சனி, 15 பிப்ரவரி, 2014

பாவனாவுக்கு கல்யாணம்: கன்னட தயாரிப்பாளரை மணக்கிறார்

TAMIL CINEMA NEWS
மலையாளத்தில் இருந்து தமிழுக்கு வந்த நடிகை பாவனா. அங்கு இரண்டாவது வரிசை நடிகையாக இருந்த பாவனா தமிழில் மிஷ்கினின் முதல் படமான சித்திரம் பேசுதடியில் அறிமுகமானார். கிழக்கு கடற்கரை சாலை, வெயில், தீபாவளி, ஆர்யா, ராமேஸ்வரம், வாழ்த்துக்கள், ஜெயம்கொண்டான் அசல் படங்களில் நடித்தார். அதன்பிறகு தமிழில் பெரிய வாய்ப்புகள் இல்லாததால் மீண்டும் மலையாளப் படங்களில் நடித்தார். பின்னர் அங்கும் வாய்ப்பு குறைந்ததால் கன்னட படங்களில் நடிக்க ஆரம்பித்தார். போராளி படத்தை சமுத்திரகனி கன்னடத்தில் யாரே கோகடாலி என்ற பெயரில் ரீமேக் செய்தார். அதில் புனித் ராஜ்குமாருக்கு ஜோடியாக அறிமுகமானார். அது முதல் கன்னடத்தில் முன்னணி இடத்தை பிடித்தார்.

கன்னடத்தில் பிசியாக நடித்தபோது கன்னட தயாரிப்பாளர் நவீன் என்பருடன் காதல் உருவானது. இதுபற்றி பலமுறை செய்திகள் வந்தபோதும் இருவரும் மறுக்கவில்லை. இப்போது இருவரும் தங்கள் குடும்பத்தாரின் அனுமதியை பெற்று விட்டதாகவும் வருகிற ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதம் திருமணம் நடக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கிறது. இது தொடர்பாக இருவரின் குடும்பத்தாரும் சமீபத்தில் பெங்களூரில் சந்தித்து பேசி உள்ளனர். இந்த பேச்சில் திருமணத்தை கேரளாவில் நடத்துவது என்றும் வரவேற்பு நிகழ்ச்சியை பெங்களூரில் நடத்துவது என்றும் முடிவு செய்திருக்கிறார்கள்.

அஜீத்தை எச்சரித்த மருத்துவர்கள்!

TAMIL CINEMA NEWS
 பைக் ரேஸ் வீரரான அஜீத், பலமுறை விபத்துக்களை சந்தித்தவர். அதனால் சினிமாவில் ஏற்படும் விபத்துக்களை அவர் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. குறிப்பாக, சண்டை காட்சிகளில் டூப் இல்லாமல் தானே ரிஸ்க் எடுத்து நடித்து பலமுறை விபத்துக்களில் சிக்கியிருக்கிறார். ஆனபோதும், அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் உடனடியாக படப்பிடிப்புகளிலும் கலந்து கொண்டு வருகிறார்.

அப்படி ஆரம்பம் படத்தில் நடித்தபோது விபத்தில் சிக்கிய அஜீத்தை உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் வலியுறுத்தினர். ஆனால், அதற்கடுத்து உடனடியாக வீரம் படத்தில் நடிக்க வேண்டியிருந்ததால் அதை பொருட்படுத்தாமல் நடித்து முடித்த அஜீத். அதைத் தொடர்ந்து இப்போது கெளதம் மேனன் இயக்கும் படத்திலும் நடிப்பதற்கு தயாராகி விட்டார்.

ஆனால், இந்த படத்திற்காக உடல்கட்டை மாற்றி வரும் அஜீத், ரிஸ்க்கான காட்சிகளிலும் நடிக்க வேண்டியிருப்பதால், அவரை உடனடியாக அறுவை சிகிச்சை செய்து கொள்வது நல்லது என்று அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் எச்சரித்து உள்ளார்களாம். அதனால். கெளதம்மேனன் இயக்கும் படத்தில் நடிப்பதற்கு முன்பு அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாமா? என்று யோசித்து வருகிறாராம் அஜீத்.

வெள்ளி, 14 பிப்ரவரி, 2014

தள்ளிப்போனது ‘கோச்சடையான்’ ஆடியோ ரிலீஸ்?

 ‘கோச்சடையான்’ படத்தின் ஆடியோ பங்ஷன் திடீரென்று தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
kochadaiyaan_2013-1366x768
tamil cinema news
ரஜினியின் ‘கோச்சடையான்’ படம் வருகிற ஏப்ரல் மாதம் 11-ஆம் தேதி ரிலீசாகி விடும் என்று சில வாரங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட நிலையில் படத்தின் ஆடியோ பங்ஷன் இந்த மாதம் 28-ஆம் தேதி நடக்கும் என்று சொல்லப்பட்டது.
இந்த நிலையில் திடீரென்று ஆடியோ ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது. ‘கோச்சடையான்’ ஆடியோ பங்ஷன் அன்றே ட்ரெய்லரையும் வெளியிட திட்டமிட்டு இருந்ததாகவும், தற்போது ட்ரெய்லர் தயாராகாததால் ஆடியோ பங்ஷனை தள்ளி வைத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
வருகிற மார்ச் 2-வது வாரத்தில் ஆடியோ மற்றும் ட்ரெய்லர் பங்ஷனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக டைரக்டரு ரஜினியின் மகளுமான செளந்தர்யா ரஜினிகாந்த் கூறியுள்ளார். அதேநேரம் திட்டமிட்டபடி படம் ஏப்ரல்11 ஆம் தேதியே ரிலீசாகி விடுமாம்.
தீபாவளி, ரஜினி பிறந்த நாள், பொங்கல் என மாறி மாறி தேதியை அறிவித்துக் கொண்டே வருவதால் கோச்சடையானில் அப்படி என்னதால் நடக்கிறது என்பதே தெரியாமல் ரசிகர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.
இப்படி தேதியை மாத்திக்கிட்டே இருக்கீங்களே..? இது கொஞ்சம் ஓவராத் தெரியலையா..?

