வெள்ளி, 14 பிப்ரவரி, 2014

Filled Under:

2-வது மனைவிகளுக்கு நடக்கும் கொடுமை தான் இது : பாலுமகேந்திராவை பார்க்க விடவில்லை என நடிகை மெளனிகா புகார்!

mounika-balumahendra எனது கணவர் பாலுமகேந்திராவின் உடலை பார்க்க சிலர் திட்டமிட்டு அனுமதிக்கவில்லை என்று பிரபல நடிகை மெளனிகா பரபரப்பு புகார் கூறியிருக்கிறார்.
பாலுமகேந்திரா டைரக்ட் செய்த ‘வண்ண வண்ண பூக்கள்’ படத்தில் ஹீரோயினாக அறிமுகப்படுத்தப்பட்டவர் தான் மெளனிகா.
தொடர்ந்து சில திரைப்படங்கள் மற்றும் பாலுமகேந்திரா டைரக்ட் செய்த கதை நேரம்  தொலைக்காட்சித் தொடர் உட்பட சில தொடர்களிலும் நடித்து வந்தார். பாலுமகேந்திரா மெளனிகாவை மூன்றாவது மனைவியாக திருமணம் செய்து கொண்டார்.
இருவரும் ஒன்றாகவே வாழ்ந்தனர்.
‘மௌனிகாவும் என் மனைவிதான்’ என்று 2004-ம் ஆண்டு பகிரங்கமாக அறிவித்தார் பாலு மகேந்திரா.  1998-ம் ஆண்டு கோயிலில் வைத்து தாலி கட்டி மனைவியாக்கிக் கொண்டதாகவும் ஒரு பேட்டியில் அவர் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் நேற்று பாலுமகேந்திராவின் மரணம் பற்றி தகவல் அறிந்ததும் அவரது உடலைப் பார்க்க மருத்துவமனைக்குச் சென்ற மௌனிகாவை சிலர் அனுமதிக்கவில்லையாம்.
இதுகுறித்து மனம் திறந்த மெளனிகா 2-வது மனைவிகளுக்கு நடக்கும் கொடுமை தான் இது என்று பரபரப்பு புகார் கூறியிருக்கிறார்.
“பாலுமகேந்திரா என் கணவர். கடந்த 1993-ம் ஆண்டு முதல் அவருக்கும் எனக்கும் தொடர்பு உள்ளது. 16 வருடங்களுக்கு முன்பு 1998-ம் ஆண்டு நாங்கள் இருவரும் கோயிலில் திருமணம் செய்து கொண்டோம். அன்று முதல் கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்தோம். அவர் இறந்த தகவல் அறிந்து மருத்துவமனைக்கு ஓடினேன்.
ஆனால் அவர் உடலைப் பார்க்க என்னை சிலர் அனுமதிக்கவில்லை.  பொதுவாக எல்லா 2-வது மனைவிகளுக்கும் நடக்கும் கொடுமைதான் இது என்பது எனக்குப் புரிந்தாலும், இந்தக் கொடுமையை என்னால் ஜீரணிக்க முடியவில்லை,” என்று தெரிவித்துள்ளார்.

0 உங்கள் கருத்து:

கருத்துரையிடுக