சனி, 29 நவம்பர், 2014

விஜய்க்கு, அஜித் செய்த அட்வைஸ்!

இளையதளபதி விஜய் புதிதாக வாங்கி இருக்கும் ஹார்லி டேவிட்சன் பைக்கில் தான் சில தினங்களாகவே சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் நடந்து வரும் தனது 58-வது படத்தின் படப்பிடிப்புகளுக்கு சென்று வருகிறாராம்.
முகத்தில் கர்சீப் கட்டிக்கொண்டு கொண்டு செல்லும் விஜயை ரசிகர்கள் பலரும் பார்த்திருக்கின்றனர். இதை கேள்விப்பட்ட தல அஜித், நடிகர் விஜயை தனது போனில் அழைத்து "பைக்ல போறது ஜாலியாதான் இருக்கும் கொஞ்சம் ஹெல்மெட் போட்டீங்கன்ன சேஃப்" என்றாராம்.

வியாழன், 4 செப்டம்பர், 2014

நயன்தாராவுடன் காதல் தோல்வியால் தற்கொலை முயற்சியா?: உதயநிதி விளக்கம்

இது கதிர்வேலன் காதல் படத்தில் இணைந்து நடித்த நயன்தாரா, உதயநிதி தற்போது நண்பேன்டா படத்திலும் இணைந்து நடிக்கிறார்கள். இருவருக்கும் இடையில் நெருக்கமான காதல். உதயநிதியின் காதலை நயன்தாரா ஏற்காததால் உதயநிதி தற்கொலைக்கு முயன்றார் என்றெல்லாம் செய்திகள் வெளிவந்தது. இதற்கு முதன் முறையாக இப்போது விளக்கம் அளித்துள்ளார் உதயநிதி.

இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: நயன்தாராவால் தான் நான் ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆனேன்ங்றது உண்மைதான். ஆனால் அது தற்கொலை முயற்சியில்லை. நண்பேன்டா படத்தில் ஒரு சண்டைக் காட்சியில் என்னை தாக்க வரும் வில்லனை அடித்து விட்டு அவர் கையை என்பக்கம் கொண்டு வரவேண்டும். அந்தக் காட்சி எடுக்கும்போது டைமிங் மிஸ்சாகி வில்லனை அடிக்க வேண்டியவர் என்னை அடித்து விட்டார். அவரது விரல் நகம் கண்ணில் குத்தி கிழித்து விட்டது. இதனால் ரத்தம் வழிந்ததும் ஆஸ்பத்திரியில் அட்மிட்டாகி சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டியது வந்தது. இதுதான் நடந்தது.

இதே மாதிரி காஜல் அகர்வாலுக்கு எனக்கும் காதல் அதனால் அவருக்கு கொடுத்திருந்த 40 லட்சம் அட்வான்ஸ் பணத்தைகூட நான் திரும்ப வாங்கவில்லை என்ற ஒரு வதந்தியை கிளப்பினார்கள். உண்மையில் நான் அந்த 40 லட்சத்தை திருப்பி வாங்கித் தரச்சொல்லி தயாரிப்பாளர் சங்கத்துல புகார் கொடுத்திருக்கிறேன்.

நடந்தது இப்படி இருக்க... அதுக்கு கண், காது, மூக்கு வச்சி செய்தியாக்குறாங்க. சரி படத்துக்கு இலவசமா பப்ளிசிட்டி கிடைக்குதுன்னு சும்மா இருந்து விடுகிறேன். நயன்தாராவும், என் மனைவி கிருத்திகாவும் நல்ல நண்பர்கள் அதனால் எந்த செய்தி வந்தாலும் அதைப் பற்றி இருவருமே கவலைப்படுவதில்லை. நயன்தாராவுக்கு லண்டனில் வீடு வாங்கி கொடுத்திருப்பதாககூட எழுதுகிறார்கள். சந்தானம்தான் "நயன்தாராவுக்கு லண்டன்ல வீடு வாங்கி கொடுத்திருக்கீங்க எனக்கு பல்லாவரத்துலயாவது ஒரு வீடு வாங்கி கொடுங்க"ன்னு சதாய்க்கிறார்.

நான் தெளிவாக இருக்கிற வரைக்கும் எந்த வதந்தியும், செய்தியும் என்னை பாதிக்காது. கொஞ்சம் கூட உண்மையில்லாத செய்திகளுக்கு விளக்கம் கொடுத்து நேரத்தை வீணாக்கவும் விரும்பவில்லை. என்கிறார் உதயநிதி.

மாஸ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசர்! விரைவில் வெளியாகிறது

Mass first look to be release soonஅஞ்சான் படத்தின் தோல்வியினால் கடும் அப்ஸெட்டில் இருந்த சூர்யா, வெங்கட்பிரபு இயக்கும் மாஸ் படத்தின் படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டார். ஒருவழியாக மனசை தேற்றிக் கொண்டு தற்போது வெங்கட்பிரபுவின் இயக்கத்தில் மாஸ் படத்தின் படப்பிடிப்பில் நடித்து வருகிறார் சூர்யா. நயன்தாரா, எமி ஜாக்சன் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கும் மாஸ் படத்தில் பிரேம்ஜி அமரன், ஜெயராம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். மாறுபட்ட வில்லன் கதாபாத்திரம் ஒன்றில் இயக்குநர் சமுத்திரக்கனி நடிக்கிறார்.

