பமாகியுள்ளன. விரைவில் படத்தின் இசை வெளியீட்டை பிரம்மாண்டமா நடத்தத் திட்டமிட்டுள்ளார்களாம். 

'லிங்கா' தெலுங்கு டப்பிங் உரிமை 30 கோடி…!


 ரஜினிகாந்த், கே.எஸ்.ரவிக்குமார் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இணைந்துள்ள 'லிங்கா' படத்தின் தெலுங்கு டப்பிங் உரிமையை 30 கோடி ரூபாய் கொடுத்து வாங்குவதற்குத் தயாராக உள்ளார்களாம்.



இது சம்பந்தமாக தயாரிப்பு நிறுவனத் தரப்பிலிருந்து கசிந்துள்ள செய்தியில் பல தயாரிப்பாளர்கள் 'லிங்கா' படத்தின் தெலுங்கு உரிமையை வாங்க போட்டி போடுகிறார்களாம். பொதுவாகவே, ரஜினி நடிக்கும் படம் என்றால் தெலுங்கிலும் நல்ல வியாபாரம் நடக்கும். அவருடைய படம் வெளிவந்து சில வருடங்கள் ஆகிவிட்டதால் இந்த அளவுக்கு படத்துக்கு 'டிமாண்ட்' ஏற்பட்டுள்ளதாகச் சொல்கிறார்கள்.

அது மட்டுமல்ல படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசை, அனுஷ்கா, சோனாக்ஷி சின்ஹா ஆகியோர் வேறு ரஜினியுடன் நடிப்பதால் படத்தின் மதிப்பு அதிகமாகவே உள்ளது. படம் ஆரம்பமான நாள் முதல் படப்பிடிப்பு இடைவிடாமல் நடந்து வருகிறது. மைசூரில் ஆரம்பமான படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் நடந்து வருகிறது.

ஒரு டப்பிங் படத்திற்கு 30 கோடி ரூபாய் அளவில் விலை பேசப்பட்டு வருகிறது என்பது தெலுங்குத் திரையுலகினரை ஆச்சரியப்பட வைத்துள்ளதாம். எந்த ஒரு படத்திற்கும் இல்லாத விலை இந்த படத்திற்காக பேசப்படுவது நேரடியாக தெலுங்குப் படம் எடுக்கும் தயாரிப்பாளர்களையும் யோசிக்க வைத்துள்ளது. 

ரஜினிகாந்திற்கு கடந்த சில வருடங்களாகவே இந்திய அளவில் பெரும் வரவேற்பு ஏற்பட்டுள்ளது. தேர்தலுக்கு முன்னதாக நரேந்திர மோடி அவரைச் சந்தித்துப் பேசியது, சமீபத்திய அவரது ட்விட்டர் அறிமுகம், 'கோச்சடையான்' திரைப்படம் என கடந்த சில மாதங்களாக மீடியாக்களில் அடிக்கடி பேசப்பட்டு வருகிறார்.

தெலுங்கு டப்பிங்கே இவ்வளவு விலை என்றால் தமிழில் ஏரியா விற்பனை எப்படி இருக்கும் ?