ஆனால், இபபோது தான் இயக்கும அஜீத் படம் மூலம் மீண்டும் ஹாரிஸ்ஜெயராஜூடன் இணைந்திருக்கிறார் கெளதம்மேனன். ஏற்கனவே தாங்கள இணைந்த படங்களில் பாடல்கள் பெரிய அளவில் ஹிட்டானதால், இந்த படத்திலும் அது தொடர வேண்டும் என்றும் ஹாரிஸை கேட்டுக்கொண்டுள்ளார் கெளதம்.
அதையடுத்து, தல அஜீத்தை மனதில் கொண்டு ஏராளமான டியூன்களை ரெடி பண்ணிக்கொண்டிருக்கிறார் ஹாரிஸ் ஜெயராஜ். அவரைப்பொறுத்தவரை அஜீத்துடன் இணையும் முதல் படம் என்பதால், அஜீத்தும், கெளதம்மேனனும் எதிர்பார்ப்பதை விடவும் பிரமாதமான பாடல்களை கொடுத்து விட வேணடும் என்று தீயாக வேலை செய்து கொண்டிருக்கிறார்.
அதனால், இதற்கு முன்புவரை ஹாரிஸ் ஜெயராஜ் ரொம்ப ஸ்லோவாகத்தான் இசையமைத்துக் கொடுப்பார் என்று அவரை குற்றம் குறை சொல்லிக்கொண்டு வேறு இசையமைப்பாளர்களிடம் சென்று கொண்டிருநத டைரக்டர்கள், அவரது இந்த புதிய வேகம் கண்டு ஆச்சர்யத்தில் உறைந்து நிற்கிறார்கள். அந்த அளவுக்கு ராத்திரி பகலாக தூக்கத்தைகூட ஓரங்கட்டி வைத்துவிட்டு பாடல்களை ரெடி பண்ணிக்கொண்டிருக்கிறாராம் ஹாரிஸ்.
0 உங்கள் கருத்து:
கருத்துரையிடுக