வெங்கட் பிரபு இயக்குநராக அறிமுகமான சென்னை - 600028 படம் தொடங்கி பிரியாணி படம் வரை அவரது அனைத்து படங்களுக்கும் இசையமைத்த யுவன்சங்கர்ராஜாவே இந்தப்படத்துக்கம் இசையமைக்கிறார். வெங்கட்பிரபு- யுவன்சங்கர்ராஜா இணையும் 6 ஆவது படம் இது. சூர்யா பங்குதாரராக உள்ள ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் படம் இது என்பதால், மாஸ் படத்திற்கு மிகப்பெரிய பட்ஜெட்டை ஒதுக்கி இருக்கின்றனர். சில வாரங்களுக்கு முன்புதான் படப்பிடிப்பு தொடங்கியது. என்றாலும், பரபரப்பாக பணியாற்றியதால் ஏறக்குறைய 40 சதவிகித படப்பிடிப்பை முடித்துவிட்டார் வெங்கட்பிரபு.

இதுவரை எடுத்த காட்சிகளை வைத்து மாஸ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசரை தயார் பண்ணி வருகிறாராம் வெங்கட்பிரபு. அதை விரைவில் வெளியிடப்போவதாக டுவிட்டரில் தெரிவித்திருக்கிறார் மாஸ் படத்தின் இயக்குநர் வெங்கட்பிரபு. அஞ்சான் படத்தின் தோல்வியை மக்கள் மறக்கும் அளவுக்கு மாஸ் படத்தின் வெற்றி இருக்க வேண்டும் என்று வெங்கட்பிரபுவிடம் கேட்டுக்கொண்டிருக்கிறாராம் சூர்யா.

வெள்ளி, 15 ஆகஸ்ட், 2014

அஞ்சான் விமர்சனம்

சிங்கம், சிங்கம்-2 என்று வசூல் வேட்டை நடத்திவிட்டு சூர்யா அடுத்த அதிரடிக்கு ரெடியான திரைப்படம் தான் அஞ்சான். இயக்குனர் லிங்குசாமியின் ஹை ஸ்பீட் திரைகதையை நம்பி சூர்யா மறுபடியும் வசூல் வேட்டையாட அஞ்சானாக மாறியிருக்கிறார்.தமிழ் சினிமாவிற்கு என சில தத்துவங்கள் இருக்கிறது, அதை இந்த படமும் பின்பற்றி டான் கதையை கையில் எடுத்தது மட்டுமில்லாமல், வழக்கம் போல் அதை மும்பையில் எடுத்துள்ளார்கள். சமீப காலமாக மாஸ் ஹீரோக்களின் படங்கள் எல்லாம் மும்பையை சுற்றி தான் எடுக்கவேண்டும் போல, மங்காத்தா, துப்பாக்கி படத்தின் விளைவு தான் இது.படத்தின் கதையாக பார்த்தோமேயானால் லிங்குசாமி சொன்னது போல் பாட்ஷா படத்தின் டெக்னாலஜி டெவலப்மெண்ட் தான் இந்த அஞ்சான். ராஜு பாய் தம்பி கிருஷணா தன் அண்ணனை தேடிக்கொண்டு மும்பை வர, அங்கு கரீம் பாயிடம் தன் அண்ணனை பற்றிய உண்மைகளை கேட்டு அறிகிறார். ராஜு பாய், சந்துரு இருவரும் பாட்ஷா, மாணிக்கம் டைப் நண்பர்கள். இவர்கள் இணைந்து மும்பையில் நடக்கும் அனைத்து கட்டபஞ்சாயத்துகளிலும் முதல் ஆளாக தலையிட்டு முடிக்கின்றனர். இதில் சில சந்தர்ப சூழ்நிலையால் சமந்தாவை, சூர்யா கடத்த பின் வழக்கம் போல் காதலில் முடிகிறது.நல்ல டான் இருக்கும் போது கெட்ட டான் வேண்டும் அல்லவா? அதேபோல் இம்ரான் என்பவர் மற்றொரு டான், இவர் ஒரு கட்டத்தில் சந்துருவை(வித்யூ) கொல்ல, அதை பார்க்க வந்த இடத்தில் சூர்யாவையும் சுட்டு தள்ள, அதன் பின் என்ன நடக்கிறது என்பது தான் மீதிக்கதை. நடிப்பு குறித்து சொல்லவேண்டுமென்றால் சமந்தா வேறு எந்த படத்திலும் இல்லாத அளவிற்கு கவர்ச்சி காட்டியுள்ளார், சண்டைக்கோழி படத்தில் வரும் மீராஜாஸ்மின் போன்று துறு துறு என வந்து ரசிகர்களை கவர்கிறார். சூரி சில நிமிடம் வந்தாலும் செம்ம கலாட்டா செய்துவிட்டு போகிறார்.படத்தின் பலம் கண்டிப்பாக சூர்யா தான், ராஜு பாயாக கலக்குகிறார், சண்டைபோடுகிறார், அதே நிமிடம் சமந்தாவுடன் டூயட் பாடி அசத்துகிறார். சந்தோஷ்சிவனின் ஒளிப்பதிவு, நாங்கள் சொல்லி தெரியவேண்டியதில்லை, ஒவ்வொரு காட்சியையும் கலர்ஃபுல்லாக படம் பிடித்தது மட்டுமில்லாமல் படத்திற்கு டான் கோட்டிங் கொடுத்துள்ளார்.யுவனின் பாடல்கள் ’பேங் பேங்’, ஏக் தோன் தீன் பாடல்கள் மட்டும் கேட்கலாம், ஆனால் பின்னணி இசையில் கலக்கி எடுத்திருக்கிறார். பலவீனம் கண்டிப்பாக படத்தின் நீளம் தான், இன்றைய சூழ்நிலையில் மக்கள் மிக வேகமாக ஓடிக்கொண்டிருக்க, 2 மணி நேரமே அதிகம் போல் தெரிய, 2.45 மணி நேரத்திற்கு மேல் படம் ஓடுவது தேவை தான? படம் வழக்கமான டான் கதை, யூகிக்க கூடிய திருப்பங்கள் என செல்கிறது.மொத்தத்தில் அஞ்சான் மும்மை டான் கதையை எடுக்க கொஞ்சம் அஞ்ச வைத்துவிட்டான்.

