இப்படத்தை தொடங்கியபோது, நயன்தாராவை நடிக்க வைப்பதாக உத்தேசமே இல்லை. இந்தி நடிகைகள் யாரையாவது சிம்புவுக்கு ஜோடி சேர்க்கலாம் என்று யோசித்து வந்த பாண்டிராஜ்க்கு திடீரென்று தோன்றிய யோசனைதான் நயன்தாரா. ஆனால் அந்த நேரத்தில் சிம்பு-நயன்தாராவுக்கிடையே பேச்சுவார்த்தைகூட கிடையாது.
அதனால் இதுபற்றி அவர் சிம்புவிடம் சொன்னபோது, இது சாத்தியமாகுமா? என்று தயங்கினார். அதற்கு, நான் பேசி சம்மதிக்க வைக்கிறேன் என்று நயன்தாராவை தொடர்பு கொண்ட பாண்டிராஜ், அவரை புக் பண்ணி இப்போது படத்தையும் கிட்டத்தட்ட இறுதிகட்டத்துக்கு கொண்டு வந்து விட்டார். இந்த நிலையில், திடீரென்று வாலு படத்தை முடித்துக்கொடுக்க சிம்பு சென்று விட்டதால், இது நம்ம ஆளு சிலகாலம் கிடப்பில் கிடந்தது.
ஆனால், இப்போது வாலு பட வேலைகள் முடிந்து விட்டதால் இது நம்ம ஆளு படத்தின் வேலைகளில் இறங்கி விட்டார் சிம்பு. ஏற்கனவே படமான காட்சிகளை எடிட் செய்து டப்பிங் பேசிவிட்டவர்கள், இப்போது படமாகும் காட்சிகளையும் உடனுக்குடன் எட்டி செய்து அவற்றுக்கு டப்பிங்கும் பேசி வருகிறார்களாம். ஆக, இழுத்தடித்துக்கொண்டு கிடந்த இது நம்ம ஆளு, விரைவில் திரைக்கு வரும் சூழல் நிலவியிருக்கிறது.
0 உங்கள் கருத்து:
கருத்துரையிடுக