ஞாயிறு, 15 டிசம்பர், 2013

Filled Under:

மிகச்சிறந்த இந்தியர் விருது: தமிழ் மக்களுக்கு அர்ப்பணித்து ரஜினி நெகிழ்ச்சி

பிரபல செய்தி சேனலான என்டிடிவி தொடங்கி 25 ஆண்டுகள் ஆகிறது. தனது வெள்ளிவிழாவையட்டி அந்த சேனல் தனது நேயர்களிடம் நடத்திய கருத்து கணிப்பின் அடிப்படையில் 25 பேரை மிகச்சிறந்த இந்தியர்களாக தேர்ந்தெடுத்தது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ஆகியோர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். நேற்று மாலை நடந்த விழாவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி சிறந்த இந்தியர்களுக்கு விருது வழங்கினார்.
விருதை பெற்றுக்கொண்ட ரஜினி பேசியதாவது: மனித வாழ்க்கையில் எப்போதாவது அற்புதங்கள் நடக்கும். எனக்கு அடிக்கடி நடக்கிறது. அந்த அற்புதங்களில் இதுவும் ஒன்று. சாதாரண பஸ் கண்டக்டராக இந்த நான் இவ்வளவு பெரிய மனிதர்களுக்கு நடுவில் இருக்கிறேன் என்றால் அது அற்புதமான விஷயம்தான். எனக்கு தாயும் தந்தையுமாக இருந்த என் அண்ணன் சத்யநாராயணராவ் கெய்ட்வாட், என் குரு பாலச்சந்தர், என் தமிழ் மக்களுக்கு இந்த விருதை சர்ப்பிக்கிறேன்.
இவ்வாறு ரஜினி பேசினார்.

0 உங்கள் கருத்து:

கருத்துரையிடுக