வெள்ளி, 4 ஜூலை, 2014

உதயநிதியை இயக்கும் மான் கராத்தே இயக்குநர் திருக்குமரன்

 முதல் படத்தை இயக்கிய புதுமுக இயக்குநருக்கு அடுத்தப்பட வாய்ப்பு கிடைப்பதை வைத்தே, அவரது முதல் படம் வெற்றிப்படமா தோல்விப்படமா என்று சொல்ல முடியும். சிவகார்த்திகேயன், ஹன்சிகா மோத்வானி நடித்த மான் கராத்தே படம் வெளியானபோது படம் எதிர்பார்த்தபடி இல்லை என்ற விமர்சனத்தை சந்தித்தது. அது மட்டுமல்ல, படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களுக்கு நஷ்டம் என்றும் சொல்லப்பட்டது. இதற்கிடையில் மான்கராத்தே சில தியேட்டர்களில் 100 ஆவது நாளைக் கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது. சரி..மான் கராத்தே வெற்றிப்படமா? தோல்விப்படமா? அதற்கான விடை தற்போது தெரிந்துவிட்டது.

யெஸ்..மான் கராத்தே படத்தின் இயக்குநர் திருக்குமரனுக்கு அடுத்தப்பட வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதுவும்..பெரிய பேனரில் இரண்டாவது படத்தை இயக்கும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறார் திருக்குமரன். ரெட் ஜெயன்ட் மூவீஸ் உதயநிதி ஸ்டாலின் அவரை ஒப்பந்தம் செய்துள்ளார். தற்போது நண்பேன்டா படத்தில் நடித்து வரும் உதயநிதி அடுத்து அஹ்மது இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப்படங்களைத் தொடர்ந்து உதயநிதி நடிக்கும் படத்தையே திருக்குமரன் இயக்க உள்ளார். திருக்குமரனை ஒப்பந்தம் செய்துள்ள உதயநிதி பெரிய சம்பளம் தர ஒப்புக்கொண்டிருக்கிறாராம்.

விஜய்க்கு ஜோடியான ஸ்ருதிஹாசன் - ஹன்சிகா!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடித்து வரும் ''கத்தி'' படம் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இதனையடுத்து சிம்புதேவன் இயக்கத்தில், விஜய் நடிக்கிறார். இவர்கள் இணையும் படம் உறுதிசெய்யப்பட்டு, அதற்கான வேலைகளில் மும்முரமாக இறங்கியுள்ளார் சிம்புதேவன்.

இந்தப்படம் வரலாற்று பின்னணியில் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. ராஜமௌலி இயக்கிய மகதீரா தெலுங்குப்படத்தைப்போல் பிரம்மாண்டமான பீரியட் பிலிமாக இந்தப்படத்தை இயக்க இருக்கிறாராம் சிம்புதேவன். மேலும் விஜய், இந்தப்படத்தில் அப்பா-மகன் என இரண்டு வேடங்களில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது இந்நிலையில், விஜய் ஜோடியாக இரண்டு நாயகிகளை நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் நடந்து வந்த நிலையில், ஸ்ருதிஹாசனும், ஹன்சிகாவும் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் ஸ்ருதிஹாசன், இப்போது தான் முதன்முறையாக விஜய்யுடன் ஜோடி சேர உள்ளார். ஹன்சிகாவோ, ஏற்கனவே விஜய்யுடன் வேலாயுதம் படத்தில் நடித்துள்ளார். விரைவில் படம் பற்றிய முழு அறிவிப்புகளையும் இயக்குநர் சிம்புதேவன் அறிவிக்க உள்ளார்..

ஞாயிறு, 29 ஜூன், 2014


‪#‎AmaraKaaviyam‬ ‪#‎Sathya‬ ‪#‎JeevaSankar‬ ‪#‎MiaGeorge‬ ‪#‎Ghibran‬ நீ உண்மையிலயே என்னை லவ் பண்றியா?
நான் என்ன பண்ணா என் காதலை நம்புவ- அமரகாவியம் டிரெய்லர்!

புதன், 25 ஜூன், 2014

அனன்யாவின் திருமண சர்ச்சை படமாகிறதா?

அனன்யாவின் திருமண சர்ச்சை படமாகிறதா? நாடோடிகள், சீடன், எங்கேயும் எப்போதும் என விரல்விட்டும் எண்ணும் அளவுக்கே தமிழ் படங்களில் நடித்திருக்கும் அனன்யா கடைசியாக புலிவால் என்ற படத்தில் நடித்தார். இதற்கிடையில் அனன்யாவுக்கு திருமணம் செய்ய குடும்பத்தினர் முடிவு செய்தனர். இதில் பிரச்னை ஏற்பட்டது. திடீரென்று குடும்பத்தினரே திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து தனக்கு பார்த்த மாப்பிள்ளையை திருப்பதியில் ரகசிய திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் அதிதி என்ற படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார் அனன்யா. இது திருமணம் ஆன ஒரு பெண்ணின் வாழ்க்கைபற்றி கதை என்பதால் அனன்யாவின் வாழ்க்கை கதைதான் இது என்று பரபரப்பு எழுந்தது. இதுபற்றி இயக்குனர் பரதன் கூறும்போது, அனன்யா வாழ்க்கை கதையா என்கிறார்கள். 