விவாகரத்தோட, 80 கோடியும் சேர்த்து குடுங்க.! : டைரக்டர் பிரியதர்ஷனை ‘கை கழுவும்’ லிசி

L
tamil cinema news
 14 வருட குடும்ப வாழ்க்கை புளித்துப் போனதால் டைரக்டர் பிரியதர்ஷனிடமிருந்து விவாகரத்து கேட்டிருக்கிறார் அவரது மனைவியும் முன்னாள் நடிகையான லிசி.
பிரபல தமிழ், மலையாள இயக்குனர் பிரியதர்ஷன் நடிகை லிசியை கடந்த 1990-ம் ஆண்டு திருமணம் செய்தார். திருமணத்திற்கு பிறகு லிசி படங்களில் நடிப்பதை நிறுத்திய லிசி மலையாள திரை நட்சத்திரங்கள் கலந்து கொள்ளும் நட்சத்திர கிரிக்கெட் போட்டியான சிசிஎல்-இல் பிரியதர்ஷனுக்கு சொந்தமான அம்மாஸ் கேரளா ஸ்டிரைக்கர்ஸ் அணியை நிர்வகித்து வந்தார். அதுபோக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பிரியதர்ஷனுக்கு சொந்தமான சவுண்டு ஸ்டுடியோவான போர் பிரேம்ஸையும் நிர்வகித்து வந்தார்.
14 ஆண்டுகளாக கணவன், மனைவியாக எந்த சண்டை சச்சரவுகளும் இல்லாமல் இருந்த பிரியதர்ஷனும், லிசியும் விவாகரத்து செய்யப் போவதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
சிசிஎல் போட்டிகளில் விளையாடும் கேரளா ஸ்டிரைக்கர்ஸ் அணியில் உள்ள ஒரு நடிகருக்கும், லிசிக்கும் இடையே ஏற்பட்ட தொடர்பு தான் இந்த விவாகரத்திற்கு முக்கிய காரணம் என்று கிசுகிசுக்கப்படுகிறது.
பிரியதர்ஷனை பிரிந்து செல்லும் லிசி தனது கணவரிடம் இருந்து ரூ.80 கோடி கேட்டுள்ளாராம். என்னை திருமணம் செய்துகோண்ட பிறகு தான் பிரியதர்ஷனுக்கு எல்லாமும் கிடைத்தது என்றும் அதனால் அவர் ரூ.80 கோடி தனது கடின உழைப்புக்கான தர வேண்டும் என்று கேட்டிருக்கிறாராம்.
பிரியதர்ஷன்- லிசி தம்பதிக்கு கல்யாணி என்ற மகளும், சித்தார்த் என்ற மகனும் உள்ளனர். கணவனும், மனைவியும் சென்னையில் வசிக்கின்றனர். குழந்தைகள் இருவரும் சிங்கப்பூரில் படித்துக் கொண்டிருக்கின்றனர்.
பல மாதங்களுக்கு முன்பு கூட லிசியின் அப்பா தன் மகள் தனக்கு எந்த பண உதவியும் செய்வதில்லை. இதனால் நான் வயதான காலத்தில் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறேன் என்று லிசி மீது புகார் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

2-வது மனைவிகளுக்கு நடக்கும் கொடுமை தான் இது : பாலுமகேந்திராவை பார்க்க விடவில்லை என நடிகை மெளனிகா புகார்!

mounika-balumahendra எனது கணவர் பாலுமகேந்திராவின் உடலை பார்க்க சிலர் திட்டமிட்டு அனுமதிக்கவில்லை என்று பிரபல நடிகை மெளனிகா பரபரப்பு புகார் கூறியிருக்கிறார்.
பாலுமகேந்திரா டைரக்ட் செய்த ‘வண்ண வண்ண பூக்கள்’ படத்தில் ஹீரோயினாக அறிமுகப்படுத்தப்பட்டவர் தான் மெளனிகா.
தொடர்ந்து சில திரைப்படங்கள் மற்றும் பாலுமகேந்திரா டைரக்ட் செய்த கதை நேரம்  தொலைக்காட்சித் தொடர் உட்பட சில தொடர்களிலும் நடித்து வந்தார். பாலுமகேந்திரா மெளனிகாவை மூன்றாவது மனைவியாக திருமணம் செய்து கொண்டார்.
இருவரும் ஒன்றாகவே வாழ்ந்தனர்.
‘மௌனிகாவும் என் மனைவிதான்’ என்று 2004-ம் ஆண்டு பகிரங்கமாக அறிவித்தார் பாலு மகேந்திரா.  1998-ம் ஆண்டு கோயிலில் வைத்து தாலி கட்டி மனைவியாக்கிக் கொண்டதாகவும் ஒரு பேட்டியில் அவர் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் நேற்று பாலுமகேந்திராவின் மரணம் பற்றி தகவல் அறிந்ததும் அவரது உடலைப் பார்க்க மருத்துவமனைக்குச் சென்ற மௌனிகாவை சிலர் அனுமதிக்கவில்லையாம்.
இதுகுறித்து மனம் திறந்த மெளனிகா 2-வது மனைவிகளுக்கு நடக்கும் கொடுமை தான் இது என்று பரபரப்பு புகார் கூறியிருக்கிறார்.
“பாலுமகேந்திரா என் கணவர். கடந்த 1993-ம் ஆண்டு முதல் அவருக்கும் எனக்கும் தொடர்பு உள்ளது. 16 வருடங்களுக்கு முன்பு 1998-ம் ஆண்டு நாங்கள் இருவரும் கோயிலில் திருமணம் செய்து கொண்டோம். அன்று முதல் கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்தோம். அவர் இறந்த தகவல் அறிந்து மருத்துவமனைக்கு ஓடினேன்.
ஆனால் அவர் உடலைப் பார்க்க என்னை சிலர் அனுமதிக்கவில்லை.  பொதுவாக எல்லா 2-வது மனைவிகளுக்கும் நடக்கும் கொடுமைதான் இது என்பது எனக்குப் புரிந்தாலும், இந்தக் கொடுமையை என்னால் ஜீரணிக்க முடியவில்லை,” என்று தெரிவித்துள்ளார்.

டுவிட்டருக்கு விடை கொடுத்த யுவன் சங்கர் ராஜா!

டுவிட்டருக்கு விடை கொடுத்த யுவன் சங்கர் ராஜா!பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவின் இளைய மகனும், இசையமைப்பாளருமான யுவன் சங்கர் ராஜா தமிழ் திரை இசை பாடல்களுக்கு இசையமைத்து பல ஹிட் பாடல்களை கொடுத்து ரசிகர்கள் நெஞ்சில் நீங்கா இடம் பெற்றவர். ஆனால், இவருடைய சொந்த வாழ்க்கையில் பெரும் சோகமே உள்ளது. இவர் இரண்டு திருமணங்கள் செய்து, இரண்டும் விவாகரத்தில் போய் முடிந்துள்ளது. 

இந்நிலையில், முஸ்லீம் மதத்துக்கு மாறிவிட்டதாக சமீபத்தில் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்து இருந்தார். இதற்கு, அவரது அப்பா இளையராஜா, மற்றும் அவருடைய சகோதர, சகோதரிகள் உள்ளிட்ட உறவினர்கள் பெரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதுமட்டுமல்லாமல், இவருடைய டுவிட்டர் பக்கத்திலும் அதற்கு ஆதரவு வந்ததைவிட எதிர்ப்பு கருத்துக்களை அதிகமாக வந்துள்ளன. 

இதனால், தன்னுடைய அதிகாரப்பூர்வமான டுவிட்டர் பக்கத்தில் இருந்து இப்போதைக்கு விடை கொடுத்துள்ளார். தன்னுடைய கடைசி செய்தியாக அந்த பக்கத்தில், இதுவரை எனக்கு ஆதரவளித்த ரசிகர்களுக்கு நன்றி என்று குறிப்பிட்டுள்ளார். 

