இதற்கிடையே அஜீத்துடன் நடித்த பில்லா படத்தில் பிகினி உடைதரித்து இளவட்ட இதயங்களை கொள்ளையடித்த நயன்தாரா, எத்தனை முறை காதல் சர்ச்சைகளில் சிக்கி சிதைந்து கொண்டிருந்தாலும், ரசிகர்களுக்கு மட்டும் அவர் மீதான கிரேஸ் குறையவில்லை. காரணம், பிரச்னைகள் ஒரு பக்கமிருந்தாலும், தனது அழகை பேணி பாதுகாப்பதில் அதீத அக்கறை காட்டி வருகிறார் நயன்தாரா.
குறிப்பாக, ஆரம்பம், ராஜா ராணி, அனாமிகா படங்களில் நடித்து முடித்த பிறகு, சிம்பு, தனுஷ், ஜெயம்ரவி, என இளவட்டங்களின் படங்கள் கிடைத்திருப்பதால், இந்த இடத்தை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக, இப்போது தனது உடல் எடையை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நயன்தாரா, அடிக்கடி ஆயுர்வேத குளியல் போடுகிறாராம். இதன்காரணமாக, அவரது உடம்பும், தோலும் மினுமினுப்பு குறையாமல் இருக்குமாம். இதற்காகவே மாதாமாதம் ஒரு பெரிய தொகையை செலவு செய்கிறாராம் நயன்தாரா.
0 உங்கள் கருத்து:
கருத்துரையிடுக