அவரது வாழ்க்கைக்கும் பட கதைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. திருமணத்துக்கு பிறகு ஒரு சில பெண்களின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து இக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. இது திகில் கதை இல்லை ஆனால் அந்த உணர்வு படம் முழுவதும் இருக்கும். நந்தா, நிகேஷ்ராம் முக்கிய வேடத்தில் நடித்திருக்கின்றனர் என்றார்.

சிகரெட் பிடிக்க விசாகா டிரைனிங்

சிகரெட் பிடிக்க விசாகா டிரைனிங் சிகரெட் பிடிக்க கற்று வருகிறார் விசாகா சிங். சினிமாவில் யதார்த்தம் என்ற வார்த்தைக்காக உடலை ஒல்லியாக்குவது, குண்டாக்குவது, சிக்ஸ் பேக் வைப்பது என்று நடிகர், நடிகைகள் மெனக்கெடுகின்றனர். கண்ணா லட்டு தின்ன ஆசையா ஹீரோயின் விசாகா சிங் சிகரெட் புகைப்பதற்கு பயிற்சி பெற்றார். ரவுடி பெல்லோ என்ற தெலுங்கு படத்தில் தற்போது அவர் நடித்து வருகிறார். சில மாதங்களுக்கு முன் இப்படத்திற்காக நடன காட்சியில் நடித்தபோது தவறி விழுந்ததில் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு மாதக்கணக்கில் பெட் ரெஸ்ட்டில் இருந்தவர் சிகிச்சைக்கு பிறகு மீண்டும் படப்பிடிப்பில் கலந்துகொண்டார்.

இம்முறை சிகரெட் பிடிக்கும் காட்சியில் நடித்தார். இது பற்றி விசாகா கூறும்போது, எனக்கு சிகரெட் பிடிக்கும் பழக்கம் கிடையாது. அதை எப்படி விரலில் பிடிப்பது, எப்படி தீப்பற்ற வைப்பது என்றுகூட தெரியாது. ஆனால் இப்போது எல்லாம் அத்துப்படி. அதற்காக பயிற்சி எடுத்துவிட்டேன். கல்லூரி மாணவியாக இப்படத்தில் நடிக்கிறேன். குறும்புத்தனம் கொண்ட வேடம் என்பதால் சிகரெட் பிடிக்கும் காட்சியிலும் நடிக்க வேண்டி இருந்தது. 

தொழில் ரீதியான நடிகை என்பதால் அதை மறுக்க முடியவில்லை. கொஞ்சம் கஷ்டமான வேலையாகத்தான் இருந்தது. ஆனாலும் ஒன்றிரண்டு டேக்கில் நடித்து முடித்துவிட்டேன் என்றார்.

வதந்தி கிளப்பினால் சட்டப்படி நடவடிக்கை நயன்தாரா எச்சரிக்கை

வதந்தி கிளப்பினால் சட்டப்படி நடவடிக்கை நயன்தாரா எச்சரிக்கை இளம் நடிகருடன் இணைத்து கிசுகிசு வெளிவருவதைஅறிந்து கோபம் அடைந்தார் நயன்தாரா. நயன்தாரா தீவிர நடிப்பில் கவனம்செலுத்தி வருகிறார். மாஜி காதலன் சிம்புவுடன் இது நம்ம ஆளு என்ற படத்தில் நடிக்கிறார். ராஜா இயக்கத்தில் தனியொருவன் என்ற படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக நடிக்கிறார். இதேபடத்தில் கணேஷ் வெங்கட்ராமனும் நடிக்கிறார். அவருடன் நட்பாக பழகும் கதாபாத்திரம் ஏற்றிருக்கிறார் நயன். ஆனால் நயனும், கணேஷ் வெங்கட்ராமனும் ஷூட்டிங்கில் நீண்ட நேரம் மனம்விட்டு பேசி பழகுவதாகவும், இருவரும் காதல் வயப்பட வாய்ப்பிருக்கிறது என்றும் பட யூனிட்டில் சிலர் கிளப்பிவிடுகிறார்களாம். இது மெதுவாக நயன்தாரா காதில் விழ கொதித்துவிட்டாராம்.  

ஏற்கனவே பல்வேறு கிசுகிசுக்களால் பாதிக்கப்பட்ட நயன்தாரா மற்றொரு சக நடிகருடன் இணைத்து கிசு கிசு கிளம்பியதை அறிந்து அப்செட் ஆனார். என்னைப் பற்றி இனியும் வதந்தி கிளப்பி விட்டால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் தயங்க மாட்டேன் என்று கூறி உள்ளாராம். இதுபற்றி கணேஷ் வெங்கட்ராமன் கூறும்போது,இதுபோல் வதந்தி எப்படி வருகிறது என்று தெரியவில்லை. நயன்தாராவும், நானும் சக கலைஞர்கள். என்னைப்பற்றி இப்படியொரு தகவலை நான் கேட்பது இதுதான் முதல்முறை என்றார்.

