புதன், 14 மே, 2014

Filled Under:

இசைப் பேரறிவாளன் - இமானுக்கு புதுப்பட்டம்!!

 மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், இசைஞானி இளையராஜா, இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான், தேனிசைத்தென்றல் தேவா என அடைமொழி இல்லாத இசையமைப்பாளர்கள் தமிழ்த்திரையுலகில் அரிது. முந்தா நேத்து கீபோர்ட் வாசிக்க ஆரம்பித்து, நேற்று இசையமைக்க ஆரம்பித்த பிரேம்ஜிக்குக் கூட இசை இளவல் என்ற பட்டத்தைக் கொடுத்துள்ளனர். 12 வருடங்களுக்கு முன் இசையமைப்பாளராக அறிமுகமாகி, ஐம்பதுக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து எத்தனையோ சூப்பர்ஹிட் பாடல்களைக் கொடுத்தவர் இசையமைப்பாளர் இமான். ஆனாலும் இதுநாள்வரை தன் பெயருக்கு முன்னால் எந்தவொரு அடைமொழியும், பட்டமும் இல்லாமல்தான் இருந்தார் இமான்.

இந்நிலையில், இமானுக்கு இசைப் பேரறிவாளன் என்ற படத்தை வழங்கி இருக்கிறார்கள். பாலாவின் இணை இயக்குநரும், ஆச்சார்யா என்ற படத்தை இயக்கியவருமான ரவி தற்போது என்னதான் பேசுவதோ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்திற்கு இமான்தான் இசையமைப்பாளர். என்னதான் பேசுவதோ படம் விரைவில் வெளியாக உள்ளது. நேற்று இப்படத்தின் இசை வெளியாகி உள்ளது. வேகம் பிடித்துள்ள இப்படத்தின் விளம்பரங்களில் எல்லாம் இமானின் படத்தை பெரிய அளவில் போட்டு இசைப் பேரறிவாளன் இமான் என்று குறிப்பிட்டிருக்கின்றனர்.

0 உங்கள் கருத்து:

கருத்துரையிடுக