ஏ.ஆர்.முருகதாஸ் உதவியாளர் திருக்குமரன் இயக்கும் படம் ‘மான் கராத்தே’. சிவகார்த்திகேயன், ஹன்சிகா நடிக்கும் இப்படத்துக்கு அனிருத் தான் மியூசிக் டைரக்டர். இப்படத்திற்காக ஒரு கானா பாடலை உருவாக்கியுள்ளார் அனிருத்.
இந்தப் பாடலை பாட, வித்தியாசமான குரலைத் தேடிய அனிருத்துக்கு உடனே நினைவுக்கு வந்தவர் இசையமைப்பாளர் தேவா. அடுத்த நிமிஷம் அவரைத் தொடர்பு கொண்டு விருப்பத்தை சொன்னபோது அவரும் உடனே சம்மதித்துப் பாடி கொடுத்துள்ளாராம்.
‘படத்தின் க்ளைமாக்ஸில் இடம் பெறும் இப்பாடல் இந்த வருடத்தின் சூப்பர் ஹிட் பாடலாக அமையும்’ என்று கூறியுள்ள அனிருத் இந்தப் பாடலில் சிவகார்த்திகேயனுன் சேர்ந்து செம குத்தாட்டம் போட்டிருக்கிறார்.
‘எதிர் நீச்சல்’ படத்தில் ஒரு பாடலுக்கு வந்து போன அனிருத் ‘வணக்கம் சென்னை’ படத்தில் சென்னை கேங்ஸ்டார் பாடலில் ஆடினார். தற்போது ‘மான் கராத்தே’ படத்துக்காக ஒரு பாடலுக்கு டான்ஸ் ஆடியிருக்கிறார். இந்தப்பாடல் ஒரு டாஸ்மாக் பேக்-கிரவுண்ட் பாடல் என்பதால் நேர்த்தியாக ஆடியிருக்கிறாராம் அனிருத்.
0 உங்கள் கருத்து:
கருத்துரையிடுக