யுவன் சங்கர் ராஜா நெடுநாட்களாக டுவிட்டர் பக்கத்தை பயன்படுத்தி வருகிறார். தான் இசையமைக்கும் படங்கள், கலந்துகொள்ளும் படவிழாக்கள் போன்றவற்றை உடனுக்குடன் டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்யும் பழக்கம் உடையவர். 

இந்நிலையில், மதம் மாறியதாக வெளியிட்ட செய்திக்கு ரசிகர்கள் அளித்த கருத்துக்கள் அவரது மனதை புண்படையச் செய்துள்ளது. இந்த பிரச்சினை சற்று தணிந்த பிறகு மீண்டும் டுவிட்டர் பக்கத்துக்கு திரும்புவார் என்று தெரிகிறது.

வியாழன், 13 பிப்ரவரி, 2014

பாலுமகேந்திராவுக்கு அஞ்சலி : மவுனிகாவால் சலசலப்பு...!!

 பாலுமகேந்திராவின், ''வண்ண வண்ண பூக்கள்'' படத்தால் அறிமுகப்படுத்தப்பட்டவர் நடிகை மவுனிகா. அதனைத்தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்துள்ளார். அந்தப்படத்தில் இருந்தே பாலுமகேந்திராவுக்கு பிடித்தமான நடிகையாக மாறினார் மவுனிகா. அதன்பிறகு பாலுமகேந்திரா கதை நேரம் என்று டி.வி. சீரியல் எடுத்தபோது மவுனிகாவே அதில் பிரதான நாயகியாக நடித்தார். மேலும் மவுனிகாவின் குடும்ப நண்பராகவும் பாலுமகேந்திரா இருந்து வந்தார் என்றும், இதனால் பாலுமகேந்திராவின் குடும்பத்தில் பிரச்னை ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் நடிகை மவுனிகா, பாலுமகேந்திராவுக்கு அஞ்சலி செலுத்த வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த செய்தியை கேட்ட இயக்குநர் பாலா, அங்கு ஒரு பெரும் பிரச்னையே செய்துவிட்டார். மவுனிகாவை உள்ளே விடக்கூடாது, அதை நான் அனுமதிக்க மாட்டேன் என்று சத்தம் போட்டு ரகளை பண்ணிவிட்டார். இதனால் பாலுமகேந்திராவின் இல்லத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

பாலுமகேந்திராவின் சீடர்களில் பாலா மிகவும் முக்கியமானவர். கிட்டத்தட்ட அவரின் வளர்ப்பு மகன் என்று கூட சொல்லலாம், தன் சம்பந்தப்பட்ட எல்லா விஷயங்களையும் அவருடன் தான் பகிர்ந்து கொள்வார். இந்தநிலையில், மவுனிகா வரக்கூடாது என்று பாலா எதற்கு தடுத்தார் என தெரியவில்லை. 

ஆபரேஷன் தள்ளிப்போடும் அஜீத்துக்கு டாக்டர்கள் எச்சரிக்கை

ஆபரேஷன் தள்ளிப்போடும் அஜீத்துக்கு டாக்டர்கள் எச்சரிக்கை ஆபரேஷன் தள்ளிப்போடும் அஜீத்துக்கு டாக்டர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.அஜீத்குமார் கார் ரேஸில் தீவிரமாக இருந்தபோதே அவரது முதுகெலும்பில் ஏற்பட்ட காயத்துக்கு 5 முறைக்கு மேல் ஆபரேஷன் செய்திருக்கிறார். சமீபகாலமாக ஸ்டன்ட் காட்சிகளில் அவர் ரிஸ்க் எடுத்து நடிப்பதால் அவ்வப்போது காயத்துக்கு ஆளாகிறார். ஆரம்பம் படத்திற்காக கார் சேசிங் சண்டை காட்சியில் டைவ் செய்யும்போது அவரது கால் வேகமாக சென்ற காரின் முன்பக்க டயரில் சிக்கியதில் காயம் ஏற்பட்டது. அதற்கு உடனடியாக அறுவைசிகிச்சை செய்ய வேண்டும் என்று டாக்டர்கள் அட்வைஸ் செய்தனர். ஆனால் தற்காலிகமாக சிகிச்சை பெற்றுக்கொண்டவர் ஷூட்டிங் முடிந்தபிறகு ஆபரேஷன் செய்துகொள்வதாக கூறினார்.

படம் முடிந்தும் அவரால் அறுவை கிச்சைக்கான டைம் ஒதுக்க முடியாமல் பிஸியாகவே இருந்தார். இந்தநிலையில் சிறுத்தை சிவா இயக்கத்தில் வீரம் படத்தில் நடித்தார். ஆபரேஷனுக்கு டைம் ஒதுக்க எண்ணிய நிலையில் இயக்குனர் கவுதம் மேனன் அஜீத்திடம் கால்ஷீட் கேட்டு வந்தார். ஏற்கனவே சூர்யாவை வைத்து துருவநட்சத்திரம் என்ற படத்தை கவுதம் இயக்குவதாக இருந்தது. ஆனால் ஸ்கிரிப்ட் விஷயத்தில் இருவருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து கவுதம் மேனன் படத்திலிருந்து சூர்யா விலகிக்கொண்டார். தர்மசங்கடமான நிலையில் தன்னிடம் கால்ஷீட் கேட்டு அணுகிய கவுதம் மேனனுக்கு மறுப்பு சொல்ல முடியாமல் நடிக்க ஒப்புக்கொண்டார் அஜீத்.

இதனால் மறுபடியும் அஜீத்தின் ஆபரேஷன் திட்டம் தள்ளிப்போனது. விரைவில் ஷூட்டிங் தொடங்க உள்ள நிலையில் அவர் பரிசோதனைக்காக டாக்டரை சந்தித்தார். உடனடியாக ஆபரேஷன் செய்யாவிட்டால் பிரச்னை பெரிதாக வாய்ப்பு உள்ளது என்று எச்சரித்தனர். ஆனாலும் கவுதம் மேனனுக்கு கொடுத்த கால்ஷீட்டை அவர் தள்ளிப்போட மனமில்லாமல் மீண்டும் ஆபரேஷன் திட்டத்தை தள்ளிப்போட்டிருக்கிறார். வரும் செப்டம்பர் மாதம் ஆபரேஷன் செய்துகொள்ள முடிவு செய்துள்ளார்.

காதலிப்பது உண்மைதான் பாவனா ஒப்புதல்

காதலிப்பது உண்மைதான் பாவனா ஒப்புதல் நடிகை பாவனா திடீரென்று காதலில் விழுந்திருக்கிறார். திரையுலகை சேர்ந்த ஒருவரை காதலிக்க தொடங்கி உள்ளார். ஜெயம் கொண்டான், சித்திரம் பேசுதடி உள்ளிட்ட பல்வேறு தமிழ் படங்களில் நடித்துவந்த பாவனா கோலிவுட்டில் மார்க்கெட் இல்லாமல் முடங்கினார். கன்னடம், மலையாள படங்கள் அவருக்கு கைகொடுத்தன. இருமொழிகளில் மாறி மாறி நடித்து வந்தவருக்கு கோலிவுட்டில் வாய்ப்பை மட்டும் தக்க வைக்க முடியவில்லை. இதற்கிடையில் பாவனா திருமணம் செய்ய முடிவு செய்துள்ளதாக அவ்வப்போது தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தது.

