வியாழன், 22 மே, 2014

Filled Under:

மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க சிரஞ்சீவி மறுப்பு

மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க சிரஞ்சீவி மறுப்பு  சென்னை:மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க மறுத்துவிட்டார் சிரஞ்சீவி.‘கடல் படத்தையடுத்து புதிய படம் இயக்குவதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார் மணிரத்னம். நாகார்ஜுனா, மகேஷ்பாபு இணைந்து நடிக்கும் தெலுங்கு படத்தை இயக்க முடிவு செய்தார். இது குறித்து இருவரிடமும் பேசி சம்மதம் பெற்றார். திருமணத்துக்கு பிறகு நடிக்காமல் ஒதுங்கி இருந்த ஐஸ்வர்யாராய் இப்படம் மூலம் ரீஎன்ட்ரி ஆக முடிவு செய்தார். தற்போது இப்படத்தின் ஷூட்டிங் தொடங்குவதில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. மகேஷ்பாபு ஏற்கனவே வேறு படங்களில் நடிக்க கால்ஷீட் கொடுத்திருப்பதால் அவரது கால்ஷீட் கிடைப்பது தாமதமாகிறது. எனவே இப்படம் இயக்குவதை தள்ளிவைத்துவிட்டு புதிய படம் இயக்க முடிவு செய்துள்ளார் மணிரத்னம்.சமீபத்தில் ஐதராபாத் சென்ற மணிரத்னம் சிரஞ்சீவியை சந்தித்து அவர் நடிக்க முடிவு செய்துள்ள 150 வது படத்தை இயக்குவது பற்றி பேசினார். ஆனால் இதற்கு சிரஞ்சீவி சம்மதம் தெரிவிக்கவில்லை. இதையடுத்து நாகார்ஜுனா, மகேஷ்பாபு இணைந்து நடிக்க உள்ள படத்தில் ராம் சரணும் நடிக்க கேட்டார். அதையும் ஏற்க மறுத்த சிரஞ்சீவி, ராம் சரண் சோலோ ஹீரோவாக நடிக்கும் படத்தை இயக்கும்படி யோசனை கூறினார். வேறு வழியில்லாமல் அதை மணிரத்னம் ஏற்றுக்கொண்டார். இந்த சந்திப்புக்கான ஏற்பாடுகளை சுஹாசினி செய்திருந்தார்.

0 உங்கள் கருத்து:

கருத்துரையிடுக