‘அரவான்’ படத்துக்குப் பிறகு வசந்தபாலன் டைரக்ட் செய்து வரும் ‘காவியத்தலைவன்’ படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் தான் இசையமைப்பாளர். நேற்று நடந்த இந்தப்படத்தின் பர்ஸ்ட் லுக் பிரஸ்மீட்டில் ஏ.ஆர் ரஹ்மானும் கலந்து கொண்டார்.
சரியாக 7 மணிக்கு அரங்கில் நுழைந்த அவரை பேசிப்பேசியே மிரள வைத்தார் டைரக்டர் வசந்தபாலன். அவர் பேசிய பிறகு பேச வந்த ஏ.ஆர். ரஹ்மான் டைரக்டர் ரொம்ப பேசுறாரு… அதைப்பார்த்து நானே கொஞ்சம் ஷாக்காயிட்டேன் என்றார் சிரித்துக் கொண்டே…
தொடர்ந்து அவர் பேசியதாவது :
வசந்தபாலன் இப்படத்திற்காக மிகவும் கஷ்டப்பட்டு உழைச்சிருக்கார். நானும் மிகவும் கஷ்டப்பட்டேன். நான் இந்த படத்திற்கு இசையமைக்கும் பணியில் இருக்கும் போது, ஒரு ஹாலிவுட் படத்திற்கும் இசையமைத்துக் கொண்டிருந்தேன். ரொம்ப டார்க்கான படம் அது. இந்தப்படம் வந்த உடனே, ஹாலிவுட் படத்தை வேண்டாம் என்று விட்டு விட்டேன்.
இந்த படத்தில் மொத்தம் 8 பாடல்கள் இருக்கிறது. நாடகம் சம்பந்தமான படம் என்பதால் ஒவ்வொரு பாட்டிலும் 8 பாட்டு இருக்கும். அந்தச் சின்ன சின்ன பாடல்களையெல்லாம் சேர்த்தால் படத்தில் மொத்தம் 20 பாடல்கள் இருக்கும். 1930-ல் நடக்கும் கதை என்பதால், எந்த மாதிரி பாடல்களுக்கு இசையமைத்தால் அதை இப்போதுள்ள ரசிகர்களும் விரும்பி கேட்பார்கள், அப்புறம் எந்த ராகம் உபயோகிக்கலாம் என்று நிறைய யோசித்து செய்திருக்கிறேன்.
இப்படத்தில் பணியாற்றியதற்காக பெருமையடைகிறேன். என்றவர் பேசி முடிக்கும் போது தனது ட்ரேட் மார்க் வசனமான ”எல்லாப் புகழும் இறைவனுக்கே.” என்பதையும் சொல்லத் தவறவில்லை.
0 உங்கள் கருத்து:
கருத்துரையிடுக