மேலும், விஜயசேதுபதி கூறுகையில், படத்தின் முக்கிய நாயகனாக நடித்திருப்பது இனிகோதான். நான் ஒரு மாறுபட்ட கேரக்டரில் நடித்திருக்கிறேன் என்று சொன்னார். ஆனால், அதை வைத்து ரம்மியில் விஜயசேதுபதி சிறிய கேரக்டரில் மட்டும்தான் நடித்துள்ளார். கிட்டத்தட்ட அரை மணி நேரம் மட்டுமே அந்த கேரக்டர் கதையில் வருகிறதாம் என்று வதந்தி பரவி கிடக்கிறது.
இதனால், ரம்மி படக்குழு பலத்த அதிர்ச்சியடைந்துள்ளது. அதையடுத்து அப்படத்தின் டைரக்டர் பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்தியில், படம் முழுக்க விஜயசேதுபதி வருகிறார். அவர்தான் லீடு ரோல் செய்துள்ளார். விஜயசேதுபதிக்கு இணையாக இன்னொரு ஹீரோவாக இனிகோ நடித்துள்ளார். அதேபோல் அவருக்கு இணையான இன்னொரு வேடத்தில் பரோட்டா சூரி நடித்திருக்கிறார். அதனால் விஜயசேதுபதி சிறிய கேரக்டரில் நடித்திருப்பதாக கூறப்படுவதில் உண்மை இல்லை என்று தெளிவுபடுத்துகிறார்.
0 உங்கள் கருத்து:
கருத்துரையிடுக