சனி, 1 மார்ச், 2014

Filled Under:

‘கோச்சடையான்’ ரிலீஸ் எப்போ..? : மீண்டும் மீண்டும் குழப்பும் ரஜினி மகள்!

Soundarya-R-Ashwin இன்னும் எத்தனை தீபாவளிகளையும் எத்தனை பொங்கல்களையும் தாண்டப்போகிறதோ தெரியவில்லை. இதோ மீண்டும் கோச்சடையான் ரிலீஸ் தேதியை குழப்போ குழப்பு என்று குழப்பியிருக்கிறார் ரஜினியின் மகளும் டைரக்டருமான செளந்தர்யா ரஜினிகாந்த்.
சில வாரங்களுக்கு முன்பு ‘கோச்சடையான்’ படம் ஏப்ரலில் ரிலீஸ் ஆகாது என்று எல்லா மீடியாக்களும் போட்டி போட்டுக்கொண்டு செய்திகளை பரப்பி வந்ததைப் பார்த்து பதறிய செளந்தர்யா உடனே கோச்சடையான் படம் வரும் ஏப்ரலில் ரிலீஸாகி விடும் என்று அறிக்கை அனுப்பினார்.
இதனால் ஒட்டுமொத்த ரஜினி ரசிகர்களும் குஷியானார்கள். ரஜினியை இந்தப்படத்தில் அனிமேஷனில் வருவதால் அதில் பார்க்க அவர்களும் ஆவலாக உள்ளனர்.
இதற்கிடையே நேற்று கார்பன் மொபைல்ஸ் ஸ்பெஷல் எடிசனாக வெளியிடும் கோச்சடையான் மொபைல்ஸ் அறிமுக விழாவில் கோச்சடையான் ரிலீஸ் பற்றி மீண்டும் ஒரு குழப்பச் செய்தியை சொல்லிவிட்டுப் போயிருக்கிறார்.
அதாவது ‘கோச்சடையான்’ படத்தின் ஆடியோ பங்ஷன் மார்ச் 9-ம் தேதி கண்டிப்பாக நடைபெறும். அதற்குப் பிறகே ரிலீஸ் தேதி முடிவு செய்யப்படும் என்று கூறியிருக்கிறார்.
இதனால் கோச்சடையான் படம் ஏப்ரலிலும் ரிலீசாகுமா..? என்று ரசிகர்களிடையே சந்தேகம் எழுந்துள்ளது

0 உங்கள் கருத்து:

கருத்துரையிடுக