இளம் ஹீரோ கதை என் வயதுக்கு மாற்றப்பட்டது மெட்ராஸ் பற்றி கார்த்தி

இளம் ஹீரோ கதை என் வயதுக்கு மாற்றப்பட்டது மெட்ராஸ் பற்றி கார்த்தி சின்ன வயசு ஹீரோ கதையை என் வயசுக்கு ஏற்ப மாற்றி நடிக்கிறேன் என்றார் கார்த்தி. கார்த்தி நடிக்கும் புதிய படம் மெட்ராஸ். அட்டகத்தி ரஞ்சித் டைரக்ஷன். ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். கேத்ரினா ஹீரோயின். சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். இதன் ஆடியோவை நடிகர் சூர்யா வெளியிட்டார். இப்படத்தில் நடிப்பதுபற்றி கார்த்தி கூறும்போது, ஒரு நல்ல ஸ்கிரிப்ட் பல மாதமாக கோடம்பாக்கத்தில் சுற்றிக்கொண்டிருக்கிறது என்று கேள்விப்பட்டதும் இயக்குனர் ரஞ்சித்தை வரவழைத்தேன். ஏற்கனவே இந்த ஸ்கிரிப்ட்டை கேட்டிருந்தேன். நன்றாக இருந்தது. 

இதில் நான் நடிக்கலாமா என்று அவரிடம் கேட்டபோது, நீங்கள் நடித்தால் இன்னும் சந்தோஷம் என்றார். கதைப்படி சின்ன வயது ஹீரோவை என் வயதுக்கு மாற்றி இருக்கிறோம். மற்றபடி ஸ்கிரிப்ட்டில் ஒரு மாற்றமும் இல்லை. வட சென்னையில் நடக்கும் கதையை யதார்த்தமாக சொல்கிறது. 

அட்டகத்தி படத்தில் எல்லா காட்சி களையும் காமெடியா சொன்ன ரஞ்சித் இப்படத்தில் எல்லாவற்றிலும் ஒரு சீரியஸ்னஸ்சுடன் சொல்லி இருக்கிறார். தமிழ் சினிமாவுக்கு இது ரொம்பவும் முக்கியமான படமாக இருக்கும் என்றார்.

படு கிளாமர் போட்டோ ஷூட் தமன்னா

படு கிளாமர் போட்டோ ஷூட் தமன்னா அதிரடி முடிவு படுகிளாமராக போட்டோ ஷூட் நடத்த திடீரென முடிவு செய்துள்ளார் தமன்னா.தமிழ், தெலுங்கில் ஒரு ரவுண்டு வந்த தமன்னா இந்தியில் கவனத்தை திருப்பினார். அவர் நடித்த முதல் படம் ஹிம்மத்வாலா கைகொடுக்கவில்லை. நீண்ட நாட்களுக்கு பிறகு ஹம்ஷகல்ஸ் என்ற படத்தில் கவர்ச்சி தூக்கலாக நடித்தார். இப்படமும் அவருக்கு கைகொடுக்கவில்லை. அத்துடன் படத்தில் அவர் நடிப்பு பற்றி விமர்சிக்கப்பட்டது. தென்னிந்தியாவில் டாப் ஹீரோக்களுடன் ஜோடி போட்ட தமன்னாவுக்கு பாலிவுட் கைவிட்டதை எண்ணி கலக்கம¢ அடைந்தார்.

தற்போது டாப் ஹீரோக்களின் கவனத்தை கவர புதிய திட்டம் வகுத்து வருகிறார். படுகவர்ச்சிக்கு மாறினால் வாய்ப்பு வருமா என்று நெருக்கமானவர்களிடம் ஆலோசித்து வருகிறார். முத்தக்காட்சியில் நடிக்க மாட்டேன், டூ பீஸ் உடையில் நடிக்க மாட்டேன். இது என் பாலிசி என்று நீ போடும் கண்டிஷன் பாலிவுட்டில் எடுபடாது. இந்த நிபந்தனைகளை தூக்கிப் போடும்வரை பெரிய படங்கள் வராது என்று நட்பு வட்டாரங்கள் கறாராக கூறிவிட்டார்களாம். 

மார்க்கெட்டை பிடிக்க தமன்னா தனது பாலிசியை காற்றில் பறக்க விட யோசித்துள்ளாராம். இதற்காக முதல்கட்டமாக டூ பீஸ் உடைகளில் போட்டோ ஷூட் நடத்தி பாலிவுட்டில் பரப்பிவிடவும் திட்டமிட்டுள்ளாராம்.

திங்கள், 23 ஜூன், 2014

6 மாதத்தில் 3 படம் ரிலீஸ் கமலின் ஹாட்ரிக் திட்டம்

6 மாதத்தில் 3 படம் ரிலீஸ் கமலின் ஹாட்ரிக் திட்டம் 6 மாதத்தில் 3 கமல் படம் ரிலீஸ் ஆக உள்ளது. ஒன்றரை ஆண்டு இடைவெளி விட்டதற்கு வட்டியும் முதலுமாக சேர்த்து வரும் 6 மாதத்துக்குள் 3 படங்கள் ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறார் கமல். இறுதிகட்ட மற்றும் பேட்ச் ஒர்க் பணிகள் நடந்து வந்த விஸ்வரூபம் 2 ரிலீசுக்காக தயாராகிவிட்டது. இதையடுத்து ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் டபுள் வேடத்தில் கமல் நடித்து வரும் உத்தம வில்லன் ஷூட்டிங் இறுதிகட்டத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறது. இன்னும் சில வாரங்களுக்குள் இப்படம் முடிந்துவிடும். ஷூட்டிங்கிற்கு பின்னர் நடக்கும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் வேகமாக நடக்கிறது. திட்டமிட்டபடி எல்லாம் முடிந்துவிட்டால் செப்டம்பர் மாதம் இப்படம் ரிலீஸ் என்று பட வட்டாரங்கள் தெரிவிக்கிறது. 

