திங்கள், 23 ஜூன், 2014

Filled Under:

சமந்தா நக்கல்

படம் ரிலீஸ் ஆனா சொல்லுங்க... சமந்தா நக்கல் என் படம் ரிலீஸ் ஆகிறதா? யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள் என்று நக்கலடித்திருக்கிறார் சமந்தா. சமீபகாலமாக பட ரிலீசுக்கு முன்பே அப்படத்தை ரசிகர்களுக்கு கொண்டு சென்று சேர்க்கும் விதமாக படத்தில் நடித்த ஹீரோ, ஹீரோயின்கள் புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்பது சகஜமாகிவிட்டது. இந்நிலையில் படத்தில் நடித்த ஹீரோயினுக்கே தெரியாமல் ஒரு படம் ரிலீஸ் ஆக உள்ளது. அந்த ஹீரோயின் வேறு யாருமல்ல சமந்தாதான். தமிழ், தெலுங்கு என பிஸியாக நடித்துக்கொண்டிருந்தாலும் தனது ஒவ்வொரு படத்தை பற்றியும் அவ்வப்போது இணைய தள பக்கத்தில் கருத்து பகிர்ந்துகொள்பவர் சமந்தா. 

நீண்ட நாட்களுக்கு முன் இவர் தெலுங்கில் நடித்த படம் ஆட்டோ நகர் சூர்யா. நாக சைதன்யா ஹீரோ. இப்படம் பைனான்ஸ் பிரச்னை காரணமாக ரிலீஸ் ஆகாமல் முடங்கிக்கிடந்தது. டோலிவுட் பட தயாரிப்பாளர் ஒருவர் பிரச்னையில் தலையிட்டு சிக்கலை தீர்த்து வைத்தார். இதையடுத்து வரும் 27ம் தேதி படம் ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இதுபற்றி ஹீரோயின் சமந்தாவுக்கு எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. 

உங்க படம் ரிலீஸ் ஆகப்போகிறதாமே? என்று சமந்தாவிடம் கேட்டபோது எந்த படம் என்று தெரியாமல் திருதிருவென முழித்தார். இதுகுறித்து தனது இணைய தள பக்கத்தில் அவர் கூறும்போது,நான் நடித்த படமொன்று வரும் 27ம் தேதி ரிலீஸ் ஆகப்போகிறதாமே யாருக்காவது தெரிந்தால் எனக்கும் கொஞ்சம் சொல்லுங்கள் என்று நக்கலாக குறிப்பிட்டிருக்கிறார்.

0 உங்கள் கருத்து:

கருத்துரையிடுக