Filled Under:
6 மாதத்தில் 3 படம் ரிலீஸ் கமலின் ஹாட்ரிக் திட்டம்
6 மாதத்தில் 3 கமல் படம் ரிலீஸ் ஆக உள்ளது. ஒன்றரை ஆண்டு இடைவெளி விட்டதற்கு வட்டியும் முதலுமாக சேர்த்து வரும் 6 மாதத்துக்குள் 3 படங்கள் ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறார் கமல். இறுதிகட்ட மற்றும் பேட்ச் ஒர்க் பணிகள் நடந்து வந்த விஸ்வரூபம் 2 ரிலீசுக்காக தயாராகிவிட்டது. இதையடுத்து ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் டபுள் வேடத்தில் கமல் நடித்து வரும் உத்தம வில்லன் ஷூட்டிங் இறுதிகட்டத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறது. இன்னும் சில வாரங்களுக்குள் இப்படம் முடிந்துவிடும். ஷூட்டிங்கிற்கு பின்னர் நடக்கும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் வேகமாக நடக்கிறது. திட்டமிட்டபடி எல்லாம் முடிந்துவிட்டால் செப்டம்பர் மாதம் இப்படம் ரிலீஸ் என்று பட வட்டாரங்கள் தெரிவிக்கிறது.
இதற்கிடையில் மலையாளத்தில் வெற்றி பெற்ற திரிஷ்யம் தமிழில் ரீமேக் ஆகிறது. மல்லுவுட்டில் மோகன்லால் ஏற்ற வேடத்தை கமலும், மீனா ஏற்ற வேடத்தை கவுதமியும் ஏற்று நடிக்கின்றனர். ஜூலை 15ம் தேதி முதல் ஷூட்டிங் தொடங்கப்பட உள்ளது. மற்ற நட்சத்திரங்களின் தேர்வு நடந்து வருகிறது. விரைந்து ஷூட்டிங் தொடங்கி எவ்வளவு வேகமாக முடியுமோ அவ்வளவு வேகமாக முடிக்கப்படும் என்றார் இயக்குனர் ஜீது ஜோசப். இந்த ஆண்டு இறுதியில் இப்படம் ரிலீஸ் செய்யப்பட திட்டமிடப்பட்டிருக்கிறது. சுமார் ஒன்றரை ஆண்டாக கமலுக்கு படமே ரிலீஸ் இல்லை. இந்த ஆண்டு வரும் 6 மாதத்துக்குள் 3 படம் ரிலீஸ் செய்து ஹாட்ரிக் அடிக்க திட்டமிட்டிருக்கிறார்.
0 உங்கள் கருத்து:
கருத்துரையிடுக