இதற்கிடையில் மலையாளத்தில் வெற்றி பெற்ற திரிஷ்யம் தமிழில் ரீமேக் ஆகிறது. மல்லுவுட்டில் மோகன்லால் ஏற்ற வேடத்தை கமலும், மீனா ஏற்ற வேடத்தை கவுதமியும் ஏற்று நடிக்கின்றனர். ஜூலை 15ம் தேதி முதல் ஷூட்டிங் தொடங்கப்பட உள்ளது. மற்ற நட்சத்திரங்களின் தேர்வு நடந்து வருகிறது. விரைந்து ஷூட்டிங் தொடங்கி எவ்வளவு வேகமாக முடியுமோ அவ்வளவு வேகமாக முடிக்கப்படும் என்றார் இயக்குனர் ஜீது ஜோசப். 

இந்த ஆண்டு இறுதியில் இப்படம் ரிலீஸ் செய்யப்பட திட்டமிடப்பட்டிருக்கிறது. சுமார் ஒன்றரை ஆண்டாக கமலுக்கு படமே ரிலீஸ் இல்லை. இந்த ஆண்டு வரும் 6 மாதத்துக்குள் 3 படம் ரிலீஸ் செய்து ஹாட்ரிக் அடிக்க திட்டமிட்டிருக்கிறார்.

இளையராஜா-மிஷ்கின் மோதலா?

இளையராஜா-மிஷ்கின் மோதலா? பூட்டிய அறைக்குள் இளையராஜாவுடன் மிஷ்கின் வாக்குவாதம் செய்தும் புதுபடத்துக்கு இசை அமைக்க மறுத்துவிட்டார். டைரக்டர் மிஷ்கின் இயக்கும் திகில் படம் பிசாசு. இப்படத்துக்கு  இளையராஜா இசை அமைக்க உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் மிஷ்கின் நேரில் சென்று இளையராஜாவை சந்தித்து இசை அமைக்க  கேட்டார். தனது இசைக்கு படத்தில் முக்கியத்துவம் தரப்படவில்லை என்று கூறி புதுபடத்துக்கு இசை அமைக்க இளையராஜா மறுத்துவிட்ட£ராம். பூட்டிய அறைக்குள் இளையராஜாவுடன் வாக்குவாதம் நடந்ததா என்ற கேள்விக்கு பதில் அளித்திருக்கிறார் மிஷ்கின். இதுபற்றி அவர் கூறும்போது,பூட்டிய அறைக்குள் நானும், இளையராஜாவும் பேசிக்கொண்டிருந்தோம். அந்த விவாதத்தை நேரில் கேட்டதுபோல் சிலர் சொல்கிறார்கள். 

என்ன பேசினோம் என்று அவர்களுக்கு தெரியுமா? இளையராஜா சாரை எனது தந்தைபோல் மதிக்கிறேன். அவரிடம் வாக்குவாதம் செய்யமாட்டேன். பிசாசு படத்துக்கு புதிய இசை அமைப்பாளரை ஒப்பந்தம் செய்ய உள்ளதுபற்றி அவரிடம் கூறினேன். அவரும் அதற்கு சம்மதம் தெரிவித்தார். அருள் குரோலி என்ற புது இசை அமைப்பாளர் படத்துக்கு இசை அமைக்கிறார் என்றார்.

சமந்தா நக்கல்

படம் ரிலீஸ் ஆனா சொல்லுங்க... சமந்தா நக்கல் என் படம் ரிலீஸ் ஆகிறதா? யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள் என்று நக்கலடித்திருக்கிறார் சமந்தா. சமீபகாலமாக பட ரிலீசுக்கு முன்பே அப்படத்தை ரசிகர்களுக்கு கொண்டு சென்று சேர்க்கும் விதமாக படத்தில் நடித்த ஹீரோ, ஹீரோயின்கள் புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்பது சகஜமாகிவிட்டது. இந்நிலையில் படத்தில் நடித்த ஹீரோயினுக்கே தெரியாமல் ஒரு படம் ரிலீஸ் ஆக உள்ளது. அந்த ஹீரோயின் வேறு யாருமல்ல சமந்தாதான். தமிழ், தெலுங்கு என பிஸியாக நடித்துக்கொண்டிருந்தாலும் தனது ஒவ்வொரு படத்தை பற்றியும் அவ்வப்போது இணைய தள பக்கத்தில் கருத்து பகிர்ந்துகொள்பவர் சமந்தா. 

நீண்ட நாட்களுக்கு முன் இவர் தெலுங்கில் நடித்த படம் ஆட்டோ நகர் சூர்யா. நாக சைதன்யா ஹீரோ. இப்படம் பைனான்ஸ் பிரச்னை காரணமாக ரிலீஸ் ஆகாமல் முடங்கிக்கிடந்தது. டோலிவுட் பட தயாரிப்பாளர் ஒருவர் பிரச்னையில் தலையிட்டு சிக்கலை தீர்த்து வைத்தார். இதையடுத்து வரும் 27ம் தேதி படம் ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இதுபற்றி ஹீரோயின் சமந்தாவுக்கு எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. 

