கடந்த சில வருடங்களாகவே ஆச்சி மனோரமாவுக்கு உடல்நலத்தில் பிரச்னை
இருந்து கொண்டிருக்கிறது. இதனால் படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டு
வீட்டில் ஒய்வெடுத்து வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு கடுமையாக
உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார். ஒருவாரம் வரை
தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த மனோரமா பின்னர் சாதாரண வார்டுக்கு
மாற்றப்பட்டார். பத்து நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமாகி
வீடு திரும்பினார். தற்போது வீட்டில் முழு ஓய்வெடுத்து வருகிறார்.
"தற்போது
அவர் குணமடைந்து விட்டாலும் அவர் உடல் மிகவும் பலவீனமாகத்தான் இருக்கிறது.
இனியும் அவர் நடிப்பது அவர் உடல்நலத்திற்கு நல்லதல்ல. வீட்டிலேயே
ஓய்வெடுக்க வேண்டும் இப்போது அவருக்கு தேவை அன்பான உபசரிப்பும், கனிவான
பணிவிடையும்தான்" என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளார்கள்.
கடைசியாக
பேராண்டி என்ற படத்தில் முக்கியமான கேரக்டரில் நடிக்க ஒப்புக்
கொண்டிருக்கிறார். அதில் ஒரு பாடலும் பாடியிருக்கிறார். அந்த படத்தை
முடித்து கொடுத்து விட்டு நடிப்பில் இருந்து முழுமையாக விலகிக் கொள்கிறேன்
என்று அவர் கூறிவிட்டதாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.
0 உங்கள் கருத்து:
கருத்துரையிடுக