இதுபற்றி கருத்து தெரிவித்த பாவனா, தனது திருமணம்பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை, யாரையும் காதலிக்கவும் இல்லைஎன்றார். காதல் இல்லை என்று மறுத்துவந்த பாவனா தற்போது மனம் திறந்திருக்கிறார். மனம் கவர்ந்த ஒரு நபர் தன் வாழ்வில் இருப்பதாக சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியதுடன் அவர் திரையுலகை சேர்ந்தவர் என்றும் க்ளூ கொடுத்திருக்கிறார். 

இதுபற்றி மேலும் கூறும்போது,என் மனம் கவர்ந்தவர் திரையுலகை சேர்ந்தவர்தான். 2 வருடத்துக்கு முன்பு நாங்கள் நண்பர்கள் ஆனோம். என் கடந்தகால வாழ்க்கைபற்றி அவர் முழுமையாக அறிந்தவர் என குறிப்பிட்டிருக்கிறார். இந்த ஆண்டு இவர்கள் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்திருக்கின்றனர். குருவாயூர் கோயிலில் திருமணம் நடத்த திட்டமிட்டுள்ளதாக மல்லுவுட்டில் பேசப்படுகிறது.

அனிரூத்தின் சர்ச்சைக்கு காரணம் என்ன?

அனிரூத்தின் சர்ச்சைக்கு காரணம் என்ன? இசை அமைப்பாளர்களுக்குள் திடீர் போட்டி எழுந்துள்ளதால் பரபரப்பாக ஏதாவது செய்து பப்ளிசிட்டி தேடுவதாக புகார் எழுந்துள்ளது. ஹீரோ, ஹீரோயின்களுக்குள் போட்டி என்பது தவிர்க்க முடியாததாகி இருந்த நிலையில் பனிப்போரில் ஈடுபட்டு வந்த நயன்தாரா, த்ரிஷா திடீர் தோழிகள் ஆயினர். ஹீரோக்கள் மத்தியிலும் சில வருடங்களுக்கு முன்புவரை போட்டி இருந்து வந்தது. நட்சத்திர கிரிக்கெட் டீம் தொடங்கியபிறகு அவர்களுக்குள் இடைவெளி குறைந்து நட்பு மலர்ந்திருக்கிறது. 

இந்நிலையில் தானுண்டு தன் வேலை உண்டு என்றிருந்த இசை அமைப்பாளர்களுக்குள் திடீர்போட்டி எழுந்துள்ளது. பரபரப்பாக அறிவிப்புகள் வெளியிட்டு ஸ்டன்ட் அடிக்கின்றனர்.  இந்த பப்ளிசிட்டி ஸ்டன்ட்டை ஒவ்வொருவரும் வெவ்வேறுவிதமாக செய்வதாக கூறப்படுகிறது. ஒய் திஸ் கொலவெறிடி பாடல் மூலம் பாப்புலர் ஆன அனிரூத் நடிக்க வருகிறேன் என்று சொல்லிவிட்டு பின்வாங்கிவிட்டார். பின்னர் ஆண்ட்ரியாவுடன் அவர் நெருக்கமாக இருக்கும் போட்டோ மீடியாவில் வெளியானது. இதை அனிரூத்தே வெளியிட்டதாக தகவல் கசிந்தது.

தற்போது யூ டியூபில் பெண்களை இழிவு படுத்தும் வகையில் இசை ஆல்பம் பாடல் வெளியிட்டதாக அவர் மீது புகார் எழுந்ததையடுத்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது. நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் அனிரூத் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டது. இதையடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது வரை செல்லும் நிலை எழுந்துள்ளது. இது எல்லாமே பப்ளிசிட்டி ஸ்டான்ட் என சினிமா உலகை சேர்ந்த சிலர் குற்றம் சாட்டுகிறார்கள்.

நடிப்புக்கு முழுக்கு போட ரம்யா முடிவு

நடிப்புக்கு முழுக்கு போட ரம்யா முடிவு நடிப்புக்கு முழுக்குபோட முடிவு செய்திருக்கிறார் ரம்யா. வாரணம் ஆயிரம், குத்து உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பவர் ரம்யா. கன்னட படங்களில் முன்னணி நடிகைகளில் ஒருவரான இவர் திடீரென்று அரசியலில் குதித்தார். தேர்தலில் வெற்றி பெற்று எம்.பி.யாகவும் தேர்வானார். இதையடுத்து அவர் நடிப்புக்கு முழுக்கு போடுவார் என்று சான்டல்வுட்டில் பேசப்பட்டது. ஆனால் அவர் அதுபற்றி எதுவும் சொல்லாமல் மீண்டும் நடித்து வருகிறார். இந்நிலையில் கடந்த ஞாயிறன்று பெங்களூரில் நடந்த கர்நாடக அரசின் சிறந்த கலைஞர்களுக்கான விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்டார்.

சஞ்சு வெட்ஸ் கீதா என்ற படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகை விருது பெற்றார் ரம்யா. பின்னர் ரம்யா பேசியதாவது: ஒவ்வொரு வருடம் விருது அறிவிப்பதற்கு முன்பும் நான் சிறந்த நடிகை விருது பெறுவேன் என்று என் தந்தை நம்பிக்கையாக இருப்பார். ஆனால் அது நழுவிப்போய்க்கொண்டே இருந்தது. அவரது ஆசை அவர் மறைவுக்கு பிறகுதான் நடந்திருக்கிறது. தற்போது அந்த விருது கிடைத்திருக்கிறது. நான் விருது பெறும் இக்காட்சியை அவர் பார்க்க முடியவில்லையே என்று எண்ணும்போது துக்கம் நெஞ்சை அடைக்கிறது. 

எதிர்காலத்தில் இன்னொரு முறை சிறந்த நடிகை விருது பெறுவேனா என்பது எனக்கு தெரியவில்லை. ஏனென்றால் நடிப்புக்காக இதுதான் நான் பெறும் முதல் மற்றும் கடைசி விருது. இதை எனது தந்தைக்கு அர்ப்பணம் செய்கிறேன் என்றார். இவ்வாறு ரம்யா கூறியபோது அவரது கண்கள் கலங்கின. சினிமாவுக்கு முழுக்கு போடுவதை பற்றித்தான் அவர் சூசகமாக தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

காதலர் தினத்தில் பிரிந்திருக்க நஸ்ரியா-பஹத்துக்கு பேமிலி உத்தரவு

காதலர் தினத்தில் பிரிந்திருக்க நஸ்ரியா-பஹத்துக்கு பேமிலி உத்தரவு நய்யாண்டி, ராஜா ராணி உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கும் நஸ்ரியா நாசிமுக்கும், மலையாள நடிகர் பஹத் பாசிலுக்கும் கடந்த 8ம் தேதி திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. வரும் ஆகஸ்ட் மாதம் 24ம் தேதி திருமணம் நடக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது காதல் திருமணம் அல்ல. இரு குடும்பத்தார் சம்மதத்துடன் நடக்கும் திருமணம் என்று ஏற்கனவே நஸ்ரியா கூறி வந்தார். ஆனால் ஒரே படத்தில் நடித்து வரும்போது இருவருக்கும் காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது. 

