செவ்வாய், 4 பிப்ரவரி, 2014
Filled Under:
மோகன்லால் - மீனா நடித்த, த்ரிஷ்யம்' மலையாளத்தில், பட்டி, தொட்டி எங்கும், பட்டையை கிளப்பியுள்ளது. இதனால், தமிழ் திரைப்பட உலகின் முன்னணி நடிகர்கள், இந்த படத்தின் தமிழ் ரீ - மேக்கில் நடிக்க, ஆர்வம் காட்டினர். லேட்டஸ்ட்டாக கிடைத்த தகவலின்படி, இந்த படத்தில், கமல் நடிப்பதாக முடிவாகியுள்ளது. மலையாளத்தில் இயக்கிய, ஜீத்து ஜோசப் தான், தமிழிலும் இயக்கப் போகிறார். சமீபத்தில், கமலுடன், இதுகுறித்து பேசிய அவர், ஒரு சில காட்சிகளை, தமிழ் ரசிகர்களுக்கு ஏற்ப மாற்றுவது குறித்து, விவாதித்தார். முதலில், இந்த படத்தில் நடிப்பதற்கு, ரஜினி தான், ஆர்வமாக இருந்தாராம். ஆனால், இதில் உள்ள சில காட்சிகளை, தன் ரசிகர்கள் எப்படி ஏற்று கொள்வார்களோ என்ற சந்தேகம் ஏற்பட்டதால், நடிக்க தயங்கி உள்ளார். இதனால், இந்த வாய்ப்பு, இப்போது, கமலுக்கு சென்றுள்ளது.
த்ரிஷ்யம்' ரீ - மேக்கில்கமல்ஹாசன்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 உங்கள் கருத்து:
கருத்துரையிடுக