”பழிக்குப் பழி” : மோகன்லால் சேட்டனை அலற வைத்த இளையதளபதி!
ஓரங்கட்டப்படுதல் என்பது எப்போதுமே கோலிவுட்டுக்கு புதிததல்ல… பெரும்பாலும் அது மறைமுகமாகத்தான் நடக்கும்.
அப்படித்தான் பப்ளிசிட்டி விவகாரத்தில் தான் திட்டமிட்டு ஓரங்கட்டப்பட்டதை அறிந்து பழிக்குப் பழியாக மோகன்லால் அன்கோவை ஊர் ஊராக அலைய வைத்து அலற வைத்திருக்கிறார் ‘இளைய தளபதி’ விஜய்.
வருகிற பொங்கல் ரேஸில் விஜய்யின் ‘ஜில்லா’ படமும் குதிக்க தயாராகி விட்டது. இந்தப் படத்தில் விஜய்யுடன் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலும் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார். அதோடு மட்டுமில்லாமல் விஜய் படம் என்பதால் இந்தப்படத்தை கேரளாவில் தனது ஆசீர்வாத் சினிமா கம்பெனி சார்பில் ரிலீஸும் செய்கிறார்.
முன்னதாக இந்தப் படத்தை வாங்குவதற்கு முன்பு கேரளாவில் மோகன்லால் படத்துடன் விஜய் படத்தையும் போட்டு பப்ளிசிட்டி செய்து வந்தார் தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரி. ஆனால் ஜில்லாவின் கேரள ரைட்ஸ் எப்போது மோகன்லால் வசம் கை மாறியதோ? அப்போதே போஸ்டர் பப்ளிசிட்டியில் விஜய் இருட்டடிப்பு செய்யப்பட்டார்.
அங்குள்ள மோகன்லாலின் விசுவாசிகள் விஜய் படத்தை பரணில் தூக்கிப் போட்டு விட்டு ஆளுயர சைஸ் போஸ்டரில் மோகன்லால் படத்தை மட்டும் ப்ரிண்ட் செய்து பப்ளிசிட்டி செய்தனர். இதனால் இந்த விஷயத்தைக் கேள்விப்பட்ட விஜய் ரசிகர்கள் கொதித்துப் போய் விட்டனர்.
இதற்கிடையே ஜில்லாவுக்கு கேரளாவில் புரமோஷம் வேலைகளை ஆரம்பித்தார் மோகன்லால். அதற்கான பிரஸ்மீட் உள்ளிட்ட இத்யாதி வேலைகளுக்கு வரும்படி விஜய்க்கு அழைப்பும் விடுக்கப்பட்டது.
ஆனால் கேரள போஸ்டர் பப்ளிசிட்டியில் தான் இருட்டடிப்பு செய்யப்பட்ட செய்தி காதுகளுக்கு எட்டியதையடுத்து டென்ஷனான விஜய் பழிக்குப் பழியாக இந்த புரமோஷன் வேலைகளுக்கு குட்பை சொல்லிவிட்டு சைலண்ட்டாகி விட்டார்.
விஜய் வருகிறார் என்று மோகன்லால் அன்கோவினர் கேரள நிருபர் படைகளை திரட்டி ஒரு ஹோட்டலில் தயாராக இருக்க அவர்களும் இருக்கிற வேலைகளையெல்லாம் விட்டுவிட்டு கொச்சினில் உள்ள ஒரு ஹோட்டலில் காத்திருந்திருக்கிறார்கள்.
ஆனால் விஜய் வந்தபாடில்லை. உடனே தகவல் விஜய்க்கு போக அவர் நான் திருவனந்தபுரத்துல இருக்கேன் சேட்டன் ஜி என்று தகவல் சொல்ல உடனே நிருபர் படை அங்கு சென்றிருக்கிறது.
ஆனால் விஜய் அங்கும் காணாமல் போக, மீண்டும் போனைப் போட்டு விவரம் கேட்டால், ஸாரி ஜி… ஒரு அவசர வேலையா சென்னை வந்திட்டேன், நெக்ஸ்ட் ப்ரீடைம்ல மீட் பண்ணலாம் என்று கூலாக சொல்லியிருக்கிறார்.
இப்படியே ஒருவாரகாலமாக மோகன்லால் அன்கோவை பழிக்குப் பழி வாங்கி விட்டு கேரள நிருபர்களையும் மூச்சிறைக்க வைத்திருக்கிறார் விஜய்.
இதையெல்லாம் கேள்விப்பட்ட மோகன் சேட்டான் எதற்காக விஜய் இப்படியெல்லாம் செய்கிறார்? என்று தெரிந்தும் தெரியாதது போல தயாரிப்பாளர் ஆர்.பியிடம்புகார் பத்திரம் வாசித்திருக்கிறார்.
அதற்கு ஆர்.பி.யோ ஒருதடவை முடிவு பண்ணிட்டார்னா அவர் பேச்சை அவரே கேட்கமாட்டார் என்று விஜய் ஸ்டைலில் பஞ்ச் ரிவீட் அடித்திருக்கிறார்.
இதெப்படியிருக்கு..?
0 உங்கள் கருத்து:
கருத்துரையிடுக