காதல் திருமணமாக இருந்தாலும் கல்யாணத்துக்கு முன்பு அடிக்கடி தனிமையில் சந்திப்பது, வெளியிடங்களுக்கு சுற்றுவது  போன்ற செயல்கள் கண்டிப்பாக கூடாது என இருவரின் குடும்பத்தாரும் உத்தரவிட்டுள்ளார்களாம். இந்நிலையில் நாளைமறுதினம் காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் நஸ்ரியாவும், பஹத்தும் பிரிந்திருக்க முடிவு செய்துள்ளனர். 

இதுபற்றி நஸ்ரியா கூறும்போது,விரைவில் நான் கன்னடத்தில் அஞ்சலி மேனன் இயக்கும் பெங்களூர் டேஸ் என்ற படத்தில் நடிக்க புறப்படுகிறேன். சில நாட்களில் அதன் ஷூட்டிங் முடிந்துவிடும். எனவே காதலர் தினமான 14ம் தேதி நானும், பஹத்தும் வெவ்வேறு இடங்களில் பிரிந்து இருப்போம். இதற்கு காரணம் இருவரும் ஷூட்டிங்கில் பிஸியாக இருப்பதுதான்.

யுவனை பற்றி சிம்பு கமென்ட்-டுவிட்டர் பரபரப்பு

யுவனை பற்றி சிம்பு கமென்ட்-டுவிட்டர் பரபரப்பு ஜா, யுவன் சங்கர் ராஜா என 2 மகன்கள், பவதாரிணி என்ற மகளும் உள்ளனர். மூன்று பேருக்கும் திருமணம் ஆகிவிட்டது. திரையுலகில் பிஸியாக இருந்தாலும் யுவன் சங்கர் ராஜா வாழ்க்கையில் மட்டும் கசப்பான சம்பவங்கள் நடந்தேறின. சுஜாயா என்ற பெண்ணுடன் யுவனுக்கு திருமணம் நடந்தது. கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்ததுடன் சட்டப்படி விவாகரத்து பெற்றனர். இதையடுத்து ஷில்பா என்ற பெண்ணை 2வதாக திருமணம் செய்தார்.அவர்களுக்குள்ளும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்வதாக கூறப்படுகிறது.இந்நிலையில் திடீரென்று சில வாரங்களுக்கு முன் யுவன் இஸ்லாம் மதத்துக்கு மாறினார். 

இதுபற்றி தனது தந்தை இளையராஜாவிடம் அவர் ஏற்கனவே தெரிவித்திருந்தார். இதை யுவனே தனது இணைய தள பக்கத்தில் குறிப்பிட்டிருக்கிறார். இந்நிலையில் யுவனுக்கு முஸ்லிம் பெண் ஒருவருடன் நட்பு ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. யுவன் மதம் மாறியது பற்றி அறிந்த சிம்பு அவருக்கு தனது ஆதரவை இணையதள பக்கமான டுவிட்டர் மூலம் தெரிவித்திருக்கிறார். என்ன என்பது விஷயம் கிடையாது. என்னுடைய ஆதரவும், அன்பும் எப்போதும் யுவனுக்கு உண்டு என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

காதலர் தினத்தை எதிர்ப்பதா? குஷ்பூ ஆவேசம்

 காதலர் தினம் வரப்போவதென்றால் வழக்கம்போல், வட மாநிலங்களில் சில கட்சிகள் அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பார்கள். அதோடு, சிவசேனா கட்சியினர், காதலர்களை கண்டால் விரட்டி விரட்டியடிப்பார்கள். இதையே பெற்றோர்களும் விரும்புகின்றனர். ஆனபோதும், காதலர் தினம் வருடாவருடம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அன்றைய தினத்தில் விடிய விடிய தூங்காமல் ஹோட்டல்களில் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என்று களைகட்ட வைத்து விடுகிறார்கள். இதனால் பிப் 14-ந்தேதி வருகிறது என்றால் பெருவாரியான பெற்றோர்கள் அன்றைய தினத்தை பேட் டேவாக அனுஷ்டிக்கிறார்கள். ஆனால் அதையே ஹோப்பி டேயாக கொண்டாடுகிறார்கள் இளவட்டங்கள்.

இந்தநிலையில், அவ்வப்போது ஏதாவது வார்த்தை குண்டுகளை வீசி வரும் குஷ்பூ, தனது பங்குக்கு ஏதாவது சொல்ல வேண்டுமே என்பதற்காக, காதலர் தினம் பற்றி கருத்து கேட்டவர்களிடத்தில், ரொம்ப நல்ல விசயம். வரவேற்கிறேன் என்று காதலர்களுக்கு வாழ்த்து தெரிவித்துளளார்.

அதேசமயம், காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களைப்பார்த்து, இதெல்லாம் வேலையில்லாதவர்களின் வேலை என்று கூறியிருக்கிறார். அதோடு, நாட்டில் எத்தனையோ சமூக விரோத செயல்கள் நடக்கிறது. குறிப்பாக, கற்பழிப்பு சம்பவங்கள் பெருக்கிக்கொண்டே வருகிறது. அதனால் காதலர் தினத்தை எதிர்ப்பவர்கள் நாட்டில் நடக்கும் தவறான விசயங்களுக்கு எதிராக குரல் கொடுத்தாலாவது பயனுள்ளதாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

நயன்தாராவே எனது ஆஸ்தான கதாநாயகி! -சொல்கிறார் உதயநிதி

விஜய்-த்ரிஷா நடித்த குருவி படத்தில் தயாரிப்பாளராக சினிமாவுக்குள் வந்தவர் உதயநிதி. அதையடுத்து, தொடர்ச்சியாக படங்கள் தயாரித்தும், வாங்கி வெளியிட்டும் வந்த அவர், தான் சூர்யாவைக்கொண்டு தயாரித்த இரண்டாவது படமான ஆதவனில் நயன்தாராவை ஒப்பந்தம செய்தார். அதன்பிறகு அவருடன் ஏற்பட்ட நட்பு காரணமாக, தான் தயாரித்த சில படங்களிலும் நடிக்க அவரை அணுகியவர், தான் நடித்த முதல் படமான ஒரு கல் ஒரு கண்ணாடியிலும் அவரைத்தான் நடிக்கக்கேட்டார்.

