செவ்வாய், 11 பிப்ரவரி, 2014

Filled Under:

டி.ராஜேந்தர் மகள் திருமணம்: திரையுலகினர் வாழ்த்து

பிரபல இயக்குனரும், நடிகருமான டி.ராஜேந்தர் மகள் இலக்கியாவுக்கும், தெலுங்கு கட்காரி சேனல் அதிகாரி அபிலாஷ் சிங்கப்பூருக்கும் நேற்று (பிப்ரவரி 10) காலை சென்னையில் உள்ள லீலா பேலஸ் நட்சத்திர ஓட்டலில் திருமணம் நடந்தது. அதே ஓட்டலில் மாலை திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் தி.மு.க தலைவர் கருணாநிதி நேரில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். அவருடன் பொருளாளர் ஸ்டாலின், கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாளும் வந்திருந்தனர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன் மனைவி லதாவுடன் கலந்து கொண்டார். புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம், இந்திய ஜனநாயக கட்சித் தலைவர் பாரிவேந்தர். மலேசிய இந்திய ஐக்கிய கட்சித் தலைவர் டத்லோஸ்ரீ கே.எஸ்.நல்லா உள்ளிட்ட அரசியல் கட்சி பிரமுகர்களும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.

மற்றும் கமலஹாசன், விஜய், விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, சிவகுமார், பிரபு, இயக்குனர்கள் பாலச்சந்தர், பாரதிராஜா, கே.எஸ்.ரவிகுமார், வசந்த், பாக்யராஜ், நடிகைகள் மும்தாஜ், குஷ்பு, மீனா, தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் கேயார், செயலாளர்கள் ஞானவேல்ராஜா, டி.சிவா ஆர்.பி.சவுத்ரி உள்பட திரையுலகினர் திரண்டு வந்து மணமக்களை வாழ்த்தினர். வந்திருந்தவர்களை டி.ராஜேந்தர், உஷா ராஜேந்தர், சிம்பு, குறளரசன் ஆகியோர் வரவேற்றனர்.

0 உங்கள் கருத்து:

கருத்துரையிடுக