உங்க படம் ரிலீஸ் ஆகப்போகிறதாமே? என்று சமந்தாவிடம் கேட்டபோது எந்த படம் என்று தெரியாமல் திருதிருவென முழித்தார். இதுகுறித்து தனது இணைய தள பக்கத்தில் அவர் கூறும்போது,நான் நடித்த படமொன்று வரும் 27ம் தேதி ரிலீஸ் ஆகப்போகிறதாமே யாருக்காவது தெரிந்தால் எனக்கும் கொஞ்சம் சொல்லுங்கள் என்று நக்கலாக குறிப்பிட்டிருக்கிறார்.

வெள்ளி, 13 ஜூன், 2014

எனக்கு மகன் இருக்கிறான் சித்தார்த் கொடுத்த ஷாக்

எனக்கு மகன் இருக்கிறான் சித்தார்த் கொடுத்த ஷாக் எனக்கு மகன் இருக்கிறான். அவன் பெயர் மோக்லி என்று ஷாக் கொடுத்திருக்கிறார் சித்தார்த். அடிக்கடி சர்ச்சைகளில் சிக்குவதும், அதற்கு கடுமையான பதிலடி கொடுப்பதும் சித்தார்த்துக்கு வாடிக்கையாகிவிட்டது. ஸ்ருதி ஹாசனுடன் இணைத்து பேசப்பட்ட சித்தார்த் தற்போது சமந்தாவுடன் இணைத்து கிசுகிசுக்கப்படுகிறார். இந்நிலையில் இணைய தள பக்கங்களில் சித்தார்த்துக்கு ஏற்கனவே திருமணம் ஆகி டீன் ஏஜ் வயதில் ஒரு மகன் இருக்கிறான் என்று சமீபத்தில் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதை மறுத்திருந்தார் சித்தார்த். 

ஆனாலும் கோபம் தீராமல் இருந்தவர் திடீரென்று தனது இணைய தள பக்கத்தில், எனக்கு மகன் இருக்கிறான் என்று தகவல் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். இதுபற்றி அவர் கூறியதில்,ஆம் எனக்கு மகன் இருக்கிறான். ஆனால் அவனுக்கு நான்கு கால் ஒரு வால் இருக்கிறது. அவன் பெயர் மோக்லி. 10 வயது ஆகிறது. குடிசை பகுதி ஒன்றின் அருகில் அவனை கண்டெடுத்தேன். அவனை நான் காப்பாற்றினேன். அன்பால் அவன் என்னை கட்டிப்போட்டிருக்கிறான். உலகத்திலேயே மிகவும் பயந்த சுபாவம் கொண்டவன் அவன் என்று குறிப்பிட்டிருப்பதுடன் அருகில் தான் வளர்க்கும் நாய் படத்தை வெளியிட்டு இவன்தான் அந்த மோக்லி என கூறி இருக்கிறார்.

ஆந்திரா காரத்துக்கு அடிமையான பூஜா

ஆந்திரா காரத்துக்கு அடிமையான பூஜா ஆந்திரா உணவை ரசித்த பூஜா அதற்கு அடிமையானார். கடந்த 2009ம் ஆண்டு பாலா இயக்கிய நான் கடவுள் படத்துக்கு பிறகு நடிக்க வந்த வாய்ப்புகளை ஏற்காமல் ஒதுங்கி இருந்தார் பூஜா. இந்த காலகட்டத்தில் இலங்கை படங்கள் 2ல் நடித்தார். தற்போது மீண்டும் தென்னிந்திய படங்கள் பக்கம் கவனத்தை திருப்பி இருக்கிறார். கடந்த ஆண்டு விடியும் முன் என்ற படத்தில் நடித்திருந்தார். தற்போது தெலுங்கில் சிரஞ்சீவி உறவினர் மகன் வருண் தேஜ் ஜோடியாக யவனம் என்ற படத்தில் நடிக்கிறார். இதன் ஷூட்டிங் கொளுத்தும் வெயிலில் ஆந்திராவில் நடந்தது. ஆனாலும் காரசாரமான ஆந்திர உணவை வெளுத்துகட்டினார் பூஜா.

இதுபற்றி அவர் கூறும்போது, யவனம் ஷூட்டிங் ஆந்திராவில் நடந்தது. மண்டை காயும் வெயில் கொடுமையாக இருந்தது. ஆனாலும் உணவு உச்கொட்ட வைக்கிறது. ஆளை அசத்தும் ஆந்திரா காரம் இப்போது நினைத்தாலும் நாவில் எச்சில் ஊறுகிறது. கண்களை கலங்க வைக்கும் காரமும், மணமும் நிறைந்த அந்த உணவு பிரமாதம். சாப்பிட்டதும் சொர்க்கத்துக்கே சென்றுவிட்டதுபோல் உணர்வு. இனி ஷூட்டிங் முழுவதும் உணவுக்கு தடை எதுவும் இல்லாமல் வெளுத்துக்கட்டப் போகிறேன் என்றார்.