ஆனால், அப்போதெல்லாம் பிரபுதேவாவை திருமணம் செய்து கொள்ளப்போகும் சந்தோசத்தில் இருந்து வந்ததால், எந்த படவாய்ப்பையும் ஏற்காமல் தவிர்த்து வந்தார் நயன்தாரா. இருப்பினும் தனது இரண்டாவது படமான இது கதிர்வேலன் காதல் படத்தில் நயன்தாராவை மீண்டும் இழுத்து விட்டார் உதயநிதி. இப்படத்தில் அவர்களது ஜோடி பொருத்தம் ஒர்க்அவுட்டாகியிருப்பதால், அடுத்து மீண்டும் தான் நடிக்கும் நண்பேன்டா படத்திலும் நயன்தாராவையே முன்பதிவு செய்து விட்டார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், நயன்தாரா ரொம்ப நல்ல நடிகை. அதனால்தான் எனது படங்களில் அவர் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அவர் மாதிரியான ஆர்ட்டிஸ்டுகள்தான் வளர்ந்து வரும் என்போன்றோருக்கு பேலன்சாக இருக்கிறார்கள். அதனால்தான் எனது முதல் படத்திற்கே அவரை அணுகினேன் ஆனால் அவர் அப்போது நடிப்பதில் விருப்பம் இல்லாமல் இருந்ததால் ஹன்சிகாவை நாடினோம்.

ஆனால், இப்போது அவர் நடிப்பில் அதிக ஆர்வமாக இருப்பதால் இனி எனது எல்லா படங்களிலுமே அவரை நடிக்க வைக்கும் முடிவில் இருக்கிறேன். ஒருவேளை அவர் பிசியாக இருந்தாலோ அல்லது கதைக்கு பொருத்தமில்லாமல் இருந்தாலோ மட்டும்தான் வேறு கதாநாயகிகளை நாடுவேன். இலலையேல் அவருக்கே எனது படங்களில் முதலிடம் கொடுப்பேன் என்கிறார் உதயநிதி.
Tags » 

டைரக்டர் பாலுமகேந்திரா மாரடைப்பால் காலமானார்

Director Balu Mahendra hospitalised டைரக்டர் பாலு மகேந்திரா மாரடைப்பால் இன்று காலமானார். இவர் மூச்சுத்திணறல் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சாலிகிராமம் இந்திராநகரில் உள்ள தனது வீடடில் தூங்கிக் கொண்டிருந்த பாலு மகேந்திராவிற்கு இன்று அதிகாலை 4.30 மணியளவில் மூச்சு திணறல் ஏற்பட்டது. இதனையடுத்து அவர் வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த பாலு மகேந்திராவிற்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரை பரிசோதித்த டாக்டர்கள், பாலு மகேந்திராவிற்கு மாரடைப்பு ஏற்பட்டதன் காரணமாக மூச்சுதிணறல் ஏற்பட்டதாக கூறினர். தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி பாலு மகேந்திராவின் உயிர் பிரிந்தது. டைரக்டர் ராம், பாலா, பாலாவின் உதவியாளர் சீனு ராமசாமி, கருணாஸ் மற்றும் உதவி இயக்குனர்கள் பலர் மருத்துவமனையில் உடன் இருந்தனர். 

74 வயதாகும் பாலுமகேந்திரா தனது மனைவி அகிலேஷ்வரி மற்றும் மகனுடன் சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் வசித்து வந்தார். 

டைரக்டராகவும், ஒளிப்பதிவாளராகவும் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய திரைஉலகில் மட்டுமின்றி இந்தியிலும் பல படங்களை இயக்கியவர் பாலு மகேந்திரா. இலங்கையின் பட்டிகலோயா பகுதியில் 1939ம் ஆண்டு பிறந்த இவர் 1971ம் ஆண்டு நெல்லு என்ற மலையாள படத்தில் கேமிராமேனாக திரைஉலகிற்கு அறிமுகமானார். தனது தந்தையால் கேமிரா மீது ஆர்வம் கொண்ட இவர், இந்திய சினிமாவில் டைரக்டர், வசனகர்த்தா, எடிட்டர், ஒளிப்பதிவாளர் என பல பரிமாணங்களில் வலம் வந்தவர். இலங்கையில் பள்ளி படிப்பை முடித்த இவர், லண்டன் பல்கலைக்கழகத்தில் பட்டபடிப்பை முடித்தார். பின்னர் புனேயில் உள்ள இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி கழகத்தில் ஒளிப்பதிவு பயின்ற இவர், அதற்காக தங்க பதக்கமும் பெற்றுள்ளார். இயற்கை வெளிச்சத்தில் எளிமையான, அதே சமயம் பிரமிக்க வைக்கும் அழகை காட்டி படம் எடுப்பதில் பாலு மகேந்திரா கைதேர்ந்தவர். இவர் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய முதல் படமான நெல்லு படத்திற்காக கேரள அரசின் சிறந்த ஒளிப்பதிவாளர் விருதினை பெற்றார். 

சுமார் 20க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றிய 1979ம் ஆண்டு ஆழியாத கோலங்கள் படம் மூலம் தமிழ் திரையுலகில் அடிஎடுத்து வைத்தார். மூடுபனி, மூன்றாம் பிறை, நீங்கள் கேட்டவை, ரெட்டைவால் குருவி, வீடு, சந்திய ராகம், வண்ண வண்ணப் பூக்கள், மறுபடியும், சதிலீலாவதி, ராமன் அப்துல்லா, ஜூலி கணபதி, அது ஒரு கனாகாலம் ஆகிய படங்களை இயக்கி உள்ளார். சமீபத்தில் தலைமுறைகள் என்ற படத்தையும் இவர் இயக்கி உள்ளார். 

பாலு மகேந்திரா 5 தேசிய விருதுகளையும், 3 தென்னிந்திய பிலிம்ஃபேர் விருதுகளையும், 2 நந்தி விருதுகளையும் பெற்றுள்ளார். 

செவ்வாய், 11 பிப்ரவரி, 2014

அஞ்சான்’ படப்பிடிப்பில் கலாட்டா : சம்பளத்தில் ‘கை’ வைத்ததாக லிங்குசாமி தம்பி மீது பரபரப்பு புகார்!

