ஞாயிறு, 27 ஏப்ரல், 2014

Filled Under:

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் சந்தானத்துக்கும் ஓப்பனிங் பாடல்!

 சமீபகால சினிமாக்களில் ஹீரோ என்றால் ஒரு ஓப்பனிங் பாடலோடு என்ட்ரி கொடுக்க வேண்டும் என்பது பாணியாகி விட்டது. ஆனால், ரஜினிக்கு பிறகு அதை அஜீத், விஜய் உள்ளிட்டமுன்னணி நடிகர்கள்தான் செய்து வந்தனர். ஆனால் இப்போதோ புதிதாக வருபவர்களே ஒரு பில்டப்பாக இருக்கட்டுமே என்று பாடலோடுதான் என்ட்ரி கொடுக்கிறார்கள்.

அந்த வகையில், வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் முதன்முறையாக முழு ஹீரோவாகி உள்ள சந்தானமும், அப்படத்தில் ஒரு ஓப்பனிங் பாடலோடுதான் என்ட்ரி கொடுக்கிறாராம். அந்த பாடல் பிரபல ஹீரோக்களுக்கு இணையாக இருக்க வேண்டும் என்பதற்காக, மியூசிக் டைரக்டர் சித்தார்த்தை போட்டு ஒரு வழி பண்ணி ஏராளமான டியூன் போட்ட பிறகுதான் அதிலிருந்த ஒரு டியூனை ஓ.கே பண்ணினாராம் சந்தானம்.

அதுமட்டுமின்றி, அந்த பாடலுக்காக பல நாட்களாக நடன ஒத்திகை நடத்தியவர், இன்றைய இளவட்ட ஹீரோக்களை மிஞ்சும் வகையில் மூவ்மென்ட் இருக்க வேண்டும். அதற்காக நான் எவ்வளவு கஷ்டப்படவும் தயாராக இருக்கிறேன் என்று நடன மாஸ்டரிடம் சொல்லிதான் பயிற்சி எடுத்தாராம். மேலும், சந்தானத்துக்காக பாடும் பாடகரின் குரலும் அவருக்கு ஒத்துப்போக வேண்டும் என்று, பல பாடகர்களின் குரலை பரிசீலித்து கடைசியாக முகேஷ் பாடினால் சந்தானத்துக்கு மேட்சாக இருக்கும் என்று அவரை பாட வைத்தார்களாம்.

அந்த அளவுக்கு ஒவ்வொரு விசயத்தையும் பாத்து பாத்து செய்திருக்கிறாராம் சந்தானம்.

0 உங்கள் கருத்து:

கருத்துரையிடுக