வியாழன், 22 மே, 2014
Filled Under:
சென்னை: ‘கோச்சடையான் படத்தில் ரஜினியின் நடிப்பை பற்றி கடுமையாக விமர்சித்துள்ளார் ராம்கோபால் வர்மா.ரஜினிகாந்த் நடித்திருக் கும் படம் ‘கோச்சடையான். அவரது மகள் சவுந்தர்யா இயக்கி இருக்கிறார். 3டி மோஷன் கேப்சர் அனிமேஷன் முறையில் முதன்முறையாக இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்திருக்கிறார். இப்படம் 23ம் தேதி (நாளை ) திரைக்கு வருகிறது. ரசிகர்களும் ஆர்வமுடன் தியேட்டர்களில் முன்பதிவு செய்து வருகின்றனர். இதற்கிடையில் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட படங்களை இயக்கிய ராம் கோபால்வர்மா தனது இணையதள பக்கத்தில் கோச்சடையானில் ரஜினி நடிப்பு பற்றி விமர்சித்திருக்கிறார். ‘ரஜினியின் திறமை பற்றி எனக்கு தெரியும். என்னுடைய சங்கடம் என்னவென்றால் ரஜினியின் நடிப்பையும் தோற்றத்தையும் 3டி அனிமேஷன் முறையில் காட்டியது எதற்காக என்பதுதான் புரியவில்லை என்று குறிப்பிட்டிருக்கிறார். ஒன்றரை வருடத்துக்கும் மேலாக இப்படத்தின் பணியில் ஈடுபட்டு படத்தை இயக்கி முடித் திருக்கும் சவுந்தர்யாவுக்கு அமிதாப், ஷாருக்கான் உள்ளிட்ட பல்வேறு டாப் ஹீரோக்கள் வாழ்த்து தெரிவித்திருக்கும் நிலையில் வர்மா தாக்கி இருப்பது ரஜினி ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
கோச்சடையான் படம் மீது ராம்கோபால் வர்மா கடும் தாக்கு ரசிகர்கள் ஷாக்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 உங்கள் கருத்து:
கருத்துரையிடுக