anjaan-shooting-spot-images01 சூர்யாவின் அஞ்சான் படத்தின் படப்பிடிப்பில் கலாட்டா ஏற்பட்டதால் மும்பையில் பரபரப்பு ஏற்பட்டது.
சிங்கம் 2 ஹிட்டுக்குப் பிறகு சூர்யா லிங்குசாமி டைரக்‌ஷனில் நடித்து வருகிறார். சைலண்ட்டாக ஆரம்பிக்கப்பட்ட  இந்தப்படத்தில் அவருக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார்.
சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்யும் இந்தப்படத்தின் ஒரு பாடல்காட்சிக்காக அஞ்சானின் மொத்த டீமும் மும்பையிலுள்ள புனே ஏரியாவுக்குச் சென்றது.
சென்னையில் இருந்து ராஜுசுந்தரம் தலைமையில் டான்ஸ் மாஸ்டர்கள் சென்றனர். வழக்கமாக தமிழகத்தை தவிர்த்து மற்ற மாநிலங்களில் படப்பிடிப்பு நடக்கும்போது, அந்தந்த மாநிலத்தை சேர்ந்த சினிமா கலைஞர்களில் 30 சதவீதம் பேரை பயன்படுத்த வேண்டும் என்பது தான் விதி.
தமிழகத்தில் இருந்து செல்லும் கலைஞர்கள் 70 சதவீதம் பேர் பணியாற்றலாம். அஞ்சான் படத்தின் பாடல் காட்சியில், சென்னையை சேர்ந்த நடன கலைஞர்கள் 100 சதவீதம் பேர் பங்கேற்றனர். இதையறிந்த மும்பையிலுள்ள சினிமா நடன கலைஞர்கள், புனேயில் சூர்யா, சமந்தா பங்கேற்ற படப்பிடிப்புக்கு வந்து எதிர்ப்பு தெரிவித்தனர்.
30 சதவீதம் பேரை ஏன் பயன்படுத்தவில்லை? என்று கேட்டு பிரச்னை செய்தனர். இதையடுத்து 4 மணி நேரம் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. பிறகு பாடல் காட்சியில் தங்கள் சங்கத்தை சேர்ந்தவர்களை பயன்படுத்தாததால், தங்கள் சங்கத்துக்கு 60 ஆயிரம் ரூபாய் அபராதம் கட்ட வேண்டும் என்று மும்பை நடன கலைஞர்கள் கேட்டார்கள்.
உடனே ‘அஞ்சான்’ படத் தயாரிப்பாளரும், டைரக்டர் லிங்குசாமியின் தம்பியுமான போஸ் அபராதத்தொகை 60 ஆயிரம் ரூபாயைக் கட்டினார். இதையடுத்து பிரச்னை அங்கு முடிவுக்கு வந்தது. தொடர்ந்து படப்பிடிப்பு நடந்தது.
ஆனால், பிறகு போஸ் செய்ததைக் கேள்விப்பட்டதும் தான் தமிழ்சினிமா நடனக் கலைஞர்கள் டென்ஷனாகி விட்டார்கள்.
என்ன செய்தார் போஸ்?
மும்பையில் பிடித்த 60 ஆயிரம் அபராத தொகையை சென்னை நடன கலைஞர்களின் சம்பளத்தில் இருந்து பிடித்துக் கொண்டாராம். இதனால் கடுப்பான அவர்கள் பெப்சியில் அவர்மீது புகார் கொடுத்திருக்கிறார்கள்.

தயாரிப்பாளரை டென்ஷன் பண்ணும் ‘சீயான்’ விக்ரம்!

i movie விக்ரம் என்ற ஒரு நடிகர் இருக்கிறாரா? இல்லையா? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழும் முன் ஐ படத்தை ரிலீஸ் செய்து விட வேண்டும் என்பது தான் விக்ரமின் கனவு.
கடந்த சில வருடங்களாக எந்த பெரிய சைஸ் ஹிட்டையும் கொடுக்காத விக்ரம் ராஜபாட்டை, தெய்வத் திருமகள், தாண்டவம், டேவிட் என்று தொடர்ச்சியாக தோல்விப்படங்களை கொடுத்தது தான் மிச்சம்.
பல இளம் ஹீரோக்களும் அடுத்தடுத்து வசூல் சக்கரவர்த்திகளாக கோலிவுட்டில் கோலோச்சும் போது விக்ரமின் இடம் மட்டும் இன்னும் காலியாக இருக்கிறது. கொடுத்த கேரக்டருக்காக தன்னையே வருத்திக்கொள்ளும் விக்ரம் அடுத்த படத்தை ஹிட் படமாக கொடுக்க வேண்டும் என்ற ஆசையில் தான் இருக்கிறார்.
அதனால் தான் இவருடைய டைரக்‌ஷன் என்றால் அந்தப்படம் டிலே ஆகும் என்று தெரிந்திருந்தும் கூட ஷங்கரின் ஐ படத்தில் நடிக்க ஓ.கே சொன்னார் விக்ரம்.
மெகா டைரக்டர், மெகா தயாரிப்பாளர், சிறந்த நடிகர் என்று மூன்று பிரபலங்கள் சேர்ந்திருந்தும் கூட கிட்டத்தட்ட படப்பிடிப்பு முடிந்து, பின் டெக்னிக்கல் வேலைகளை ஆரம்பிக்க வேண்டிய நேரத்தில் ஐ படம் சிக்கல் மேல் சிக்கலில் தவித்துக் கொண்டிருக்கிறது.
அதற்கு காரணமே சீயாம் விக்ரம் தானாம். ஏற்கனவே சுமார் 100 கோடிகளை விழுங்கி மலைப்பாம்பி போல விஸ்வரூபம் எடுத்து நிற்கும் ஐ படத்தின் பட்ஜெட்டைப் பார்த்து மிரண்டு போயிருக்கிறார் ஆஸ்கார் பிலிம்ஸ் வி.ரவிச்சந்திரன்.
சொன்ன தேதியில் கரெக்ட்டாக படத்தை ரிலீஸ் செய்து பழக்கப்பட்ட அவருக்கு ஐ படத்தின் ரிலீஸ் தேதியை மட்டும் இன்னும் கணித்துச் சொல்ல முடியவில்லை. அந்தளவுக்கு ஐ படம் கோடிக்கணக்காக பணத்தை தண்ணியாக விழுங்கிக் கொண்டிருக்கிறது.
தயாரிப்பில் இருக்கும் மற்ற சில கோடிகள் பட்ஜெட் படங்களைக் கூட தள்ளி வைத்து விட்டு ஐ படத்தையே கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொண்டிருக்கும் அவரிடம் பேசிய படி தனது சம்பளத்தை கொடுக்கச் சொல்லி மெண்டல் டார்ச்சல் செய்து வருகிறாராம் விக்ரம்.
இதனால் உச்சக்கட்ட கடுப்பில் இருக்கும் வி. ரவிச்சந்திரன் விஷயத்தை டைரக்டர் ஷங்கரிடம் சொல்ல, அவரோ தயாரிப்பாளர் பரிதாப நிலையை உணர்ந்து நானும் ஒரு தயாரிப்பாளர் தான். உங்களோட வேதனை எனக்குப் புரியும் என்று தனது சம்பளத்தை விட்டுக் கொடுத்திருக்கிறாராம்.
என்னாச்சு சீயான் நல்லமனசோட தானே இருந்தீங்க.., யார் உங்களையும் கெடுத்தது?

யுவன்ஷங்கர் ராஜாவை ‘மதம் மாற்றிய’ பிரபலம் யார்?