துணிச்சல்காரி வேடத்தில் நடிக்க நடிகைகள் போட்டா போட்டி

துணிச்சல்காரி வேடத்தில் நடிக்க நடிகைகள் போட்டா போட்டி கங்கனா ரனவத் நடித்த இந்தி படம் தமிழில் ரீமேக் செய்யப்படுகிறது. இந்தியில் கங்கனா ரனவத் நடித்த படம் குயின். இதில் வைதீகமான பெண்ணாக இருந்து துணிச்சல்காரியாக மாறும் கேரக்டரில் கங்கனா ரனவத் நடித்திருந்தார். இப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமை வாங்குவதில் போட்டி நிலவியது. தற்போது நடிகரும் தயாரிப்பாளருமான தியாகராஜன் இதன் உரிமையை பெற்றிருக்கிறார். இதுபற்றி அவர் கூறும்போது,கங்கனா நடித்த கதாபாத்திரத்தில் நடிக்க அவரைப்போன்ற தோற்றமும், பாவமும் கொண்ட நடிகை அவசியம். சில பெரிய ஹீரோயின் இந்த வேடத்தில் நடிக்க ஆர்வம் காட்டுகிறார்கள். இந்தியில் நடித்த கங்கனா தோழியாக நடித்த லிசா ஹேடனுடனை அதே வேடத்தில் தமிழ் உள்ளிட்ட மொழிகளில் நடிக்க கேட்டிருக்கிறேன். 2 அல்லது 3 படங்களை மட்டுமே இயக்கியுள்ள இளம் இயக்குனர் இப்படத்தை இயக்குகிறார். பிரான்ஸ், நெதர்லாந்து, ஸ்பெயின் போன்ற நாடுகளில் ஷூட்டிங் நடக்கிறது என்றார். இப்படத்தில் நடிக்க நயன்தாரா, டாப்ஸி போன்றவர்கள் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது,

அனுஷ்காவுடன் இணைகிறார் திரிஷா

அனுஷ்காவுடன் இணைகிறார் திரிஷா அனுஷ்காவுடன் இணைந்து நடிக்கிறார் திரிஷா. விஷ்ணுவர்தன் இயக்கிய பில்லா படத்தில் நடித்த அஜீத் பின்னர் பில்லா 2-ம் பாகத்திலும் நடித்தார். இதையடுத்து ஆரம்பம், வீரம் படங்களில் நடித்தார். தற்போது கவுதம் மேனன் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்துக்கு இன்னும் பெயரிடப்படவில்லை. ஷூட்டிங் வேகமாக நடந்து வருகிறது. இதுபற்றி பட இயக்குனர் கவுதம் மேனன் கூறும்போது,சூர்யா படம் இல்லை என்றதும் சிம்புவை வைத்து படம் இயக்க எண்ணினேன். அப்போது அஜீத் போன் செய்து, உங்க ஸ்டைல் படத்துல நடிக்கவேண்டும் கதை தயார் பண்ணுங்க என்றார். 

ஒரு மாதத்தில் கதை தயார் செய்து ஓ.கே. வாங்கி ஷூட்டிங் கிளம்பிவிட்டேன். படத்தில் எதிர்பாராத ஒரு கதாபாத்திரத்தில் வருகிறார். பஞ்ச் டயலாக் எதுவும் வைக்க வேண்டாம் என்று அஜீத் கூறி விட்டார். இப்படம் ரிலீஸ் ஆன பிறகு 2ம் பாகம் எடுக்கும் எண்ணமும் இருக்கிறது. அனுஷ்கா, திரிஷா இதில் நடிக்கின்றனர் என்றார். ஏற்கனவே அஜீத், கவுதம் மேனன் படங்களில் பணியாற்றி இருக்கும் திரிஷா இப்படத்தில் நடிப்பதுபற்றி கூறும்போது,‘மீண்டும் எனக்கு பிடித்தவர்களுடன் இணைந்து பணியாற்றுகிறேன் என்றார்.

செவ்வாய், 10 ஜூன், 2014

ரசிகருக்கு அஞ்சலி செலுத்திய விஜய்...!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இவருக்கு என்று ரசிகர்கள் கூட்டமே உள்ளது. விஜய் எப்போதுமே தனது ரசிகர்களை ஒருங்கே அரவணைத்து செல்பவர். தான் எவ்வளவு தான் ஷூட்டிங்கில் பிஸியாக இருந்தாலும் ரசிகர்களை சந்திக்காமல் இருக்க மாட்டார். மாதம் இருமுறை, 2வது ஞாயிறு மற்றும் 4வது ஞாயிற்று கிழமைகளில் ரசிகர்களை சந்தித்து வருகிறார். ஆரம்பத்தில் சென்னை, சாலிகிராமத்தில் உள்ள அலுவலகத்தில் ரசிகர்களை சந்தித்து வந்த விஜய், போக்குவரத்து நெரிசல், போலீஸ் கெடுபிடி போன்ற காரணங்களால் ரசிகர்கள் சந்திப்பை நீலாங்கரையில் உள்ள தனது இல்லத்திற்கு மாற்றிவிட்டார்.

சமீபத்தில் சென்னை, காஞ்சிபுரம், பெங்களூரூ ஆகிய நகரங்களை சேர்ந்த ரசிகர்கள் விஜய்யை வந்து சந்தித்து விட்டு சென்றனர். இருதினங்களுக்கு முன்னர் சேலம், நெல்லை மற்றும் மதுரை மாவட்டத்தை சேர்ந்த ரசிகர்கள் சந்தித்துவிட்டு சென்றனர். அப்போது நெல்லையை சேர்ந்த ரசிகர் ஒருவர் இறந்துவிட்ட செய்தியை அறிந்து அவரது படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார் விஜய். கூடவே நெல்லையை சேர்ந்த ரசிகர்களும் அஞ்சலி செலுத்தினர். மேலும் நடிகர் விஜய்யின் பிறந்தநாள் வருகிற ஜூன் 22ம் தேதி வருகிறது. இதனை கொண்டாடுவது தொடர்பாக ரசிகர்கள், விஜய்யை சந்தித்து கலந்து ஆலோசித்து உள்ளனர்.