செவ்வாய், 17 டிசம்பர், 2013

Filled Under:


இந்தி படங்களில் ஆடுவதுபோல தமிழ் படங்களில் குத்தாட்டம் ஆட மாட்டேன் என்றார் பிரியாமணி. இது பற்றி பிரியாமணி கூறியதாவது: இந்தியில் ஷாருக்கான் நடித்த ‘சென்னை எக்ஸ்பிரஸ்‘ படத்தில் ஒரு பாட்டுக்கு குத்தாட்டம் ஆட வாய்ப்பு வந்தபோதமிழில் குத்து பாட்டுக்கு ஆடமாட்டேன் : பிரியாமணி கறார்து உடனே ஒப்புக்கொண்டேன். அதற்கு காரணம் அங்குள்ள டாப் ஹீரோயின்கள் கரீனா முதல் பிரியங்கா சோப்ராவரை எல்லோருமே ஒரு பாடலுக்கு நடனம் ஆடுகிறார்கள். அப்படி ஆடினாலும் மீண்டும் அவர்களுக்கு ஹீரோயின் வேடங்கள் தரப்படுகிறது.  ஆனால் அதே தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் ஆடச் சொன்னால் ஆட மாட்டேன். 

ஒரு படத்தில் ஒரு முறை அல்லது இரண்டு முறை ஒரு ஹீரோயின் குத்து பாட்டுக்கோ அல்லது கவர்ச்சி பாட்டுக்கு ஆடி விட்டால் அவருக்கு அதே முத்திரையை குத்திவிடுவார்கள். அதன்பிறகு ஹீரோயின் வாய்ப்பே வராது. இதனால்தான் தென்னிந்திய படங்களில் குத்தாட்டம் ஆட மறுத்துவிடுகிறேன். இந்தியில் ஆமிர்கான், ஷாருக்கான், சல்மான்கான், ஹிருத்திக் ரோஷன் ஆகியோர் நடிக்கும் படங்களில் குத்தாட்டம் ஆட வாய்ப்பு கிடைத்தால் கதை எப்படி இருந்தாலும் ஆட தயார்.

0 உங்கள் கருத்து:

கருத்துரையிடுக