Yuvan-Shankar-Raja தமிழ்சினிமாவில் குறிப்பிடத்தக்க இசையமைப்பாளர்களில் ஒருவரான யுவன்ஷங்கர் ராஜா இஸ்லாமிய மதத்துக்கு மாறி விட்டார் என்பது தான் கடந்த ரெண்டு வார காலமாக கோலிவுட்டில் பரபரப்பை பற்ற வைக்கும் செய்தி.
அது மட்டுமில்லாமல் ஏற்கனவே இரண்டு பெண்களை திருமணம் செய்து விட்டு அந்த வேகத்திலேயே விவாகரத்தும் செய்த யுவன் மூன்றாவதாக ஒரு பெண்ணை ரகசிய திருமணம் செய்து கொண்டார் என்றும் சொல்லப்பட்டது.
ஆனால் யுவனோ நான் முஸ்லிம் மதத்துக்கு மாறியது உண்மை தான். ஆனா மூன்றாவது திருமணம் எல்லாம் செய்யவில்லை என்று தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று விளக்கமளித்திருந்தார். என் முடிவுக்கு என்னுடைய குடும்பம் முழு ஒத்துழைப்பு கொடுப்பதாகவும், எனது அப்பா இளையராஜாவுக்கும் எனக்கு எந்த கருத்து வேறுபாடு இல்லை என்றும் தெரிவித்திருந்தார்.
அது எல்லாம் சரிதான்.
திடீரென்று யுவன் இஸ்லாம் மதத்துக்கு காரணம் என்ன?, அவரை அந்தளவுக்கு மாற்றிய அந்த பிரபலம் யார்? என்பது தான் எல்லோருடைய மனசைக் குடையும் கேள்வியாக தொக்கி நிற்கிறது. இதைப்பற்றி விசாரித்த போது பல உண்மைத் தகவல்கள் நமக்கு கிடைத்தன. அதை உங்களுக்காக தருகிறோம்.
தொடர்ந்து இரண்டு பெண்களுடன் விவாகரத்து ஏற்பட்டு அதனால் மனமுடைந்திருந்த யுவனுக்கு அடுத்த அடியாக வந்து விழுந்தது தான் அவரது அம்மாவின் மரணம். வீட்டில் ரொம்பவே அம்மாச் செல்லமான யுவனுக்கு அம்மாவின் திடீர் மரணத்தை தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.
பல நாட்களை தூக்கத்தை தொலைத்து, அம்மாவின் நினைப்பிலேயே இருந்து மனம் நொடிந்து போனவருக்கு யாராவது ஆறுதல் தர வர மாட்டார்களா..? எங்காவது நிம்மதி கிடைக்காதா..? என்று எதிர்பார்ப்போடு காத்திருந்திருக்கிறார்.
அப்போது தான் யுவனின் நெருங்கிய நண்பரான அந்த மூன்றெழுத்து ‘முஸ்லீம்’ டைரக்டர் அவரை நேரில் சந்திக்க சென்றிருக்கிறார். அங்கே யுவனின் கோலத்தைப் பார்த்து கண் கலங்கிய அவர் தனது மத நூலான குரானை கொடுத்து அதில் ஒரு பக்கத்தை படியுங்கள் என்று கூறியிருக்கிறார்.
யுவனும் அந்த பக்கத்தை படிக்க ஆரம்பித்திருக்கிறார். படித்து முடித்ததும் அவருடைய மனம் லேசாகியிருக்கிறது. அது மட்டுமில்லாமல் குரானை தனது வீட்டுக்கு எடுத்துச் சென்ற அவர் தொடர்ந்து வாசித்திருக்கிறார், தான் தேடிப்போன மன நிம்மதியும், அமைதியும் அதில் இருப்பதாக உணர்ந்திருக்கிறார். அந்த வேகத்தில் தான் இஸ்லாமிய மதத்துக்கு மாற  முடிவெடுத்திருக்கிறார் யுவன்.
இந்த விஷயத்தை தனது அப்பாவிடமும், குடும்பத்தாரிடமும் சொல்ல, வீட்டில் ஒரு பெரிய பூகம்பப் புயலே விடாமல் அடித்திருக்கிறது. அப்பா இளையராஜா எவ்வளவோ சொல்லியும் தனது மதம் மாறும் விஷயத்தில் பிடிவாதமாக இருந்திருக்கிறார் யுவன். இந்த விவகாரத்தினால் தான் எந்த உடல்நலக்குறைவும் இதுவரை ஏற்படாத இளையராஜாவுக்கு சமீபத்தில் திடீரென்று மைல்ட் அட்டாக் வந்ததாம்.
இருந்தாலும் யுவனின் மனசை மாற்ற முடியாத கார்த்திக் ராஜா, தங்கை பவதாரணி, சித்தப்பா பையன்களான வெங்கட்பிரபு, பிரேம்ஜி ஆகியோர் இளையராஜாவை சமாதானப்படுத்தியிருக்கிறார்கள்.
முதலில் இதை ஏற்க மறுத்த இளையராஜா பிறகு வேறு வழியே இல்லாமல் யுவனின் எதிர்காலம் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக எதுவும் சொல்ல முடியாமல் அமைதியாக யுவனின் ஆசைக்கு வழி விட்டிருக்கிறார்.

நயன்தாராவின் தெலுங்கு அனாமிகா தமிழில் நீ எங்கே என் அன்பே ஆனது

கர்ப்பிணி வேடம் நயன்தாரா குளறுபடி வித்யா பாலன் நடித்த இந்திப் படமான கஹானி பெரும் வெற்றி பெற்றது. நெரிசல் மிகுந்த நகர்புறத்தில் காணாமல் போன கணவனைத் தேடும் கர்ப்பிணி மனைவியின் கதை. இந்தியில் இயக்கிய சேகர் காமுலா கஹானியை தெலுங்கில் அனாமிகா என்ற டைட்டிலுடன் டைரக்ட் செய்து வருகிறார். இதில் வித்யா பாலன் நடித்த கேரக்டரில் நயன்தாரா நடிக்கிறார். ஆனால் ஒரு வித்தியாசம் வித்யா பாலன் கர்ப்பிணியாக நடித்தார். நயன்தாரா கர்ப்பிணியாக நடிக்க மறுத்து விட்டதால் அவருக்காக உயிருக்கு ஆபத்தான நோய் கொண்ட பெண்ணாக கேரக்டரை மாற்றிவிட்டார். 

தெலுங்கில் தயாராகும் அனாமிகாவை தமிழில் டப் செய்து வெளியிடுகிறார்கள். அதற்கு நீ எங்கே என் அன்பே என்ற சின்னத்தம்பி படப் பாடலின் முதல் வரியை டைட்டிலாக வைத்திருக்கிறார்கள். நயன்தாராவிற்கு தமிழில் இருக்கும் மார்க்கெட்டை கருத்தில் கொண்டு இதனை தமிழில் வெளியிடுகிறார். இதற்கிடையில் நயன்தாரா நடித்த மற்றொரு தெலுங்கு படம் ரிப்போர்ட்டர் என்ற பெயரில் தமிழில் டப் செய்யப்பட்டு ரிலீசாகிறது.